இந்து மதம் கூறும் வழிபாடும் , வழிமுறைகளும் ( way to successful prayer)
பகவானின் அருள் பெற நமக்கு தேவையான தகுதிகள்
அ, பகவானிடத்தே மனதை வைத்தல்
ஆ. பகவானின் அருள் பெற மந்திரம் கூறி தியானித்தல்
இ. பகவானையே அடைக்கலம் அடைதல்
ஈ. இந்துமதம் கூறும் சின்னங்கள் தறித்தல்
கீதை கூறும் புண்ணிய செயல்கள்
1, வழிபாடு. 2. தானம். 3. தவம் ஆகிய இம்மூன்றும் புண்ணிய செயல்களும் மனித வாழ்க்கையை உயர்வடையச் செய்யும்
வாழ்க்கையில் வெற்றி பெற நமக்கு பிடித்த கோயிலை மனதில் நினைத்து அனுதினமும் கூற வேண்டிய மந்திரங்கள்
" ஓம் நமசிவாய வாழ்க ! ஓம் சச்சிதானந்தம் வாழ்க ! ஓம் சிவசிவ ஓம் ! " மற்றும் சக்தியை போற்றும் காயத்திரி மந்திரங்கள்
இறை மந்திரத்தின் மகிமை
இந்து மதம் " ஸநாதன தர்மம் " என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இதன் பொருள் அழிவில்லாத அறம் என்பதாகும். இது மட்டுமல்லாது இந்து மதம் சன்மார்க்கம், தவநெறி, மெய் நெறி, அருள் நெறி, திருநெறி என்ற பெயர்களாலும் சிறப்புடன் அழைக்கப்படுகின்றது.
அகங்காரம், காமம்., பேராசை, பற்று இவற்றை விலக்கி சுகதுக்கங்களை நீக்கி ஆத்ம ஞானத்தில் தியானித்து ஆன்மாவின் உண்மைத் தோற்றத்தை அறிந்து முக்தி பெற இந்து மதம் உதவுகிறது.
மந்திரம் கூறி துவங்கும் வேலை வெற்றியாகும், அத்துடன் தொடர்ந்து மந்திரம் கூறி வந்தால் பிரச்சனைக்ள நீங்கும். அற்புதங்கள் நடக்கும். எனவே தோத்திரங்கள் இன்றி வழிபாடு சிறக்காது.
இந்து மதம் கூறும் மூன்று விதமான வழிபாடுகள்
1. சகுண நிராகரம் - உருவ வழிபாடு
2. நிர்குண நிராகரம் - ஏகத்துவ வழிபாடு ( எங்கும், எதிலும் இறைவனைக் காண்பது )
3. சகுண சாக்காரம் - அவதார பருசர்களை வழிபடுவது
உலகில் உள்ள நான்கு வித பக்தர்கள் யார்?
1. முக்தியை லட்சியமாக கொண்ட ஞானி
2. குடும்ப வாழ்க்கை உயர தியானிக்கின்ற பக்தன்
3. நோய்கள் நீங்க பிராத்தனை செய்பவர்கள்
4. வசதி வாய்ப்புகளுக்காக யாசிப்பவர்கள்
மனிதர்களில் சிறந்தவர்கள் யார்?
நல்ல கருத்துக்க் நல்லவர் வாயிலாக வரும் பொழுது இழந்த பொருள் மீண்டும் வந்து விட்டதாக நினைத்து மூளையில் பதிவு செய்து பின் பற்றுபவர், நமது ஐம்புலங்கள் வழியாக வரும் இன்பம் மற்றும் துன்பங்களை நீக்க , ஐம்புலங்களின் கதவை மூடிக்கொண்டு உள்ளத்தில் இறைவனை பார்க்கும் தன்மையவன்.
இறைவனிடம் இருந்து ஆறு விதமான நன்மைகளை பெறும் முறை
சிவன் என்பவன் இறைவன் . இறைவனுக்கு ஆறு குணங்களை உடையவர் என்று பொருள் உண்டு. இறைவனாகிய பகவானை உள்ளத்தில் வைத்து அடிக்கடி பூசிப்பவர்களுக்கு அவரின் ஆறு குணங்களாகிய ஞானம், ஐஸ்வரியம், சக்தி. பலம், வீரியம், தேஜஸ் என்பன சேர்ந்து விடும்.
சிவ தர்மம் என்பது யாது?
1, கொல்லாமை. 2. பழிக்கு அஞ்சுதல். 3. பொறுமை. 4. நலம்புரிதல். 5. உள்ளன்புடன் இருத்தல்.
6. இயன்றவரை ஈதல் பண்புடமை. 7, சிவனாகிய சச்திதானந்த்தை அர்ச்சனை செய்தல். 8. புண்ணிய காரியங்கள் செய்தல். 9. சிவனை தியானித்தல்,
ஞானம்
" உடம்பினை பெற்ற பயனாவதெல்லாம்
உடம்பினுள் உத்தமனைக் காண்" என்று ஒளவையார் கூறுகிறார். அதாவது இந்த பூமியில் பிறந்ததே உடம்புக்குள் உள்ளத்தில் இருக்கும் ஆனந்த சபையில் உத்தமராகிய இறைவனை தியானத்தால் கண்டு உயர்வதற்கே ஆகும்.
" நெருப்பை புகை மூடுவது போல
கண்ணாடியை அழுக்கு மூடுவது போல
கருவை கருப்பை மூடுவது போல
ஞானத்தை காமம் மூடியிருக்கிறது " பகவத் கீதை
இந்த காமத்திரையை விலக்குவதற்கு மனதில் மூலமந்திரத்தை உச்சரித்து அனுதினமும் பகவான் மேல் பக்தி செலுத்தி வந்தால் , காமம் அழிந்து ஞானம் பிறக்கும்.
இந்து மக்களின் கடமைகள்
1, தினம் காலையில் மந்திரம் கூறி தியானப் பயிற்சி செய்து அன்றாட வேலைகளை கவனித்தல்
2. யோகாசன பயிற்சி செய்தல்
3. காரம், புளிப்பு. எண்ணெய் குறைவான உணவை அளவோடு உட்கொளல்
4. ஓய்வு நேரங்களில் சிறிது ஆன்மிக நூல்கள் படித்தல், அல்லது ஆன்மிக சொற்பொழிவு கள் கேட்டல்
5. அடிக்கடி மந்திரம் கூறி பகவானை தியானித்தல்
6. தன் குற்றம் கண்டு பகவானிடம் மன்னிப்பு கேட்டல்
7. சமயத் தொண்டில் தன்மை ஈடுபடுத்தி உழவாரப் பணிகள் மேற்கொண்டு புண்ணியம் சேர்த்தல்
இறைவனை அறிவதையும் அடைவதையும் யார் லட்சயிமாக கொண்டிருக்கிறாரோ, அவரை ஒருபோதும் இறைவர் கைவிட மாட்டார். நமது லட்சியத்தில் காட்டுமு உறுதியே, வெற்றியின் ரகசியம். பகல் பொழுதை பகவானை நினைக்கும் பயனுள்ள பொழுதாக நாம் மாற்றிக் கொண்டால், இரவு பொழுது இனிமையாகத்தான் இருக்கும்.
இடைப்பட்ட வாழ்க்கையில் கிடைத்திட்ட பொருட்கள் எல்லாம் செல்வமாகி விடாது. ஆனால் உள்ளத்தில் இறை நினைப்போடு இருப்பதே பெரும் செல்வம் என்பதை ஒருபோதும் மறவாதீர்
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாயம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
home security system
பதிலளிநீக்குhikvision camera in jaipur at rajasthan
biometric attandance machine
dahua camera in jaipur at rajasthan
its really great information i m glad you to found this kind of website..
Thanks for your comment
நீக்கு