திங்கள், 14 நவம்பர், 2016

தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் திருவானைக்காவல்

தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்

திருவானைக்காவல் அல்லது திருவானைக்கா


தேவாரப்பாடல் பெற்ற காவேரிக்கரை தென்கரை தலங்களில் இது 60 வது தலம் இங்கு இறைவர் பஞ்சபூதத்தலங்களில் அப்பு தலமாக (நீர்) அமைந்துள்ளது. அம்பிகை 51 சக்தி பீடங்களில் ஞான சக்தி பீடமாக அமைந்துள்ள தலம்.

திருஆனைக்கா கோவில்

இறைவர் திருப்பெயர் : நீர்த்தீரள்நாதர், ஜம்புகேசுவரர்
இறைவியார் திருப்பெயர் : அகிலாண்டநாயகி, அகிலாண்டேசுவரி
தல மரம் : வெண்நாவல்
தீர்த்தம் : காவிரி,இந்திரதீர்த்தம், சந்திரதீர்த்தம்.
வழிபட்டோர் : அம்பிகை, சிலந்தி,யானை.
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. மழையார் மிடறா, 
2. வானைக்காவில் வெண்மதி, 
3. மண்ணது வுண்டரி 
 2. அப்பர்   - 1. கோனைக் காவிக், 
2. எத்தாயர் எத்தந்தை, 
3. முன்னானைத் தோல்போர்த்த. 

 3. சுந்தரர்  - மறைகள் ஆயின நான்கும்

தல வரலாறு

பிரமன் திலோத்தமை மேல் காதல் கொண்ட பாவம் தீரும் பொருட்டு பூசித்த தலம்.

ஆனை வழிபட்டதால், இத்தலம் இப்பெயர் பெற்றது.
இறைவனைப் பூசித்த சிலந்தி, அடுத்தப் பிறவியில் ஆனையேறாத பல மாடக்கோயில்கள் கட்டிய சோழ மாமன்னர் கோச்செங்கட்சோழராக அருள்பெற்ற இடம்.

நடராஜர் சந்நிதிக்கு எதிரில் கோட்செங்கட் சோழ நாயனாரின் திருவுருவம் தனிச் சந்நிதியில் அமையப்பெற்றுள்ளது.

இஃது கோட்செங்கட் சோழ நாயனார் அவதாரப் பதியாகும்.

அவதாரத் தலம் : திருஆனைக்கா.
வழிபாடு : லிங்க வழிபாடு.
முத்தித் தலம் : தில்லை (சிதம்பரம்).
குருபூசை நாள் : மாசி - சதயம்.
ஈசன், சித்தராக வந்து திருநீறு அளித்து, அதனைக் கூலியாக்கி, நான்காவது பிராகார மதிற்சுவர் கட்டியதால், அது, திருநீற்றான் மதில் எனப்படுகிறது.

சோழ மன்னன் காவிரியில் நீராடும்போது கழன்று விழுந்த ஆரத்தை, இறைவன் திருமஞ்சன நீர் குடத்தின் மூலமாக, தான் ஏற்றார்.

சிறப்புகள்

மிகப்பெரிய திருக்கோயில்.
பஞ்ச பூத தலங்களுள் இது அப்புத் தலமாகும்.
ஆதிசங்கரர், இங்குள்ள அம்பிகைக்கு இரண்டு ஸ்ரீ சக்கரங்களைச் செய்து, அதைத் தோடாக அணிவித்தார்.

பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர அரசர்கள், மதுரை நாயக்கர்கள் ஆகியோர் காலத்து கல்வெட்டுகள் மொத்தம் 154 உள்ளன.

தல வரலாறு ;


சிவன் கட்டளைக்காக அம்பிகை மானிடப் பெண்ணாகப் பிறந்து இத்தலத்தில் காவேரிக்கரையில் காவேரியாற்றில் நீரில் லிங்கம் பிடித்து வழிபட்டதால் இது பஞ்பூத தலங்களில் அப்பு ( நீர்) தலமாக காட்சி அளிக்கிறது, இத்தலத்தில்  ஜம்பு என்ற முனிவர் இந்த லிங்ககத்தை வழிபட்டு, சிவனிடம் நாவல் பழம் பிரசாதமாகக் கொடுத்தார் இதன் மகத்துவம் அறிந்த முனிவர் அதன் விதையுடன் உண்டுவிட்டார் பின்னர் இதுவே மரமாக அவர் உடலில் வளர்ந்து சிரசின் மூலம்வெளிப்பட்டதால் இவர் முத்தி பெற்றார். இதனால் இம் இம் நாவல் மரமே தலவிருச்சமானது, இதனால் இம்மரத்திற்கு ஜம்புஎன்றும் அதன் அடியில் உள்ள லிங்கமே ஜம்புகேஸசர் என்றும் வழங்கப் பெற்றது,
   கைலாயத்தில் சிவ கனங்களாக இருந்த புட்பகுந்தன், மாலியவான் என்ற இருவருக்குள் யார் சிறந்த பக்தர் என்ற போட்டி வந்ததால் இருவரும் இறைவரால் சாபம் பெற்று இத்தலத்தில் சிலந்தியாகவும், யானையாகவும் இந்த லிங்கத்தை வழிபட்டு இங்கும் போட்டி ஏற்பட்டு, சிலந்தி யானையின் தும்பிக்ைகயில் நுழைந்து யானையினை கொன்றது, எனவே சிலந்தி வடிவான திருச்செங்கட்வ சோழனாக பிறந்து பல சிவத்தலங்களைக் கட்டிய வரலாறு உண்டு.

  இத்தலத்தில் அம்பிகை தவமிருந்து பூசை செய்து வழிபட்ட தால், இன்றும் இத்தலத்தில் பூசையின் போது அர்ச்சகர் அம்பிகையாகக்கொண்டு புடவை சுற்றி கிருடம் அணிந்து, குண்டலம் அணிந்து இறைவருக்கு பூசை செய்கிறார்,



  இத்தலத்தில் திருமண வைபவங்கள் நடப்பதில்லை, ஏனெனின் இங்கு அம்பிகை இன்றும் தவமிருப்பதாக ஐதிகம்,


அமைவிடம்

திருவானைக்காவல் அல்லது திருவானைக்கா
(Thiruvanaikaval, Thiruvanaika) என்பது திருச்சி நகரத்தின் ஒரு சுற்றுப்புறப் பகுதியாகும் ஸ்ரீரங்கத்திற்கு மிக அருகில், காவேரி ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது. திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரி உடனாய ஜெம்புகேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இவ்விடம் பஞ்சபூத தலங்களில் ஒன்று.[4]
 ஜம்புகேசுவரர் திருக்கோயில், 
திருஆனைக்கா, 
திருச்சிராப்பள்ளி.
1930 ஆம் ஆண்டின் நோபல் விருது பெற்ற சி. வி. இராமனின் பிறந்த ஊர் திருவானைகாவல் ஆகும்.

திருச்சிற்றம்பலம்
ெதாகுப்பு ; வை, பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக