சனி, 5 நவம்பர், 2016

தேவாரப் பாடல்பெற்ற தலங்கள்

திருக்கோலக்கா

இறைவர் திருப்பெயர் : சப்தபுரீஸ்வரர், தாளேஸ்வரர், திருத்தாளமுடையார்.
இறைவியார் திருப்பெயர் : தொனிப்ரதாம்பாள், ஓசை கொடுத்த நாயகி.
தல மரம் : கொன்றை.
தீர்த்தம் : ஆனந்த தீர்த்தம்.
வழிபட்டோர் : அகத்தியர், கண்வர் முதலியோர்
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - மடையில் வாளை பாய
thirukkolakka temple in long view

தல வரலாறு

  • கைகொட்டிப் பாடிய ஞானசம்பந்தருக்கு இறைவன், திருவைந்தெழுத்து பொறித்த தாளத்தையருள, அதற்குத் தெய்வீக ஓசையை இறைவி தந்து அருள் செய்த தலம். இதன்பொருட்டே இக்கோயில் "திருத்தாளமுடையார் கோயில் " என்றழைக்கப்படுகிறது.

சிறப்புக்கள்

  • ஞானசம்பந்தரின் யாத்திரையில் இதுவே முதல் தலம்.view of the vimAnA
  • பிற்காலத்தில் இப்பகுதியில் தன் ஊமை மகன் பேசும் ஆற்றலைப் பெறவேண்டும் என்று, பிரார்த்தித்துக் கொண்ட தாய் ஒருத்தி, அவ்வாறே இறையருளால் தன் மகன் பேசும் வல்லமை வெற, மகிழ்ந்து, கோயிலுக்குத் தன் காணிக்கையாகச் செய்து தந்துள்ள "பொற்றாளம்" கோயிலில் உள்ளது.
  • சீர்காழியில் திருமுலைப்பால் உற்சவம் நடைபெறும்போது இங்குத் தாளம் வழங்கும் ஐதீகவிழா நடைபெறுகிறது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
சீர்காழிக்குப் பக்கத்தில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம்.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை, பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி; சைவம் டாட் காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக