சனி, 2 அக்டோபர், 2021

திருநீறு

 
திருநீறு


சைவ சமயத்தின் அடையாளங்களில் முதன்மையானதும் முக்கியமானதும், எளிமையானதும் திருநீறு ஆகும். இது தன்னவர்களுக்கு வழங்கியுள்ள மிக உயர்ந்தும் எளிமையானதும் ஆன பொதுக் கொடை திருநீறு என்ற விபூதியாகும. இறைவன் கருணையாகிய பராசக்தியின் வடிவம் இது ஆதலின் இது நமக்கு உயர் பெருங்கொடையாக உள்ளது. எங்கும் எப்போதும் ஒன்றும் கொடுக்காமலேயே இலகுவிற் பெறக் கூடியதாய் இருத்தலின் இது எளிமையானது, சைவசமயத்தவர் என்றுளள ஒவ்வொருவரும் தராதர வேறுபாடின்றி தம் உடைமையாக கொள்வதற்கு உரியது. ஆதலின் இது அனைவருக்கும் பொது உடைமையாக உள்ளது. இதனை ஏற்று அணிந்து கொள்ளாத எவருந் சைவர் ஆகார்.
திருஞான சம்பந்தரின் திருநீற்றுப் பதிகமும் அகத்தியர் தேவாரத்திரட்டில் பதிவாக முக்கிய இடத்தை பெற்ற பதிகம் இப்பதிகத்திலிருந்து திருநீறு பராசக்தியின் வரலாறு கண்டறிப்படுகிறது.
சம்பந்தர் இப்பதிகத்தில் திருநீற்றினை சிறப்பியல்புகளாக ஐம்பத்திநான்க குறிப்பிடுகிறார். அவற்றில் அதிக பாகங்களானவை சிவசக்தியின் குணங்களாகும். சம்பந்தர் திருநீற்றை மந்திரமாகஇனங்கண்டுள்ளார். சிவசக்தி தானே பிரேரித்து தானே அதிட்டித்து கொண்டிருக்கிறது. அதாவது அதனை தனது பூரண கட்டுப்பாட்டில் அல்லது செல்வாக்கில் இயங்க வைத்திருக்கின்றது என்று அறியப்படும்.
முத்தி தருவது திருநீறு, போதந் தருவது திருநீறு என்பனவும் நோக்கத்தகும். வீடு -பேறு போதம்- ஞானம் இரண்டும் சிவசக்தி ஒன்றால் அன்றி வழங்கப்படுமாறில்லை.
ஆகையால் நாம் திருநீறு அணிகிறோம் எனில் சிவனருளாயே சிவசக்தியை அணிகிறோம் என்பதே அதன் தாற்பறியமாகும். எங்கள் நெற்றி முதலாம் உறுப்புகளில் திருநீறு அணிவதால் அவ்வுறுப்புக்கள் சிவசக்தி உறையும் பரிசுத்த நிலையங்களாக்கப்படுகிறது. திருநீற்றை அணிகையில் சிவ சிவ என்ற மகா மந்திரத்தை உச்சரிக்கிறோம் இம் மந்திரம் சிவ சக்தியை ஆவாஹனம் செய்வதற்கான மந்திரமாகும். இதனால் சக்தி பிரசன்னமாதல் என்பது தயிரில் நெய் போல நீற்றில் விளங்கி தோன்றுதல் என்பதாம்.
நாம் விபூதி அணியும் இடங்களில் நெற்றி - நமது சிந்தனைக்கும் , நெஞ்சு - உணர்வுகளுக்கும் இடமாகிறது.
சைவ அனுஸ்டான விதிப்படி திருநீறு அணிதல் அதில் சிவசக்தி பிரசன்னமாக உதவுகின்றது. அத்துடன் நீறே சிவ சக்தி என்ற ஒருமைப்பாட்டை உறுதி செய்யும்நடைமுறை ஆகிறது. இதனால் அமையும் அம்சங்கள்
1, கையிற் கொண்ட திருநீற்றில் சங்கிதா மந்திரம் உச்சரிக்கப்படுவதால் மந்திரசக்தி பிரசன்னமாகிறது.
2. குழைக்கப்பட்ட விபூதி உச்சி, நெற்றி என16 இடங்களில் அணியப்படுவதால் சிவசக்தி சிவானந்தம் அருளி, ஆணவ மலம் அழித்து பிறப்பொழிவின் இளைப்பாற வைத்து காத்து, படைத்தல் நிலைகளை நிர்வகிக்கிறது.
இவ் விபூதி முக்குறியயாக அணியப்படுகிறது. இம்மூன்றும் முறையே கிரியா சக்தி, இச்சா சக்தி, ஞானசக்தி குறிக்கிறது. இது பராசக்தியின் குறிகளே. இதனால் நமது அன்னை உமாதேவி நம்மில் பிரசன்னமாயிருப்பதாக உணரப்படுகிறது. இதனால் நம்மின் மீது தீய சக்திகள் தொடரா வண்ணம் எதிர் சக்தியை விளைவிக்கும்.
சிவலிங்கத்தில் விபூதி அபிசேகம் செய்த விபூதி தெய்வீக தன்மையும், மெஞ்ஞானிகள் கையால் வழங்குப்படும் திருநீறும் இம் மகிமை பெறும். திலகவதியார் திருநாவுக்கரசருக்கு அணிவித்த விபூதி இதற்கு சான்றாகும். இது போன்றே ஆலய பூசகர் கையால் கொண்டிருந்த காலமும் உண்டு.
நமது சமயாசாரியர்ஒவ்வொரு வரும் திருநீற்றின் மகிமையை போற்றிப்பாடி அதனை பக்தி பூர்வமாக ஏற்றி அணியும் படி நம்மை உற்சாகப்படுத்தியுள்ளனர்.
" பூசில்தான் திருநீறே நிறையபூசி" என மாணிக்கவாசகர் கூறியுள்ளார் இதனை பூசாதிருப்பது இதன் மேல் ள்ள வேண்டா வெறுப்பு நிலையை காட்டுவதாகும். இது பராசக்தியின் இருப்பிடமென்பதை அறியாத மடமை யாகும். திருநீறும் சிவாலயமும் உள்ளத்துட் செற்ற புலையர் பாற் செல்லாதே என உமாபதி சிவம் அறிவுறுத்திகிறார்
திருநீற்றுக்கும் சிவலாயத்திற்கும் நெஞ்சில் உரிய இடம் அளிக்காதோர் தூய்மையற்றவர்,பாபகாரிகள் என்பது கருத்து.
மாணிக்க வாசகர்இதன் பொருளில் "வெண்ணீறு அணிகிலாதவரை கண்டா லம்மாநாமஞ்சுமாரே, " என்று அருளி செய்துள்ளார். பொதுவாக சகலராலும் அஞ்சப்படுவது நச்சுப்பாம்பு , கொடியகூரம்பு என்பதற்கு தாம் அஞ்சாதாராயினும் திருநீறு பூசத் தவறுஞ் சைவர்களைக் காண நாம் அஞ்சுவதாக இருக்கிறது.
சைவ உலகில் திருநீறு எங்கும் கிடைக்கத்தக்கது. இது எம்மார் வழிபட்டு வரும் பசுவின் சாணத்தை சுட்டெடுக்கும் நீறாகும். சைவர்கள் குடியிருக்கும் எல்லா இடங்களிலும் பசுக்கள் உள்ளன. இருந்தும் அதிர்ஸ்ட வசமாகவோ, துர்திர்ஸ்ட வசமாகவோ எங்கெங்கும் இது விலைக்கு விற்கப்படும் பொருளாய் விட்டது.
" ஆற்றல் அடர்விடை யேறும் ஆலவாயான் திருநீற்றை போற்றிபுகலி நிலாவும் பூசுரன் ....... வல்லவர் நல்லவர் தாமே " என்கிறார் நம் சம்பந்தர் சுவாமிகள்
திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக