செவ்வாய், 12 அக்டோபர், 2021

அன்னதானம்

 திருமுறைகளில் காணும் பசி பிணியை நீக்கும் அன்னதானம்

பசி என்பது ஒரு வகை பிணி (நோய்) என்பது பெரியோர் வாக்கு. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்ற பழமொழியும் பசிப்பிணியை கருத்தில் கொண்டே வழக்கில் உள்ளது. நம் வாழ்வில் என்றும் உணவு கிடைத்து பசியி்ல்லாமல் இருக்க வழிபட வேண்டிய தலங்கள் பல உண்டு. தன்மீது அன்பு கொண்ட அடியார்கள் பசிப் பிணியால் துன்புறும் போது இறைவனே தானே முன்வந்தும், தன் அடியார்களைக்கொண்டும் பசியையும் போக்கிய அன்னம் பாலிப்பு என்னும் அன்னதானம் கண்ட தலங்கள் பல உண்டு. இதனை நம் திருமுறைகள் வாய்லாக காணலாம்.

 பண்டைய காலத்தில் திருக்கோயில் தலயாத்திரையாக செல்பவர்களுக்கு ஆலயங்களில் உணவளிக்கப்பட்டது இதனை சட்டி சோறு என கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. திருமங்கை மன்னன், இளையான்குடி நாயனார், அமர்நீதி நாயனார்,அப்பூதியடிகள், மூர்க்க நாயனார், கலிகம்ப நாயனார் இடங்கழி நாயனார் ஆகியோர் அடியார்களுக்கு அன்னம் படைத்து இறைவனருள் பெற்றவர்கள். அடிகாயர்களுக்கு அன்னம் பாலிப்பதில் தன் குழந்தையைக் கூட உணவாக்கி கொடுத்தவர் சிறுத்தொண்டர் நாயனார்.

  திருவீழிமிழலை யில் ஒரு சமயம் பஞ்சம் ஏற்பட்ட போது இறையருளால் பலிபீடத்தில் அனுதினமும் பொற்காசு வைத்து, அப்பர் அடிகளையும், திருஞானசம்பந்த பெருமானையும் பசியால் வருந்தும் அடியார்களுக்கும் மக்களுக்கும் அமுது படைத்ததை திருவீழிமிழலை வரலாறும் நாயன்மார்கள் வரலாற்றிலும் காணலாம்.

  அனைத்து உயிர்களுக்கும்அமுதளிக்கும் இறைவனுக்கே அமுது படைத்து மங்காப் புகழ் பெற்றவரகள் காரைக்கால் அம்மையார்,கண்ணப்பர்,சிறுத்தொண்டர் மற்றம் அரிவட்ட நாயன்மார்கள் ஆவார்கள்.

 திருப்பைஞ்ஞலி 

 தனது அடியவர்கள் பசியால் துன்பப்பட்ட போது இறைவன் தானே உணவு வழங்கிய வரலாறும் உண்டு. அதில் ஒன்று திருப்பைஞ்ஞலி, இந்த தலத்தில் நாவுக்கரசர் சிவபெருமானுக்கு இறைவரே உணவு பெற்று வந்து உணவளித்தார் என்பது வரலாறு.

  திருக்குருகாவூரில் சுந்தரருக்கு இறைவன் அமுதும் நீரும் அளித்த தால் அவரைப்  " பாடுவார் பசி திர்ப்பார் பரவுவார் பிணி களைவாய் "என்று திருப்பதிகம் பாடி போற்றியுள்ளார்,

  திருக்கச்சூர்  என்ற இத்தலத்திற்கு திருக்கழுக்குன்றத்திலிருந்து வந்த சுந்தரர் இத்தலத்திற்கு வெகு தூரத்திலிருந்து நடந்து வந்த காரணத்தால் இளைப்பும், அதனுடன் பசியும்ேசர்ந்த  தள்ளாடிய படி கோவிலின் வெளியே உள்ள மண்டபத்தில் படுத்து கண்களை மூடுகிறார். அவருடன் வந்த பரிசனங்கள் இன்னும் வந்து சேரவி்ல்லை என்பதால் அப்படியேபசியுடன்  மண்டபத்தில் படுத்து விடடார். சுந்தரரின் நிலையைக் கண்ட இறைவன் கச்சபேஸ்வரர் ஓர் அந்தணர் உருவில் சுந்தரரின் தோளைத்தட்டி எழுப்பி, உட்காரச் சொல்லி வாழையிலை விரித்து அன்னம் பரிமாறி , குடிக்க நீரும் காெடுக்கிறார். அன்னம் பலவித வண்ணங்களில் வலவகை சுவையுடன் இருப்பதைக் கண்ட சு்ந்தரர் காரணம் கேட்கிறார். அதற்கு அந்த அந்தணர் சமைத்து உணவு கொண்டுவர நேரம் இல்லாததால் பல வீடுகளில் பிச்சை பெற்று வந்து உணவு கொடுத்ததாக கூறினார் அந்த அந்தணர். அந்தணரின் செயலில் நெகிழ்ந்து போன சுந்தரர் எதிரே இருந்த குளத்தில் கைகழுவிட்டு திரும்பி வந்து பார்த்தார் தனக்கு உணவு வழங்கி அந்தணர் இல்லை மாயமாய் மறைந்து விட்டார் , இதன் மூலம் இறைவனே தனக்காக நடந்து திருக்கச்சூர் வீதிகளில் தமது திருவடிகள் பதிய நடந்து சென்று பிச்சை பெற்று அன்னமிட்டதை நினைத்து இறைவன் கருணையை எண்ணி மனம் உருகி வியந்து " முதுவாய் ஒரு கதற " என்ற பதிகம் பாடினார்.

  குண்டையூரில் சுந்தரருக்கு நெல் கொடுத்தது. திருவாரூரில் பறைவையார் அடிகார்களுக்கு அன்னம் பாலிக்கவும், இல்லாதவர்களுக்கு உணவுக்காக நெல் வழங்கவும், இறைவரே குண்டையூரில் மலை மலையாக நெல்லை குவித்து, பின் சுந்தரர் வேண்டுகோளின்படி தனது சிவபூதங்களால் அந்த நெல் அனைத்தையும் திருவாரூரில் கொண்டுபோய் சேர்த்ததும் வரலாறு உண்டு.

  குருகாவூர் கட்டுச் சோறு சுந்தரருக்கு வழங்கியது , சுந்தரர் சீர்காழியிலிருந்து குருகாவூர் செல்லும் போது, பசி தாகங்களால் வருந்தி இருந்தபோது, சிவபெருமான் சுந்தரரும் அவர்கள் அடியார்களும் செல்லும் வழியில் ஒரிடத்தில் நீர் நிலையினையும், அமைத்து, அதில் இளைப்பார அமரச் செய்து கட்டுச் சோறும், நீரும், நிழலும் கொடுத்து மறைந்தார் என்பது வரலாறு.

  பசிப்பிணியை போக்க இவ்வாறு அடியார்களுக்கு உணவு அளிக்க இறைவனே தானே பிச்சை பெற்றும், பொருள் வழங்கியும், அன்னதானம் செய்ததையும் திருமுறைகளிலும், நாயன்மார்கள் சரித்திரத்திலும் புராணங்களிலும் காணலாம்.

திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக