செவ்வாய், 12 அக்டோபர், 2021

அன்னாபிசேக பூசை

 அன்னாபிசேக பூசை



ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்திக்கு நடத்தப்படுகிறது. அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்துப் பாதுகாக்கும் சிவபெருமானுக்கு சுத்தமாக சமைக்கப்பட்ட சாதத்தால் இறைவனை அலங்கரிப்பது இதன் சிறப்பம்சமாகும்.

பிரசாதத்தின் பெருமை “அன்னம் பரப்பிரம்மம்" என்பர். உணவை இறைவனாகப் பார்க்கிறது ஆன்மிகம். உடலை வளர்ப்பதுடன், உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம் தான். இதனால் தான், ஐப்பசி பவுர்ணமி அன்று, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடத்தப் படுகிறது. பிரசாதத்தை “ப்ர+சாதம்" என சொல்ல வேண்டும். “சாதம்" சாதாரண உணவு; “ப்ர" என்றால், கடவுள். அதுவே கடவுளுக்கு படைக்கப்பட்டு விட்டால், அதிலுள்ள தோஷங்கள் விலகி, “பிரசாதம்" ஆகி விடுகிறது. இதனால் தான், சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்தி, உணவளித் தனர்.

               தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் தமிழ்நாட்டில் அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அன்னாபிஷேகம் பிரசித்தி பெற்றது. அங்குள்ள பெருவுடையாருக்கு நூறு மூடை அரிசி சமைத்து அபிஷேகம் செய்தனர். ஐப்பசி சதயத்தில் தான், ராஜராஜ சோழனுக்கு பிறந்தநாள் வருகிறது. அதை முன்னிட்டு, இந்த தர்மத்துக்கு அவன் ஏற்பாடு செய்திருக்கலாம். கால வெள்ளத்தில், இது எல்லா சிவாலயங்களுக்கும் பரவியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. கங்கை கொண்ட சோழபுரம் ராஜராஜசோழனின் மகனான ராஜேந்திர சோழனும் தன் தந்தையைப் போன்றே கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரம்மாண்டமான சிவாலயத்தை கட்டியுள்ளான். இங்குள்ள இறைவனுக்கும் பிரகதீஸ்வரர் என்ற நாமத்தையே சூட்டினான். இங்கு சோழர் காலத்தில் சிறப்பாக நடைபெற்ற அன்னாபிஷேகம், காலப்போக்கில் மறைந்து போனது. தற்போது, காஞ்சிப்பெரியவர் வழிகாட்டுதலின்படி மீண்டும் அன்னாபிஷேகம் நடந்து வருகிறது. சுமார் பதின்மூன்றரை அடி உயரமும் அறுபது அடி சுற்றளவும் கொண்ட இந்த சிவலிங்கத் திருமேனிக்கு, 108 மூட்டை அரிசி அன்னமாக சமைக்கப்பட்டு அன்னா பிஷேகம் நடைபெற்றது. பின்னர் இறைவனுக்குப் படைக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டது. கங்கை கொண்ட சோழபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் கூடி அன்னாபிஷேகத்தை தரிசித்து மகிழ்ந்தனர். இந்த அன்னாபிஷேக நாளன்று இறைவனைத் தரிசித்து பிரசாதத்தை உட்கொண்டால் உணவுக்கு பஞ்சம் ஏற்படாது என்பது அனைவரின் நம்பிக்கை.

     அன்னபிஷேகத்தை கண்டவர்களுக்கு தான் சொர்க்கம் கிடைக்கும் என்பதை உணர்த்தும் வகையில் தான், ‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’ என்ற பழமொழி கூறப்படுகிறது.


அன்னபிஷேகத்தை கண்டால் தொழில், வியாபார பிரச்னைகள் தீர்ந்து நல்ல லாபம் கிடைக்கும்.அன்னபிஷேக பிரசாதம் உண்டால் மங்காத தோற்றப்பொழிவு கிடைக்கும்.இந்த அன்னாபிஷேக அன்னம் இரண்டு நாழிகை அதாவது ஒன்றரை மணி நேரம் அப்படியே வைத்திருப்பார்கள். அந்த நேரத்தில் யஜுர் வேத பாராயணம், ருத்திரம், சமகம் ஆகியவை பாராயணம் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.


இந்த நேரத்தில் மிகவும் கதிர்வீச்சு இருக்கும் என்பதால் அந்த அன்னத்தை கோயில் குளத்தில் அல்லது ஆற்றில் கரைத்துவிடுவர். அது நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவாகி விடும்.

   சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோவிலில் நிகழும் ஐப்பசி மாதம் 3ம் நாள்

( 20.10.2021 )புதன் கிழமை காலை சுமார் 10.00 மணி அளவில் திருநாவுக்கரசர் திருச்சபை ஆன்மீக வழிபாட்டு  மன்றம் மற்றும் சக்திபீட வழிபாட்டு மன்றத்தின் ஆன்மீகப்பணியின் தொடர்ச்சியாக  ஐப்பசி மாத பௌர்ணமி  அன்று  சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோவிலில் அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்மிகு இராஜகணபதிக்கும்,  அருள்மிகு கைலாய நாதருக்கு அன்னாபிசேக பூசையும்,  சக்திபீடத்தில் அமைந்துள்ள அம்மனுக்கும் பௌ ர்ணமி பூசையும் ,  ஐப்பசி மாத மகா அன்னாபிசேக பூசை வெகு சிறப்பாக இவ்வாண்டு தேவாரப் பாடல்களுடன், தமிழ்  அபிசேக ஆராதனையுடன் சிறப்பு பூசையாக,  அடியார்களின் கைங்கரியத்தால் நடைபெற உள்ளது.. 

      இங்கு நடைபெறும் பூசையில் அடியார்கள் தாங்களே அபிசேப் பொருட்களுடன் கலந்து பூசையின் முடிவில் அர்ச்சனை செய்து  கொள்ளுதல் மிக சிறப்பு.  இறைவனுக்கு தாங்களே மனம் , மொழி , மெய்யால் பணிவிடை செய்து தாங்களே பூவும் இலையும் கொண்டு இறைவிடம் வேண்டி தமிழால் அர்ச்சனை செய்யலாம். அவனை தீந்தமிழ் கொண்டு மனத்தால் நினைத்து, வாயால் அவன் புகழை போற்றி, மெய்யால் (கரங்களால்) பூ, இலை கொண்டு அர்ச்சித்து வணங்கி அருள் பெறலாம்.அவன் அருள் இருந்தால் தான் அவன் தாள் வணங்கி பூசையில் பங்கு கொள்ள முடியும். புண்ணியம் செய்தோரே  இதற்கு வாய்ப்பு கிடைக்கும்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக