சைவத்தோடு இணைந்து வாழ்வோம்
உலகை ஒன்றாக காண்பதே காட்சி என்பது ஆன்மீகம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் , .... அத்தேவனே பரம்பொருள் என்பதும்,
யாதும்ஊரே யாவரும் கேளீர் என்பதும் சைவம்.
இந்த ஆன்மீக ஒருமைப்பாட்டு உண்மை நமது வாழ்க்கை குறிக்கோளாக கொண்டு சைவத்தோடு இணைந்து வாழ வேண்டும்.
சைவர்களாகிய நாம் சைவ அனுஷ்டானங்கள்,சைவ மரபுகள், ஆதாரங்களை வாழ்க்கையில் மேற்கொண்டு ஒழுகுதல் வேண்டும். சைவ சமயத்தார் என்று சொல்லவோ , விபூதி, ருத்திராட்சம்அணியவோ வெட்கப்படக்கூடாது. பஜனை கூட்டு வழிபாடு பிராத்தனைகளல் பங்குபெறும் போது நாமும் சேர்ந்து தோத்திரங்களை பாட வேண்டும். மெய்யில் சைவ அடையாளங்களை தரித்து சிவ மந்திரம் கூறுதலே சைவத்தின் பிரதானம். இறைவன் நாமங்களை உரத்து சொல்ல வேண்டும். தீவண்ணர் திறம் பேசுதலும் திருநாமம் கூறுதலும் பிறப்பின் நோக்கம் என்பது அப்பர் அடிகள் வாக்கு. இறைவழிபாட்டு பூசையில் பஞ்சபுராணம் ஓதுவதற்கு முன்னும், ஓதிய பின்னும் திருச்சிற்றம்பலம் என்று சொல்லப் பழகிக் கொள்ள வேண்டும். இறைவழிபாட்டில் திருமுறைகள் பாடுவதற்கு கூச்சப்படக் கூடாது. குரல் நல்லாயில்லை என்று சாக்குபோக்கு கூறும் வழக்கம் நம்மைவிட்டு நீங்க வேண்டும். பாடல்கள் பாடப்பாடத்தான் குரல்ஒலி கை காெடுக்கும்., இறைவன் மீது காதலாகி கசிந்து கண்ணீர்மல்கி தேவாரங்களையும் திருமுறைகளையும் ஓத குரல் வளமும் இசைப்பண்ணும் தாமாக வந்து சேரும். பக்தியும் நம்பிக்கையும் கைவரப் பெற்றால் பயம் போய்விடும். பயமும் கூச்சமும் முன்னேற்றதிற்கு பரம விரோதிகள்.
சமய வைபவங்களில் திருமுறைகள் பாடி முடிந்ததும் நமப் பார்வதி பதயே என்று உரத்துக் கூறப்படும் போது, அங்குள்ளவர்கள் அரகர மகாதேவா என்று பதிலுக்கு கூற வேண்டும்.அதன்பின்னர் சிவ சிதம்பரம் என்றதும் மற்றவர்கள் சிற்சபேசா என்றும், தென்னாடுடைய சிவனே பாேற்றி எனும் போது மற்றவர்கள் எந்நாட்டவர்க்கு இறைவா போற்றி என்றும் கூறுவது சைவ சித்தாந்தத்தின் மரபு. இவ்வாறு கூறுபவர்களே புண்ணியம் செய்தவர்கள்.
நாம் மனிதராய் பிறந்தது உண்ணவும், உடுக்கவும்உறங்கவும், பொருள் தேடவும் என்று பலர் நினைக்கிறார்கள். வாழ்க்கை இயந்திர மயமாகி விடக்கூடாது. சம்சார சாகரத்தில் என்றும் மூழ்கியிருத்தல் ஆகாது, என்பதனால் தான் நம் முன்னோர்கள் இறைவழிபாடு, ஆன்மீகம், புராணங்கள் படித்தல், பிராத்தனை என்றெல்லாம் நம் முன்னோர்கள் வகுத்து தந்துள்ளனர்.
நான் சந்தோசமாகத்தான் இருக்கிறேன் என்று மனம் விட்டு கூறுபவர்கள் அரிதினும் அரிது.யாருக்கும் ஏதேனும் பிரச்சனை இருந்து கொண்டேதான் இருக்கும். மனித வாழ்க்கையில் உலகியல் தேவையோடு ஆன்மீகத்தேவைகளும் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு மனிதனுக்கும்மூன்று கடமைகள் உண்டு. 1. வாழ்வியல் கடமை,. 2. இல்லற கடமை, 3. ஆன்மீக கடமை , இந்த ஆன்மீக கடமையில் எளிமையை வழிகாட்டுவது சமயம். ஆன்மீக கடமையில் ஐந்து பிரதானமாக கருதப்படுகிறது.
1. அனுஷ்டானம், 2. சிவபூசை, 3. திருக்கோயில் தரிசனம்., 4, திருமுறைகள் பராணயம். 5, தான தர்மம்.
எவ்வித சுகபோகங்கள் இருந்தும் ஆன்மீகம் இல்லையேல் அவற்றால் பயனில்லை. வாழ்வுடன் சுவை இருக்காது. ஆன்மீக ஈடுபாடுதான் மனிதனின் வாழ்க்கை சுமையை தணிக்க வல்லது. மனமது செம்மையானால் அமைதி பெற ஆன்மீகம் தேவை.
சமய அனுஷ்டானம், இறைபக்தி, தியானம், இறைவன் புகழ் பாடுதல் ( திருமுறை பாடுதல்) கேட்டல், புராணஇதிகாசங்கள் படித்தல், என்பனவற்றில் ஈடுபடுவதால் வீண் விவகாரங்களில் மனதையோ, புலன்களையோ செலுத்தாமல் தவிர்த்துக் கொள்ள முடியும். அதனால் நாம் அடைவது நிம்மதி,அமைதி, சந்தோசம்ஆகியவை.
இப்பேறுகளை வேறு எந்த மூலங்களிலிருந்தும் பெற்றுக் கொள்ளமுடியாது. இந்த உண்மையை நாம் உணர்ந்து,நம் பிள்ளைகள் உணர்வதற்கும் இளம் பிராயத்திலேயே அவர்களையும் பழக்கி விட வேண்டும். இளைஞர்களும், சிறுவர்களும் சமய விசயங்களில் ஈடுபாடு கொள்வர். எதர்க்கும் நேரம் இல்லை என்று கூறிக்கொண்டு எத்தனையோ காரியங்களுக்கு நேரம் ஒதுக்கும் போது ஏன் இறை சிந்தனைக்கு நேரம் நம் வாழ்வு நெறியில் ஒதுக்கக்கூடாது. நாம்ஒவ்வொருவரும் நம் அன்றாட வாழ்வில் சற்றே சிறிது நேரமாவது சைவ சமய நெறிக்கி ஒதுக்கி நம் மனமும் சந்தோசமும் பெறுவோம்.
திருச்சிற்றம்பலம்
நன்றி ° சைவ வாழ்வியல் சிந்தனை யாழ்பாண நூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக