பெண்மையை முதன்மை படுத்திய சமயம் (சைவம்)
உலகில் சமயங்கள் பல இருப்பினும் சைவ சமயமே சமயம் என்பா் ஆன்றோர்கள்.சைவ சமய முதற்கடவுளான சிவபெருமான் தன் இடப்பாகத்தை உமாதேவியாருக்கு வழங்கி, உமையோரு பாகனாக விளங்கி, பெண்மைக்கு முதன்மை படுத்தியவரும் நம் முதற்முதல் கடவுளே.
சைவ சமயத்தில் மறுமலர்ச்சிக்காக இறைவனால் அருளாளர்கள் மூலம் அருளப்பட்டவை திருமுறைகள். தோத்திர நூல்களாக விளங்கும் திருமுறைகள் சைவ சமயத்தின் கருவூலங்கள். திருநாரையூர்நம்பிகள் மூலம் தில்லையிலிருந்து திருமுறை பதிகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனை நம்பியாண்டார் நம்பிகள் சமயச்சாரியார்கள் திருவாய் மலர்ந்து பாடியருளிய முறையில் பண்கள் அறிய எருக்கத்தம்பூலியூர் இறைவனிடம் மனம் உருகி வேண்டினார். அப்போது நம் பெருமானார் திருநீலகண்ட யாழ்பாணர் மரபில் வந்த ஒரு பெண்மணிக்கு திருமுறை பண்களில் பாட உணர்த்தியுள்ளோம் என்று அருள் பாலித்தார்., திருநீலகண்ட யாழ்பாணர் அவதரித்த தலம் எருக்கத்தம்புலியூர் திருத்தலமாகும். அவர் மரபில் வந்த பெண்ணை அழைத்து ஆச்சாரியார்கள் பாடிய வாறே பாடுவித்து பண்களோடு பாடிக் காட்டினார், இதுவே இறைவன் நம் சமயத்திற்கு இரண்டாவது முதன்மைப் பெண்ணாக அறிமுகம் செய்தவர் நம் இறையனாரே.
அதன்பின் நாயன்மார்கள் வரிிசையில் பெரியபுராணம் காட்டும் முதன்மை பெண்கள்
சிவனடியார்களான 63 நாயன்மார்களில் அறுபது பேர் ஆண்கள், மூவர் பெண்கள். காரைக்கால் அம்மையார், மங்கையர்கரசியார் மற்றும் இசைஞானியார் ஆகியோரே அப்பெண் நாயன்மார்கள் ஆவர்.
காரைக்கால் அம்மையார் இறைவனாலே ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட சிறப்புடையவர்.இவரே பெண் நாயன்மார்களில் மூத்தவரும் ஆவார். கயிலைமலையானை கால்களால் மிதிக்க அஞ்சி கைகளால் நடந்து சென்றவர். பிறவாமை வேண்டும் என்றும் அப்படி பிறந்தால் நான் உன் அடியில் இருக்க வேண்டி பணித்தவர்.
மங்கையர்கரசியார் சமண சமயத்தின் பிடியிலிருந்த பாண்டிய நாட்டினை சைவத்திற்கு மாற்றியவர்.
இசைஞானியார் ‘வன்தொண்டர்’ என்றழைப்படும் சுந்தரரின் தாய்.
இதன்படி நம் சைவ சமயம் தான் பெண்களை முதன்மைப்படுத்திய சமயம் நம் சமயமே
திருச்சிற்றம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக