சைவ சித்தாந்த துளிகள்
சாதித்த தெல்லாம் தவமேனும் சற்குருவைப் பேதித்தால் எல்லாம் பிழையாகும்.
ஒருவன் பொறிகளை தன் வசப்படுத்தி சாதித்தன எல்லாம் தவமே ஆனாலும் உபதேசம் அருளும் ஞானாசிரியனை சிவத்தின் வேறாகக் கருதி முரண்பட்டால் அத்தவம் அனைத்தும் பிழைபடும். வேத விதிப்படி யாகம்செய்த தக்கனுக்கு முப்புரம் எரித்த நிகழ்வானது அவன் செய்த சிவநிந்தையால் சிவபெருமான் ஆணை வந்து பொருந்திய தன்மையால் விளங்கியது போலாம்
தவம் என்று இ்ங்கு குறிப்பிட்டவை இறப்பில் தவம் என்று சிறப்பிக்கப்டும் சரியை, கிரியை, யோகம்ஆகியன. இம்மூன்றும்சைவமாம் சமயம் சாரும் நல்லூழ் கைகூடப் பெற்று பல பிறவிகளில் தொடர்நதுஇயற்றப்பெறுவன. ஆகையால் இவற்றை சாதித்தல் அதாவது முற்றுப்பெற செய்தல் அரிதாகும். எனவே சாதித்ததெல்லாம் தவமேனும் என்று அதன் அருமைகாட்டி கூறபடகிறது.
அரிய தவங்களை ஆன்மா சாதித்தாலும் தானாகவே சுதந்திரமாக சாதிக்கவி்ல்லை சிவபெருமான் தோன்றா துணையாக விளங்கி தவநெறியினை அறிவித்து அந்நெறியில் ஆன்மாவை செலுத்துவான். அவன் அருளால் ஆன்மா தவப்படிமுறையில் இயற்றி முற்றவிக்கிறது.
இவ்வாறு தோன்றாதுணையாக இருந்து ஆன்மா தவநெறியை முற்றவிக்க அருள்செய்த முதல்வனேசற்குருவாக எழுந்தருளி ஞானத்தை உணர்த்துவான். எனவே இந்நிலையில் மாணாக்கன் சற்குருவோடு முரண்பட்டு எதிர்த்தால் அது சிவபிரானையே எதிர்ப்பதாகும.யாரை தோன்றா துணையாக கொண்டு தவத்தை இயற்றினானோ அந்த முதல்வனையே எதிர்த்தால் செய்நன்றி கொன்ற குற்றம் பொருந்தி இயற்றி தவம் அனைத்தும் பிழைபட்டுபோகும் எனவே சாதித்தது எல்லாம் தவமெனும சற்குருவை பேதித்தால் எல்லாம் பிழையாகும் என்று கூறப்படுகிறது
அறிவுக்கு அறிவாக விளங்கும் சிவபிரானே குருவாக எழுந்தருளி ஞானத்தை உணர்ததுவான் தன் முதல் குருவுமாய் தவத்தினில் உணர்த்த என்னும சிவஞான போதத்தால் பெறப்படும். இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆ்ண்ட குருமனிதன் தாள் வாழ்க என்னும் இரண்டு அடிகளையும் இணைதத்து நோக்கினால் இவ்வுண்மை விளங்கும்
சற்குருவை எதிர்த்தால் சிவபிரானை எதிர்த்தலே ஆகும் என்று உண்மை இனிது விளங்கும். சிவநிந்தை செய்த தக்கன் வரலாறு சான்றாக காட்டப்பட்டது.
ஞானாசிரியன் கருணையை மறந்து மாறுபடுதல் எவ்வளவு பிழை என்பதனை உணர்க
திருச்சிற்றம்பலம்
நன்றி சித்தாந்த சிகாமணி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக