சனி, 21 ஜனவரி, 2017

சிவபாத சேவை

சிவபாத சேவை


சிவனிடம் அடைக்கலம் புகுவதற்கு பல வழிகள் இருந்தாலும், அவற்றில் மிக முக்கியமானது சிவபாத சேவையே, ஏனென்றால் சிவபாதத்தை பற்றி சேவை புரிந்தவர்கள் நிறைய உண்டு. சிவபாத சேவை புரியாதவர்கள் மிக அரிதே. கோவில்களில் எல்லா கால பூஜைகளும் முடிந்த பிறகு இரவில் இறைவனுடைய திருப்பாதத்தை ஒரு பல்லாக்கில் வைப்பார்கள், அதை வைத்துத் தூக்கியபடி கோயிலைச் சுற்றி வருவார்கள், அந்த திருப்பாத சேவையைச் செய்வதற்கு பலர் அலைவார்கள். அந்த திருப்பாதம் சுற்றி வந்து இறுதியாக பள்ளியறைக்கு வந்து சேரும்.
இந்த சிவபாத சேவையை சாதிக்காமல் ( பார்க்காமல்) ஒருவரும் சிவன் கோயிலை விட்டு போகக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கின்றது, இது தெய்வ சட்டம். ஆனால் எத்தனை பேர் அதற்கு சிவபாத அனுக்கிரகத்தைப் பெற்று போகின்றனர் அதுவரை காத்திருந்து சிவபாத சேவையை புரிவர்கள் மிகவும்அரிதாகவே உள்ளது. சிவபாத ரகசியங்களில் இது மிகவும் முக்கியமானது. இதைப்பற்றி சிவபாத ஆனந்த யோகம் என்ற பெரிய கிரந்தமே இருக்கின்றது. நாம் கோவில் அருகில் குடியிருந்தாலும் கூட இந்த பள்ளியறை சேவைக்கு வருவது அரிதாகவே உள்ளது.
இந்த சிவபாத தரிசனத்தை ஒவ்வொருவரும் பெற்றுத்தான் தீர வேண்டும். இந்த சிவபாத சேவையானது அற்புதமான ஆனந்தத்தை தரும் என்று சாஸ்திரங்களும் கிரந்தங்களும் விளக்கமாக கூறியிருக்கின்றன,. பள்ளியறை பூசைக்கு செல்ல எங்களுக்கு நேரம் இல்லை, காலம் இல்லை மற்ற நேரங்களில் தான் தரிசிக்கின்றமே அது போதாதா? என்று சொல்லி விடக்கூடாது, ஏனென்றால் இது அவ்வளவு முக்கியம். இரவு நேரங்களில் வேண்டாத பொழுதுபோக்கு நிகழ்வுகளில் வீணே காலத்தை வீணடித்து காலத்தை விரயமாக்கிறோம், இதற்கெல்லாம் காரணம் சிவன் கோயிலில் சிவபாத ரகசியத்தை நாம் தெரிந்து கொள்ளாமல் இருப்பதுதான். கலியுகத்தில் பாதுகாப்பின்மை, மக்களின் அசட்டை காரணமாக பல சிவன் கோயில்களில் இந்த வழீபாடு மறைந்து வருகிறது, பிரதோச கால பூசை புத்துயிர் பெற்று இருப்பதுபோல் இரவு நேர நித்ய சிவபாத பூசையும் நன்கு நடைபெற அனைவரும் அரும்பாடு பட வேண்டும். பல சற்குருமார்கள் மூலம் பல சத்சங்கங்களை உருவாக்கி சிவபாத பூசையின் மகிமையை பரப்புவது நம் அனைவரின் கடமையாகும்.
சிவபாத ரகசியம்
இரவு கால பூசை முடிந்த பிறகு இறைவனுடைய திருப்பாத்திற்கு அற்புதமாக அலங்காரம் செய்யப்படும். அந்த அலங்காரம் செய்த திருப்பாதத்தை பல்லாக்கில் ஏற்றி அந்த பல்லாக்கை கோயிலில் பிரதட்சணம் செய்யப்படும். அப்போது இறைவனுக்கு செய்ய வேண்டிய சேவைகளை நன்றாக மனதில் பதிய வைத்துக்கொள்ளவேண்டும். அவ்வாறு கோயில் பிரதட்சிணம் வருகையில் நாதஸ்வரம் சங்கு உடுக்கை, பேரிகை துந்துபி, மத்தளம் பஞ்ச வாத்தியமத் இவை எல்லாம் ஒலித்துக் கொண்டு வரவேண்டும். இந்த வாத்தியங்களை யார் ஒருவர் கூலி இல்லாமல் சேவையாக செய்கிறார்களோ அவர்கள் திருக்கைலாயத்தில் நாத கணங்களாக மாறுகின்றனர்.
பிரபஞ்ச படைப்புகளில் காலமானது இறைவனின் பாதங்களில் இருந்து தோன்றியதாகும். ஓவ்வொரு நாளிலும் சில நற்காரியங்களையாவது செய்து முடித்தோம் என்ற மன நிறைவோடு கழித்தலே காலதேவனுக்கு நாம் செய்யும் முறையான வழிபாடு.
அதோடு மட்டும் அல்லாமல் அந்தப்பாதத்திற்கு கந்தங்களும் சந்தனமும்,மலர்களும் தொடுத்துக் கொடுத்து அதற்கு பின்னால் பூரணமாக வேதங்களையும், ஓதி நான் மறைகளையும் ஓதுவதோடு அல்லாமல் தமிழ் மறைகளையும் ஓதியபடியே வலம் வந்து சிவபாத சேவைகளைச் செய்ய வேண்டும். சிவபாத பல்லக்கு கோயிலை வலம் வருகையில் ஸ்ரீகால பைரவரின் சன்னதி அருகே சற்றே நின்றிட ஸ்ரீகால பைரவருக்கு புனுகு சாற்றி பூசையும் நடைபெறும்.
சிவபாத பூசையில் பங்கு பெறுவது
சிவபாத பல்லாக்கு நம் தோள்களில் தாங்கி வலம் வருதல் பெறுதற்கரிய பாக்கியம்
சிவபாத சேவைக்கு இசைக்கருவிகள் வாசித்தல் இசை வல்லுநராக்கும்
பூசைக்குரிய பூச்சரங்கள் வழங்குதல்
பள்ளியறை பூசைக்கு பசும்பால் வழங்கி கைங்கர்யம் செய்தல்
சிவபாத பல்லாக்கு சேவைக்கு தீபந்தம் பிடித்தல் ஒளி விளக்குகள் அமைத்து கொடுத்தல்
இவ்வாறாக சிவபாத சேவையின் பல்வேறு கைங்கர்யங்களை நிறைவேற்றினால் அளப்பரிய புண்ணியத்தை எளிதில் பெறுவதோடு அரிய காலத்தை விரயம் செய்ததற்கு பரிகாரமாகவும் அமைகின்றது.

பலங்கள்
சிவபாத பூசையில் சேவை கண்டும் சேவை புரிந்தவர்களுக்கு அவரவர்கள் நட்சத்திரங்களுக்கு ஏற்றவாறு தோசங்கள் நீங்கி புண்ணிய பலன்கள் கிடைக்கும்
குறிப்பாக பெண்களுக்கு திருமண பாக்கியம், குழந்தை பேறு, திருமாங்கல்ய பலம் கிடைக்கும்.
சிவபாா சேவையில் கலந்தவர்கள் அனைத்து விதமான சித்திகளும் கனிந்து வரும்.
நாம் இழந்த கால விரையத்தை ஈடுசெய்ய சிவபாத சேவையில் கலந்து கால பைரவரின் அருள் பெற்று புண்ணியம் பெறலாம்

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்





வெள்ளி, 20 ஜனவரி, 2017

சிவ பெருமானாரை வழிபட்ட பிற தெய்வங்களும் தலங்களும்

சிவ பெருமானாரை வழிபட்ட பிற தெய்வங்களும் தலங்களும்

1, உமையம்மை வழிபட்ட தலங்கள் - திருவாடுதுறை, மயிலாப்பூர்,காஞ்சிபுரம், திருச்சத்திமுத்தம், திருவண்ணாமலை, திருவானைக்கா. இன்னும் பல
2. முருகன் வழிபட்ட தலங்கள் - பேணுபெருந்துறை, சேய்ஞ்ஞலூர், திருமுருகன்பூண்டி, குமரக்கோட்டம், இன்னும் பல
3. விநாயகர் வழிபட்ட தலங்கள் - செங்காட்டங்குடி, கச்சி அனேகதங்காவதம், இன்னும் பல
4, வீரபத்திரர் வழிபட்ட தலங்கள் - திருச்செம்பொன்பள்ளி
5. அனுமன் வழிபட்ட தலங்கள் - குரக்குக்கா, வலிதாயம் முதலியன
6, சூரியன் வழிபட்ட தலங்கள் - திருநீடுர், திருமறைக்காடு, திருப்புனவாசல், கருப்பறியலூர் முதலியன
7. திருமால் வழிபட்ட தலங்கள் - வாழ்கொளிபுத்தூர், குடமூக்கு, தலைச்சங்காடு, திருவீழிமிழலை, திருமாற்பேறு, சிவபுரம், வாஞ்சியம், சக்கரப்பள்ளி
8. பிரமன் வழிபட்ட தலங்கள் - திரு அண்ணாமலை, பிரமபுரம், திருப்பணந்தாள், திருப்பட்டூர்
9. குபேரன் வழிபட்ட தலங்கள் - வேதிகுடி, செம்பொன் பள்ளி, திருஅண்ணாமலை,
10, கலைமகள் வழிபட்ட தலங்கள் - நெய்த்தானம், கச்சபேசம் முதலியன
11. திருமகள் ( லட்சுமி) வழிபட்ட தலங்ள் - வேட்களம், திருநினறியூர் , தெங்கூர், திருப்பத்தூர் , காஞ்சி. காயாரோணம், முதலியன
12. ஆதிசேடன் வழிபட்ட தலங்கள் - வலஞ்சுழி , நாகேச்சரம், பாம்புரம், நாகைக்காரோணம்
13. தேவந்திரன் வழிபட்ட தலங்கள் - கண்ணார் கோவில், சீர்காழி, பென்னாகடம் முதலியன
ஆனால் சிவபெருமான் வழிபட்ட தலங்கள் என்று ஏதுமில்லை
நன்றி : தமிழ் வேதம்
தொகுப்பு : வை, பூமாலை, சுந்தரபாண்டியம்

திங்கள், 9 ஜனவரி, 2017

திருஎறும்பியூர் (திருவெறும்பூர்) தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்கள்

தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்கள்
திருஎறும்பியூர் (திருவெறும்பூர்)


(மார்கழி 24 ஆம்நாள் ஆனமீக சுற்றுலாவில் சென்ற இடம்)
இறைவர் திருப்பெயர்: பிப்பிலிகேஸ்வரர் (பிப்பிலி - எறும்பு), எறும்பீஸ்வரர், எறும்பீசர், மதுவனேஸ்வரர், மணிகூடாசலபதி, மாணிக்கநாகர்
இறைவியார் திருப்பெயர்: சௌந்தரநாயகி, மதுவனேஸ்வரி, நறுங்குழல் நாயகி (சுகந்த குழலேஸ்வரி), இரத்தினாம்பாள்.
தல மரம்: வில்வம்
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
வழிபட்டோர்: அப்பர்,திருமால், பிரமன், நைமிசாரண்ய ரிஷிகள், இந்திரன், தேவர்கள்.

தல வரலாறு

தற்போது மக்கள் வழக்கில் 'திருவெறும்பூர் ' என்றும் 'திருவரம்பூர் ' என்றும் வழங்குகிறது.



இந்திரனும் தேவர்களும் எறும்பு வடிவங்கொண்டு வழிபட்ட தலமாதலின் இத்தலம் இப்பெயர் பெற்றது.



"தாருகாசூரனை" அழிக்கத் தேவர்கள் வழிகேட்டுப் பிரமனை அனுகினர். அவர் சொல்லியவண்ணம் இந்திரனும், தேவர்களும் தங்கள் உருவம் அசுரர்களுக்குத் தெரியக் கூடாதென்றெண்ணி, எறும்பு வடிவங்கொண்டு இத்தலத்திற்கு வந்து வழிபட்டனர். அவ்வாறு வழிபடும்போது சிவலிங்கத்தின் மீதிருந்த எண்ணெய்ப் பசையால் மேலேற முடியாது கஷ்டப்பட, சுவாமி புற்றாக மாறி, எறும்புகள் மேலேறிப் பூசை செய்வதற்கு வசதியாகச் சொரசொரப்பான திருமேனியுடையவரானார். அவர்கள் மேலேறுவதற்கு வசதியாகச் சாய்ந்தும் பூசையை ஏற்றுக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது.



திரிசிரன் திருச்சியில் வழிபட்டதுபோல், அவனுடைய சகோதரன் 'கரன்' என்பவன் எறும்பு உருக்கொண்டு இங்கு வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது.

தேவாரப் பாடல்கள் : அப்பர் - 1. விரும்பி யூறு விடேல்மட, 
  2. பன்னியசெந் தமிழறியேன்.


சிறப்புகள்

இக்கோயில் மலைமீது உள்ளது. மலைக்கோயில் புராணப்படி இதற்கு; பிப்பிலீச்சரம், மணிக்கூடம், இரத்தினக்கூடம், திருவெறும்பிபுரம், எறும்பீசம், பிரமபுரம், இலக்குமிபுரம், மதுவனபுரம் குமாரபுரம் எனப் பல பெயர்களுண்டு. தென் கயிலாயம் என்றும் இத்தலத்தைச் சொல்வர்.



கல்வெட்டில் இறைவனின் திருப்பெயர், 'திருமலையாழ்வார்' என்றும், 'திருவெறும்பியூர் உடைய நாயனார்' என்றும் குறிக்கப்பெற்றுள்ளது.



நவக்கிரக சந்நிதியில் சூரியன்  திருவுருவம் இருமனைவியரோடும் நடுவில் உள்ளது.



கருவறை கல்லாலான கட்டிடம்.


மூலலிங்கம் மண்புற்றாக மாறியிருப்பதால், நீர்படாமல் பாதுகாக்கப்படுகிறது. சிவலிங்கத்திருமேனி வடபால் சாய்ந்துள்ளது. மேற்புறம் சொரசொரப்பாக (தலபுராணம் தொடர்புடையது) உள்ளது. சிவலிங்கத்தின் மீது எறும்புகள் ஊர்ந்த அடையாளங்கள் உள்ளன.


கருவறையின் வெளிப்புறம் கல்வெட்டுக்கள் உள்ளன. 

கல்வெட்டில் இத்தலம் "ஸ்ரீ கண்டசதுர்வேதி மங்கலம்" என்று குறிக்கப்படுகிறது.

எறும்பியூர் தலபுராணம் உள்ளது.
இது ஒரு பரிகாரத் தலம், கல்வி வீரம் வேண்டுதல் பலிதமாகும்

(கி. பி. 1752-ல் ஆங்கிலேயர்க்கும் பிரெஞ்சுக்காரர்க்கும் நடந்த போரின்போது இவ்விடம் போர் வீரர்கள் தங்கும் ராணுவத் தளமாக விளங்கியது.)


அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருச்சியை அடுத்த இருப்புப் பாதை நிலையம், திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் உள்ளது. திருச்சியிலிருந்து அடிக்கடி நகரப்பேருந்துகள் உள்ளன. 
தொடர்பு : 09842957568

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை, பூமாலை சுந்தரபாண்டியம்

வெள்ளி, 6 ஜனவரி, 2017

தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்கள் / நெடுங்களம்

தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்கள் / நெடுங்களம்

திருநெடுங்களம்
இறைவர் திருப்பெயர்: நித்யசுந்தரேஸ்வரர், நெடுங்களநாதர்.
இறைவியார் திருப்பெயர்: மங்களநாயகி, ஒப்பிலா நாயகி.
தல மரம்: வில்வம்.
தீர்த்தம் : அகத்திய தீர்த்தம், சுந்தர தீர்த்தம்.
வழிபட்டோர்: அகத்தியர்,சம்பந்தர்

தல வரலாறு

மக்கள் கொச்சையாக பேசும்போது மட்டும் இத்தலத்தை 'திருநட்டாங்குளம்' என்கின்றனர்.



தவஞ்செய்த அம்பிகையை இறைவன் கள்ள உருவில் தோன்றிக் கைத்தலம் பற்ற, அச்சமுற்று அம்பிகை ஓடியொளிந்த இடம், ஒளிமதிச்சோலை என்று வழங்குகிறது.



தேவாரப் பாடல்கள்
: சம்பந்தர் - மறையுடையாய் தோலுடையாய்.




சிறப்புகள்

இங்குள்ள வெண்கலக்குதிரை விந்தையான அமைப்புடையது.

மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சோழர்காலக் கல்உரல் சிறந்த வேலைப்பாடமைந்தது.



நெடுங்களப் பதிகத்தில் வரும் பாடற் கருத்துக்கள் அனைத்தும் ராஜ கோபுரத்தில் முன்னும் பின்னும் சுதை சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.



மூலத்தானத்தின் மேல் இரு விமானங்கள் அமைந்து புதுமையாகக் காட்சியளிக்கின்றன.



இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் அமைப்பு அற்புதமானது - யோக தட்சிணாமூர்த்தி, சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும் திருநீற்றுப் பெட்டகமும் ஏந்தி, இடக்காலைச் சுற்றியவாறு யோக பட்டம் விளங்கக் காட்சி தருகிறார்.



கல்வெட்டில் இத்தலம் "பாண்டிகுலாசினி வளநாட்டு வடவீர நாட்டு திருநெடுங்களம்" என்றும்; இறைவன் பெயர் "நெடுங்களத்து மகாதேவர் " என்றும் குறிக்கப்பட்டுள்ளது.



இத்தலத்தில் 30க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருச்சி - தஞ்சை சாலையில் வந்து துவாக்குடி என்னுமிடத்தில் பிரியும் சாலையில் 4 கி. மீ. சென்று நெடுங்களத்தையடையலாம். திருச்சி மெயின்கார்டு கேட்டிலிருந்து நகரப் பேருந்து செல்கின்றன. திருச்சி - மாங்காவனம், நகரப் பேருந்து இத்தலம் வழியாகச் செல்கிறது. தொடர்பு : 0431 - 2520126

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

புதன், 4 ஜனவரி, 2017

சிவனாரின் (யோகேஸ்வரரர் ) பஞ்ச சக்திகள் / ஐந்து முகங்கள் காட்டும் பஞ்ச சக்திகள்

சிவனாரின் (யோகேஸ்வரரர் ) பஞ்ச சக்திகள் / 
ஐந்து முகங்கள் காட்டும் பஞ்ச சக்திகள்


இந்து சைவம் மற்றும் அண்டவியல் ஆய்வின்படி வெளியிட்ட (சிவனாரின் )தெய்வீக சக்திகள் ஐந்து முகங்கள் வழியாக நமக்கு உணர்த்துகிறது,
1) ஈஸனியம் 2, தடபுருஷா 3, அகோரா  4, வாமதேவா  5,சத்யோசதா
  இந்த ஐந்து முகங்கள் தத்துவ ரீதியான சக்திகள் கருணையின் வெளிப்பாடு, ஐம்புலங்களின் ஆற்றல், இவைகளை உணர்த்துகிறது, அவை படைத்தல் காத்தல்,  ஆசீர்வதித்தல். அழித்தல்.  மறைத்தல். சுழற்சியினைக் காட்டுகிறது, ஐந்து தலைகளின் மேல் உள்ள அரவம் ஞானம் பெறவும், சலனமற்ற கவனமுடன் இருக்க பகுத்தறிவு பெறும் தன்மையினைக் காட்டுகிறது, ஆயுதம் ஏந்திய கைகள் அழித்தல், முன்னோக்கி செல்ல எதிர் கொள்ளும் சக்தியையும், ஆற்றல் கஷ்டங்களை சமாளிக்கும் திறன் இவற்றை உணர்த்துகிறது, கருணை ெகாண்ட முகம் முன்னேறிச் செல்ல சக்தியை வெளிப்படுத்துகிறது, " அஞ்சேல் என்றும் அஞ்சினால் உன்னால் விடுதலை அடைய முடியாது " என்ற 
செய்தியினையும் கூறுவதாக உள்ளது அவரின் நான்கு முகங்கள் நான்கு வேதங்களையும் ஐந்தாவது முகம் ஆகமத்தையும் உணர்த்துகிறது. ஒவ்வொரு முகமும் வடிவியல் (ஜியோமெட்ரிக்) வடிவத்துடனும் நெற்றி இறைவனின் ஐந்து காரணிகளையும் பிரதிபலிக்கிறது, அவர் அணிந்துள்ள புலித்தோல் பூமியிலுள்ள பக்தர்களின் உலக அதிர்வுகளைக் காட்டுகிறது,

ஐந்து ( பஞ்ச சக்திகள் ) முகங்கள் Five Power of Sivan 



1. சத்ேயா சதா
   படைத்தல் (power of Creation) சக்தி
   பிரம்மாவை ஆட்சிக்கும் சக்தி
   திசை = மேற்கு நோக்கியது
  பஞ்ச பூத மண்டலங்களில் .. பூமி  மண்டலம்
  பஞ்சாட்சர மந்திரத்தில்  ... " ந"  அடையாளம்
  மானிட உடலின்  மணிப்பூரா இடம்
  ஆகம வண்ணம் / வெள்ளை நிறம்
  இச்சா சக்தியுடன் சேர்ந்தது
  திரிசூலத்தில் உள்ள உடுக்கை  படைத்தல் சக்தியைக் குறிக்கும்

2.  வாமதேவ ( கருணை கொண்டஆசீர்வாதம்) power of preservation

   சக்தி ... கருணையுடன் கொண்ட ஆசீர்வாதம் / காத்தல்
  விஷ்ணுவை நிரவகிக்கும் சக்தி
  திசை ... வடக்கு திசை கொண்டது
  பஞ்ச பூதங்களின் மண்டலம் ... நீர் ( ஜல மண்டலம்)
  பஞ்சாட்சர மந்திரத்தில்  ... " ம" அடையாளம்
  ஆகம வண்ணம்  ..  சிகப்பு நிறம்
  மானிட உடம்பில் அனாஹர சக்ரம்
 அடையாளம் ... கருணையுடன் ஆசீர்வதிக்கும் கை
  மாயா சக்தியுடன் இணைந்தது

3.  அகோரா 

   சக்தி  ... கலைப்பு சக்தி (அழித்தல்)power of dissolvution
  ருத்திரனை நிர்வகிக்கும் சக்தி
  திசை ... தெற்கு திசை நோக்கியது
  பஞ்ச பூதங்களின் மண்டலம் ... நெருப்பு மண்டலம்
  பஞ்சாட்சர மந்திரத்தில் ... "சி" அடையாளம்
  மானிட உடலிில்  சுவஸ்தான சக்கரம்
  ஆகம வண்ணம் ... கருமேக வண்ணம்
  ஞான சக்தியுடன் இணைந்தது
  அடையாளம் ... அக்னி ஏந்திய கை

4.  தத் புருஷ  ( உச்ச ஆன்மா) பரமாத்மா


சக்தி  ... மறைத்தல் Power of obscuration
மகேஸ்வரனை நிர்வகிக்கும் சக்தி
திசை ... கிழக்கு
பஞ்ச பூத மண்டலம் .... வாயு மண்டலம்
பஞ்சாட்சர மந்திரத்தில் ... " வ " அடையாளம்
ஆகம வண்ணம் ,,, பொன்நிறம்
மானிட உடலில்  ,,, மூலாதாரம்
கிரியா சக்தியுடன் இணைந்தது
அடையாளம் ...  ஊன்றிய கால்  கருணை அடையாளம்

5.  ஈஸான்யா  தேவன்

 சக்தி ... வெளிப்படுத்தும் சக்தி power of Revealment 
சதாசிவனை நிர்வகிக்கும் சக்தி
திசை ... ேமல் நோக்்கிய திசை
பஞ்ச பூத மண்டலம்... ஆகாய மண்டலம்
பஞ்சாட்சர மந்திரத்தில் ... "ய"  அடையாளம்
சித்தா ( பராசக்தியுடன் ) இணைந்தது
அடையாளம் ... திருவடி சிலம்பு கருணையின் அடையாளம்



திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

நன்றி ° Five Powers of Siva

திங்கள், 2 ஜனவரி, 2017

Deiveegam Karthic Raja: எனது பதிவுகள் 1000 எண்ணிக்கையை கடந்துஅன்புடையீர்எ...

Deiveegam Karthic Raja: எனது பதிவுகள் 1000 எண்ணிக்கையை கடந்துஅன்புடையீர்
எ...
: எனது பதிவுகள் 1000 எண்ணிக்கையை கடந்து அன்புடையீர் எல்லோருக்கும்எனது புத்தாண்டு வாழ்த்துக்களுடன் சென்ற ஆண்டுவரை எனது பதிவுகள் 1000 ...

எனது பதிவுகள் 1000 எண்ணிக்கையை கடந்து

அன்புடையீர்
எல்லோருக்கும்எனது புத்தாண்டு வாழ்த்துக்களுடன் சென்ற ஆண்டுவரை எனது பதிவுகள் 1000 எண்ணிக்கையை கடந்து விட்டது எனது வலைப்பதிவு வந்து எனக்கு புத்துயர் கொடுத்த பயனாளர்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் கலந்த நன்றியை தெரிவித்து என் நன்றியை காணிக்கையாக்குகிறேன்,
அன்புடன்.
 வை.பூமாலை சுந்தரபாண்டியம்