வியாழன், 8 டிசம்பர், 2016

வினோதமான இயற்கை அமைப்புக்கள்

www.funmag.org

www.funmag.org

www.funmag.org

www.funmag.org

www.funmag.org

www.funmag.org

www.funmag.org

www.funmag.org

www.funmag.org

திருவண்ணாமலை கிரிவலமும் அஷ்டலிங்க தரிசனமும்...

திருவண்ணாமலை கிரிவலமும் அஷ்டலிங்க தரிசனமும்...

மலையே சிவமாகத் திகழும் உன்னதத் தலம் திருவண்ணாமலை திருத்தலம். இங்கே கிரிவலம் வருவது பிரசித்தி பெற்ற வழிபாடு. கிரிவலம் வருவது அக்னிமலையாக விளங்கும் சிவனாரையே வலம் வந்து வழிபடுவதாகும். அதுமட்டுமல்ல, கிரிவலப் பாதையில் நான் ஐயனின் எட்டு திருவுருவங்களையும் தரிசிக்கலாம். எட்டு திசைகளில் இருந்தும் நம்மைக் காப்பாற்றி அருள்புரிவதற்காகவே ஐயன் எட்டு லிங்கத் திருமேனிகளாக திருக்காட்சி தருகிறார்.
அஷ்டலிங்கங்களையும் வழிபடுவதால் நமக்கு கிடைக்கக்கூடிய புண்ணிய பலன்கள்...
திருவண்ணாமலை
இந்திரலிங்கம்:
கிரிவலப்பாதையில் முதலில் நாம் தரிசிப்பது இந்திரலிங்கம். கிழக்கு திசையில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலுக்கு அதிபதி சூரியனும் சுக்கிரனும் ஆவர். இந்திரலிங்கத்தை தரிசித்து வழிபட்டால், லக்ஷ்மி கடாட்சமும், புகழுடன் கூடிய வாழ்க்கையும் அமையும்.
அக்னி லிங்கம்:
திருவண்ணாமலை - செங்கம் சாலையில் தாமரைக் குளத்துக்கு அருகில் தென் கிழக்கு திசையில் அமைந்திருக்கிறது அக்னி லிங்கம். இந்த திசைக்கு அதிபதி சந்திரன். அக்னி லிங்கத்தை தரிசித்து வழிபட்டால், எதிரிகள் தொல்லை, மனச் சஞ்சலம் போன்றவைகள் நீங்குவதுடன் நோயற்ற வாழ்க்கையும் அமையும்.
யமலிங்கம்:
கிரிவலப் பாதையில் 3-வதாக நாம் தரிசிப்பது யமலிங்கம். கோயிலுக்கு அருகிலேயே சிம்ம தீர்த்தம் உள்ளது. யமலிங்கம் அமைந்திருக்கும் தென் திசைக்கு அதிபதி செவ்வாய். இங்கு ஐயனை தரிசித்து வழிபட்டால், கடன் தொல்லைகள் விலகும். பொருளாதார வளர்ச்சி உண்டாகும். சகோதரர்களால் நன்மைகள் ஏற்படும்.
நிருதி லிங்கம்:
கிரிவலப் பாதையில் 4-வதாக நாம் தரிசிப்பது நிருதி லிங்கம். நிருதிலிங்கத்துக்கு முன்பு உள்ள நந்திதேவருக்கு அருகில் இருந்து மலையைப் பார்க்கும்போது, மலையில் சுயம்புவாகத் தோன்றியதுபோல் அமைந்திருக்கும் நந்தியை தரிசிக்கலாம். நிருதிலிங்கம் அமைந்திருக்கும் திசை நிருதி திசை எனப்படும் தென் மேற்கு திசையாகும். இந்த திசைக்கு அதிபதி ராகு. நிருதிலிங்கத்தை வழிபட்டால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
வருண லிங்கம்:
மேற்கு திசையில் அமைந்திருப்பது வருணலிங்கம். கோயிலின் அருகிலேயே அமைந்துள்ளது வருண தீர்த்தம். இந்த திசையின் அதிபதி சனி. வருணலிங்கத்தை வழிபட்டால் பொருளும் புகழும் நிறைந்த வாழ்க்கை உண்டாகும். மேலும் தீராத நோய்களில் இருந்து நிவாரணமும் கிடைக்கும்.

வாயு லிங்கம்:
வாயுமூலை எனப்படும் வடமேற்கு திசையில் அமைந்திருப்பதால், வாயுலிங்கம் என திருநாமம் கொண்டுள்ளார் ஐயன். இந்த திசைக்கு அதிபதி கேது. வாயுலிங்கத்தை தரிசித்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை, பொறாமை, கண் திருஷ்டி போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

குபேரலிங்கம்:
குபேரனுக்கு உரிய வடக்கு திசையில் அமைந்திருப்பதால் சிவனார் குபேரலிங்கம் என்னும் திருப்பெயருடன் அருள்கிறார். இந்த திசைக்கு அதிபதி குரு. குபேரலிங்க மூர்த்தியை வழிபட்டால், செல்வம் பெருகும். மனதில் சாந்தியும் சந்தோஷமும் நிலவும்.
ஈசான்ய லிங்கம்:
வடகிழக்கு திசையில் அமைந்துள்ள சிவலிங்க மூர்த்தம் ஈசான்ய லிங்கம் ஆகும். இந்தக் கோயில் தரைமட்டத்தில் இருந்து சற்று கீழே அமைந்திருக்கும். இந்த திசையின் அதிபதி புதன். இங்கு ஐயனை வழிபட்டால், மனம் ஒருமைப்படும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

திருச்சிற்றம்பலம்

செவ்வாய், 6 டிசம்பர், 2016

தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் / அஷ்ட வீரட்டத்தலங்களில் இதுவும் ஒன்று

தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் /  அஷ்ட வீரட்டத்தலங்களில் இதுவும் ஒன்று

திருஅதிகை வீரட்டானம் (திருவதிகை)
கோவில் 
இறைவர் திருப்பெயர்: வீரட்டேஸ்வரர், வீரட்டநாதர், அதிகைநாதர்.
இறைவியார் திருப்பெயர்: திரிபுரசுந்தரி
தல மரம்: சரக்கொன்றை.
தீர்த்தம் : கெடிலநதி (தென்கங்கை)
வழிபட்டோர்: திலகவதியார், அப்பர் பெருமான், 1. சம்பந்தர் - 1. குண்டைக் குறட்பூதங். 2. அப்பர் - 1. கூற்ற�

தல வரலாறு

அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. தக்கன் யாகத்தை அழித்த தலம்

திரிபுரத்தை எரித்த வீரச் செயல் நிகழ்ந்தத் தலம்.

ஞானசம்பந்தருக்கு இறைவன் திருநடனம் காட்டிய தலம்.

அப்பரின் தமக்கையார் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்து வந்த திருத்தலம்.

திலகவதியார் தன்தம்பியாகிய (அப்பர்) மருள்நீக்கியாரை நல்வழிப்படுத்துமாறு இறைவனை வேண்ட, இறைவன் "சூலை தந்து ஆட்கொள்வோம்" என்று பதிலுறைத்த பதி.

சூலை நோயின் துன்பம் தாளப்பெறாத அப்பர் பெருமான், யாருமறியாமல் பாடலிபுத்திரத்தை (திருப்பாதிரிப்புலியூர்) விட்டு நீங்கி, இங்கு வந்து, தமக்கையாரைக் கண்டு, தொழுது, திருவாளன் திருநீறு தரப் பெருவாழ்வு வந்ததென்று பணிந்து ஏற்று, உருவார அணிந்து, அவர்பின் சென்று, அதிகைப் பிரான் அடிமலர் வீழ்ந்து வணங்கி, "ஆற்றேன் அடியேன்" என்று "கூற்றாயினவாறு" பதிகம் பாடிச் சூலை நீங்கப்பெற்ற அற்புதத்தலம்.

தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் -
  2. அப்பர்   -
                                  3 சுந்தரரர் 

சிறப்புகள்

சைவத்துக்குத், திருத்தொண்டுக்கு உறைப்பான திருநாவுக்கரசரை வழங்கியருளிய பெருமைமிகு தலமிதுவே.

சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான 'உண்மை விளக்கம்' நூலை அருளிய 'மனவாசகங்கடந்தாரின்' அவதாரத் தலம்.

இத்தலத்தை மிதிக்க அஞ்சி சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில் தங்கியதும் - திருவடி தீட்சை பெற்றதும் இத்தலமே.

பல்லவ மன்னனான மகேந்திரவர்மனின் மனத்தை மாற்றிச் சமண் பள்ளிகளை இடித்துக் குணபரவீச்சரம் எழுப்பச் செய்ததும் இத்தலத்தின் பெருமையை பறைசாற்றும் நிகழ்ச்சியாகும்.

அதிரைய மங்கலம், அதிராஜமங்கலம், அதிராஜமங்கலியாபுரம் என்னும் பெயர்கள் இத்தலத்திற்குரியனவாகக் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.

மணவிற் கூத்தனான காலிங்கராயன் என்பவன் இக்கோயிலுக்குப் பொன்வேய்ந்து நூற்றுக்கால் மண்டபம், மடைப்பள்ளி, யாகசாலை ஆகியவற்றை அமைத்து, அம்பாள் கோயிலையும் கட்டுவித்தான் என்பது கல்வெட்டுச் செய்தி.

தென்கங்கை எனப்படும் கெடிலநதி (தல தீர்த்தம்) பக்கத்தில் ஓடுகிறது.

மிகப்பெரிய கோயில், சுவாமி கர்ப்பக்கிருகம் தேர்போலப் பதுமைகளால் அலங்கரிக்கப்பட்டு, நிழல் பூமியில் சாயாதபடிக் கட்டப்பட்டுள்ளது.

கோபுர வாயிலில் இருபுறங்களிலும் அளவற்ற சிற்பங்கள் உள்ளன; வலப்பக்கத்தில் சற்று உயரத்தில் திரிபுரமெரித்த கோலம் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது.

வாயிலின் இருபுறங்களிலும் நடனக்கலைச் சிற்பங்கள் (பரத சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள 108 கரணங்களை விளக்கும் சிற்பங்கள்) அளவிறந்துள்ளன.

கோயிலின் உட்புறத்திலுள்ள மற்றொரு பதினாறுகால் மண்டபத்தின் இரு தூண்களில் ஒன்றில் சுப்பிரமணியத் தம்பிரான் (அமர்ந்த நிலை) சிற்பமும், இதற்கு நேர் எதிர்த்தூணில் சிவஞானத் தம்பிரான் (நின்று கைகூப்பிய நிலை) சிற்பமும் உள்ளது. சுப்பிரமணியத் தம்பிரான் என்பவர்தான் இக்கோயிலைத் திருத்திச் செப்பம் செய்தவர் என்றும்; இவர் சீடரான சிவஞானத் தம்பிரான்தான் முதன்முதலில் இத்திருக்கோயிலில் அப்பர் பெருமானுக்குப் பத்து நாள்கள் விழா எடுத்துச் சிறப்பித்தார் என்பர்.

இக்கோயிலில் திகவதியாருக்கு சந்நிதி உள்ளது.

அப்பர் சந்நிதி - மூலமூர்த்தம் உள்ளது; அமர்ந்த திருக்கோலம் - சிரித்த முகம் - தலை மாலை, கையில் உழவாரப்படை தாங்கிய பேரழகு.

பிரகாரத்தில் பஞ்சமுக சிவலிங்கமும் (பசுபதிநாதர்), வரிசையாகப் பல சிவலிங்கத் திருமேனிகளும் உள்ளன.

மூலவர் பெரிய சிவலிங்கத் திருமேனி - பெரிய ஆவுடையார்; சிவலிங்கத் திருமேனி பதினாறு பட்டைகளுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது.

கருவறை சுதையாலான பணி; இதன் முன் பகுதி வளர்த்துக் கற்றளியாகக் கட்டப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றிலும் குடவரைச்சிங்கள்.

நாடொறும் ஆறுகால பூஜைகள் முறையாக நடக்கின்றன.

இத்தலத்திலிருந்து 1 கி.மீ. தொலைவு சென்றால் ஸ்ரீ சிதம்பரேஸவரர் கோயில் உள்ளது; இதுவே சித்த வட மடம் ஆகும். இப்பகுதி புதுப்பேட்டை என்று வழங்குகிறது. (சித்வடமடத்தைப் பிற்காலத்தில் சித்தாண்டிமடம், சித்தாத்த மடம் என்றெல்லாம் வழங்கினர். இப்போது இப்பகுதி கோடாலம்பாக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.)

மகேந்திரவர்ம பல்லவன் கட்டிய குணபரவீச்சரம் - "ஆதிமூல குணபரேச்சுரன் கோயில்" என்றழைக்கப்படுகிறது. இது கோயிலுக்குப் பக்கத்தில் மேற்கே பெரியரோடு கரையில் உள்ளது. சிறு கட்டிடமாக இடிந்த நிலையில், உடைந்துபோன படிமங்களுடன் காணப்படுகிறது. தற்போதுள்ள கோயில் பிற்காலத்தில் பாண்டியர்களால் எழுப்பப்பட்டது. இக்கோயில் மராட்டிய, ஆங்கிலேயர் காலத்தில் போர்க்கோட்டையாகவும் மாறி மாறிப் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்றில் அறிகிறோம்.

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டியிலிருந்து 2-கி. மீ. தொலைவில் உள்ளது. சென்னை, கடலூர், விருத்தாசலம், விழுப்புரம், சிதம்பரம் முதலிய இடங்களிலிருந்து பண்ருட்டிக்குப் பேருந்து வசதி உள்ளது. பண்ருட்டி இருப்புப் பாதை நிலையம். தொடர்பு : 09443988779 09442780111 09841962089

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

சனி, 3 டிசம்பர், 2016

தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் .... திருக்கோவலூர் வீரட்டம் அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று.

தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்  .... திருக்கோவலூர் வீரட்டம்
அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று.

இறைவர் திருப்பெயர்: வீரட்டேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: சிவானந்தவல்லி, பெரியநாயகி, பிருகந்நாயகி.
தல மரம்: வில்வம்.
தீர்த்தம் : தென் பெண்ணையாறு (தட்சிண பிநாகினி).
வழிபட்டோர்: மெய்ப்பொருள் நாயனார், நரசிங்கமுனையரையர் (சுந்தரரை வளர்த்தவர்), 1. சம்பந்தர் - படைகொள்

தல வரலாறு

ஊர் பெயர் திருக்கோவலூர்; தலத்தின் பெயர் வீரட்டம்.

திருக்கோவலூர் என்பது மருவி இன்று திருக்கோயிலூர் என்று வழங்குகின்றது.

இது, அந்தகாசூரனைச் சம்ஹரித்த தலம். அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று.

தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - படைகொள் கூற்றம்.
  2. அப்பர்   - செத்தையேன் சிதம்பநாயேன்.

சிறப்புகள்

மெய்பொருள் நாயனார் அவதரித்து, குறுநில மன்னராக இருந்து ஆட்சி செய்த பதி. நாயனாரின் திருவுருவச் சிலை கோயில் உள்பிரகாரத்தில் உள்ளது.
அவதாரத் தலம் : திருக்கோவலூர்.
வழிபாடு : சங்கம வழிபாட்.
முத்தித் தலம்  : திருக்கோவலூர்.
குருபூசை நாள்  : கார்த்திகை - உத்திரம்

முதல் இருவர் பாடல் பெற்றத் தலம்.

சுந்தரமூர்த்தி சுவாமிகளை வளர்த்த பெருமையை உடைய நரசிங்கமுனையரையர் அவதரித்தத் தலம். (நரசிங்க முனையரைய நாயனார் வேறு.)

திருமுறை கண்ட இராஜராஜ சோழன் அவதரித்த பதி.

ஔவையார் இத்தல விநாயகரைப் பூஜித்து, அவரது தும்பிக்கையால் கயிலை அடைந்த பதி.

சோழர் காலக் கல்வெட்டுகள் 79 உள்ளன.

அமைவிடம் :  அ/மி. வீரட்டேசுவரர் திருக்கோயில், திருக்கோயிலூர் - 605 757. விழுப்புரம் மாவட்டம். தொலைபேசி : 04153 - 224036, +91-93448 79787. மாநிலம் : தமிழ் நாடு விழுப்புரம் - திருவண்ணாமலை இரயில் பாதையில் உள்ள நிலையம். நிலையத்திலிருந்து வடக்கே 5-கி.மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது. பெண்ணையாற்றுப் பாலத்தைக் கடக்கவேண்டும். திருவண்ணாமலை, பண்ணுருட்டி தலங்களிலிருந்து, ஏராளமான பேருந்து வசதி உள்ளது.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

வெள்ளி, 2 டிசம்பர், 2016

தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்கள் திருக்கண்டியூர் கோயில்

    தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்கள் திருக்கண்டியூர் கோயில் 

    அட்டவீரட்டத் தலங்களுள்ளும், சப்தஸ்தானத் தலங்களுள்ளும் ஒன்று

    தலவரலாறு

    இறைவர் திருப்பெயர்: பிரமசிரக் கண்டீஸ்வரர், வீரட்டேஸ்வரர், பிரமநாதர், ஆதிவில்வவனநாதர்.

    இறைவியார் திருப்பெயர்: மங்கள நாயகி.

    தல மரம்: வில்வம்.

    தீர்த்தம் : நந்திதீர்த்தம், தக்ஷதீர்த்தம், பிரமதீர்த்தம், குடமுருட்டி ஆறு முதலியன.

    வழிபட்டோர்: சம்பந்தர், அப்பர் ,சூரியன், பிரமன், சாதாதாப முனிவர் முதலியோர்.

    தல வரலாறு

    • பிரமன் சிரத்தைத் (ஐந்தனுள் ஒன்றை) தம் சூலத்தால் கண்டனம் செய்த (கொய்த) காரணத்தால் கண்டனபுரம் - கண்டியூர் எனப் பெயர் பெற்றது. பிரமன் சிரம்கொய்த பின், அவன் வேண்டிட ஐம்முகங்களின் அழகினை சதுர் முகங்களில் (நான்கு முகங்களில்) இறைவன் அருளிச் செய்ய, பிரமன் பெற்றுப் பேறடைந்தான் என்பது வரலாறு.

    • சாதாதாப முனிவர் பிரதோஷத்தில் காளத்தி சென்று தரிசனம் செய்து வந்தார்; ஒருமுறை கண்டியூர் வந்தபோது, காளத்திக்கு, நேரத்தில் செல்ல முடியாமற்போயிற்று. அப்போது இறைவன் அம்முனிவருக்கு காளத்தி தரிசனத்தை இத்தலத்திலேயே காட்டியருளினார் என்பது வரலாறு.

    சிறப்புகள்

    • அட்டவீரட்டத் தலங்களுள்ளும், சப்தஸ்தானத் தலங்களுள்ளும் ஒன்றாகத் இத்தலம் விளங்குகிறது.

    • "சாதாதாப" முனிவருக்காக இறைவனால் வில்வமரம் கயிலையிலிருந்து கொண்டு வரப்பட்டதால் இத்தலத்திற்கு 'ஆதிவில்வாரண்யம் ' என்றும் பெயர்.

    • பிரமகத்தி தோஷம் நீங்கும் தலமாகவும் சொல்லப்படுகிறது.

    • சூரியன் வழிபட்டதலமாதலின், மாசிமாதம் 13, 14, 15-ஆம் நாள்களில் மாலையில் 5 . 45 மணிமுதல் 6 . 10 மணிவரை சூரிய ஒளி சுவாமிமீது படுகிறது.

    • சப்தஸ்தானத் திருவிழாவில் (ஏழூர்திருவிழா) சுவாமி இங்கு வந்து இறங்கி, சற்று இளைப்பாறி செல்லும். சிலாத முனிவருக்கு, சாதாதாப முனிவர் தமையனாராதலின், இளைப்பாறிச் செல்லும்போது மூத்தமாமனார் என்ற வகையில் கட்டிச் சோறு கட்டித் தரும் ஐதீகமாக அன்று (தயிர்சாதம், புளியோதரை) - கட்டித்தந்து சுவாமியுடன் அனுப்புவது மரபாக இருந்து வருகின்றது.

    • நவக்கிரக சந்நிதியின் சூரியன் இரு மனைவியருடன் காட்சித் தருகிறார்.

    • மூலவர் சுயம்பு மூர்த்தி; பாணம் சற்று உயரமாக உள்ளது.

    • பூ, ஜபமாலை ஏந்தி, இருகைகளாலும் இறைவனை பிரார்த்திக்கும் அமைப்பில் உள்ள பிரம்மாவின் இவ்வுருவம் அழகுடையது.

      prakAra exit

    • இத் தலத்தில் பிரமனுக்கு தனிக் கோயில் உள்ளது.

    • பிரமனின் சிரம் கொய்வதற்காக இறைவன் கொண்ட வடுகக் கோலம்; பிரமன் சந்நிதிக்குச் செல்லும் வாயிலில் கதவோரமாக சிறிய சிலா ரூபமாகவுள்ளது.

    • கல்வெட்டில், இப்பெருமான், "திருவீரட்டானத்து மகாதேவர்", "திருக்கண்டியூர் உடைய மகாதேவர்" எனக் குறிக்கப்படுகிறார்.

    அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு தஞ்சை - திருவையாறு பேருந்துச் சாலையில் உள்ளது. தஞ்சையிலிருந்து 9-கி. மீ. தொலைவிலும், திருவையாற்றிலிருந்து 3-கி. மீ. தொலைவிலும் உள்ளது. பேருந்து வசதிகள் உள்ளன. தொடர்பு : 04362 - 261100, 262222
    திருச்சிற்றம்பலம்
    தொகுப்பு வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

வியாழன், 1 டிசம்பர், 2016

தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்கள் 
(இத்துடன் அட்டவீரட்டத்தலங்களில் ஓன்று)
திருக்கடவூர் (திருக்கடையூர்)

இறைவர் திருப்பெயர்: அமிர்தகடேஸ்வரர், அமிர்தலிங்கேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: அபிராமி
தல மரம்: வில்வம், ஜாதி (பிஞ்சிலம்)
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம், சிவகங்கை.
வழிபட்டோர்: சம்பந்தர்,அப்பர், சுந்தரர், திருமால், பிரமன், மார்க்கண்டேயர், எமன்,ஏழு கன்னிகள், அகஸ��

தல வரலாறு
திருமால் முதலிய தேவர்கள் தூயதோர் இடத்தில் உண்ண வேண்டுமென்று அமுதக் கடத்தை இங்குக் கொண்டுவந்து வைத்தமையால், 'கடபுரி ' அல்லது 'கடவூர் ' என்றாயிற்று. எம வாதனையைக் கடப்பதற்கு உதவும் ஊர் என்பதாலும் இப்பெயர் பெற்றது.

மார்க்கண்டேயருக்காக இறைவன் எமனை உதைத் தருளிய தலம்.

பிரமனுக்கு உபதேசம் செய்த இடம்.

மார்க்கண்டேயர் கங்கை நீருடன் பிஞ்சிலப் புஷ்பங்களையும் கொண்டு வந்து அர்ச்சித்ததாக வரலாறு. இதனால் இத்தலத்திற்கு 'பிஞ்சிலராண்யம் ' என்றும் பெயர். (தற்போது தலமரம் இதுவே. ஆதியில் தலவிருட்சம் வில்வம் என்பர்.)

தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் -     சடையுடை யானும்நெய்.

  2. அப்பர்   - 1. பொள்ளத்த காய, 
2. மருட்டுயர் தீரவன், 
3. மலைக்கொ ளானை.

  3. சுந்தரர்  -    பொடியார் மேனியனே.

சிறப்புக்கள்

அட்ட வீரட்டத் தலங்களுள் (இது எமனை உதைத்த தலம்) இதுவும் ஒன்று.

திருக்கடவூர் வீரட்டம், கடபுரி, வில்வாரண்யம், பிரமரந்திரத்தலம், பாபவிமோசன புண்ணிய வர்த்தம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள்.

சிறப்புகள்
மார்க்கண்டேயருக்காக சிவபெருமான் இயமனை உதைத்துத் தள்ளியதலமாதலால், மணிவிழா, பவளவிழா, சதாபிஷேகம் ஆகிய விழாக்களை இத்தலத்தில் பக்தர்கள் கொண்டாடுகின்றனர். 
[1] தை அமாவாசை திதியை அம்பிகையின் முக அழகை தரிசித்துக் கொண்டிருந்த அபிராமி பட்டர் பௌர்ணமி என்று தவறாக சரபோஜி மன்னரிடம் சொல்ல, அதனால் கோபமுற்ற மன்னரிடம் இருந்து காக்கும்படிக்கு அபிராமி அந்தாதி பாடி அமாவாசையை பௌர்ணமியாக மன்னருக்கு மாற்றிக் காட்டிய அற்புதம் நிகழ்ந்த தலம்.
[2] இங்கு நவக்கிரக சந்நிதி இல்லாதது சிறப்பாகக் கூறப்படுகிறது. 

இப்பதியில் அவதரித்த குங்குலியகலய நாயனார், வறுமையுற்ற காலத்தும், தன் மனைவியாரின் தாலியை விற்றுக் குங்குலியத் தொண்டைச் செய்து பேறு பெற்றார். திருப்பனந்தாளில் சாய்ந்து யாராலும் நிமிர்த்த முடியாத சிவலிங்கத் திருமேனியை தனது சிவ பக்தியால் நேராக நிமிர்த்தியவர்.

அவதாரத் தலம் : திருக்கடவூர் (திருக்கடையூர்)
வழிபாடு : இலிங்க வழிபாடு.
முத்தித் தலம்  : திருக்கடவூர்.
குருபூசை நாள்  : ஆவணி - மூலம்

காரி நாயனாரும் இப்பதியிலேயே அவதரித்தவர் - இவர் அரசனிடம் சென்று பொருள்பெற்றுப் பல திருப்பணிகள் செய்து, தொண்டாற்றி முத்தியடைந்த பதி.

அவதாரத் தலம் : திருக்கடவூர் (திருக்கடையூர்)
வழிபாடு : இலிங்க வழிபாடு.
முத்தித் தலம்  : திருக்கடவூர்.
குருபூசை நாள்  : மாசி - பூராடம்.

குங்குலியக்கலய நாயனார், காரி நாயனார் ஆகியோரது திருவுருவச் சிலை இத்திருக்கோயிலில் உள்ளது.

அப்பரும், சம்பந்தரும் ஒருசேர எழுந்தருளி, இறைவனைத் தொழுது, குங்குலிய கலய நாயனாரின் திருமடத்தில் தங்கியிருந்த பெருமை பெற்றப் பதி.

மூவர் பெருமக்கள் பாடல் பெற்றத் திருத்தலம்.

உள்ளமுருகப் பாராயாணம் செய்யப்படும் அபிராமி அந்தாதி (அபிராமி பட்டர் வாழ்ந்து - அம்பிகையின் அருளால்) பாடப்பட்ட அற்புதப் பதி.

அன்னை அபிராமியின் அருள் தலம்; யம பயம் போக்கவல்ல பதி.

இங்குள்ள காலசம்ஹாரமூர்த்தி - காலனை சம்ஹரித்த மூர்த்தி - மிகப்பெரிய மூர்த்தி - கம்பீரமான தோற்றம் - திருமேனியில் எமன் வீசிய பாசத்தின் தழும்பு உள்ளது.

மார்க்கண்டேயர் இறையருள் பெற வழிபட்ட 108 தலங்களுள் இது 108-வது தலமாகும். (107-வது திருக்கடவூர் மயானம்)

சுவாமிக்கு நாடொறும் அபிஷேகத்திற்குரிய நீர் திருக்கடவூர் மயானத் தலத்தின் தல தீர்த்தமான காசி தீர்த்தத்திலிருந்து வண்டியில் கொண்டு வரப்படுகின்றன. மார்க்கண்டேயருக்காக, பங்குனி மாதம், அசுவினி நட்சத்திரத்தில் கங்கையானது, இத்தீர்த்தமாக வந்ததாக வரலாறு. ஆதலின் இத்தீர்த்தம் 'அசுவினி தீர்த்தம்' எனவும் வழங்கப்படுகின்றன.

மிருகண்டு முனிவரின் அவதாரத் தலம்; அருகிலுள்ள மணல்மேடு ஆகும்.

பூமிதேவி அனுக்ரஹம் பெற்ற தலம்.

ம்ருத்யுஞ்சஹோமம், உக்ரக சாந்தி, பீமரதசாந்தி, சஷ்டியப்த பூர்த்தி(மணிவிழா), சதாபிஷேகம், ஆயுள்ஹோமம் முதலியவை செய்வதற்குரிய சிறப்புடைய தலம் இதுவாகும். (இச்சாந்திகள் வேறு தலத்தில் செய்ய நேர்ந்தாலும் இம்மூர்த்தியை நினைத்துத்தான் செய்ய வேண்டும்.)

ஏழுநிலைகளுடன் கம்பீரமாக நிற்கும் ராஜகோபுரதில் உள்ள அரிய சிற்பங்களுள் பாற்கடலைக் கடைந்தது, கஜசம்ஹாரமூர்த்தி, சிவபாத இருதயரின் தோளில் சம்பந்தர், பந்தரின் சிவிகையை அப்பர் தாங்குவது முதலியன கண்டு மகிழத்தக்கன.

இங்கு தர்மராஜா (எமன்), உற்சவத் திருமேனி - சந்நிதி உள்ளது.

பூமிதேவி பிரார்த்திக்க, மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் வேண்ட இறைவன், எமனை (தர்மராஜா) எழுப்பித் தந்தருளினாராதலின், அநுக்ரஹம் பெற்ற (எழுப்பப்பெற்ற) தர்மராஜா - எமனின் திருவுருவம் இம்மூர்த்திக்கு (மரகதலிங்கத்திற்கு) நேர் எதிரில் உள்ளதைக் காணலாம்.

கன்றிய காலனைக் காலாற்கடிந்த காலசம்ஹார மூர்த்திக்கு ஆண்டில் 11 விசேஷ காலங்களில் (சித்திரை விஷேச, பெருவிழாவில் 5, 6-ஆம் நாள்கள், பிராயசித்த அபிஷேகம், தக்ஷ¤ணாயனபுண்ணிய காலம், ஆனி உத்திரம், புரட்டாசியில் கன்யாசதுர்த்தி, துலாவிஷ§, ஆருத்ரா, உத்தராயண புண்ணிய காலம், மாசி மகம் கும்பசதுர்த்தி) அபிஷேகம் நடைபெறுகின்றன.

கார்த்திகை சோமவார 1008 சங்காபிஷேகம் சிறப்பாகக் கண்டு தரிசிக்கத் தக்கது.

இக்கோயிலில் சோழர், பாண்டியர், விஜய நகர மன்னர்களின் கல்வெட்டுக்கள் உள்ளன.

( 'சிலம்பில்' வரும் நடன மகள் 'மாதவி'யின் இல்லம் இத்திருக்கடவூரில் தேரோடும் வீதியில் உள்ளது. தற்போது இவ்வீடு பாழடைந்த நிலையில் உள்ளது.)

60.70. 80 வது வயதில் சப்தடிப்த பூர்த்தி. .சதாபிேசகம் ஆகிய திருமண நிகழ்வுகள் நடத்த பிரசித்தி பெற்ற தலம்

சீர்காழியில் இருந்து சுமார் 23 கி.மி. தொலைவில் சீர்காழி - காரைக்கால் சாலை வழியில் இவ்வூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோயில் புகழ்பெற்ற சைவத்தலமாகும்.

அமைவிடம் அ/மி. அமிர்தகடேசுவரர் திருக்கோயில், திருக்கடையூர் (அஞ்சல்) - 609 311. மயிலாடுதுறை (வட்டம்). தொலைபேசி : 04364 - 287429. மாநிலம் : தமிழ் நாடு மயிலாடுதுறை - தரங்கம்பாடி பேருந்துச் சாலையில் (இரயில் மார்க்கமும் இதுவே. திருக்கடையூர் நிலையத்திலிருந்து 1 கி. மீ. தொலைவில்) இத்தலம் உள்ளது. அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு வை,பூமாலை, சுந்தரபாண்டியம்