சனி, 28 ஜூலை, 2012
வெள்ளி, 27 ஜூலை, 2012
சைவ மதத்தின் தூண்கள் என்று போற்றப்படும் சமயக்குறவர்கள் வாழ்ந்த காலத்திலிருந்தே சாலியர் சமுதாயம் சைவ மதத்தில் வேறூண்றி தழைத்து, ஆன்மிகத்தில் - சிவத்தொண்டு செய்யும் சிவனாடியார்களாகவே வாழ்ந்து வந்துள்ளனர், சாலியர் சமுதாயத்தின் வம்சாவழி சாலிய மகரிஷி வழித்தோன்றவர்களே எனவே சாலியர்களின் கோத்திரம் சாலியமகிரிஷி கோத்திரம் என்று வழங்கப்பட்டு வருகிறது,இதன் வசம்சாவழியில் தான் சாலிய இனத்தை சேர்ந்தவரான 63 நாயன்மார்களில் ஒருவரான நேசநாயனாரும், இவரும் அக்காலத்தில் தற்போது சாலிய இனத்தவரின் குலத்தொழிலான நெசவு தொழிலையே செய்து சிவனாடியார்களுக்கு கோவனம் என்றளக்கப்படும் சிற்றடையை சிவனடியார்களுக்கு வழங்கி சிறப்புடன் சிவத்தொண்டு புரிந்து வந்துள்ளது பெரியபுராணம் காட்டுகிறது, இதன் மூலம் சாலியரின் சைவத் தன்மைக்கு முத்திரை பதிக்கப் பட்டுள்ளது. அந்நாள் முதல் இந்நாள் வரை சைவ மதத்தில் சாலியர் சமூகம் முக்கிய பங்கினைக் கொண்டு சிவனடியார்களுக்கு சிவத் தொண்டும், சிவன் கோவில்களையே அடிப்படையாகக் கொண்டே குல தெய்வங்களும் அமைத்து வழிபாடு செய்து வருகின்றனர், அக்காலத்தில் சாலிய சமூக முன்னோர்கள் சைவ மதத்தின் அடையாளங்களான ருத்ராட்சம் அணிதல், பூணுல் போடுதல் போன்ற சைவ அடையாளங்களுடன் வாழ்ந்து கொண்டு தேவாரம் திருவாசகம் இசையுடன் பஜனைப்பாடல்கள் பாடுவதற்கென்றே ஏழுர் சாலிய சமுதாய ஊர்களில் பஜனை மடங்களும் நாயன்மார்கள் பெயரில் திருச்சபை மன்றங்களும் இன்றளவும் இயங்கி வருவதை நாம் காண்கிறோம். இதற்கு உதாரணத்திற்கு கூற வேண்டுமானால் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாணக்கவாசகர் திருச்சபை, முகவூரில் நாவுக்கரசர்-அப்பருக்கு மன்றமும், சுந்தரபாண்டியத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் திருசசபை, ஸ்ரீவி,மற்றும் சத்திரப்பட்டியில் தேவார- திருவாச பக்த சபா போன்றவை இன்றளவும் நடைபெற்றுக்கொண்டு வருகிறது, சாலிய சமுதாயத்தில் இன்றளவும் சிவ வழிபாட்டுத்தளங்களில் தேவார பாடகள் பாடும் ஓதுவார்கள் போன்று தேவார - திருவாசப்பாடல்களை இராஜபாளையம்,ஸ்ரீவி,சத்திரப்பட்டி, வ,புதுப்பட்டி, சுந்தரபாண்டியம் மற்றும் ஏழுர் சாலிய சமுதாய மக்களால் பாடப்பட்டு வருகிறது, இதற்கு தேவார இன்னிசை மாமணி திரு, புதுப்பட்டி மோகன் என்பவரே முன் உதாரணமாகும் அவருடைய தேவார இன்னிசையில் மயங்காதார் யார் உளர். சுந்தரபாண்டியம் சாலியர் சமூகமும்-சுந்தரமூர்த்தி நாயனாரும் இதன் அடிப்படையில் சுந்தரபாண்டியத்தில் சைவ மத சிவத் தொண்டாக பெரிய புராணத்தின் பாட்டுடைத்தலைவான சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருச்சபை என்ற அமைப்பு பாக்கியநாதசாமி கோவில் பஜனை மடத்தில் உருவாக்கப்பட்டு ஒரு நூற்றாண்டை நெருங்கி நடைபெற்று வருகிறது, இவ்விடத்தில் தான் சிவ ஆலய முக்கிய விழாக்களில் ஒன்றான மகளாய அமாவாசை கழித்த நவராத்திரி விழாவின் சதுரகிரி கொழுபூஜை விழாவின் அங்கமான சிவனடியார்கள் திருக்கூட்டம் சதுரகிரி மலைக்கு செல்லும் அங்கு கொழு பூஜை முடிந்து மலையிலிருந்து அடிவாரம் வந்தது முதல் சுமார் ஒரிரு மாதங்கள் வரை சாலிய சமுதாயம் அமைந்துள்ள ஏழுர் - மற்றும் அதைச்சார்ந்த சிற்றூர் மற்றும் அதன் ஒவ்வொரு பகுதியிலும் திருக்கூட்ட சிவனடியார் திருக்கூட்ட பூஜை சிற்ப்புடன் முடிந்து இவ்வூரில் தான் முடிவு பெறும், இந்நிகழ்ச்சி இன்றுவரை நடைபெறுகிறது ( தற்போது காளிமுத்து சுவாமிகள் ஆஸ்ரமத்தில் நடைபெறுகிறது) சதுரகிரி மலையிலும் ஒவ்வொரு நாளும் அங்கு தங்கியிருந்து சமையல் செய்து விரதம் இடுவோர் முதலில் திருக்கூட்டத்திற்கு சமையல் செய்த அன்னத்தின் ஒருபங்கு அன்னத்தை திருக்கூட்டத்திற்கு ( சுந்தரமூர்த்தி சுவாமி கோவிலுக்கு முன்பாக) வழங்கி விட்டுத்தான் தாங்கள் விரத நோண்பு மேற்கொள்வார்கள், இது போன்று சுந்தரபாண்டியத்தில் இந்த பஜனை மடத்தில் எப்போதும் சிவனடியார்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் இவர்களுக்கு சிவனடியார்களில் ஒரிருவர் தினமும் அந்திப்பொழுதில் அன்னக்காவடி எடுத்துச்சென்று சுந்தரபாண்டியம் சாலிய சமுதாய இல்லங்களில் அன்னம் பெற்று உடனிருக்கும் சிவனடியார்களுக்கும் வயதுமுதிர்ந்த இயலாதவர்களுக்கும் இந்த அன்னம் அன்னதானமாக வழங்கப்பட்டுவந்தது, அந்த அன்னக்காவடி எடுக்கும் சிவனடியார்கள் காவடியை சுமந்து கொண்டு ஐந்தெழுத்து மந்திரமான ஓம் நமச்சிவாயத்தையும் சாம்போ சதா சிவ சாம்போ சிவ என்ற சிவநாமங்களை பாடிக்கொண்டு அன்னம் பெற்று வருவார்கள், அப்போது அநேக இல்லங்களில் அன்னக்காவடிக்கு உணவு போட்ட பின்தான் இரவு உணவு உண்பார்கள் அப்படி அன்னக்காவடி வர நேரம் ஆகிவிட்டலும் அந்த அன்னத்தை எடுத்து தனியாக வைத்து விட்டுத்தான் தாங்கள் உணவு உண்பார்கள்.அந்த அன்னக்காவடியின் மணியுடன் கூடிய தாண்டாயுதமும் அதன் குண்டாபாத்திரமும் இன்னும் சிவனடியார்கள் நினைவு சின்னமாக சுந்தரபாண்டியம் பஜனை மடத்தில் உள்ளது ,இவ்வாறு சிவனடியார்கள் சிவத்தொண்டு வளர்ந்து வரும் நாட்களில் தான் பெரியபுராணத்தின் பாட்டுடைத்தலைவன் என்று போற்றப்படும் சுந்தரருக்கு திருச்சபை நிருவி அவருக்கு வருடாவருடம் குருபூஜை நடத்த திருச்சபை முயன்றது, இதன் பொருட்டு சுந்தரரையே தனது குருவாக கொண்டு நேசித்து அவரையே தியானித்து தனது குருவான சுந்தர மூர்த்தி சிவபொருமானால் ஆட்கொள்ளப்படப்போகிறார் எனவே அவருக்கு முன்னரே தான் முத்தி பெற வேண்டுமென்று தனது தவவண்மையால் ஆடித்திங்கள் 10ம் நாள் சித்திரை நட்சத்திரத்தில் முத்தி பெற்ற பெருமிழலைக் குறும்ப நாயனாருக்கும், ஆடித்திங்கள் 11ம் நாள் சுவாதி நட்சத்திரத்தில் முத்திபெற்ற சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் அவருடைய ஆன்மீக நண்பரும் சிவத்தொண்டருமான சேரமான் பெருமாள் நாயனருக்கும்( சுந்தரரின் வேண்டுகோளின்படி சேரமான் பெருமானையும் சிவனிடம் ஆட்கொள்ளவேண்டியதின் பெயரில் முக்தி பெற்றவர்) ஆகிய மூவருக்கும் இவ்விரு நாட்களிலும் சுந்தரபாண்டியம் ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகள் சபையின் திருமாடலாயத்தில் இத்துடன் கூறப்பட்ட அழைப்பிதழில் கண்டவாறு சிறப்பு பூஜைகளும் தேவார இன்னிசை நிகழ்ச்சியும், ஆன்மீக சொற்பொழிவுகளும் நடைபெற்றது, மேலே கூறப்பட்ட மூவருக்கும் இங்குதான் உற்சவ மூர்த்தி விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இரண்டாம் நிகழ்ச்சியில் அலங்கார சப்பரத்தில் சுந்தரபாண்டியம் திருவீதிகளில் ஊர்வலமாக திருவீதி உலா நடைபெறுகிறது, அன்னார்களின் திருவுருவ விக்ரங்களை இங்கு காணலாம் இந்த சிறப்பு வாய்ந்த சிவ விழா நூற்றாண்டை நோக்கி பயனிக்கிறது, வளரட்டும் சிவத்தொண்டு!பெறுவோம் சிவனருள்!!
திங்கள், 23 ஜூலை, 2012
ஞாயிறு, 22 ஜூலை, 2012
சனி, 21 ஜூலை, 2012
வெள்ளி, 20 ஜூலை, 2012
திங்கள், 16 ஜூலை, 2012
SADURAGIRI: SADURAGIRI By Dr.VS.SURESH Phd., Email:bksureshv@...
SADURAGIRI: SADURAGIRI By Dr.VS.SURESH Phd., Email:bksureshv@...: Saduragiri Saduragiri Hill or Chathuragiri otherwise known as Sivanmalai is situated 5 km from Watrap (Vathirairuppu) near Srivilliput...
சனி, 14 ஜூலை, 2012
Shimla Slideshow | TripAdvisor™
Shimla Slideshow | TripAdvisor™: TripAdvisor™ TripWow ★ Shimla Slideshow ★ Directory of 928 trips to Shimla, India by real travelers. Stunning free travel slideshows on TripAdvisor
May 6, 2012 Slideshow Slideshow
May 6, 2012 Slideshow Slideshow: TripAdvisor™ TripWow ★ May 6, 2012 Slideshow Slideshow ★ to srivilliputtur (near Loutolim) and Coimbatore. Stunning free travel slideshows on TripAdvisor
Myself Slideshow: Vpoompalani’s trip to Coimbatore, Tamil Nadu, India was created by TripAdvisor. See another Coimbatore slideshow. Create a free slideshow with music from your travel photos.
ஆழ் மனதின் அற்புத சக்திகள்
வியாழன், 12 ஜூலை, 2012
புதன், 11 ஜூலை, 2012
செவ்வாய், 10 ஜூலை, 2012
ஸ்ரீபகவத் கீதையில் தியான யோகம்
ஸ்ரீபகவத் கீதையில் தியான யோகம் -
ஸ்ரீபகவத் கீதையில் தியான யோகம் பற்றி வழங்கப்பட்ட நெறிமுறைகளும் அதன்பயன்களும் 1) புத்தியால் அறியப்படுவதும், புலன்களைக் கடந்து நிற்பதுமாகிய, பேரின்பத்தை எங்கு காணப்படுமோ, அந்நிலை அறிந்த பின் இவன் உண்மையிலிருந்து வழுவுவதில்லை
2) எந்த ஒரு பேரின்ப நிலையை அடைந்த பிறகு , அதைவிட அடைவதற்கு மேலான பேரின்பம் வேறொன்றும் இல்லை என எண்ணுகிறானோ, அப்பேரின்பத்தில் நிலைத்த பிறகு மிகப்பெரிய துக்கம் வந்தாலும் கலங்குவதில்லை
3) எண்ணங்களுக்கு ஆதாரமாக இருக்கும் ஆசைகள் அனைத்தையும் துறந்து மனதால் இந்திரியக் கூட்டத்தை எல்லா பக்கங்களிலும் வசப்படுத்தும்
4) உறுதி பூண்ட மதியால் மனதைமெதுவாக பரமாத்மாவில் பொருத்திய பின் வேறு எதைப் பற்றியும் சிந்தித்தல் கூடாது,
5) எங்கெங்கே மனம் சஞ்சலமாய் உறுதியின்றி உழலுகிறதோ, அங்கங்கே அதைக் கட்டுப்படுத்தி ஆத்மாவின் வசம் அழைத்துச் செல்க
6) தியானத்தால் மனம் சாந்தமாகி ரஜோ குணம் அமைதி பெற்று, மாசு நீங்கி பிரம்மமேயாகி இந்த யோகிக்கு மிகச் சிறந்த இன்பம் கிடைக்கிறது,
7) யோக நிலையில் பாபங்கள் நீங்கப் பெற்று ஆத்மாவில் நிலைபெற்று பிரம்ம சம்பந்தத்தால் உண்டாகும் உன்னதமான சுகம் எளிதில் கிடைக்கிறது
8) யோத்தில் கலந்தவன் எங்கும் சமப் பார்வையுடையவனாய், எல்லா உயர்களிடத்தும் தானிருப்பதையும் தன்னுள் எல்லா உயிர்களும் இருப்பதையும் காண்கிறான்,
9) எவனொருவன் தன்னை பரமாத்மாவிலும், பரமாத்மாவில் தன்னையும் காண்கிறானோ அவனை விட்டு பரமாத்மா ஒருபோதும் விலகுவதில்லை, அவனும் அதனை விட்டு விலகுவதில்லை
10) இன்பமாயினும், துன்பமாயினும் எதிலும் ஆத்ம சமத்துவம் மற்றும் சமப்பார்வை பெற்றவன் பரமயோகியாகக் கருதப்படுவான்
அதன்பயன்கள;
1)தியானத்தில் மனைத் கட்டுப்படுவத்து கடினம்,அது சலனமுடையது, ஐயமில்லை,ஆனால்பழக்கத்தாலும், பற்றின்மையாலும் கட்டி விடலாம்
2)சுயக்கட்டுபாடு இல்லாதவனுக்கு யோகம் அரிதென்று, ஆனால் கட்டுபாட்டுடன் இருப்பவனுக்கு முயற்சியால் அடைய வழி உண்டு
3) நம்பிக்ைகயுடையவன் முயற்சியுள்ளவன் யோகத்தினின்று ஒருபொழுதும் தோற்று்ப்போவது இல்லை,
4)யோகத்தில் தவறியவன் புண்ணியம் செய்வோரின் உலங்களை அடைந்து அங்கு கணக்கில்லா வருடங்கள் வாழ்ந்து தூய்மையுைடய செல்வந்தர்கள் வீட்டில் பிறக்கிறான்
5)யோகியனவன் யோகிகளின் குலத்திலேயே பிறக்கிறான்,இவ்வுலகில் இதுபோன்ற பிறவிகிைடப்பது அரிது,
6)அவ்வாறு பிறப்பவன் பூர்வ ஜன்மபுத்திைய பெறுகிறான், அவன் மறுபடியும் வெற்றிக்கு முயற்சி ெசய்கிறான்
7)தனது பழைய பழக்கத்தால் தன் வசமின்றி யோகப்பாதையில் ஈர்க்கப்படுகிறான், யோகத்ைத பயில ேவண்டுமென்ற ஆவலினால் அவன் வேகத்ைதயும்கடந்து செல்கிறான்
8) ஊக்கத்தோடு முயன்று, மனதை தன் வசப்படுத்தி பாவம் நீஙக பெற்ற யோகியானவன் அப்ேபாது பல பிறவிகளில் ெபற்ற பக்குவத்தால் மேலான நிலையை அைடகிறான்
9) தவஞ்செய்ேவாைரக்காட்டிலும் யோகி சிறந்தவன்,ஞானிகளிலும் அவன் சிறந்தோனாக கருத்ப்படுகிறான்,கருமிகளிலும் அவன் சிறந்தோன்,
10) எவனொருவன் பரமாத்மாவில் நம்பிக்கை கொண்டு ேபாற்றுகிறானோ அவன் மிக மேலான யோகியாவான்

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
திங்கள், 9 ஜூலை, 2012
ஸ்ரீபகவத் கீதையில் தியானம்
ஞாயிறு, 8 ஜூலை, 2012
சனி, 7 ஜூலை, 2012
ஞாயிறு, 1 ஜூலை, 2012
மெடிடேஷன் குரு - தியானம் தமிழில்.
மெடிடேஷன் குரு - தியானம் தமிழில்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)