வெள்ளி, 27 ஜூலை, 2012


சைவமும், சாலிய சமுதாயமும்
சைவ மதத்தின் தூண்கள் என்று போற்றப்படும் சமயக்குறவர்கள் வாழ்ந்த காலத்திலிருந்தே சாலியர் சமுதாயம் சைவ மதத்தில் வேறூண்றி தழைத்து, ஆன்மிகத்தில் - சிவத்தொண்டு செய்யும் சிவனாடியார்களாகவே வாழ்ந்து வந்துள்ளனர், சாலியர் சமுதாயத்தின் வம்சாவழி சாலிய மகரிஷி வழித்தோன்றவர்களே எனவே சாலியர்களின் கோத்திரம் சாலியமகிரிஷி கோத்திரம் என்று வழங்கப்பட்டு வருகிறது,இதன் வசம்சாவழியில் தான் சாலிய இனத்தை சேர்ந்தவரான 63 நாயன்மார்களில் ஒருவரான நேசநாயனாரும், இவரும் அக்காலத்தில் தற்போது சாலிய இனத்தவரின் குலத்தொழிலான நெசவு தொழிலையே செய்து சிவனாடியார்களுக்கு கோவனம் என்றளக்கப்படும் சிற்றடையை சிவனடியார்களுக்கு வழங்கி சிறப்புடன் சிவத்தொண்டு புரிந்து வந்துள்ளது பெரியபுராணம் காட்டுகிறது, இதன் மூலம் சாலியரின் சைவத் தன்மைக்கு முத்திரை பதிக்கப் பட்டுள்ளது. அந்நாள் முதல் இந்நாள் வரை சைவ மதத்தில் சாலியர் சமூகம் முக்கிய பங்கினைக் கொண்டு சிவனடியார்களுக்கு சிவத் தொண்டும், சிவன் கோவில்களையே அடிப்படையாகக் கொண்டே குல தெய்வங்களும் அமைத்து வழிபாடு செய்து வருகின்றனர், அக்காலத்தில் சாலிய சமூக முன்னோர்கள் சைவ மதத்தின் அடையாளங்களான ருத்ராட்சம் அணிதல், பூணுல் போடுதல் போன்ற சைவ அடையாளங்களுடன் வாழ்ந்து கொண்டு தேவாரம் திருவாசகம் இசையுடன் பஜனைப்பாடல்கள் பாடுவதற்கென்றே ஏழுர் சாலிய சமுதாய ஊர்களில் பஜனை மடங்களும் நாயன்மார்கள் பெயரில் திருச்சபை மன்றங்களும் இன்றளவும் இயங்கி வருவதை நாம் காண்கிறோம். இதற்கு உதாரணத்திற்கு கூற வேண்டுமானால் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாணக்கவாசகர் திருச்சபை, முகவூரில் நாவுக்கரசர்-அப்பருக்கு மன்றமும், சுந்தரபாண்டியத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் திருசசபை, ஸ்ரீவி,மற்றும் சத்திரப்பட்டியில் தேவார- திருவாச பக்த சபா போன்றவை இன்றளவும் நடைபெற்றுக்கொண்டு வருகிறது, சாலிய சமுதாயத்தில் இன்றளவும் சிவ வழிபாட்டுத்தளங்களில் தேவார பாடகள் பாடும் ஓதுவார்கள் போன்று தேவார - திருவாசப்பாடல்களை இராஜபாளையம்,ஸ்ரீவி,சத்திரப்பட்டி, வ,புதுப்பட்டி, சுந்தரபாண்டியம் மற்றும் ஏழுர் சாலிய சமுதாய மக்களால் பாடப்பட்டு வருகிறது, இதற்கு தேவார இன்னிசை மாமணி திரு, புதுப்பட்டி மோகன் என்பவரே முன் உதாரணமாகும் அவருடைய தேவார இன்னிசையில் மயங்காதார் யார் உளர். சுந்தரபாண்டியம் சாலியர் சமூகமும்-சுந்தரமூர்த்தி நாயனாரும் இதன் அடிப்படையில் சுந்தரபாண்டியத்தில் சைவ மத சிவத் தொண்டாக பெரிய புராணத்தின் பாட்டுடைத்தலைவான சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருச்சபை என்ற அமைப்பு பாக்கியநாதசாமி கோவில் பஜனை மடத்தில் உருவாக்கப்பட்டு ஒரு நூற்றாண்டை நெருங்கி நடைபெற்று வருகிறது, இவ்விடத்தில் தான் சிவ ஆலய முக்கிய விழாக்களில் ஒன்றான மகளாய அமாவாசை கழித்த நவராத்திரி விழாவின் சதுரகிரி கொழுபூஜை விழாவின் அங்கமான சிவனடியார்கள் திருக்கூட்டம் சதுரகிரி மலைக்கு செல்லும் அங்கு கொழு பூஜை முடிந்து மலையிலிருந்து அடிவாரம் வந்தது முதல் சுமார் ஒரிரு மாதங்கள் வரை சாலிய சமுதாயம் அமைந்துள்ள ஏழுர் - மற்றும் அதைச்சார்ந்த சிற்றூர் மற்றும் அதன் ஒவ்வொரு பகுதியிலும் திருக்கூட்ட சிவனடியார் திருக்கூட்ட பூஜை சிற்ப்புடன் முடிந்து இவ்வூரில் தான் முடிவு பெறும், இந்நிகழ்ச்சி இன்றுவரை நடைபெறுகிறது ( தற்போது காளிமுத்து சுவாமிகள் ஆஸ்ரமத்தில் நடைபெறுகிறது) சதுரகிரி மலையிலும் ஒவ்வொரு நாளும் அங்கு தங்கியிருந்து சமையல் செய்து விரதம் இடுவோர் முதலில் திருக்கூட்டத்திற்கு சமையல் செய்த அன்னத்தின் ஒருபங்கு அன்னத்தை திருக்கூட்டத்திற்கு ( சுந்தரமூர்த்தி சுவாமி கோவிலுக்கு முன்பாக) வழங்கி விட்டுத்தான் தாங்கள் விரத நோண்பு மேற்கொள்வார்கள், இது போன்று சுந்தரபாண்டியத்தில் இந்த பஜனை மடத்தில் எப்போதும் சிவனடியார்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் இவர்களுக்கு சிவனடியார்களில் ஒரிருவர் தினமும் அந்திப்பொழுதில் அன்னக்காவடி எடுத்துச்சென்று சுந்தரபாண்டியம் சாலிய சமுதாய இல்லங்களில் அன்னம் பெற்று உடனிருக்கும் சிவனடியார்களுக்கும் வயதுமுதிர்ந்த இயலாதவர்களுக்கும் இந்த அன்னம் அன்னதானமாக வழங்கப்பட்டுவந்தது, அந்த அன்னக்காவடி எடுக்கும் சிவனடியார்கள் காவடியை சுமந்து கொண்டு ஐந்தெழுத்து மந்திரமான ஓம் நமச்சிவாயத்தையும் சாம்போ சதா சிவ சாம்போ சிவ என்ற சிவநாமங்களை பாடிக்கொண்டு அன்னம் பெற்று வருவார்கள், அப்போது அநேக இல்லங்களில் அன்னக்காவடிக்கு உணவு போட்ட பின்தான் இரவு உணவு உண்பார்கள் அப்படி அன்னக்காவடி வர நேரம் ஆகிவிட்டலும் அந்த அன்னத்தை எடுத்து தனியாக வைத்து விட்டுத்தான் தாங்கள் உணவு உண்பார்கள்.அந்த அன்னக்காவடியின் மணியுடன் கூடிய தாண்டாயுதமும் அதன் குண்டாபாத்திரமும் இன்னும் சிவனடியார்கள் நினைவு சின்னமாக சுந்தரபாண்டியம் பஜனை மடத்தில் உள்ளது
,இவ்வாறு சிவனடியார்கள் சிவத்தொண்டு வளர்ந்து வரும் நாட்களில் தான் பெரியபுராணத்தின் பாட்டுடைத்தலைவன் என்று போற்றப்படும் சுந்தரருக்கு திருச்சபை நிருவி அவருக்கு வருடாவருடம் குருபூஜை நடத்த திருச்சபை முயன்றது, இதன் பொருட்டு சுந்தரரையே தனது குருவாக கொண்டு நேசித்து அவரையே தியானித்து தனது குருவான சுந்தர மூர்த்தி சிவபொருமானால் ஆட்கொள்ளப்படப்போகிறார் எனவே அவருக்கு முன்னரே தான் முத்தி பெற வேண்டுமென்று தனது தவவண்மையால் ஆடித்திங்கள் 10ம் நாள் சித்திரை நட்சத்திரத்தில் முத்தி பெற்ற பெருமிழலைக் குறும்ப நாயனாருக்கும், ஆடித்திங்கள் 11ம் நாள் சுவாதி நட்சத்திரத்தில் முத்திபெற்ற சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் அவருடைய ஆன்மீக நண்பரும் சிவத்தொண்டருமான சேரமான் பெருமாள் நாயனருக்கும்( சுந்தரரின் வேண்டுகோளின்படி சேரமான் பெருமானையும் சிவனிடம் ஆட்கொள்ளவேண்டியதின் பெயரில் முக்தி பெற்றவர்) ஆகிய மூவருக்கும் இவ்விரு நாட்களிலும் சுந்தரபாண்டியம் ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகள் சபையின் திருமாடலாயத்தில் இத்துடன் கூறப்பட்ட அழைப்பிதழில் கண்டவாறு சிறப்பு பூஜைகளும் தேவார இன்னிசை நிகழ்ச்சியும், ஆன்மீக சொற்பொழிவுகளும் நடைபெற்றது, மேலே கூறப்பட்ட மூவருக்கும் இங்குதான் உற்சவ மூர்த்தி விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இரண்டாம் நிகழ்ச்சியில் அலங்கார சப்பரத்தில் சுந்தரபாண்டியம் திருவீதிகளில் ஊர்வலமாக திருவீதி உலா நடைபெறுகிறது, அன்னார்களின் திருவுருவ விக்ரங்களை இங்கு காணலாம் இந்த சிறப்பு வாய்ந்த சிவ விழா நூற்றாண்டை நோக்கி பயனிக்கிறது, வளரட்டும் சிவத்தொண்டு!பெறுவோம் சிவனருள்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக