திங்கள், 9 ஜூலை, 2012

ஸ்ரீபகவத் கீதையில் தியானம்


ஸ்ரீபகவத் கீதையில் தியானம் 1) தனிமையான இடத்திலே அமர்ந்து, மனதையும், உடலையும், வசப்படுத்தியவனாய், ஆசையும், தேவைகளும் அற்று யோகியானவன் எப்போதும் மனதை பரம்பொருளில் லியக்கச் செய்தல் வேண்டும். 2) சுத்தமான இடத்தில், சமமான இடத்திலும், மான்தோல், தர்ப்பை , துணி இவற்றின் மீது தனக்கோர் உறுதியான ஆஸனம் அமைத்துக் கொண்டு அமர்தல் வேண்டும் 3)அங்கு அமர்ந்து மனதை ஒருமுகமாக்கி உள்ளத்தையும், புறச் செயல்களையும், நன்கு கட்டுப்படுத்தி ஆஸனத்தில் அமர்ந்து, மனம் நன்கு தூய்மையடைய யோகத்தைப் பயில வேண்டும் 4) உடம்பையும், தலையையும், கழுத்தையும், சமமாக அசைவின்றி வைத்துக் கொண்டு உறுதி உடையவனாய் மூக்கு நுனியைப் பார்ப்பதைப் போன்று திசைகளை நோக்காமல் கட்டுபாட்டுடன் ஒருநிலைப்படுத்த வேண்டும் 5) பேராமைதி உடையவனாய், அச்சத்தைப் போக்கி, பிரம்மச்சாரி விரத்தில் நிலை கொண்டு, மனதை வசப்படுத்தி, பரமாத்மாவிடம் சித்தத்தை இசைத்து, ஆத்மாவினை மேலாக்கி யோகியாய் அமர வேண்டும் 6)இங்ஙனம் எப்போதும், மனதை கட்டுப்படுத்தி ஆத்மாவில் யோகமுற்றிருக்கும்யோகி, பரமாத்மாவிலிருக்கும் பேரமைதியில் நிலைத்து, அதன் மூலம் மோக்ஷ நிலையை எய்த வேண்டும் 7)உணவு, புலன் நுகர்ச்சி இவற்றில் கட்டுப்பாடும், செயலில் தேவையான அளவுமட்டும் ஈடுபாடும் உறக்கம், விழத்தல், இவற்றில் ஒழுக்கம், உடையோனுக்கு யோக மார்க்கம் துயர் நீக்கும் சாதனமாகும், 8) எப்போதும் சித்தம் முழுவதும் உள்ளடக்கி பரமாத்மாவிலேயே நிலை பெறுகின்றதோ, அப்போது அனைத்து விருப்பங்களில் பற்றற்ற நிலை ஏற்படுகின்றது, அந்நிலை எய்ததியோர் யோகி என்பர் 9) சித்தத்தை அடக்கி, ஆத்மாவில் கலந்து நிற்கும், யோகிக்கு காற்றில்லாத இடத்தில் நிற்கும் விளக்கின் ஒளிக்கு உவமையாக கூறப்படுகின்றது, 10) சித்தத்தில் எழும் எண்ணங்கள் அனைத்தும், யோகப் பயிற்சியினால் முழுவதும் நிறுத்தப்படும் பொழுது, யோகி தன்னில் தன்னை அறிந்து சந்தோசப்படுகின்றான், தொடரும்......................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக