ஞாயிறு, 8 ஜூலை, 2012


தவயோகம் தவமும் - யோகமும் தியானத்தின் அங்கங்கள்தான் தவமும் யோகமும். ஜோதி வடிவான சிவத்தை அடைய மேற்கொள்ளும் வழிபாட்டு முறைகளே தியானம்,தவம் யோகம்.தியானத்தின் போது அபரீதமான சக்தியை பெற முடியும், தியானத்தின் மூலம் நமது ஆறாவது அறவின் கதவை திறக்கவும், விரிவடையும் செய்து ஆத்மாவின் பேரோளியை பெற தியானம் என்னும் திறவுகோல் உதவுகிறது, தியானத்தின் முதிர்ச்சியில் எண்ண அலைகள் குறையும், சுவாசத்தின் அளவு குறையும்,நம் புருவங்களுக்கிடையே ஒரு ஜோதி ஒளி தென்படும், இந் நிலையில் சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது, இந்நிலையில் தான் ரிஷிகள் தவத்தின் உச்ச நிலையைப் பெற்று ஒளியின் பிளம்பான சிவத்தை அடைந்து - முக்தி நிலை பெற்றார்கள், இந்த நிலையின் அடிப்படையான தியானத்தின் தொடர் நிலைகள்: முதல் நிலை: அடிப்படை நிலை - ஆன்மிக அறிவு உண்டாகும் நிலை - தியானத்தின் பயிற்சி நிலை எனலாம் இரண்டாம் நிலை: உடலில சக்ரா நிலை - உடலில் சக்தி மையமாக செயல்படுகின்றன - ஆத்ம சக்தி வளர்தல் மூன்றாம் நிலை: ஒளி (ஜோதி) நிலை - இந்நிலையில் 7 நிலைகள் உண்டு என்கின்றனர் யோகிகள். ஆத்மா வாயில் திறக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு, உயர்நிலை அடைகிறது, இதனால் அன்பு, அமைதி, ஆரோக்கியம் நேரிடையாக உண்டாகிறது. நான்காவது நிலை: அறிவொளி - யோக நிலை - முதிர்வு - முக்தி நிலை எனலாம்- இந்நிலையில் உடல், மனம், அறிவாற்றல், ஆகியவை விழிப்புணர்ச்சி எல்லையை அடைகிறது, நம் ஜீவ ஒளி - பேரோளியுடன் ஒன்றிணைந்து பேரோளியாக மாறுகிறது, இது வே ஆன்மீகத்தின் உச்ச நிலை, இதுவே யோகா ஆன்மீகம் ஒன்றிய ஐக்கிய நிலையாக ஆகிறது, தவ நிலையின் உச்சியில் யோகம் சிவத்துடன் ஒன்றி ஐக்கியமாகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த தவத்ததினை பின்கண்டவாறும் சிறப்புகளுடன் மூன்று வகையாக பிரித்துள்ளனர் ஆன்றோர்கள். மூவகை தவங்களாவன: 1) மானசம் - மனதால் செய்யும் தவம். 2) வாசிகம் - வாயினால் செய்யும் தவம். 3) காயிகம் - உடம்பால் செய்யும் தவம் மானசம்: உயிர்களிடத்தில் அன்பு, தான தருமங்களில் விருப்பம் கொள்ளுதல், பிறர் செய்த தீமையைப் பொறுத்தல், உண்மையில் நாட்டம் கொள்ளுதல், சிவத்தைச் சிந்தித்தல், புலங்களை அடக்குதல், உலகம் நலமாக இருக்க வேண்டுதல் வாசிகம்: உண்மை பேசுதல், தீய சொற்களையும் கடுஞ் சொற்களையும் பேசாதிருத்தல் ஐந்தெழுத்து (சிவாய நம) ஓதுதல், தோத்திரப் பாடல்கள் பாடுதல், நீதிகளை எடுத்துரைத்தல், நல்லனவற்றையே பேசுதல், திருமுறைப்பாடல்கள் மந்திர ஆற்றல் வாய்ந்தவை, அப்பாடல்களை வாய்விட்டுப் படிக்க ேவ்ண்டும், அவ்வாறு படிக்கும் பொழுது உண்டாகும் ஒலி அலைகள் நம்மை சுற்றிலும் ஒரு பாதுகாப்புச் சுவர் போல் அமையும், காயிகம்:சிவபெருமானாரைப் பூசித்தல், ஆலயம் வலம் வருதல், ஆலயத்தை தூய்மை செய்தல், சிவத்தலயாத்திரை செல்லுதல், மலர்மாலை தொடுத்தல், ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தல், பிராணிகளுக்கு உதவுதல், சான்றோர்களையும், பெற்றோர்களையும் வணங்குதல். இத்தகைய நல்லனவற்றை அன்றாடம் செய்வதும் உண்மையான தவம் ஆகும் என்றும், போலி வேடம் கொண்டு காவி தரித்துக்கொண்டு உலகமக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பது தவமன்று, யோகம்: தவத்தின் உச்சி யோகம். யோகம் என்றால் ஒன்றுதல் என்று பொருள், ஜீவன் , சிவத்துடன் ஒன்றுவது யோகம் எனப்படுகிறது, யோகம் என்பதனை அகவழிபாட்டு முறைமூலம் தொடங்கி தவயோகத்தை பெறுதல் வேண்டும். வழிபாடு என்பது அகவழிபாடு, புறவழிபாடு என இரண்டாக பிரிக்கப்படுகிறது, கடவுளை தன்னின்றும், பிரியாத தன்மை கொண்டு வழிபடுவது அகவழிபாடு, கடவுளை தன்னின்று வேறுபடுத்தி வழிபடுவது புறவழிபாடு, ஒவ்வொருவரின் உடம்பில் உள்ள உயிரே சிவம்- ஆத்மாவே சிவம் - உடம்பே கோவில் . எனவே நம் உடம்பில் இருக்கும் ஆத்மா என்ற ஜீவ ஒளியான சிவத்தை அகவழிபாடாக வழிபடுதல் வேண்டும் புற வழிபாட்டின் நோக்கமே அகவழிபாட்டை அடைவதுதான், நாம் புறவழிபாட்டோடு நின்று விடுகிறோம், புறவழிபாட்டுடன் ஒன்றி அகவழிபாட்டின் மூலம் சிவம் என்ற ஜீவ ஒளியை தியானம் தவம் யோகம் என்ற வகையில் ஐக்கியமாகி ஒன்றிடுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக