சாஸ்திர அறிவிலும், அனுபவ அறிவிலும் திருப்தி கொண்டவனாய், அசைவுகளுக்கு அப்பாற்பட்டு புலன்களை வென்று கல்லையும் மண்ணையும் பொன்னையும் ஒன்றுபோல் காணும் யோகியே யோக நிலையுற்றான் என்கிறது பகவத் கீதை (அத் -6)
இந்த யோக நிலை கீழ்கண்டவாறு எட்டு நிலைகளை கொண்டது அவை:
1) யமா: அஹிம்சை, சத்யம், திருடாமை, பிரம்மச்சரியம் பேராசையின்மை
2) நியமா: சுத்தம்( உள்ளும் புறமும்), திருப்தி, தவம், சுயமாய் கற்றல், இறைவனிடம் சரணாகதி
3) ஆசனா: யோகாசங்கள்
4) ப்ராணயாமா : மூச்சுப்பயிற்சி மற்றும் மூச்சு கட்டுப்பாடு
5) ப்ரத்யாஹரா: மனதை கட்டுப்படுத்துல்
6) தாரணா: மனதை ஒரிடத்தில் குவித்தல்
7) தியானம்: தியானம் (மெடிட்டேஸன்)
8) சமாதி: முக்தி நிலை - இறைநிலையடைந்து ஐக்கியமாதல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக