வியாழன், 30 ஜனவரி, 2014

கனி இருக்க காயை கவரும் மாந்தர்


கனி இருக்க காயை கவரும் மாந்தர் நாம் சொல்லும் வார்த்தைகள் அனைத்தும் நம் உள்ளத்திருந்தே வெளிப்படுகின்றன. அவற்றில் எதுவும் கொண்டு வரப்படுவதில்ைல, நம் உள்ளத்திலுள்ள நல்ல இனிைமயான சொற்கள் நிறைந்துள்ளன. அப்படியிருக்க அருவருப்பான வார்த்தைகளை தேடி நாம் அடுத்தவர் மனம் புண்படும்படியாக பேசுகிறோம். இது ஒரு இடத்தில் சுவையான கனி இருக்கும் போது சுவையற்ற காயை எடுத்துக் கொள்வதைப் போன்றன, இதனையே வள்ளுவர் பெருந்தகையும் " இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய் கவர்ந் தற்று" என்கிறார், அதுபோல நம் உயிரோடு உடன் பிறந்தது நம்முள்ளே உள்ள அன்பு அதை விடுத்து கோபத்தை நாம் தேடி கொண்டுவருகிறோம், அதனை கிண்டி கிளரி வளர்த்து விடுகிறோம். இதனால் நமக்கு இயல்பாக உள்ளதை விட்டுவிட்டு நமக்கு பகையாக உள்ளதை நாம் தேடிப்பிடித்து சேர்த்துக்கொள்கிறோம். பகை, பொறாறமை, வஞ்சம், காமம் குரோதம், இவை யனைத்தும் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் குற்றங்கள், அன்பு ஒன்றே உயிருக்கு குணமாகும், அதுபோல இறைவனை வணங்குவதும் நாடுவதும், நமக்கு குணமாகும், நம் உள்ளே உள்ளவன் அவன், ஆனால் நமக்கு பிறவான ( வெளியே உள்ள ) உலகப் பொருட்களை உடலையுமே நாம் நாடுகிறோ ம். திசைமாறி செல்கிறோம், கனியாக உள்ள இறைவனை விடுத்து காயாக உள்ள நிலையற்ற உலகப் பொருட்களை விரும்பி பற்றுகிறோம். முதியவர் ஒருவர் தள்ளாடி த் தள்ளாடி நடந்து சென்றார், அவர் உடம்பில் தெம்பில்லை. உண்ணாமல் வாடிப்போய் இருந்தார். அப்போது அவரை அம்ைமயப்பரான உமையும் சிவனும் பார்த்தனர். இருவருக்குமே அவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால இருவரில் யார் உதவுவது என்பதில் மட்டும் கருத்து வேறுபட்டது. "நீயா? நானா? " என்ற போட்டி , அவர் தள்ளாடி யபடியே நடக்கிறார், இன்னும் சிறிது நேரத்தில் கால் இடறி கீழே விழப்போகிறார், அப்போது அவர் " அப்பா " என்றால் இறைவரும், அம்மா என்றால் உமையம்மையும், இறைவா? என்றால் இருவரும் சேர்ந்து சென்று உதவலாம் என்று முடிவு எடுத்தனர். அவ்வாறு அவர்கள் எதிர்பார்த்தபடி வயதானவர் தள்ளாடி நடந்து வரும் போது கல் தடுக்கிய முதியவர் கீழே விழந்தார், அப்போது இறைவர் இறைவி இருவரும் நம்மில் யாரை அழைக்கின்றார் என்று ஆவலோடு எதிர்நோக்கியிருந்த வேளையில் அவரோ " ஐயோ" என கத்தினாராம், யாரையும் நினைக்காது ஐயோ என்றார், எனவே இருவரும் உதவ முன்வரவில்லை. இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளவேண்டியது அருளவேண்டும் என்ற இறைவன் தயாராக இருந்தும் அவரை எண்ணவில்ைல. அவன் அருள பற்று வைக்கவில்லை இறைவன் மீது பற்றில்லாமையால் அவரை நாம் அவன் அருளை பெற வாய்ப்பை இழக்கின்றோம். இதனையே அப்பர் சுவாமிகளும் " கையினால் தொழாது ஒழிந்து கனியிருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே, " அதாவது " கனிபோலச் சிவன் இருக்க காய்போன்ற வேறு பொருள்களை பற்றி வாழும் உயிர்களே என்கிறார் அவர். இனிமேலாவது கனிபோன்ற இறையருள் இருக்கும் போது சுவையற்ற காய்களான வேறுபொருட்கள்மீது நாட்டம் கொள்ளாது இறையன் அருள் ெபற கனியினை கவருவோம்.

திங்கள், 27 ஜனவரி, 2014


அம்மையப்பர் வடிவம் இன்று ஒருவருடைய குடும்பத்தை பற்றி சாடையாக கேட்கும் போது உங்கள் வீடு மதுரையா? அல்லது சிதம்பரமா? என்று கேட்பதுண்டு வீடு மனைவியின் ஆட்சியில் இருந்தால் அது மதுரை என்றும் கணவர் ஆட்சியில் இருந்தால் அது சிதம்பரம் என்று கிண்டலாக பேசுவதை நாம் அறிந்திருக்கின்றோம். மதுரையில் மீனாட்சிக்கே முதலிடம் அங்கு மீனாட்சி அருளிக்கொண்டே இருக்கிறாள். அதாவது சிவனருளை என்றும் அவள் வழங்கிக்கொண்டே உள்ளாள். சிதம்பரத்தில் சிவனருள் பரிபூரணமாக என்றும் உள்ளது ஆயினும் சிவகாமியின் வழியில் தான் அவன் அருள முடியும். அருளை இறைவனிடம் இருந்து வாங்கித் தருவது அன்னைதானே. கூட்டிக்கழித்து பார்த்தால் இரண்டும் ஒன்றுதான் வரும் வழி வேறுபாடாக இருந்தாலும் அருளும் பலன் ஒன்றுதானே. கூடுதல் குறைதல் எதுவும் அவர்களிடம் இல்லை, அவர்கள் இருவரும் என்றும் எங்கும் சமம்தான். நம்மிடையே ஆண் - பெண் என்ற வேறுபாடு இன்றி இரண்டும் சமம் என்று உணர்த்தும் விதமாகத்தான் தன்னுள் பாதியை பெண்ணுருவமாகவும் மறுபாதியை ஆண் உருவமாகவும் ஆனுக்குள் பெண்ணோ? அல்லது பெண்ணுக்குள் ஆனே இன்றி இரண்டும் சமமே என்று உணர்த்தவே அர்த்த நாரீஸ்வராக காண்கின்றார்.அந்த சம வடிவமே அம்மையும் அப்பனும் இணைந்து அம்மையப்பன் என்கிற அர்த்தநாரீசுவரர் வடிவம் அர்த்த என்றால் பாதி நரன் என்றால் ஆண் என்றும் நாரீ என்றால் பெண் என்றும் ஈசுவரன் என்றால் சகல ஐசுவரியமும் உடைய தலைவன் , தன் உடலில் பாதியை பெண்ணுக்கு தந்த தலைவன் என்பது பொருள். அந்நிலையில் அவனே மங்கைபாகன் எனப்படுகிறான். சிவன் தன் ஆற்றலோடு வந்தாலன்றி உலகம் இயங்காது ஆகவே அவன் பிரிக்க இயலாத தன் சக்தியோடு இணைந்து நமக்காக இறங்கி வரும் தோற்றமே அம்மையப்பர் உருவம், நாம் வழிபடும் சிவலிங்கத் திருமேனி ஆண்பாதி பெண்பாதி வடிவம் அதனால் தான் அவனோடு என்றுமுள்ள சக்திக்கு பிரியாவிடை என்று பெயர். உயிர்க்கூட்டம் அனைத்தும் தம்முள் ஆண் பெண் என்றே இயங்கிக் கொண்டுள்ளது. ஆணுக்கு பெண்ணும் , பெண்ணுக்கு ஆணும் அவர்களுக்கு உலகமும் இன்பமும் தருவதாக ( போகப் பொருள்களாக ) அமைந்துள்ளன, எனவே இந்த அம்மையப்பர் போகவடிவம் எனப்படுகிறது. இதுவே அவனுடைய கருணையை காட்டுகிறது. சிவன் உமையோடு கூடிய இவ் அருள்வடிவை ஞான சம்பந்தர் " வேயுறு தோளி பங்கன்" என்றும் மாணிக்க வாசகர் " மலைமாது ஒரு பாகா " என்றும் பாடியுள்ளனர். எனவே ஆணும் பெண்ணும் இணைந்ததே இவ்வுலகம் , என்றும் அதில் ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை என்றும் ஆண், பெண் இருவரும் சமம் என்றும் உணர்த்துகிறது அம்மையப்பர் வடிவம்.

ஞாயிறு, 19 ஜனவரி, 2014


சிவலிங்கம் " ஞாயிறு போற்றுதும், திங்கள் போற்றும், மாமழை போற்றுதும், " என் ஆரம்பிக்கிறது சிலப்பதிகாரம், இயற்கை வழிபாட்டை அது போற்றுகிறது. சூரியன், சந்திரன் மழை, மலை, என தனக்கும் மீறிய பொருட்களை வணங்கத் தொடங்கினான் ஆதிகாலத்திலேலே மனிதன் .இயற்கையாகப் பொருட்கள் தோன்றும் வடிவம் அனைத்தும் சிவலிங் வடிவம் தான் ஏன் மனித வடிவம் கூட சிவலிங்கமாக கூறுகிறார் திருமூலர். மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம் என்றார். இயற்கையின் சுயவடிவமே சிவலிங் வடிவம்.அது இயற்கையாக தோன்றுவதே சுயம்பு என்கின்றனர். சுயம் என்றால் தன், தானாக என பொருள்படும். சிவலிங்க வழிபாடு ஒர் இயற்கை வழிபாடு. இதுவே காலத்தால் முந்திய வழிபாடு. இயற்கை உருவமான காலத்தே சிவலிங்க வடிவம் என கொள்ள வேண்டும். அவ் இயற்கையையும் தோற்றுவித்தவன் சிவன்தானே. நிலம் நீர், தீ, காற்று ஆகாயம் என்னும் ஐம்பூதப் பொருள்களை தொழிற்படுத்துபவன் இறைவன். அவை ஒன்றோடு ஒன்று கூட உண்டாவது இவ்வுலகம். உலகப் பொருட்கள் நம் உடல், இப்படி அவை கூடும் போது இயலபாகத் தோன்றுவதே சிவலிங்க வடிவம். ஆக இயற்கை என்னும் பேராற்றலையே, இயற்கையே வடிவ மான சிவலிங்க வடிவத்தில் நாம் வழிபடுகிறோம். தானாக செயல்பாடற்று " சிவனே " என்று என்றும் உள்ளதை சிவம் என்கிறோம். அதுவே நமக்கென இறங்கி வரும்போது அதன் ஆற்றலை சக்தி (Energy) என்கிறோம். அந்த ஒரே பரம் பொருள்தான் நமக்கு சிவனாகவும் சக்தியாகவும் இருபொருளாகக் காட்சி தருகிறது. நாம் வணங்கும் சிவலிங்கத்தின் கீழ்ப்பாகம் (ஆவுடை) பெண்பாகம், மேலுள்ள இலிங்ம் ஆண்பாகம் ஆகவே சிவலிங்கத்தை வழிபட்டால் அது சிவனையும் அவன் சக்தியையும் ஒருசேர வழிபட்டதாகும், சிவ உருவில் ஒருபாகம் சிவனாகவும், மறு பகுதி (இடப்பக்கம்) பராசக்தியின் உருவத்தையும் கொண்டுள்ளார் என்று ஆன்மீக வரலாறு கூறுவதை நாம் அறியலாம். சிவந்தவனை சிவப்பு நிறம் உடையவனைச் சிவன் என்கிறோம். செம்மை என்றால் சிவப்பு முழுமை செம்மை உடையவன் சிவன். " சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான் " என்கிறார் அப்பர். லிங்கம் என்ற சொல்லில் "லிங்" என்பது ஒடுக்கத்தையும் "கம்" என்பது தோற்றத்தையும் குறிக்கும் அதாவது அனைத்தையும் தோற்றுவித்துக் காத்து ஒடுக்குபவன் அவன் என்பதை இச்சொல் உணர்த்துகிறது. நாம் அனைத்தையும் சிவமாகவே காண்பதால் " சிவமயம்" எனத் எழுதித் தொடங்குகிறோம். நம் எண்ணம் செயல்பாடு அனைத்தும் அவனை நோக்கியதாக உள்ளன என்பதையே இது காட்டுகிறது. எனவே இவ்வுலகில் நமக்கு அருள வேண்டி அவன் எடுத்த திருமேனியே சிவலிங்க திருமேனி ( இயற்கை என்கிற திருமேனி) அதுவே நமக்கு அனைத்து வளங்களையும் அளிக்கிறது. " பொன்னும் மெய்பொருளும் தருவானை " என்கிறார் சுந்தரர். பொன்னும் அவனே கொடுப்பவன் ( அது அழியக்கூடியது) அழியாத மெய்பொருள் என்னும் வீடுபேற்றையும் அவனே தருவான். மேலும் " வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் " என்று அப்பரும் " வேண்டத்தக்கது அறியாய் நீ வேண்ட முழுதுந் தருவோய் நீ " என மாணிக்க வாசகரின் கூற்றும் இதனை முன்னிருத்தி பாடப்பட்டுள்ளது. சிவலிங்க வடிவில் மண்ணுலகில் வேண்டுவார்க்கு வேண்டுவன அருள்வான் ஈசன் என்கிறார்கள், இம்மண்ணில் நமக்கு அருள் தருவதற்கென்றே அவன் தன் ஆற்றலோடு எடுத்தது சிவலிங்க உருவம் அது ஓர் இயற்கையான திருஉருவம். திருச் சிற்றம்பலம்

சனி, 18 ஜனவரி, 2014


"மீண்டும் வாரா வழியருள் புரிபவன்" மக்களாகிய நாம் அனைவரும் இயங்குபவர்கள், நம்மை இயக்குபவன் இறைவன். நாம் பாவங்களைப் போக்கி மீள வேண்டும் என்றே இங்கு வந்து நாம் பிறந்துள்ளோம். அவனை அடைவது ஒன்றே அதன் முடிவு. ஆனால் நமக்கு நாமே உண்டாக்கிக் கொண்ட வேலைப்பளு காரணமாக அதை மறந்து திசைமாறி சென்றுகொண்டிருக்கிறோம். நம் உடலால் நாமும் ஒரு பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டோம், அது மனைவி, மக்கள் என்னும் குடும்பம் நம்உடல் சுகம், குடும்ப சுகம், என்று பணம் பொருள் தேடவும், வீடு, வாகனம் வாங்கவும், அவற்றைப் பாதுகாக்கவும் என்றே இப்பிறவியை கழித்துவிட்டோம். மாறாக நம் உயிர் முன்னேற்றம் பெற, அது இறைவனை அடைய நாம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இறைவனை அடைய நமக்கு நேரமும் இல்லை, அதனால் அவனை அடைய அந்த எண்ணம் வர நாம் மறுபடியும் பிறக்கவேண்டுமே. எனவே தான் மாணிக்கவாசகரும் " மீண்டு வாரா வழியருள் புரிபவன்" என்று பாடியுள்ளார். அவனை எண்ணி வணங்கினால் " நாம் மீண்டும் இப்புவிக்கு வாராத வழிகாட்டி தன்னுடனே நம்மையும் வைத்துக் கொள்வான் " என்கிறார். நாம் இவ்வுலகப் போக்கில் நம் வேலைகளுக்கும் இடையில் உண்மையாக அவனை நேசித்து வழிபட பழக வேண்டும். உடலுக்காக வாழும் நாம் உயிருக்காவும் வாழ வேண்டும் பின் நாம் திசை மாறி போக வாய்ப்பே இராது. நாம் நமக்கென இட்ட பணியை நிறைவேற்றலாம். நாம் பிறந்த பயனை அடையலாம், இதனையே வள்ளுவர் பெருந்தகையும் பிறவி பெருங்கடல நீந்துவார் நீந்தார் இறைவனடி சேராதார் என்றும் கூறியுள்ளார், இப்பிறவியில் பிறந்ததன் பயனை அடைய இறைவன் பால் பற்றுக் கொள்வோம், இன்னும் ஒரு பிறவி எடுக்காதிருக்க முயல்வதுதான் இப்பிறவியின் பயன்,

புதன், 15 ஜனவரி, 2014

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): 16.12.2014 டூ 11.2.2018 விருச்சிகச் சனிப்பெயர்ச்சி!!!

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): 16.12.2014 டூ 11.2.2018 விருச்சிகச் சனிப்பெயர்ச்சி!!!

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): பவுர்ணமி இரவில்(22/7/13) ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவ வழிபாடு செய்வோம்!!!

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): பவுர்ணமி இரவில்(22/7/13) ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவ வழிபாடு செய்வோம்!!!

மணிராஜ்: சுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..!

மணிராஜ்: சுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..!

kidden objects games


Tortola Island Treasure
Tortola Island Treasure

புதன், 8 ஜனவரி, 2014

வழிபாடு


வழிபாடு வழிபாடு என்பது "வழிப்படுதல்" என்பதன் சுருக்கமாகும். இறைவனை அடையும் வழியில் நாம் சென்று கொண்டு இருக்கிறோம், அவன் வழிப்படுகிறோம் என்று உணரவேண்டும். நம் வழிபாடுகள் மூன்று வகையாகும். முதலாவது நான் என்னும் அகங்காரத்துடன் செய்வது. கோவிலுக்கு என்று ஒன்றை செய்துவிட்டு பின் " உபயம்" என்று தன்பெயரை போடுவதும் தன்னை பெருமைப்படுத்தும் வியாபார நோக்கம் கொண்டதும் இவ்வகைதான், இது நான் செய்தேன் என்ற இறுமாப்பையே காட்டுகிறது. நம் பெயருக்கு நாமே செய்கின்ற அர்ச்சனையும் இதுபோன்றதுதான். இங்கும் நான் என்ற தன்முனைப்போ முன்னிற்கிறது. வழிபடும் போது நான் என்ற எண்ணம் வந்துவிட்டால் அது வழிபாடு அன்று. ஆனால் நமக்கு வழிபாடு என்கிற நெறியை ஊட்டுகிற முதற்படி இதுதான். நாம் அனைவரும் கடந்து வருகிற பாதையும் இதுதான், ஆனாலும் தவறில்லை. அடுத்தபடியாக தன்பெயர் வெளிவராது இறைவனை எண்ணி அவனுக்கே என அர்ப்பணித்து இறைவன் பெயரிலேயே நாம் செய்விக்கும் அர்ச்சனை, அபிசேக ஆராதனை மற்றும் தொணடுகள் , இவை பதிபுண்ணியம் இறைநல்வினை எனப்படும். இவை நாம் அனைவரும் பெறக் கூடிய புண்ணியமாகும். மூன்றாவதாக, மேனலையாக நாம் என்றும் அவனடிமை என்று அவனுக்கு நம் உடலால் செய்யும் தொண்டுகள், பணிவிடைகள், உழவாரப்பணிகள் , இவை மட்டுமே இறைத்தொண்டு எனப்படும். இதற்கு இணையே இல்லை இவையே உண்மை வழிபாடு இதுவே பக்தி பூர்வமான அருள் வழிபாடாகும். கோயிலை வலம்வருவது, சுத்தம் செய்வது, பூத்தொடுத்து அணிவிப்பது, தீபம் ஏற்றுவது, வாயாரப்பாடுவது, கேட்பது, அபிடேக ஆராதனைகளை தானே செய்வது, மனம் நிறைய அவனை எண்ணி பூரிப்பது, மந்திரம் உச்சரிப்பது தியானம், செய்வது, எனும் இவை யனைத்தும் நாம் செய்யக்கூடிய இறைத்தொண்டுகள் ஆகும், அவனை அடைய அவை நல்வழிகள் ஆகும். ஆனால் இவற்றில் எதைச் செய்யும்போதும், நான் செய்கிறேன் என்ற ஆணவம் சுயவேண்டுதல் புகுந்துவிடாது செய்யவேண்டும். இதற்கு நம் மனம் பக்குவப்பட வேண்டும். அப்பக்குவம் நம் வாழ்கையில் ஏற்ற இறக்கங்களினாலும் எதையும் ஏற்றுக் கொள்ளும் மனத்தாலும் உண்டாகும், அதை வழிபாடு என்னும் இறைத்தொண்டின் வழியில் படிப்படியாகத்தான் பெறமுடியும், இறைத்தொண்டின்(வழிபாட்டின்) வழியில் மட்டுமே நாம்அவனை அடையமுடியும். இறைவழிபாட்டில் உழவாரப்பணிக்கு ஈடுஇணை எதுவும் கிடையாது, சைவ நாயன்மார்களில் இறைத்தொண்டில் ஈடுபடாதோர் யாரும்இல்லை, அனைவரும் மேற்கூறிய இறை வழிபாட்டுடன் சிவனடியார்களுக்கு அன்னதானமும் வழங்கிதான் சிறப்பு பெற்றது யாரும் அறிந்ததே. அன்பே சிவம்

மதுரமொழிவு: "தியானம்" செய்யும் முறை

மதுரமொழிவு: "தியானம்" செய்யும் முறை: தியானத்தின் பொழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம் உடலைக் கட்டூப்படுத்தி ஒரே இடத்தில் அமரச் செய்வது. எந்த முறையிலும் அமர்ந்து கொள்ளலாம...

மதுரமொழிவு: ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படு...

மதுரமொழிவு: ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படு...: கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள...