கனி இருக்க காயை கவரும் மாந்தர்
நாம் சொல்லும் வார்த்தைகள் அனைத்தும் நம் உள்ளத்திருந்தே வெளிப்படுகின்றன. அவற்றில் எதுவும் கொண்டு வரப்படுவதில்ைல, நம் உள்ளத்திலுள்ள நல்ல இனிைமயான சொற்கள் நிறைந்துள்ளன. அப்படியிருக்க அருவருப்பான வார்த்தைகளை தேடி நாம் அடுத்தவர் மனம் புண்படும்படியாக பேசுகிறோம். இது ஒரு இடத்தில் சுவையான கனி இருக்கும் போது சுவையற்ற காயை எடுத்துக் கொள்வதைப் போன்றன, இதனையே வள்ளுவர் பெருந்தகையும்
" இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய் கவர்ந் தற்று" என்கிறார்,
அதுபோல நம் உயிரோடு உடன் பிறந்தது நம்முள்ளே உள்ள அன்பு அதை விடுத்து கோபத்தை நாம் தேடி கொண்டுவருகிறோம், அதனை கிண்டி கிளரி வளர்த்து விடுகிறோம். இதனால் நமக்கு இயல்பாக உள்ளதை விட்டுவிட்டு நமக்கு பகையாக உள்ளதை நாம் தேடிப்பிடித்து சேர்த்துக்கொள்கிறோம். பகை, பொறாறமை, வஞ்சம், காமம் குரோதம், இவை யனைத்தும் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் குற்றங்கள், அன்பு ஒன்றே உயிருக்கு குணமாகும்,
அதுபோல இறைவனை வணங்குவதும் நாடுவதும், நமக்கு குணமாகும், நம் உள்ளே உள்ளவன் அவன், ஆனால் நமக்கு பிறவான ( வெளியே உள்ள ) உலகப் பொருட்களை உடலையுமே நாம் நாடுகிறோ ம். திசைமாறி செல்கிறோம், கனியாக உள்ள இறைவனை விடுத்து காயாக உள்ள நிலையற்ற உலகப் பொருட்களை விரும்பி பற்றுகிறோம்.
முதியவர் ஒருவர் தள்ளாடி த் தள்ளாடி நடந்து சென்றார், அவர் உடம்பில் தெம்பில்லை. உண்ணாமல் வாடிப்போய் இருந்தார். அப்போது அவரை அம்ைமயப்பரான உமையும் சிவனும் பார்த்தனர். இருவருக்குமே அவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால இருவரில் யார் உதவுவது என்பதில் மட்டும் கருத்து வேறுபட்டது. "நீயா? நானா? " என்ற போட்டி , அவர் தள்ளாடி யபடியே நடக்கிறார், இன்னும் சிறிது நேரத்தில் கால் இடறி கீழே விழப்போகிறார், அப்போது அவர் " அப்பா " என்றால் இறைவரும், அம்மா என்றால் உமையம்மையும், இறைவா? என்றால் இருவரும் சேர்ந்து சென்று உதவலாம் என்று முடிவு எடுத்தனர். அவ்வாறு அவர்கள் எதிர்பார்த்தபடி வயதானவர் தள்ளாடி நடந்து வரும் போது கல் தடுக்கிய முதியவர் கீழே விழந்தார், அப்போது இறைவர் இறைவி இருவரும் நம்மில் யாரை அழைக்கின்றார் என்று ஆவலோடு எதிர்நோக்கியிருந்த வேளையில் அவரோ " ஐயோ" என கத்தினாராம், யாரையும் நினைக்காது ஐயோ என்றார், எனவே இருவரும் உதவ முன்வரவில்லை. இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளவேண்டியது அருளவேண்டும் என்ற இறைவன் தயாராக இருந்தும் அவரை எண்ணவில்ைல. அவன் அருள பற்று வைக்கவில்லை இறைவன் மீது பற்றில்லாமையால் அவரை நாம் அவன் அருளை பெற வாய்ப்பை இழக்கின்றோம். இதனையே அப்பர் சுவாமிகளும் " கையினால் தொழாது ஒழிந்து கனியிருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே, " அதாவது " கனிபோலச் சிவன் இருக்க காய்போன்ற வேறு பொருள்களை பற்றி வாழும் உயிர்களே என்கிறார் அவர். இனிமேலாவது கனிபோன்ற இறையருள் இருக்கும் போது சுவையற்ற காய்களான வேறுபொருட்கள்மீது நாட்டம் கொள்ளாது இறையன் அருள் ெபற கனியினை கவருவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக