சனி, 18 ஜனவரி, 2014


"மீண்டும் வாரா வழியருள் புரிபவன்" மக்களாகிய நாம் அனைவரும் இயங்குபவர்கள், நம்மை இயக்குபவன் இறைவன். நாம் பாவங்களைப் போக்கி மீள வேண்டும் என்றே இங்கு வந்து நாம் பிறந்துள்ளோம். அவனை அடைவது ஒன்றே அதன் முடிவு. ஆனால் நமக்கு நாமே உண்டாக்கிக் கொண்ட வேலைப்பளு காரணமாக அதை மறந்து திசைமாறி சென்றுகொண்டிருக்கிறோம். நம் உடலால் நாமும் ஒரு பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டோம், அது மனைவி, மக்கள் என்னும் குடும்பம் நம்உடல் சுகம், குடும்ப சுகம், என்று பணம் பொருள் தேடவும், வீடு, வாகனம் வாங்கவும், அவற்றைப் பாதுகாக்கவும் என்றே இப்பிறவியை கழித்துவிட்டோம். மாறாக நம் உயிர் முன்னேற்றம் பெற, அது இறைவனை அடைய நாம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இறைவனை அடைய நமக்கு நேரமும் இல்லை, அதனால் அவனை அடைய அந்த எண்ணம் வர நாம் மறுபடியும் பிறக்கவேண்டுமே. எனவே தான் மாணிக்கவாசகரும் " மீண்டு வாரா வழியருள் புரிபவன்" என்று பாடியுள்ளார். அவனை எண்ணி வணங்கினால் " நாம் மீண்டும் இப்புவிக்கு வாராத வழிகாட்டி தன்னுடனே நம்மையும் வைத்துக் கொள்வான் " என்கிறார். நாம் இவ்வுலகப் போக்கில் நம் வேலைகளுக்கும் இடையில் உண்மையாக அவனை நேசித்து வழிபட பழக வேண்டும். உடலுக்காக வாழும் நாம் உயிருக்காவும் வாழ வேண்டும் பின் நாம் திசை மாறி போக வாய்ப்பே இராது. நாம் நமக்கென இட்ட பணியை நிறைவேற்றலாம். நாம் பிறந்த பயனை அடையலாம், இதனையே வள்ளுவர் பெருந்தகையும் பிறவி பெருங்கடல நீந்துவார் நீந்தார் இறைவனடி சேராதார் என்றும் கூறியுள்ளார், இப்பிறவியில் பிறந்ததன் பயனை அடைய இறைவன் பால் பற்றுக் கொள்வோம், இன்னும் ஒரு பிறவி எடுக்காதிருக்க முயல்வதுதான் இப்பிறவியின் பயன்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக