திங்கள், 22 செப்டம்பர், 2014

திரு ஆலவாய் உடையார்


திரு ஆலவாய் உடையார் ஆகிய ஆதிமூலம் தமிழ்சங்கத்திலும் ஒரு சங்கப் புலவராகவும் பன்னிரு திருமுறைகளில் ஒரு பாடல் ஆசிரியராகவும் இருந்து உள்ளது இங்கு காணலாம், சங்கப்புலவராக வந்து மதுரை திருவிளையாடல் புராணத்தில் தருமிக்கு பொற்கிளி வழங்க நக்கீரருடன் வாதிட்டது யாதும் அறிந்த வரலாறு, அதுபோல் பன்னிரு திருமுறைகளில் பதினென்றாம் திருமுைறயில் திருவாலவாயுடையார் திருப்பாசுறத்தில் தன் அடியாரான தனது திருநாமத்தை அனுதினமும் பாடும் பாணபத்திரர் என்ற புரவலருக்கு பொருள் வழங்கும் நிமித்தமாக கேரள நாட்டில் உள்ள தன் தொண்டனான சேரமான் பெருமானுக்கு கடிதம் எழுதும் நிமித்தமாக இப்பாடலை எழுதி பன்னிரு திருமுறையில் தனது பதிவை இயக்கியுள்ளார், தான் நினைத்தால் மதுரையம்பதியிலேயே உள்ள அரசன் மூலம் அன்னாருக்கு பொருள் வழங்க முடியும் இருப்பினும் தனது திருவிளையாடலை இரு அடியார்க்கும் தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக இப்பாடலை இயற்றியுள்ளார், மதிமலி புரிசை மாடக் கூடற் பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற கன்னம் பயில்பொழில் ஆல வாயின் மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம் பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க் கொருமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் செருமா உகைக்கும் சேரலன் காண்க பண்பால் யாழ்பயில் பாண பத்திரன் தன்போல் என்பால் அன்பன் தன்பாற் காண்பது கருதிப் போந்தனன் மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே. பன்னிரு திருமுறை காலத்திலேயே ஒருவர் ஒருவருக்கு செய்தி அனுப்பும் விதம் இருப்பதை இப்பாடல் வாயிலாக காணலாம் கடிதம் பெறுபவர் என்னும் இடத்தில் பாடல் வரிகளாகவே `கூடற் பதிமிசை நிலவு ஆலவாயில் மன்னிய சிவன் யான் மொழிதரும் மாற்றம் சேரலன் காண்க, ஓலையைத் `திருமுகம்` என்றல் அதனை விடுத்தோரது உயர்வு பற்றி தனது முகவரியை மதிமலி புரிசை மாடக் கூடற் பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற கன்னம் பயில்பொழில் ஆல வாயின் மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம் என்று தனது முகவரியை கூறி கீழ்காணும் விதத்தில் பொருளுரையை தருகிறார். பாணபத்திரன் தன்னைப் போலவே என்பால் அன்பன் என்பதும், அவன் தன்னைக் காணுதலைக் கருதித் தன்பாற் புகுந்தனன் என்பதும், அவனுக்கு மிகுந்த பொருளைக் கொடுத்து மீண்டு வரும்படி விடை கொடுத்து அனுப்புதல் என்பதுமாகும் என வினை முடிக்க. முதல் அடி தலச் சிறப்புக் கூறியது. அடுத்த இரண்டடிகள் அத் தலத்தில் உள்ள கோயிற் சிறப்புக் கூறியன. ஐந்து, ஆறாம் அடிகள் சேரலனது கொடைச் சிறப்புக் கூறியன. ஏழு, எட்டாம் அடிகள் அவனது வெற்றிச் சிறப்புக் கூறியன. ஒன்பது, பத்தாம் அடிகள் பாண பத்திரனது அன்புடைமை கூறியன இத்திருமுகப் பாசுரத்தைக் கண்டு, சேரர் பெருமான் பாண பத்திரரைப் பெரும் பத்தியோடும், சிறப்போடும் வரவேற்று வழிபட்டுப் பெரும் பொருள் கொடுத்துப் பாசுரத்தில் - வரவிடுப் பதுவே - என்று இருத்தலால் பத்திரரைத் தம்மிடத்தே இருத்திக் கொள்ள மாட்டாது விடை கொடுத்து விடுத்தார்` என இப்பாசுர வரலாற்றினைக் கழறிற்றறிவார் புராணத்துள் பன்னிரண்டு பாடல்களால் விரித்துரைத்தார். `சேரமான் பெருமாள் நாயனார்` சுந்தரர்க்குத் தோழர் என்பது நன்கறியப்பட்டது. இத்திருமுகப் பாசுரத்தில் சேரலனைப் ``பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்கு - ஒருமையின் உரிமையின் உதவுபவன்` என அவனது கொடையை ஆலவாய்ப் பெருமான் சிறப்பித்தருளினமை காணப்படுகின்றது. பெருமான் அருளியவாறே பாண பத்திரர்க்குச் சேரர்பிரான் மிகப் பெரும் பொருள் வழங்கியதைச் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். பெருமான் திருமுகம் விடுக்கும் அளவிற்குத் திருவருள் பெற்று விளங்கிய சேரன் எவனும் சேரமான் பெருமாள் நாயனாருக்கு முன் இருந்ததாகத் தெரியவில்லை. இதன்படி சேரமான் பெருமான் திரு ஆலவாய் உடையார் வேண்டுதலுக்கிணங்க பொருள் வழங்கி ஆலவாய் சுந்தரரின் அன்பிற்கு பாத்தியமான வரலாறு சேக்கிழார் பெருமான் மூலம் தெளிவாகிறது, திருச்சிற்றம்பலம் தென்னாடுைடயே சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி ேமலும் ஆன்மீக தகவலுக்கு http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக