புதன், 24 செப்டம்பர், 2014

சித்தர்கள் வாழு்ம் அருள்மிகு சதுரகிரி மலையில் நவராத்திரி கொலு திருவிழா


சித்தர்கள் வாழு்ம் அருள்மிகு சதுரகிரி மலையில் நவராத்திரி கொலு திருவிழா திருக்கோவிலும் சொற்கோவிலும் / தோத்திரமும் இறைவரும் திருக்கோவிலில் எழுந்தருளி மனிதர்களுக்கு அருள் பாலித்து வரும் இறைவர் மேலும் எளிவந்த பிரானாக சொற்கோவில்களையும் தமது இருப்பிடமாக கொண்டு உள்ளார், அந்த சொற்கோவில்கள் தான் பன்னிரு தமிழ் வேதங்களாகும், தனது தோத்திரப்பாடல் களால் இறைவரைக் கவர்ந்து அவர்களின் திருவடியினைப் பெற்று இனி பிறவா நிைல பெற்ற நால்வர்களில் திருநாவுக்கரசர் அவர்கள் தனது தோத்திரப்பாடலில் சாலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடு இசை பாட மறந்தறியேன் என்று இறைவறை வழிபாடு செய்யும் போது பண்ணோடு இசை பாடுவதன் கருத்தினை தோத்திரப் பாடல் வரிகளில் வலியுறுத்தியுள்ளார் , இதுபோல சம்பந்தரும் மறைகலந்த ஒலி பாடலோடும் என்றும் தோத்திரமும் சாஸ்திரமுமாக இருந்தார்தாமே என்றும் சொல்லும் பொருளுமாய் ஆனார் தாமே திருவரங்கப் பெருமான் திருவரங்கத்தில் சம்பந்தரின் கூற்றை அறியாலம், அதுபோல தில்ைல சிற்றம்பலத்தில் மணிவாசகர் திருவாக்கிலிருந்து வந்த பாடல்கள் யாவும் தில்லை சிதம்பரனாரின் கூற்றாகவும் அவரே எழுதியதாகவும் காணலாம், தோத்திரங்களை பண்ணோடு இசைத்து பாடி இறைவரின் அன்புக்கு ஆளாகினர், பண்ணார் இன் தமிழாய் பரமாய பரஞ்சுடர் என்கிறார் சுந்தரர் பண்ணும் பதம் ஏழும் பலவோசைத் தமிழ் அவையும் ............... ................ விண்ணும் முழுதானான் இடம் வீழிம்மிழலையே என்கிறார் சம்பந்தர் பண்ணிறைந்த பாடல்களாய் இறைவர் விளங்கின்றனர் சமயச் செல்வர்கள் நால்வர். திருமுறைகள் யாவும் பண் அமைந்த பாடல்களாகும். பண் என்பது இசைமரபாகும். மொத்தம் 103 பண்கள் இருந்ததாக கூறப்படுகின்றன. பண் என்பது பாவோடு அணைதல் என்பர். பண்ணுதல் என்னும் வினையடியாக பிறந்தது பண். இறைவரோடு ஆன்மாக்களை ஒன்று சேர்ப்பது ஒன்று பண்ணுவது அல்லது ஒன்றச் செய்யும் திறம் வாய்ந்தது பண் .தமிழ்வேதப்பாடல்கள் யாவும் நம்மை சிவபொருமானாருடன் இணைக்கும் பாலம் என்பதை உணர்ந்து ஓதி நலம் பெறுவோம். திருச் சிற்றம்பலம் நன்றி தமிழ் வேதம் http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக