மதுரை கூன் பாண்டியனின் வெப்பு நோய் நீக்கியது
ஞானசம்பந்தனின் திருநீற்றுப்பதிகம்
தென்னாடுடைய சிவனே போற்றி என்று பதினென் திருமுறையில் போற்றி புகழப்படும் தென்பாண்டி நாட்டில் சைவ சமயம் வலிவிழந்து சமண சமயம் பரவி சமணர்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடிய நேரத்தில் பாண்டிய மன்னாக இருந்த கூன்பாண்டியன் சமண சமயத்தை தழுவிஇருந்த காரணத்தால் சமணர்களின் ஆதிக்கம் தழைத்தோங்கி நின்றதோடு, திருநீறு பூசிய சைவ சமயத்தை சார்ந்தவர்களைக் கண்டால் சமணர்கள் கண்டுமுட்டி என தீண்டத்தாகாதவர்களாக அவமரியாதை செய்து வந்தனர், அந்நிலையில் பாண்டிய மன்னனின் பட்டத்தரசி மங்கையர்கரசியாரும், அமைச்சராகிய குலச்சிறையாரும் சைவ நெறியில் நின்றார்கள், அத்தருணத்தில் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் திருமறைக்காட்டில் தங்கி இருந்தனர், அப்போது பாண்டியனின் பட்டத்தரசியும் அமைச்சரும் சமணர்களின் ஆதிக்கத்தை பொறுக்க முடியாமல் சைவ சமயத்தை தழைத்திட செய்ய தம் பணியாட்களை அவர்களின் பால் அனுப்பி பாண்டிய நாட்டிற்கு அழைத்து வரும்படி செய்தார்கள், அப்போது அப்பர் பெருமானும் ஞானசம்பந்தரிடம் பாண்டியநாட்டில் சைவம் மறைந்து தீவிர வாத சமணம் ஓங்கி வளர்ந்துள்ள நிலையில் சமணர்கள் எதையும் செய்வார்கள் எனவே நாளும் கோளும் அறிந்து சென்று சைவத்தை நிலைநிறுத்த வேண்டினார், அப்போது நாள் என்செய்யும் கோள் என்செய்யும் நமச்சிவாய என்பதற்கு என கூறி கோளாறு பதிகம் பாடி பணியாட்களிடம் மதுரையில் சைவத்தின் நிலையினையும் அறிந்த பின் பாண்டிய நாட்டு பணியாளர்களுடன் பாண்டியநாட்டு மதுரை சென்றார்,மங்கையர்கரசியாரும் குலச்சிறையாரும் மதுரை சொக்கநாதர் ஆலகயத்தில் சம்பந்தரின் வருகைக்காக காத்து இருந்தனர், ஞானசம்பந்தர் வருகைகண்டு இருவரும் கண்களில் நீர்பொழிய சம்பந்தரின் காலில் விழுந்து வணங்கினர் , பின் அவர்கள் இருவரையும் திருமடத்தில் தங்க வைத்தனர், இதை அறிந்த சமணர்கள் மன்னனிடம் ஒடோடி வந்து " மதுரைக்கு அந்தன சிறுவன் ஒருவன் சிவஞானம் பெற்றவனாம் அவன் சமண சமயத்தை அவதூறு செய்யும் நோக்கில் எங்களை வாதில் வெல்ல வந்துள்ளானாம் ' என வாய்க்கு வந்ததையெல்லாம் மன்னனிடம் கூறினார்கள், இதைக் கேட்ட மன்னன் மனம் கொதித்தது. அவனை வேரிலே கிள்ளியேறிய யாதாவது செய்யுங்கள் என சமண மதத்துறவிகளிடம் கூறினார், உடனே சமணர்கள் தங்கள் மந்திரத்தால் சம்பந்தர் தங்கிய மடம் தீ பிடிக்குமாறு மந்திரம் செபித்தனர், ஆனால் ஆதி மந்திரம் ஐந்தெழுத்து ஓதுவார் பார்க்கும் திசையில் கூட மற்ற மந்திரங்கள் வலிமை நிற்காதல்லவா? சமணர்களின் மந்திரம் பலிக்கமாற் போயிற்று, அடியார்கள் பலர் உறங்கிக் கொண்டிருந்த சமயத்தில் இரவோடு இரவாக அம்மடத்திற்கு ஆட்களைக் கொண்டு தீயிட்டார்கள், அப்பாதர்களின் செயலை அறிந்தார் சம்பந்தர், ஆ என்ன கொடுமை எனப்பதறினார், உடனே திரு ஆலவாய் மேவிய ஐயனை எண்ணித் துதித்தார், பைந்தமிழ் பதிகம் பாடினார்.
"செய்யனே திரு ஆலவாய் மேவிய
ஐயனே அஞ்சலென்றருள் செய்யெனைப்
பொய்ய ராம் அமணர் கொளுவுஞ்சுடர்
பையவே சென்று பாண்டியற்காகவே - த, வேதம் 3
இதற்கெல்லாம் காரணம் பாண்டிய மன்னன் தான் என உணர்ந்தார் சமணர்கள் இட்ட தீ பையவே சென்று பாணடியற்காக என பாடிய உடனே பாண்டியனை வெப்பு நோய் பற்றியது, வெப்பு நோய்யால் மன்னன் உடல் கருகியது, அனல் பெருகியது, அருகில் எவரும் நெருங்க முடியவில்ைல், என்ன மருந்தும் பயனில்லை, சமணர்கள் மயிற் தொகையால் தடவியும் மந்திரங்கள் பல கூறியும் அரசரின் வெப்பு நோயினை குறைக்க முயற்சித்தார்கள் ஆனாலும் பயனின்றி வெப்பு நோய் கூடியது, நடந்த செய்தியெல்லாம் அறிந்து மிகவும் வேதனைப்பட்டார்கள் அரசியும் மந்திரியாரும், வேந்தனுக்கு வெப்பு நோய் வந்ததை கேட்டனர் பரிதவித்தனர், செய்வதறியாது திகைத்து மன்னனிடம் ஞான சம்பந்தரின் வரவும் அவரின் பெருமையினையும் பக்குவமாக எடுத்துரைத்தனர், அச்செய்தியை கேட்ட மாத்திரத்தில் மன்னனின் வெப்பு நோயின் தாக்கம் குறையும் தன்மையினை மன்னன் உணர்ந்தான்,
எனது வெப்பு நோயை நீக்குபவர் யாரோ அவர் பக்கம் சேர்வேன் என மன்னன் முடிவு செய்தான், அமைச்சரும் அரசியாரும் திருஞானசம்பந்தரிடம் சென்று விழுந்து வணங்கி " பெருமானே சமணர்கள் செய்த தீமை வெப்பு நோயாக மன்னனை பற்றிக் கொண்டது சமணர்களால் அந்நோயை தீர்க்க முடியவில்லை, தேவரீர் உடற் பிணியை அகற்றியருளல் வேண்டும் என கண்ணீர் மல்க விண்ணப்பம் செய்து மன்னனிடம் அழைத்து வந்தார்கள், மன்னரின் எதிரே இருந்த மணிப்பீடத்தில் அமர்ந்தார் சம்பந்தர், சிவஞானச் செல்வரின் பார்வை பட்ட மாத்திரத்தில் வெப்பு நோய் தீவிரம் அடங்கியது, மன்னரின் இடபக்கத்தில் உள்ள நோயை சமணர்களும் வலது பாகத்தில் உள்ள நோயை சம்பந்தரும் நீக்குவது என முடிவு செய்தார்கள், சமணர்கள் தமது மந்திரத்தை சொல்லி மயிற்பீலியால் தடவினார்கள், வெப்பு நோய் மேன்மேலும் வளர்ந்தது,
சம்பந்தர் " மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரம் ஆவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செநதூர் வாய் உமை பங்கன் திருஆலவாயான் திருநீறே" எனும் பதிகம் பாடி திருநீற்றை மன்னின் வலப்பக்கத்தில் பூசினார் வெப்பு நோய் இருந்த இடம்தெரியாமல் நீங்கிற்று, இடப்புறத்தில் மேலும் அதிகமாயிற்று, மன்னனின் வேண்டு கோளின்படி இடப்பக்கத்திலும் திருநீற்றைப் பூசினார், மன்னன் உய்ந்தான், சமணர்கள் வெட்கி தலைகுனிந்தார்கள், கண்டுமுட்டி எனக்கூறும் சமணர்கள் திருநீற்றைக்கண்டதும் ஓடி ஒதுங்கினர்,மன்னரும், மங்கையர்கரசியாரும், அமைச்சரும் மனம் மகிழ்நதனர், பாண்டியநாட்டில் சமயம் தழைக்க இவ்வாறு நீர்விட்டு சமயம் தழைக்க செய்தனர்,
தென்னாடுடைய சிவனே போற்றி!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.