செவ்வாய், 30 டிசம்பர், 2014

தமிழ் வேதங்களில் தனிமனித ஒழுக்கம்


தமிழ் வேதங்களில் தனிமனித ஒழுக்கம் "கூறுமின் ஈசனைச் செய்மின் குற்றேவல் குளிர்மின் கண்கள் தேறுமின் சித்தம் தெளிமின் சிவனைச் செறுமின் செற்றம் ஆறுமின் வேட்கை அறுமின் அவலம் இவை நெறியா ஏறுமின் வானத்து இருமின் விருந்தாய் இமையவர்க்கே, --- பொன் வண்ணத்து அந்தாதி (தமிழ் வேதம் 11 ) தனிமனிதர்களின் தொகுப்பு அல்லது கூட்டம் தான் சமுதாயம் என்பது. வானுலகில் இன்புற்றிருப்பதற்கு உரிய வழி பொருளற்ற சடங்குகளும் சம்பிரதாயங்களும் இப்பாடலில் சொல்லப்படவில்லை என்பதை நாம் தெளிவாக கொள்ள வேண்டும் சேரமான் பெருமாள் நாயனார் உடலுடன் கயிலையை அடைந்தவர். அவர் சொல்வதைத்தான் நாம் கொள்ள வேண்டும். அமெரிக்கா சென்றவர் சொல்லும் வழியைத்தான் அமெரிக்கா செல்ல இருப்பவர் கேட்க வேண்டும்.சமயக் கொள்கைகளை தங்களின் சுயலாபத்திற்காக வளைத்துக் கொண்டவர்களின் சொற்களை கேட்டு ஏமாந்து போகிறவர்கள் அப்பாவிகள். வளர்ந்த நாடுகளைவிட தமிழர்கள் ஆதிகாலம் தொட்டே உயர்ந்த பண்பாட்டுடனும், தனி மனித ஒழுக்கத்தை இறைவழிபாட்டுடன் இணைத்துக் கூறினார்கள் வாழ்ந்தும் காட்டினார்கள். காரணம் இறைவழிபாட்டினை மனித வாழ்விலிருந்து பிரித்து விடமுடியாது, இறையுணர்வு இல்லையானால் மனிதன் மிருகமாக வாழநேரிடும் என்பதை நன்கு உணர்ந்தவர்கள் நமது சிவஞானியர்கள். எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சேரமான் பெருமான் நாயனார் தமிழகத்தில் மூவேந்தர்களில் சேரர் குடியில் தோன்றி சிவ வழிபாடு செய்து வந்தவர், இவருடைய சிவபூசையின் முடிவில் நடராசப் பெருமான் சிலம்பொலி கேட்கச் செய்தார். ஆழ்ந்த இறைபக்தியுடைய இப்பெருமானார் அருளியுள்ள இப்பாடலில் பொதிந்துள்ள தனி மனித ஒழுக்க கோட்பாடுகளைக்காண்போம். 1,கூறுமின் ஈசனை: முழுமதற் பொருளாய் விளங்கும் சிவபெருமானாரைத் துதியுங்கள் பிற்ப்பும்,இறப்பும் இல்லா பெருந்தெய்வம் ஆகும். மற்றவையெல்லாம் சிறுதெய்வங்கள் எனப்படும், சிறு தெய்வங்கள் யாவும் பிறக்கும் இறக்கும் வேதனைப்படும் மேல்வினையும் செய்யும், ஒரு நாட்டிற்கு பிரதம மந்திர் இருப்பது போல அகில உலகங்களுக்கு எல்லாம் ஒரே கடவுள் தான். இரண்டு இல்லை, அந்த பிறப்பு இறப்பு இல்லாதவர் அவரே சிவம் என்கிறார், சிறுதெய்வ வழிபாடு மக்களிடையே பரவுமானால் உயர்ந்த பண்பாடு போய்விடும், சிறுதெய்வ வழிபாட்டால் உயிர்பலி இடுதல் போன்ற பண்பாடற்ற தலைதூக்கும் அதனாலேயே ஆரம்பத்திலேயே பெருந்தெய்வ வழிபாட்டைக் கூறியுள்ளார். 2, செய்மின் குற்றேவல்: சிறு சிறு தொண்டுகளைச் செய்யச் சொல்கிறார். சிவாலயத்தை தூய்மை செய்தல், மலர் எடுத்தல் வலம் வருதல் போன்ற சிறுசிறு தொண்டுகள் செய்வதால் மனத்தில் அன்பு வளரும் தன்னலம் குறையும் ஆணவம் மறையும். 3, குளிர்மின் கண்கள்: இறைவருடைய திருஉருவத்தைக் கண்டு கண்கள் குளிர வேண்டும் இதனால் நம்மிடம் உள்ள மிருகப் பண்பு குறையும் மனித நேயம் பெருகும். 4,தேறுமின் சித்தம்: மனத்தை ஒரு நிலையில் நிறுத்துங்கள் என்பதை கவனிக்க வேண்டும் நாம். மனம் போகும் போக்கில் அலையவிடக் கூடாது, மனம் தான்மனிதனுடைய எல்லா செயல்களுக்கும் காரணம். அதை நம்கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்கிறார், 5, தெளிமின் சிவனை: முழுமுதற் பொருள் எது என்பதில் ஒரு தெளிவு வேண்டும், பிறப்பும்இறப்பும் இல்லாதவரும் காலத்தை கடந்து நிற்பவரும் சிவபெருமானார்ஒருவரே என்பதில் தெளிவு வேண்டும். " சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவனோடுஒப்பார் இங்கு யாவரும் இல்லை -- திருமூலர் " அயனும் புடையும் எம் ஆதியை நோக்கில் இயலும் பெருந்தெய்வம் யாதும் ஒன்றில்லை - திருமூலர் இந்த தெளிவு இல்லாத பாமர மக்கள் சிறுதெய்வ வழிபாட்டில் சிக்கித் தவிப்பதை போலி வேடதாரிகளை நம்பி மோசம் போவதையும் இன்றை சூழ்நிலை. பெருந்தெய்வமான சிவபெருமானாரால் முடியாத ஒரு செயலை சிறுதெய்வங்கள் செய்து விட முடியாது என்னும் தெளிவு நமக்கு வேண்டும். 6, செறுமின் செற்றம்: பகைமை உணர்வை நீக்க வேண்டும். பகைமை உணர்வுதான் இன்றைய காலத்தில் எல்லா கொடுமைகளுக்கும் காரணம் என்பதை நாம் அறிவோம். மனித இனம் மாதவ நிலையை அடைவதற்கு பெரும் தடையாக இருப்பது பகைமை உணர்வுதான். கணவன் மனைவியிடையே பிரிவு உற்றார் உறவினரிடையே சண்டை, சமுதாயத்தில் சண்டை மாநிலங்களுக்கிடையே சண்டை, மதவாதிகளிடையே சண்டை நாடுகளுக்கிடையே கடும் போர் ஆகிய யாவற்றிக்கும் காரணம் பகைமை உணர்வுதான்.ஆக சாதி,மதம்,மொழி, இனம் நாடு ஆகியவற்றால் மனித இனம் வேறபட காரணம் பகைமை உணர்வே. 7, ஆறுமின் வேட்கை : ஆசையை அடக்குங்கள் என்கிறார் நாயனார் ஆசையுடையவன் விலங்கு அன்புடையவன் மனிதன் அருள் உடையவன் தேவன் உரியது அல்லாதவற்றை விரும்புவது தான்மட்டும நலமாக வாழ வேண்டும் என எண்ணுவது ஆசையாகும், ஆசை வளர வளர மனித மனம் மிருகத்தன்மை அடையும் ஆசை மிகும் பொழுது நல்லது தீயது என்பதே தெரியாமல் போய்விடும். "ஈசனோடாயினும் ஆசையை அறுமின் - திருமூலர் ,,10 இவ்வுலக ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக இறைவழிபாடு கூடாது என்கிறார் திருமூலர் பிறர் கெட்டாலும் தான் வாழ வேண்டும் என்னும் குறுகிய நோக்கம் தான் ஆசை எனப்படுகிறது, இதனால் சமுதாயச் சீரழிவே ஏற்படும் ,இத்தகைய ஆசையை ஒழிக்க வேண்டும், 8, அறுமின் அவலம்: துன்பத்திலிருந்து நீங்க வேண்டும், துன்பத்தில் முழ்கிவிடக் கூடாது, இன்பமும் துன்பமும் பாலத்தின் கீழே ஓடும் நீர்போல் விரைவில் நீங்குவிடும். துன்படுவதால் உடலில் நோய் பெருகும் வாழ்நாள் குறையும். "இறைமை " என்ற பேரின்ப வெள்ளத்திலிருந்து பிரிந்து வந்த ஒருதுளிதான் நாம், நமக்கு உள்ளும் புறமும் வள்ளலாய் இறைவர் விளங்குகின்றார், விரைவில் நலம் பெறுவோம் என்று உறுதியாக நம்பினால் துன்பத்திலிருந்து விடுபடுவது எளிதே ஆகும். இதுபோன்ற கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு மட்டுமா பொருந்தும்? உலகில் உள்ள எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்தும்தானே. இத்தகைய கருத்துக்கள் சாதி, சமயம், இனம் மொழி நாடு ஆகியவற்றைக் கடந்ததல்லவா. திருமுறைகளின் உயர்வை உணர்வதற்கு நம் அறிவு போதாது எனலாம். திருச்சிற்றம் தென்னாடுடைய சிவனே போற்றி நன்றி : தமிழ் வேதம் மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக