ஈசனை பேசா நாள் எல்லாம் பிறவா நாளே
பெறுதற்கரிய பிறப்பு மானிடப்பிறப்பு, அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது, அவ்வாறு பிறந்தாலும், கூன், செவிடு, குருடு அற்று பிறப்பது அரிது, என்பது அவ்வையின் திருவாக்கு. இப்படி பெறுதற்கரிய மானிடப் பிறப்பை பிறந்து விட்டால் அப்பிறப்பில் செய்யத பாவ கர்ம வினைகளையும், முற்பிறப்பில் பெற்ற பாவ கர்மங்களையும், இப்பிறப்பு புண்ணியத்தால் ஈசனை நினைந்து, தொழுது, புகழ்பரப்பி நம்பாவ கர்ம வினைகளை குறைத்துக் கொள்ள வேண்டும், வள்ளல் பெருமானும் ஈசனை " அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிய வேண்டும், எப்போதும் எங்கு சென்றாலும், எவ்வேளையிலும், உன்னை மறவாமலும், உனது புகழை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமென இறைவனிடம் வேண்டினார், இதன் நிமித்தமாக பட்டிணத்து அடிகளார் ஈசனை - நமச்சிவய மந்திரத்தை - நினையாமலும், கற்காமலும் சொல்லாமலும் இப்பிறப்பில் இருந்ததை மன்னித்து அருள கச்சியப்ப ஏகாம்பர நாதனை வேண்டும் பாடல்
" கல்லாப்பிழையும், கருதாப்பிழையும், கசிந்துருகி
நில்லாப்பிழையும் நினையாப்பிழையும் நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப்பிழையும் துதியாப்பிழையும் தொழாப்பிழையும்
எல்லாப்பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி யேகம்பனே."
ஈசனுடைய திருநாமமாகிய நமசிவாய என்ற அஞ்செழுத்தை கல்லாததும், கருதாததும் கசிந்துருகாமலும் நினையாமலும், அனுதினமும் இமைப்பொழுதும் சொல்லாததும், துதியாததும், தொழாததும் ஆகிய எல்லாப்பிழைகளையும் பொறுத்தருள வேண்டுக்கூறுகிறார், எனவே இறைவனுடைய திருநாமத்தை எப்போதும் சொல்லாமல்இருப்பது பிழையாகும் , அப்படி பிழைகள் செய்து நம் கர்ம வினைகள் இப்பிறவியிலும் மேலும் மேலும் சேர்ப்பது பிறப்பின் பயனை ஏய்த முடியாது, நம் பாவ வினைகள் கழியாது, இப்பிறப்பிலும் முற்பிறப்பிலும் நம் பாவ கர்மங்களை களைய ஈசனை திருஐந்தெழுத்து மந்திரமான நமச்சிவ மந்திரத்தை இமைப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருந்தால் நம் கர்ம வினைகள் அதற்கொப்ப களையப்படும், இவ்வாறு இல்லை யெனில் அரிதற்கரிய இம்மானிட பிறப்பை பிறந்தும் பிறவா நிலையைத்தான் நாம் பெற்றதாவோம் என்று அப்பர் பெருமானார், 6ம் திருமுறையில் தில்லையம்பலனை வேண்டி பாடிய திருத்தாண்டப்பதிகம் பாடலில்
"கற்றானைக் கங்கை வார்சடையான் தன்னைக்
காவிரி சூழ் வலஞ்சுழியும் கருதினானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய்வானை
ஆருரும் புகுவானை அறிந்தோம் அன்றே
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதனை
வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தப்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாள் எல்லாம் பிறவவா நாளே.
எல்லாம் வல்லவன் கங்கையை கொண்டவன், நீண்ட சடையை உடையவன், காவிரியால் சூழப்பட்ட திருவலஞ்சூழி என்ற திருத்தலத்தை உகந்தருளி இருப்பவன், பொருள் அற்றவருக்கும், அலந்தாருக்கும் அருள்பவன், தனக்கு உவமை இல்லாதவன், தேவர்களால் வணங்கி போற்றப்படுபவன், திருவாரூரில் உகந்து தங்கி யிருப்பவன் ஆகிய எம் பெருமானை எல்லோருக்கும் மேலானவன் என்று தெரிந்தும், அப்பேர்பட்ட எம்பிரானை - ஈசனை - அவன் நாமமாகிய நமச்சிவ எனும் மந்திரத்தை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே,
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக