திருமுறை தேவாரப்பாடல் கூறும் சுகப் பிரசவம்
பெண்கள் பிள்ளை பேறு காலங்களில் சுகப் பிரசவம் அடையும் பொருட்டும், பிள்ளைப்பேறு பெறு அடையும் பொருட்டும் ஞானசம்பந்தர் தேவாரப்பாடல்களில் இதற்காகவே சில பதியங்கள் முக்கிய திருத்தலங்களில் பாடியுள்ளார், கருவுற்ற தாய் மார்களின் கருவேலைப்பளுவினாலோ, பயத்தினாலோ, விதி வசத்தினாலோ, கலையாமல் பாதுகாத்துத் தரும் அற்புதப்பதியங்களில் ஒன்று திருக்காவூரில் எழுந்தருளியுள்ள கர்ப்பபுரீஸ்வரர் உடனுறை கருக்காத்த நாயகி ஐ வேண்டி பாடியுள்ள இப்பதிக பாடல்களை கருவூற்ற பெண்கள் பாராயணம் செய்து அனுதினமும் பாடி பூசித்து வந்தால் சுகப்பிரசவம் அடைவார்கள் என்பது தொன்று தொட்டு நம்பப்படும் தெய்வ நம்பிக்கை.
"முத்திலங்கு முறுவல் உமை அஞ்சவவே
மத்த யானை மறுகவ்வுரி வாங்கியக்
கத்தை போர்த்த கடவுள் கருவாவூர் எம்
அத்தர் வண்ணம்அழலும் அழல் வண்ணமே."
முத்துப் போன்ற புன்னகை உடைய உமாதேவியார்அஞ்சும்படியான யானையின் தோலினை ஆடையாக அணிந்துள்ள திருக்காவூரில் எழுந்தருளியுள்ள ஈசனார், நெருப்பை ஒத்த செஞ்சனல் கொண்ட சென்னிறம் கொண்டவர் ஆவார்,
"வெந்த நீறு மெய் பூசிய வேதியன்
சிந்தை நின்றருள் நல்கிய செல்வத்தன்
கந்த மெளவல் கமழுங் கருகாவூர் எம்
எந்தை வண்ணம் எரியும் எரி வண்ணமே."
திருநீறு மெய் முழுவதும் பூசியுள்ள வேதியன் என் ஈசன், சிந்தையில் இருத்தி நினைக்கின்றவர்களின் மனத்தில் நின்று அவர்கள் விரும்பும் செல்வத்தை அருள்புரிபவன், நறுமணம் கமழும் முல்லை மலர்கள் பூத்திருக்கும் திருக்காவூரில் எழுந்தருளியிருக்கும் என் தந்தையான ஈசன், எரிகின்ற செந்தணலின் செந்தீயின் நிறத்தை கொண்டவன்,
மேலும் மற்றும் திருத்தலமான சிற்றேமம் என்னும் சிவத்தலத்தில் பாடியுள்ள பதிகப்பாடல்கள் மூலமும் சுகப்பிரசவமும் பிள்ளைப்பேறும் கிடைக்கும் என்பதை அங்கு நடந்த வரலாற்று கதை வழியாகவும் நம்பப்படுகிறது.
இத்தலம் திருஞானசம்பந்த சுவாமிகளால் பாடல் பெற்றதலமாகும, சிற்றேமம் என்ற தலத்தில் வாழ்ந்த வணிகர் பொருளீட்டும் பொருட்டு வேறு நாடு சென்றார் , அச்சமயம் அவர் மனைவி கருவுற்றிருந்தாள், அப்பெண் சிவத்தொண்டு செய்து வாழ்ந்து வந்தாள், கணவன் வருவதற்குக் காலம் கடந்தமையால் வாழ்க்கை நடத்த இவளல் இயலவில்லை, இறைவனிடம் மனம் ஒன்றி வழிபட்டு முறையிட்டாள், நாள்தோறும் ஒரு பொற்காசு வைத்துஉதவினார் இத்தலத்து ஈசன், ஆதலால் இவருக்கு பொன்வைத்த நாதர் எனப் போற்றப்படுகிறார், இறைவி அகிலாண்ட ஈசுவரியம்மன்,
பிள்ளைப் பேற்றுக்காலம் வந்ததும் இறைவருடைய ஆணைப்படி இறைவி, அகிலாண்டேசுவரியே தாயாக வந்து உதவி செய்தாள் என்பது அத்திருத்தலத்தின் வரலாறு. இத்தலத்து பதிகத்தை கருவுற்ற தாய்மார்கள் அன்றாடம் படித்து வந்தால், இறையருளால் பிள்ளைப்பேறு இனிதே எளிதாக நடைபெறும் என்பது தின்னம்.
" நிறைவெண்திங்கள் வாள்முக மாதர் பாட நீள்சடைக்
குறைவெண்திங்கள் சூடியோர் ஆடல்மேய கொள்கையான்
சிறைவண்டுயாழ்செய் பைம்பொழிற் பழனம்சூழ் சிற்றேமத்தான்
இறைவன் என்றே உலகெலாம் ஏத்தநின்ற பெருமானே,"
முழுநிலவு போன்ற ஒளி பொருந்திய முகமுடைய உமாதேவியார் இசைபாட சடை முடியில் பிறைச் சந்திரனை அணிந்து நடனம் ஆடும் இயல்புடையவராய், சிறகுகளையுடைய வண்டுகள் யாழ் போன்ற ஒலிக்கும் பசுமையான சோலைகளும் வயல்களும் சூழ்ந்த சிற்றேமத்தில் வீற்றிருக்கும் இறைவர், உலகெலாம் ஏத்திப்போற்றுகின்றசிவபெருமானார் ஆவாரே,
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக