திங்கள், 4 மே, 2015


நமக்கு கடவுள் வேண்டுமா? ஒவ்வொரு நாளும் நாம் இந்த கேள்வியை கேட்போம்.. " நமக்கு கடவுள் வேணடுமா?" நாம் சமயத்தைப் பற்றி பேசும் பொழுது நாம் உயர்ந்த நிலையை எடுத்துக் கொண்டு மற்றவர்களுக்கு போதிக்கும் போது , நாம் இந்த கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டும், பல தடவைகளில் எனக்கு கடவுள் வேண்டாம், என்று காண்கிறோம், எனக்கு உணவு வேண்டும், மிமிகப் பசியாய் இருக்கும் போது ஒரு சிறு ரொட்டி துண்டாவது இல்லையெனில் பைத்தியம் பிடித்தவன் போல் ஆகிவிடுகிறோம், சற்று தொடர்ச்சியாக டீ, காபி குடித்தவர்கள், அந்தந்த நேரத்தில் அதனை அருந்தாவிடில் எதனையே பங்கரமாக இழந்து விட்டதாக உணர்கிறோம், தங்க, வைர நகை கிடைக்கவில்லை எனில் பணக்காரப் பெண்மணிகள் பைத்தியம் ஆகிவிடுகிறார்கள். ஆனால் கடவுளுக்காக அதே கவலையை அவர்கள் யாரும் காட்டுவதில்லை. பிரபஞ்சத்தில் உள்ள ஒரே உண்மைப் பொருள் அதுதான் என்று அவர்களுக்கு தெரிவதில்லை. இதற்கு உதாரணமாக ஒரு மூதுரை உண்டு, " நான் வேடனானால் காண்டாமிருகத்தை வேட்டையாடுவேன், நாள் கொள்ளைக்காரன் ஆகிவிட்டால் அரசனின் பொக்கிசத்தையே கொள்ளையிடுவேன், " " பிச்சைக்காரனை கொள்ளை யடிப்பதிலோ, எறும்பை வேட்டையாடுவதிலோ, என்ன பயன்? ஆகவே அன்பு செலுத்த வேண்டுமானால் கடவுளிடம் அன்பு செலுத்துங்கள், எதிலும் உச்சம் பெற உணர்வு உள்ளுங்கள், உயர்வு தானே வரும், எறும்பையும் பிச்சக்காரனிடத்திலும் என்ன கிடைக்கும் எனவே உள்ளவதெல்லாம் உயர்உள்ளல் என்ற முதுமொழி உணர்த்தும். குறிக்கோளை ( கடவுளை )அடையும் வழி, (Our Aim) ஒவ்வொரு அறிவியலையும் கற்பதற்கு முறைகள் இருப்பன போன்று ஒவ்வொரு சமயமும் அதற்கான வழிவகைகளை வகுத்துள்ளன. சமயத்தின் குறிக்கோளை அடைவதற்கான மார்க்கங்களை நாம் யோகம் என்கிறோம், நாம் கூறுகின்ற பலவகை யோகங்கள் மனிதர்களின் இயல்புக்கும், குணத்திற்கும் ஏற்றபடி வெவ்வேறாக உள்ளன. இந்த மார்க்கங்களை நான்கு வகையாக பிரிக்கலாம். 1, கர்ம யோகம் செயல்களினாலும், கடமைகளை செய்வதாலும், ஒருவர் தனது தெய்வத் தன்மையை உணரும் மார்க்கம் இது 2. பக்தி யோகம் வழிபாட்டையும் பக்தியையும், ஒரு இஷ்ட தெய்வத்தினிடத்தில் அல்லது சித்தர்களிடம் செலுத்தித் தெய்வத் தெய்வத்தன்மை பெறுதல். 3. இராஜயோகம் மனத்தை அடக்கி ஆள்வதால் தெய்வத்தன்மை அடைதல் 4. ஞான யோகம் அறிவினால் (அல்லது சித்தத்தினால்) தெய்வத்தன்மையை உணர்ந்து முக்தி பெறுதல். இவை ஒரே குறிக்கோளான கடவுளை அடைய செய்யும் வெவ்வோறு பாதைகள். திருச்சிற்றம்பலம் - ஒம் நமசிவாயம் மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக