சனி, 2 மே, 2015


காய கல்பம் சாப்பிட்ட சித்தர்கள் வேதங்களால் அறிய்ப்பட வேண்டியவன் நானே வேதத்தை செய்தவனும் வேதத்தை உணர்ந்தவனும் நானே , எனக்கு புண்ணியமும் இல்லை, பாவமும் இ்ல்லை, பிறவியும் இ்ல்லை, என்று வேத்ங்களே இறைவன் மூலம் அசரீரியாக கூறியதாக அறிகிறோம். ரிக் வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்ற நான்கு வேதங்கள் இறைவனை அடையும் மார்க்கமாக கருதப்படுகின்றன. இந்த வேதங்களை அறிந்து கொண்டவர்கள் சித்தர்கள். உலகம் தோன்றுவதற்கு முன் அரூபமாக ஜோதி வடிவத்தில் இறைவன் இருந்தான், உலகை படைக்க அந்த ஒளி வட்டத்துக்குள் பிரகாசித்த சக்தி என்ற ஒளிச்சுடரே சிவலிஙக ரூபம், அந்த சிவலிங்க ஜோதியே மனித உடலில் உயிராக இருந்து இயங்குகிறது என்ற உண்மையை கண்டறிந்து உலகுக்கு அறிவித்த சித்தர்கள், இறைவன் ஒருவனே என்ற கோட்பாட்டில்தான் வாழ்ந்தார்கள். வேதங்களை வேதாந்தம் என்று கூறுகிறோம், வேதாந்தத்தை ஆதாரமாக கொண்டு தவம் செய்து இறைவனைத் தரிசித்து, தமது சரீரத்தை கட்டுப்படுத்தி பிற்ப்பை அறுத்து பேரின்ப நிலை அடைந்த சித்தர்கள் கூறிய உபதேசமே சித்தாந்தம். காயகல்ங்களைச் சாப்பிட்டு, மூலிகைத் தைலங்களை உடல் முழுவதும் பூசிக் கொண்டால் பிறப்பும், இறப்பும் இல்லாத நிலை ஏற்படும். உடலின் நிறம் நீலமாக மாறிவிடும், சுவாசம், முன்னும் பின்னும் ஓடாமல் நிலைத்து விடும், நரை, திரை, மூப்பு பிணியனைத்தும் மறைந்து விடும். துர்க்குணம் எல்லாம் நற்குணங்களாகும், இந்த மனித உடலோடு பல யுகங்கள் மரணமில்லாது வாழ முடியும், சுழுமுனை சுவாசத்தை நம்பியவர்கள் சூரிய்க் கலையை விடாதிருந்தோர், பிரம்ம நிலையை கண்டோர் ஒருக்காலும் மரணமடைய மாட்டார்கள். என்று கூறினார் சித்தர் அகத்திய மகான். காயகல்பம் என்றால் என்ன? காயம் என்றால் உடல், கல்பம் என்றால் ஆயுளை நீடிக்க செய்யும் மூலிகை மருந்து. இதைக் கண்டுபிடித்துச் சாப்பிட்ட சித்தர்கள் ஆயிரம் ஆ்ண்டுகள் வாழ்ந்தார்கள் என்று சரித்திரம் கூறுகிறது. மூலிகையின் மகிமை பற்றி இராமாயண காலத்திலிருந்தே நாம் அறியப்படுகிறோம், இராவணன் மகன் இந்திர சித் பிரம்மாஸ்திரத்தால் லட்சுமணன் மூர்ச்சித்த போது அனுமான் சஞ்சிவீ மலையிலுள்ள மூலிகைக்காக சஞ்சிவீ மலையையே கொண்டு வந்து லட்சுமணனும் வாணரர்களும் உயிர் பிழைத்த வரலாறு நாம்எல்லோரும் அறிந்ததே. சித்தர்கள் அத்தைய மூலிகை யைக் கண்டு அறிந்து சூரணம் செய்து வைத்திருந்தார்கள், இறந்தவர்கள் மூக்கில் அந்த சூரணத்தை போட்டு ஊதினால் எழுந்து விடுவார்கள், அந்த அதிசய மூலிகைகளை கண்டறிந்து உடல் உபாதைகளைப் போக்கினார்கள் சித்தர்கள். ஆஞ்சநேயர் கடல் வழியாக இலங்கைக்கு பறந்தார் என்று படித்திருக்கிறோம். அதே போல் சித்தர்கள் வானில் பறந்திருக்கிறார்கள், மூலிகைகளால் செய்யப்பட்ட குளிகையை வாயில் போட்டுக் கொண்டு ரோமாபுரிக்கு பறந்து ெசன்று செம்பை தங்கமாக்கும் ரசக் குளிகைகளைக் கொண்டு வந்தார் சித்தர் போகர், இதைப் ேபாலவே பல சித்தர்கள் வானில் பறந்திருக்கின்றனர். திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாயம் மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக