மரப்பொந்தில் தவம் இருந்த அகப்பேய் சித்தர்
கரு என்பது பெண்ணின் உடம்பில் மட்டும் தோன்றுவதல்ல. கரு ஆனின் உடலில் தோன்றி இரண்டு மாதகாலம் வளர்கிறது. இதைத் தத்துவங்கள் அறிந்த சித்தர்கள் வெளிப்டுத்தி இருக்கிறார்கள். கணவனும் மனைவியும் கலந்து இன்புறும் காலத்தில் அந்த ஜீவன் முன்பு விட்டுச் சென்ற வினையை அனுபவிப்பதற்காகப் பெண்ணின் கருக்குழியில் புகுகிறது. எடுக்கும் பிறவியில் தங்க வேண்டிய கால அளவும் அப்போதே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. பெண்ணின் கர்ப்பத்தினால் மாயை, நினைவுகளை ஏற்படுத்துகிறது. ஒரு மனிதனின் ஆயுட் காலத்தில் சுமக்க வேண்டிய நொய்நொடிகள் , எப்படிப் பட்ட வாழ்க்கை என்பதையெல்லாம் உடல் உருப்பெறும் காலத்தில் இறைவன் அமைத்து விடுகிறான்.
இந்த பிரபஞ்சத்தில் உடல் என்ற கூடு வெளிவந்து உடம்பைச் சுமையாய் சுமந்து , அந்த உடம்பினால் ஏற்படும் ஆசாபாசங்களோடு வாழ்ந்து இறப்பு என்ற நிலையை அடைகிறோம், திரும்பவும் பிறவி என்ற காட்டில் சிக்கிக் கொண்டு தவிக்கிறோம், சிததர்கள் கூறிய யோக ஞானப் பயிற்சிகள் பெறுவது சித்தி பெறுவதற்கு அடிப்படையாக விளங்குகிறது. சித்தர் காட்டிய ஞான வழியில் செல்லும் போது உடம்பும், மனமும், உயிரும், தெளிவும், வலிமையும் சக்தியும் பெற்று பிரகாசிக்கின்றன.
" காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா" என்பதை சிந்தித்தால் உண்மை விளங்கும். காற்றின் ஓட்டம் நின்று விட்டால் உயிர் போய்விடும், உடலும் சக்தியிழந்து மிக விரைவில் அழிந்து போய்விடும். காற்றற்ற நிலையைச் சூன்யம் என்று சொல்வது உண்டு. நாசித்துவாரத்தில் சுவாசம் இடப்பக்கம் வரும்போது வலப்பக்கம் அடைபட்டு இருக்கும், வலப்பக்கம் வரும்போது இடப்பக்கம் அடைபட்டிருக்கும், இதனையோ வடகலை, பின்கலை என்றும் இந்த பயிற்சியை பிராணயமம் என்றும் சித்தர்கள் கூறுவர். இதுவே வாசியின் அம்சம்,வாசிப்பழக்கத்தால் இருபக்கமும் மூச்சு சமமாக இயங்கும். இப்பழக்கத்தால் பல நாட்கள் மூச்சை அடக்கி மண்ணில் புதைந்தும், நீரில் மூழ்கியும் யோகிகளால் இருக்க முமடியும்.
அப்படிப்பட்ட தியானத்தில் இருக்கும் போது, மெய் மறந்து பேரானந்த நிலையை அடைவார்கள். அந்த நிலை எப்படிப் பட்டது என்றால் ஐம்புலன்களும், உளப்பகைவர்களும், முக்குணங்களும், இல்லாத நிலையாகும. அந்த நிலையில் அருள் பாலிக்கிறான்.
" காணாது கிட்டாது எட்டாது அஞ்சில்
காரியமில்லை என்றே நினைத்தால்
காணாததும் காணலாம் அஞ்செழுத் தாலதில்
காரியமுண்டு தியானம் செய்தால்"
என்று ஒரு சித்தர் பாடி இருக்கிறார், இறைவன் நம் கண்ணில் காணமாட்டான் என்றோ கைக்கு எட்ட மாட்டானென்றோ நினைக்க வேண்டாம் ஐந்தெழுத்தால் அவனைக் காணலாம். தியானம் செய்வதன் மூலம் அவனைப் பிடிக்கலாம், என்ற அர்த்தம்நம்மை ஈர்க்கிறது.
திருவள்ளுவரின் பரம்பரையில் உதித்தவர், அகப்பேய் சித்தர். குலத்தொழிலான நெசவுத் தொழிலைச் செய்து வந்தார். ஒருநாள் அவருடைய மனதில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக பரம்பொருளைக் காணவேண்டும் என்ற எண்ணம் உதித்தது. ஞானத்தை போதிக்கும் குருவைத் தேடி காடுகளில் அலைந்தார்.
இயற்கையால் உண்டாகும் புயலை விட மனதில் உண்டாகும் புயல் மிகவும் கொடுமையானது. மன நோயால் ஏற்படும் புயல் மனித இனத்தையே அழிக்கும் எல்லாவற்றுக்கும் காரணம் மனப்பழக்கம் தான். உலகத்தை நலமுறச் செய்வது அன்பு ஒளியே. அந்த அன்பு ஒளியைத் தேடி அலைந்தார் அகப்பேய் சித்தர்.
சிததம் தெளியவைக்கும் மருந்தாக அவர் கண்ணில் ஒரு மரம் பட்டது. ஆயிரம் வருடங்களாக மனிதர்களுக்குப் பலன் கொடுத்து வந்த மரத்தின் அடிப்பாகம் இருபேர் கட்டிபிடிக்க முடியாத பருமன் கொண்டது. அவ்வளவு பெரிய மரம். அந்த மரத்தின நடுவே குகை போன்ற பொந்து தென்பட்டது. மரப்பொந்தின் உள்ளே போய் அமர்ந்தார், எதிலும் கிடைக்காத நிம்மதி அவருக்கு கிடைத்தது. தியான நிலையில் தவம் செய்து வந்தார். அவருடைய தவத்திற்கு பறவை மிருகங்களால் யாதொரு தொந்தரவும் கிடைக்கவில்லை. கடும் தவத்தில் இருந்த அகப்பேய் சித்தருக்கு வியாசமுனிவர் நேரில் காட்சி அளித்தார், அவர் தனக்காக எதையும் கேட்கவில்லை. மாய உலகில் வாழும் மனிதர்களின் தீய எண்ணங்களையும், தீய செயல்களையும் போக்கி, நல் எண்ணங்கள் உடையவர்ளாக மாற்றி இறைவனை காணும் வழியை போதிக்க வேண்டும் என்று கேட்டார். தனக்கென வாழாமல் பிறருக்காக கேட்கும் நல்ல உள்ளத்தை வாழ்த்திய வியாச முனிவர் யோக மந்திரங்களையும், அரிய உபதேசங்களையும் கற்பித்து மறைந்தார்.
அகப்பேய் சித்தர் பல ஊர்களுக்கும் சென்று நல்நெறிகளை மக்களுக்கு போதித்தார்,மண்ணுக்குள் சமாதி நிலையில் பல இடங்களில் தவம் செய்தார். அவருடைய பாடலகள் உள்ள முக்கிய கருத்துக்கள் யாவரையும் கவரும் தன்மை கொண்டது.
அங்கம்இங்கும் ஓடும் மனதை கட்டுப்படுத்தினால் நஞ்சுண்ணவும் வேண்டாம் நாதியற்று திரியவும் வேண்டாம்,, இறைவன் உனக்கு காட்சி கொடுப்பான்.
இவருடைய பாடல்கள் இன்றைய காலத்துக்கு மட்டுமல்ல எல்லாக் காலத்துக்கும் ஏற்புடையதாக இருக்கின்றன. அகப்பேய் சித்தர் என்பதே அகப்பை சித்தர் என்று மருவி உள்ளது. இவர் திருவையாறு , எட்டுக்குடி ஆகிய இடங்களில் ஜீவ சமாதியானதாகக் கூறப்படுகின்றது. இவர் குருபகவானின் அம்சமாக இருப்பதால் வியாழக்கிழமை இவரை வணங்கினால் குருபகவானால் ஏற்படக்கூடிய தோசங்கள் நீங்கி நலம் பெற்று வாழலாம்.
திருச்சிற்றம்பலம்
ஒம் நமசிவாயம்
மேலும் ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக