செவ்வாய், 5 மே, 2015

சிவ ரூபமே சித்தர்களின் சிந்தனை


சிவ ரூபமே சித்தர்களின் சிந்தனை உலகம் தோன்றவும், உயிர்கள் தோன்றவும், மூலப் பொருளான தொண்ணூற்றாறு தத்துவங்கள் தேவைப்படுகின்றன. இந்த தத்துவங்கள் நீங்கினால் யாவும்அழிந்து விடும். மறுபடியும் உலகம் தோன்ற இந்த தத்துவங்கள் தோன்ற வேண்டும். தத்துவங்களுக்கெல்லாம் காரணமானவர் ஐந்தெழுத்தாகிய இறைவன். இறைவனின் ஒரே மூலமந்திரம் ஐந்தெழுத்தான " நமசிவாய " என்ற மந்திரப் பொருள். ந - பிரம்மன் படைக்கும் தொழிலை செய்பவர் ம - திருமால் காக்கும் தொழிலை செய்பவர் சி - உருத்திரன் அழிக்கும் தொழிலை செய்பவர் வா - மகேஸ்வரன் மறைத்தல் தொழிலை செய்பவர் ய - சதாசிவம் அருள் புரியும தொழிலை செய்பவர். நமசிவாய என்று உச்சரித்துத் தியானம் செய்தாலே இறைவனைக் காண முடியும் என்று உணர முடிகிறது அல்லவா? உலக இச்சையையும், உடல் இச்சையையும் கடந்தவன் ஞானி. உடலின் பஞ்ச பூதங்களை அடக்கித தன்னுள் இறைவனைக் கண்டு இறைவனைக் காணும் வழியினை மக்களுக்கு உபதேசிப்பவர்கள் சித்தர்கள். பலனைக் கருதி தெய்வத்தை நினைப்பவன் ஞானத்தை அடையமுடியாது. ஞானத்தை அடைய விரும்பி, தெய்வத்தை நினைப்பவனுக்கு சித்தி கிடைக்கிறது. மண், பெண், பொன் என்ற மூவாசைகளில் மனதை பறி கொடுத்தால் இறைவன் அருள் பெறுவது எப்போது? பற்றற்றவரகளை பற்றிக் கொள்வான் இறைவன் என்பது சித்தரின் வாக்கு, சித்தர்களின் சிந்தனை எப்போதும் சிவ ரூபத்திலேயே நிலைத்திருக்கும். ஆசையின் ஆரம்பமே துன்பத்துக்கு ஆரம்பம். ஆசையை மனதில் இருந்து துரத்திவிட்டால் அதுவே இன்பத்தின் ஆரம்பமாக அமைந்து விடும். மனிதனுக்கு துன்பம் நேர்ந்தால் விதி என்கிறோம். நாம் செய்த பழியை விதியின் மேல் போடுகிறோம், ஆசைக்கு காரணமான துன்பத்ததைத் தவிர்க்க நம்மால் முடியும், அதுதான் மதி. ஆசையை மதியுடன் சேர்ந்து விரட்டினால் விதியால் என்ன செய்யமுமுடியும். சிந்தித்துப் பார்த்தால் தெளிவு பெறும். சித்தர்கள் சிரஞ்சிவித்தன்மை பெற்றவர்கள் என்றும், இன்றும் அரூபமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் நம்பப் படுகிறது. மலைகளிலும் காடுகளிலும், மனிதர்கள் ஆரவாரமான கூச்சல் சத்தம் இல்லாத இடங்களில் சித்தர்கள் இருக்கின்றனர் என்று பார்த்தவர்கள் கூறுகின்றனர். திருவண்ணாமலை, மலைப்பகுதிகளிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் மகாலிங்க மலை என்ற சதுரகிரி மலைகளிலும் சித்தர்கள் நடமாட்டத்தை பார்த்ததாகவும் அவர்கள்மனிதர்களைக் கண்டு கொள்ளாமல் நடந்து சென்றார்கள் என்று ஆதிவாசிகள் கூறுகின்றனர். மலைகளில் மாடு மேய்க்கச் சென்ற சிறுவர்கள், யாரோ இலைகளின் மேல் நடந்து செல்லும் சத்தத்தைக் கேட்டதாகக் கூறி இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அரூபமாக சித்தர்கள் நடந்து செல்லும் காலடி ஓசை என்று பெரியவர்கள் கூறுகிறார்கள், சித்தர்கள் எப்போதும் ஒரே இடத்ததில் இருப்பதில்லை, தங்குவதும்இல்லை. அவர்கள் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். ஒரு மனிதன் வாழ்நாளில் சித்தரை சந்தித்து ஆசி பெற்று விட்டால், தெய் கடாட்சகம் கிடைத்ததைப் போன்று பலன்களை பெறுவான், சித்தர்கள் உடற்கூற்றை பற்றி ஆராய்ந்து வரும் நோய்களையும், அதற்குரிய சிகிச்சைகளையும் நூல் வடிவில் தந்து இருக்கிறார்கள். சித்தர்கள் எழுதிய மருத்துவக் குறிப்பு பற்றியும், வசிக, மாந்திரக, தந்திர யோகங்களைப்பற்றியும் கண்ட நூல்கள் சில கிடைத்தனவற்றை கீழ்கண்ட "இ "வலைதலத்திலிருந்து தரவிரக்கம் செய்து கற்றுப்பாருங்கள், சித்தர்களின் அரிய பெரிய கருத்துக்களை காணலாம், www.siththar.com/home/upload/kokoham.pdf www.siththar.com/home/upload/thirumantheramalai.pdf www.siththar.com/home/upload/mantheram.pdf http://noolaham.net/project/46/4598/4598.pdf http://www.subaonline.net/thfebooks/THFagathiyarkarpachasthiram.pdf https://ia700202.us.archive.org/22/items/Manikkavasagar/Manikkavasagar.pdf https://ia700602.us.archive.org/22/items/ManthirangalEndralEnna/ManthirangalEndralEnna.pdf http://www.siththar.com/home/upload/agathiyarAntharankaTheedchaavethi.pdf http://www.siththar.com/home/upload/siththarmaiporul.pdf http://www.siththar.com/home/upload/akathiyar12000.pdf http://www.siththar.com/home/upload/amuthakalasam.pdf http://www.siththar.com/home/upload/muppukuru.pdf http://www.siththar.com/home/upload/agasthiyarPanneruKaandam200.pdf http://www.siththar.com/home/upload/agathiyarGhanakaviyam1000.pdf http://www.siththar.com/home/upload/agasthiyarPanneruKaandam200.pdf http://www.tamilwin.info/home/upload/nayanavethe.pdf http://www.tamilwin.info/home/upload/amuthakalaigynam.pdf http://www.tamilwin.info/home/upload/akathiyarPooranaSuthiram.pdf http://www.tamilwin.info/home/upload/bogharSarakuVaippu.pdf http://www.tamilwin.info/home/upload/siththarThathuvam.pdf - with Murali Krishnan. http://www.tamilwin.info/home/upload/akathiyar300.pdf - with Murali Krishnan. http://www.tamilwin.info/home/upload/ganasaranool.pdf - with Murali Krishnan. http://www.tamilwin.info/home/upload/nantheesar300.pdf - with Murali Krishnan. http://www.tamilwin.info/home/upload/bogharJannashagara.pdf மனிதனுக்கு ஏற்படும் சாதாரண நோய் முதல் அசாதாரண நோய்கள் வரை ஆராய்ந்தறிந்து அவர்களுக்கு வைத்திய முறைகளை கூறயுள்ளார்கள், இதில் மிகவும் பிரபலமானது அகத்தியர் வைத்திய சித்தர்வைத்திய முறைகள். மனிதன் பிறக்கு போதே இறக்கும் நாளும் நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. எத்தனை யோ, விதமான மனிதர்களின் தலையெழுத்தை பனை ஒலைகளில் அகத்தியர், காகபுஜண்டர், போகர், வசிஸ்டர் ப்ருகு போன்ற சித்தர்கள் எழுதி வைத்து இருக்கின்றாரகள். சில ஒலைச்சுவடிகள் கிடைத்து இருக்கின்றன. அவைகளில் நமது தலையெழுத்தை துல்லியமான முறையில் அவர்ரவர்களுக்கு உண்டான நிகழ்வுகள் கூறப்பட்டு இன்றும் அகத்தியர் ஜீவநாடி சோதிடம் என்று அறிந்து வருகிறோம், பிறக்கும் போதே, சித்தர்களாக எவரும் பிறப்பதில்லை. வாழும் முறையில் இறைவனை அறிந்தே தீருவது என்ற வைராக்கியத்துடன் உடலையும், மனதையும், வசப்படுத்திக் கொண்டவர்களே சித்தர்கள். எத்தனையோ, மனச்சஞ்சலங்களுக்கு இடையே வாழும் நாம் சித்தரகளாவது கடினம், ஆனால் சித்தர்கள் செய்து காட்டிய யோகப்பயிற்சிகளையும, தியானப் பயிற்சிகளையும் செய்து, உடலையும் ,மனதையும், சுத்தமாக்கி நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும், சித்தி தரும் சித்தர்களின் வாழ்க்கை நமக்கு பாடமாக அமையும் என்பதில் சந்தேமில்லை. எனவே சித்தர்களின் சிந்தனை எப்பொழும் சிவரூபமே என்பதை உணர்வோம். சித்தர்களின் வாக்கு தெய்வ வாக்கு !! சித்தர்களின் சிந்தனையை ஏற்போம்,! சிவ ரூபத்தை தரிசிப்போம் !! திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாயம் மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக