வெள்ளி, 31 ஜூலை, 2015


நாள் என்செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நினைப்பவருக்கு நாளும் கோளும் நளிந்தோருக்கு இல்லை என்பது நாட்டு வழக்கு. இதனையே ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்தரும் உறுதிபடுத்துகிறார். ஒரு சமயம் தென்பாண்டிநாட்டில் சமண மதம் தலைவிரித்தாடிய ேபாது, சைவ மதத்தினரை ஓர் இழிந்த சமுதாயத்தை சார்ந்தவர்கள் போலவும் அவர்களை கண்டுமுட்டி என்று அழைத்தும் சைவ மதத்தினரை கேவலமாக நடத்தி ஆட்டிபடைக்கும் சமண மத்தினரை பழி தீர்ககவும் எண்ணிய , பாண்டிய மன்னனின் இளவரசி இதனை பொருக்காமல் இதன் ஆதிக்கத்தை தடுக்க ஞான சம்பந்தரின் பெருமையினை அறிந்து, அன்னார்தான் நம் நாட்டில் சைவ மதத்தை மீட்ெடடுக்க முடியும் என உணர்ந்து அந்த இளம் சைவ மத ஞானியை பாண்டிய நாட்டிற்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்தார்கள். அப்போது திருவாதவூரில் திருநாவுக்கரச சுவாமிகளுடன் இருந்த சம்பந்தர் பாண்டிய மன்னனின் அரசியார் மங்கையர்கரசியின் வேண்டு ேகாளினை ஏற்று அங்கு செல்ல அப்பர் பெருமானிடம் கூறினார், அப்போது சமணர்களால் துயர் பல பெற்ற அப்பர் பெருமானார், தான் பட்ட துன்பங்களை மனதில் எண்ணி , தாங்கள் மதுரை செல்லவதானால் நல்ல நேரம் கண்டு / நாளும் கோளும் கண்டு செல்க என வேண்டினார் , அப்போது, சிவனேயே சிந்தைதனில் கொண்டு நாளெல்லாம் சிந்தித்திருப்போருக்கு நாளும் கோளும் நல்வினையே செய்யும் என்று கூறு கோளாறு பதிகம் பாடினார் அப்பர் சுவாமிகளிடமிருந்து விடை பெற்றார், அப்பதிக பாடல்களை பாடினால் நவக்கோள்களும் நம்மை அணுகா என்றும் அவைகள் எல்லாம் நல்லனவற்றையே செய்யும் , மேலும் இப்பதிக பாடல்களை பாடும் அடியார்கள் அரசனைப்போன்று உயர்வார்கள் என்பது இது திருஞான சம்பந்தனின் ஆனண என்கிறார். கோளாறு பதிகம் ""வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவவாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே ". இப்பாடலில் ஒன்பது கிரகங்களையும் நல்லவனவே செய்யும் என்கிறார் என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழை யுடனே பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் *ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம் அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. 02 *இரண்டாவது தேவாரம் மூன்றாவது சரணத்தில் பிரயாணத் துக்காகாத 12-நட்சத்திரங்களைக் குறித்திருக்கின்றது. விவரம்: நட்சத்திரங்களில் முதலுற்பத்தி கிருத்திகையாம். ஆதலாலதனை முதலாகக்கொண்டு பார்க்கில் 9-வது நட்சத்திரம் பூரம். ஒன்றென்றது கிருத்திகை, 7- ஆயிலிய நட்சத்திரம், 18 பூராடம் ஆறுமுடனாய நாள்கள் என்றது மேற்கூறிய நான்கும் அல்லாத 8 நட்சத்திரங்களுமாம். 12 நட்சத்திரங்களாவன: பூரம், பூராடம், பூரட்டாதி, மகம், கேட்டை, பரணி, கிருத்திகை, சுவாதி, ஆயிலியம், விசாகம், ஆதிரை, சித்திரை என்பவைகளாகும். மேலேகண்ட நட்சத்திரங்கள் எல்லாமே நல்ல நாட்களாகும் உருவளர் பவளமேனி யொளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றைதிங்கண் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும் அருநெதி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. பொழிப்புரை : அழகிய பவளம் போன்ற திருமேனியில் ஒளி பொருந்திய திருவெண்ணீற்றை அணிந்து மணம் பொருந்திய கொன்றை , திங்கள் ஆகியவற்றை முடிமேல் அணிந்து சிவபிரான் உமையம்மையாரோடு வெள்ளை விடைமீது ஏறிவந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் திருமகள் , துர்க்கை , செயமகள் , நிலமகள் , திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வங்களையே நல்லன வாகத் தரும் . அடியாரவர்கட்கும் மிகவும் நல்லனவாகவே தரும் . பாடல் எண் : 4 மதிநுதன் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மெங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும் அதிகுணம் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே பொழிப்புரை : பிறைபோன்ற நுதலை உடைய உமையம்மையா ரோடு ஆலின்கீழ் இருந்து வேதங்களை அருளிய எங்கள் பரமன் கங்கை , கொன்றைமாலை ஆகியனவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் , சினம் மிக்க காலன் , அக்கினி , யமன் , யமதூதர் , கொடியநோய்கள் முதலிய அனைத்தும் மிக்க குணமுடை யனவாய் நல்லனவே செய்யும் . அடியவர்களுக்கும் மிகவும் நல்ல னவே செய்யும் . பாடல் எண் : 5 நஞ்சணி கண்டன்எந்தை மடவாள்த னோடும் விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும் அஞ்சிடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே பொழிப்புரை : நஞ்சணிந்த கண்டனும் , எந்தையும் , உமையம்மை யாரோடு விடையேறி வரும் எம் தலைவனுமாகிய சிவபிரான் , இருள் செறிந்தவன்னிஇலை , கொன்றைமாலை ஆகியவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் கொடிய சின முடைய அவுணர் , இடி , மின்னல் , செருக்குடைய பூதங்கள் ஆகியன நம்மைக் கண்டு அஞ்சி நல்லனவே செய்யும் . அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும் . திருச்சிற்றம்பலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக