தினம் ஒரு தேவாரம்
திருநாவுக்கரசர் தென்கூடல் திருஆலவாய் மதுரையில் அருளியது /
வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்
தூயானைத் தூவெள்ளை யேற்றான் தன்னைச்
சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென்
தாயானைத் தவமாய தன்மை யானைத்
தலையாய தேவாதி தேவர்க் கென்றும்
சேயானைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
பொழிப்புரை :
அடியார்களுடைய வாயுள்ளும் மனத்துள்ளும் மனத்தில் தோன்றும் எண்ணத்துள்ளும் தங்கி , வேண்டுவார் வேண்டுவனவற்றை அவர்தம் முயற்சியின்வழிக் கூட்டுவித்தல் . கருதப்பட்டதே சொல்லப்படுதலின் , ` வாயுள் நின்ற சொல்லானை ` என்று அருளிச் செய்யாராயினார் அவர்களுடைய விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுபவனாய் , மாசற்றவனாய் , கலப்பற்ற வெள்ளை நிறக் காளையை உடையவனாய் , பிறையைச் சடையில் சூடியவனாய் , தொடர்ந்து எனக்குத் தாய்போல உதவுபவனாய்த் தவத்தின் பயனாக உள்ளவனாய் , மேம்பட்ட தேவர்கள் தலைவராய திருமால் பிரமன் இந்திரன் முதலியவர்களுக்கு அதிகாரச் செருக்கினால் அவனை , எண்ணாதொழிதலால் என்க . இறைவன் , தன் அடியார்கட்குத் தொடர்ந்து நின்ற தாயாகி நிற்றலும் , செருக்குடையார்கட்குத் சேயனாகி இருக்கும் தென் கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக