தெய்வீகத் திருநீறு
"கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமற் பூசி மகிழ்வரே யாமகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்காரமான திருவடி சேர்வரே. திருமந்திரம் 1666
சைவர்களாகிய நம் அனைவருக்கும் திருநீறு , உத்திராட்சம் ஆகிய சிவச்சின்னங்களுக்கு மேலான வேறு செல்வமில்லை. எம்பெருமானையும் , சிவ வேடந்தாங்கிய அவனடியார்களையும் விட மேலான தெய்வமில்ல.
ஆயினும் சைவர் பலருக்கு இந்த மேலான சிவச் சின்னங்களைப்பற்றிய தெளி முழுமையாக இருப்பதில்லை. குறிப்பாக இளைஞர்களுக்கு அதற்கான நேரம் குறைவாவே உள்ளது. இந்நிலையில் ஆகம விதியினை அறிந்த சான்றோர்களின் வாயிலாக, இதனை எடுத்துயம்புவது அவசியமாகிறது. எனவே இதனைப் பற்றி நான் அறிந்த - படித்த -" திருவாளன் திருநீறு " என்றுகுறு நூலிருந்து கற்றதை இங்கு விளம்புகிறேன்.
சைவர்களாகிய நாம் அனைவருக்கும் பெருஞ்செல்வம், திருநீறே. இதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். நாம் அனைவரும் தினமும் விபூதி இட்டுக் கொள்பர்கள்தாம். இருப்பினும் முறைப்படி அதனை அணிவது எப்படி, அதன் பெருமை என்ன? என்பது பற்றி அறிந்ததில்லை.
சிவாலயத்திற்கு செல்லும் போதோ, சிவனடியார்களைத் தரிசிக்கும் போதோ, தரப்படும் திருநீற்றை வாங்கி அணிந்து கொள்கிறோம். பூசியது போக மீதமுளள விபூதியை தூணிலோ, சுவற்றிலோ, கொட்டிவிடுவதுண்டு. திருநீற்றின் பெருமை அறியப்படாமையே இத்ற்கு காரணமின்றி வேறில்லை.
செல்வத்திற்கெல்லாம் பெரும் செல்வம் இறைவன் அருளிய திருநீற்றை, அவன் அணிந்த செல்வத்தை வீணாக்குதல் முறையன்று,
திருநீற்றை விபூதி என்று வழங்குவர்.. பூதி என்பது செல்வன் - " வி " - என்பது மேலானது என்பதாகும். தனக்கு மேலான செல்வம் வேறில்லை . முழுமுதற் பெருளாகிய இறைவன் ( விநாயகன் )தன் வடிவங்களில் ஒன்று. அது நான்கு கரங்களும் ஒரு துதிக்கையும்,, கொண்டது, திருஐந்தெழுத்தே. முழுமுதற் பொருளாகிய இறவன் என்ற அருட்குறிப்பானது . ஆதலின் விநாயகன் தனக்கு மேலாக வேறு ஒரு நாயகன் இல்லாதவன் என்பது அறியப்படும் (வி - நாயகன் ) அவ்வாறே தனக்கு மேற்பட்ட வேறேரு அருட் செல்வமான பரம்பொருள் இல்லாத தாகிய விபூதியாகிய திருநீறே சிவபரம் பொருள் என்று கொள்க.
சிவலாயங்களில் திருநீற்றைப் பிரசாதமாக வழங்கும் மரபு , இல்லங்களில் ஆன்மார்த் சிவபூசை செய்வோர் திருநீற்றையே சிவலிங்கமாக வடித்துக்கொண்டு வழிபட்டு உய்வது நாம் பல வீடுகளிலும் காணும் காட்சி.
ஆதி விபூதி , அநாதி விபூதி
பேருழிக் காலத்தில் புவனங்கள் அணைத்தையும் இறைவன் நீராக்கி (சாம்பலாக்கி )அந்த நீற்றை, நித்தியப் பதப்பொருளாகிய சிவபெருமான் தன் திரு மேனியில் தரிப்பதால் இஃது ஆதி விபூதி எனலாயிற்று.
வெந்த சாம்பல் விரையெனப் பூசியே
தந்தை யாரொடு தாயிலர் தம்மையே
சிந்தியா வெழு வார்வினை தீர்ப்பாராய்
எந்தை யாரவ ரெங் வடைகயார் கொலோ. முதல் திருமுறை பதி 5. பாடல் 3
தம் திருவுருவின் பேரொலிப் பிழம்பின் முன் பிரளாயக் காலத்து, உலகெலாம் வெந்த ஒளி, ஒரு சிறு ஒளியாகவும்,, சாலாமையை விளக்கி, அதன் அறிகுறியாக, அச்சாம்பலைச் சாந்தமாய் பூசினார். உலகை ஒடுக்கி மீளத் தோற்கு வித்தலால், உலகிற்கு தாமே தாயும், தந்தையும் ஆவதல்லது தாம் பிறப்பு, இறப்பு இல்லாதவர் என்க. இதுவே ஆதி விபூதி என்பர்.
இனி அனாதி விபூதி பற்றி காண்போம். ஒரு பேருழி முடிந்தபின் ஓயாமல் பிறப்பு, இறப்புகளில் களைப்புற்ற உயிர்கள், போதிய அளவு ஓய்வு பெற்று களைப்பு நீங்கியபின், மீண்டும் பிறவி எடுக்கும் வண்ணம் பரமபதி திருவுள்ளம் பற்றுகின்றார். அஃது அவர் பேரருளினால் ஆகும். அவ்வாறு அவர் திருவுள்ளம் பற்றியபின் அம்பிகையின் வேறு அல்லாத திருவருளே விபூதி வடிவில் அவர் தடத்தத் திருமேனியின் உள்ளிலிருந்து வெளிவரும் விபூதியே அனாதி விபூதியாகும். இதனை திருஞானசம்பந்தரும் திருநாரைபூர்ச்சி தீச்சரப்பதிககககம் - 7 வது பாடலில் " தமலார் மேனித் தவறநீற்றார் " என்கிறார் ( தவளம் - என்றால் வெண்மை )
அம்பிகையே விபூதி என்பதை ஞான சம்பந்த பெருமானனின் திருநீற்றுப்பதிகம் 8ம் பாடல்
"பராவணமாவது நீறு " என்கிறார்
திருநீறு உயிர்களைக் காப்பதால் திருநீற்றை ரட்சை என்றும்,
பாவங்களை நீறு செய்து அழித்தலால் நீறு என்றும்
உயர்ந்த செல்வமாதலால் - விபூதி என்றும்
அஞ்ஞான அழுக்கை போக்குவதால் சாரம் என்றும்
ஞான ஒளியை தருவதால் பசிதம் என்றும்
பல காரணப் பெயர்களைக் கொண்டது இத்திருநீறு.
திரு நீறு நான்கு வகைப்படும் அவை, கற்பம், அனுகற்பம், உபகற்பம், இவை மூன்றும் தீட்சை பெறுவதற்குரிய சைவர்களுக்குரியது.
நான்காவதான அகற்பம் தீக்கைக்குரியவர் அல்லாதவர்க்குரியது. இஃது அசைவ விபூதி எனப்படும் இதனை ஆகா தென்று அக்குரைத்த அகற்பம் என்கிறார் பெரியபுராணம்இயற்றி சேக்கிழார்.
திருநீறு தயாரிக்கும் முறை
கற்பம் வகை விபூதி தயாரிக்கும் முறை:
திருகயிலையில் இடப தேவருடன் வாழ்கின்ற , நந்தை, பத்திரை, சுரபி, சுகிலை, சுமனை என்னும் ஐந்து பசுக்களின் வழியாக சிவன் ஆனைப்படி வழிவழி வரும் பசுக்களுக்களுள் , ஈன்று 10 நாட்களுக்குட்பட்டதும், ஈனாத கிடாரியும், நோயுடையதும், கன்று செத்ததும், கிழடும், மலடும், மலந்தின்பதும், ஆகிய இவற்றை நீக்கி, சிறந்தவற்றுள் பங்குனி, தை, மாதங்களில் வைக்கோலை மேய்ந்த பசுக்களின் சாணத்தை அட்டமி, அமாவாசை, பெளர்ணமி சதுர்த்தி, இந்நாட்களில் சத்யோசாத மந்திரத்தால் ஏற்று, மேலிருக்கும் வழும்மை ஒழித்து, வாமதேவத்தால் பஞ்சகவ்யம் விட்டு அகோரத்தால் பிசைந்து, தற்புருடத்ததில் உருண்டை செய்து, ஈரமாக வேணும், உலர்ந்த பின்னரேனும், ஓமத்தீயினுள் ஈசானத்தால் இட்டு சுட்டு எடுத்த நீறு கற்ப விபூதியாகும்.
இனி அனுகற்ப விபூதி தயாரிக்கும் முறை:
காட்டில் உலர்ந்த பசுஞ் சாணத்தைக் கொண்டு வந்து, நுண்ணிய பொடியாக்கி, பசுவின் கோசலத்தை விட்டு பிசைந்து, அத்திர மந்திரத்தால் உருண்டையாகப் படித்து ஓமத்தீயில் இட்டு சிறப்புற வெந்த பின் கிடைக்கும் செல்வ நீறு - அனுகற்ப திரு நீறு ஆகும்.
உபகற்ப விபூதி :
பசுக்கள் மேயும் காடுகளில் மரங்களின் உரைவினால் உண்டாகிய தீயினால் வெந்த நீறும், பசுக்கள் தங்கும் இடங்கள் தீப்பற்ற வெந்த நீறும், செங்கற்கற்சூளை தீயினை உண்டாகிய நீறும், தனித்தனியே கொண்டு சிவகாமங்களில் விதித்த உரிய மந்திரங்களாலே கோசத்ததினாாலே பிசைந்து உருண்டைட செய்த , திருமடங்களில் வளர்ககப்படும் வேள்வித்தீயான சிவாக்கினினால் விதிப்படி நீற்றப்படுவது உபகற்ப நீறு ஆகும்.
இது தவிர வங்க தேசத்தில் காணப்படும் அகோரிகள் பூசும் சுடுகாட்டு சாம்பலும் நீறாக பயன் படுத்தப்படுகிறது. இதனை அவர்கள் மட்டும் கையாண்டு வருகின்றனர்.
திருநீறு அணியும் முறை :
மேற்கண்ட வாறு தயாரித்த புனித நீற்றை அணியும் முறையினை சேக்கிழார் கூறும் முறையாவன :
சிவன் சந்நிதி முன்னும், தீ முன்பும், நடந்து செல்லும் வழியிலும் தூய்மையற்ற இடத்திலும், உபதேச குருவின் முன்பாகவும், திருநீறு அணியலாகாது.
ஈசன் சந்நிதியில் பெறும் நீற்றை உடனே அங்கேயே பூசாமல், பிரகாரத்தில் சண்டிகேசர் சந்நிதி சென்று அவர் அனுமதி பெற்று அணிதல் வேண்டும். கீழே சிந்தலாகாது. ஒரு கையால் வாங்குவது கூடாது. உடல் முழுவதும் பூசிக் கொள்ளல் , திரி புண்டரமாக ( மூன்று கீற்றாக ) இடல், பிறை வடிவமாக இடல், வட்ட வடிவில் இடல், என்ற முறைகள் பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ளன.
"திருநுதல் மேல் திரு நீற்றைத் தனிப்பொட்டுத் திகழ்ந்திலங்க " - பெரிய புராணம் பாடல் 28.
திரு நீற்றை நீரில் குழைத்து வலது கை மூன்று விரல் களால், உச்சி, நெற்றி, மார்பு, நாபி, இடது முழந்தாள்களிலும், இடது முழங்கை, மணிக்கட்டு, வலது முழந்தாள்களிலும், அணிய வேண்டும். இரு கைகளின் நடு மூன்று விரல் நுனிகளால் முதுகின் இடுப்பு, இரு செவி நுனிகள், கழுத்தை சுற்றி, அணிந்து கொண்டு வலது கையால் சிறிது நீர்விட்டு சிரசில் தெளித்து கொளல் வேண்டும்.
இவ்வாறு சமய தீட்சை விசேட தீட்சை, பெற்றுள்ளோர், காலை, மாலை, இருபொழுதிலும், நிர்வான தீட்சை பெற்றவர்கள், காலை நண்பகளல் மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் தாங்கள் உபதேசம் பெற்ற மந்திரங்களை கூறி அணிந்து கொள்ளவேண்டும்.
திருச்சிற்றம்பலம்
நன்றி : திருவாளன் திருநீறு
( திரு நீற்றின் பெருமை பற்றி பனிரெண் திருமுறைகளில் காணும் குறிப்புகள் அடுத்த கட்டுரையில் காண்போம்.)
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://poomalai-karthicraja.blogspot.in
https://vpoompalani05.wordpress.com
http://vpoompalani05.blogspot.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக