ஞாயிறு, 1 ஜூலை, 2012


சாஸ்திர அறிவிலும், அனுபவ அறிவிலும் திருப்தி கொண்டவனாய், அசைவுகளுக்கு அப்பாற்பட்டு புலன்களை வென்று கல்லையும் மண்ணையும் பொன்னையும் ஒன்றுபோல் காணும் யோகியே யோக நிலையுற்றான் என்கிறது பகவத் கீதை (அத் -6) இந்த யோக நிலை கீழ்கண்டவாறு எட்டு நிலைகளை கொண்டது அவை: 1) யமா: அஹிம்சை, சத்யம், திருடாமை, பிரம்மச்சரியம் பேராசையின்மை 2) நியமா: சுத்தம்( உள்ளும் புறமும்), திருப்தி, தவம், சுயமாய் கற்றல், இறைவனிடம் சரணாகதி 3) ஆசனா: யோகாசங்கள் 4) ப்ராணயாமா : மூச்சுப்பயிற்சி மற்றும் மூச்சு கட்டுப்பாடு 5) ப்ரத்யாஹரா: மனதை கட்டுப்படுத்துல் 6) தாரணா: மனதை ஒரிடத்தில் குவித்தல் 7) தியானம்: தியானம் (மெடிட்டேஸன்) 8) சமாதி: முக்தி நிலை - இறைநிலையடைந்து ஐக்கியமாதல்

சனி, 12 மே, 2012


அன்புடையீர் இக் கலியுகத்தில் தோன்றி சிவத்தொண்டையே பிரதானமாகக் கொண்டு வாழ்ந்து நாயன்மார்கள் வரிசையில் பின் தொடர்ந்த சிவத் தொண்டர் ஸ்ரீலஸ்ரீ காளிமுத்து சுவாமிகளை பற்றி தென்மாவட்டங்களில் அதிலும் சதுரகிரி மலையேறி சுந்தரமகாகலிங்க சுவாமியை தரிசணம் செய்ய சென்றவர்கள் யாரும் காளிமுத்து சுவாமிகளின் கஞ்சி மடத்தை அறியாதார் இருக்க மாட்டார்கள் சித்தர் வாழும் சதுரகிரிமலையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக அன்னதானம் செய்து வரும் பணியை இன்னும் தொடர காரணமாக இருந்து நடத்த ஒரு காளிமுத்து ஆஸ்ரமம் அமைத்து இன்றுவரை சிறப்போடு நடந்து வருகிறது, அவரது சீடரான ஸ்ரீலஸ்ரீ சத்திவேல் சுவாமிகளும் அன்னாரை தொடர்ந்து சிவ தொண்டு சிறக்க அரும்பணி ஆற்றினார் கல்லூரியில் பேராசியராக இருந்தும் இந்த சிவத் தொண்டை திறன்பட நடத்தி சிவமோட்சம் பெற்றார் இவர்களது குருபூஜை வருகிற 26-5-12 சனிக்கிழமை காளிமுத்து சுவாமிகள் ஆஸ்ரமத்தில் நடைபெற உள்ளது , சிவத் தொண்டர் அனைவரும் கலந்து குருபூஜையை சிறப்பித்து அன்னார்களின் அருள் ஆசிகளை பெற அன்புடன் அழைக்கிறேன் அதன் அழைப்பிதழ் இத்துடன் இணைத்துள்ளேன்