திங்கள், 12 ஜனவரி, 2015

சித்தர்களின் ஜீவ சமாதிகள்


சித்தர்களின் ஜீவ சமாதிகள் சித்தர்கள் எத்தனையோ பேர் இருந்து இருக்கலாம், ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய சித்தர்களே வெளி உலகத்திற்கு அடையாளம் காணப்பட்டு அவர்களின் பெயர்களும் ஐக்கியமான தலங்களும் பிரபலமாகி நாம் இன்றளவும் அவர்களின் ஜீவ சமாதிகளுக்கு சென்று வழிபட்டால்அவர்களின் நல்ஆசி நமக்கு கிடைத்து ஒரு தெய்வீக உணர்வை நமக்கு ஏற்படுத்துகிறது என்பதை நாம் அறியலாம், அதில் முக்கியமான ஜீவசமாதிகள் பழனி முருகன் கோவிலில் அமைந்துள்ள போகரின் ஜீவசமாதி, சிதம்பரம் திருமூலரின் சமாதி, மதுரையில் சுநதரானந்தர் சமாதி, திருப்பரங்குன்றம் மச்ச முனிவர்சமாதி, பாம்பாட்டி சித்தர் சங்கரங்கன்கோவில், கரூர் கரூர் சித்தர், போன்று சித்தர் ஐக்கியமான தலங்களில் உள்ள அவர்களது ஜீவ சமாதிகளை வழிபடும் போது நம் குறைகளை நிச்சயம் தீர்ப்பார்கள், என்று நம்பப்படுகிறது. மற்றவர்கள் கண்களுக்கு தெரியாமல் மறைந்துவிடும் ஆற்றல் பெற்ற சித்தர்கள் இரண்டு மூன்ற இடங்களில் சமாதியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதை ஆராய்ந்தால் அதற்கு விடை வருகிறது. சித்தர்கள் மூச்சை அடக்கி சிலகாலம் மண்ணுக்குள் தங்கிஇருந்து விட்டு வந்தால், அரிய சக்தி கிடைக்கும் என்று எண்ணினார்கள். இதனால் அவர்கள் பலமுறை அந்த நிலையை அடைந்து இருக்கிறார்கள், உதாரணமாக பாம்பாட்டி சித்தர் மருதமலை, சங்கரன்கோவில் விருத்தாசலம் ஆகிய இடங்களில் ஜீவசமாதியானதாக கூறுகிறார்கள், மூன்று முறை மண்ணுக்குள் இருந்த இடங்களே இந்த மூன்று சமாதிகளும், மண்ணில் பல ஆண்டுகள் தவம் இருக்கும் போது உடல் அழுகிவிடாதா? காடுகளில் தனியே தவம் இருக்கும்போது மமிருகங்கள் தின்றுவிடாதா? என்ற கேள்விகள் எழுவது இயற்கைதானே? மண்ணுக்குள் இருந்தாலும் மண் தீண்டாததால் உடல் அழுகாது, காட்டில் தவத்தில் இருக்கும் போது காட்டு தீ கொழுந்து விட்டு எரிந்தாலும் உடலில் சூடு ஏறாது, கொடிய விசப்பாம்புகள் தீண்டினாலும், உடலில் விசம் ஏறாது, காட்டாற்று வெள்ளம் வந்தாலும், தவம் செய்யும் சித்தர்களை விட்டு விலகி ஒடும், தவப்பயனால் சிவனை அறிந்து ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் என்றும் பதினாறு வயது தோற்றத்திலேயே காட்சி அளித்தார்கள் என்ற நூல்களில் கூறப்பட்டு உள்ளது. தசையும எலும்பும் நரம்பும் நோயினால் பாழ்பட்டு விட்டதே இதற்கு பரிகாரம் இல்லையா? என்று நினைக்கும் மனிதர்கள் இப்படிப்பட்ட மகான்களான சித்தர்களை வணங்கினால் வாழ்வில் திருப்பம் ஏற்படும், நாம் உலக வாழ்க்கையில் ஊறி கிடக்கும் சாதாராணமானவர்கள் , நம்மால் நம்மையே அறிய முடியவில்லையே! பஞ்ச பூதங்களை அறிந்து மனதில் நிறுத்தி தியானம் மூலமாகப் பார்த்தால் ஞானம் தோன்றும் அந்த ஞானத்தினால் இறைவன் கண்களுக்கு தென்படுவான், அத்தகைய ஞானத்தை அடைந்தவர்கள் சித்தர்கள் சித்தத்தை வென்றவர்கள் சித்தர்கள் என்று கூறலாம், அக்னியும் வாயும் இல்லாவிட்டால் உயிர் என்பதே இல்லை, உடல் இல்லாவிட்டால் உயிர் என்பதை எப்படி அடையாளம் காணமுடியும். உடலின் இயக்கங்கள் பஞ்ச பூதங்களால் ஏற்படுகிறது, காது கண், நாக்கு, மூக்கு தோல் இவைகள் வெளிப்படையாக செயல் படுவதில்லை, கண்களினால் நாம் பார்க்கிறோம், காதுகளினால் ஒலியை கேட்டும், நாக்கினால் சுவைத்தும், மூக்கினால் முகர்ந்தும் தொடுவதால் பரிச உணர்வைப் பெறுகிறோம், ஆகையால் இவைகள் ஞான இயந்திரங்கள் என்று அழைக்கப்படுகிறது. வெளிப்படையாக செயல்புரியும் இந்திரியங்களைக் கன்ம இந்திரங்கள் என்கிறோம், அவைகள் வாய், கால்,கை, குறி, குதம் என்பன ஆகும், மனம் புத்தி, அகங்காரம், சித்தம் ஆகியவை கரணங்கள் இவைகள் எல்லாம் ஆத்ம தத்துவங்களாகும், இவைகளை அறிந்தவர்களுக்கு வாசி சித்தயாகும் , வாசியின் உண்மையை புரிந்தவர்களுக்கு இணையானவர் யாரும் கிடையாது, காலம் நியதி, கலை, வித்தை, அராகம், மாயை என்பவை வித்தியாசமான தத்துவங்களாகும், காலம் என்பது சென்ற காலத்தின் எல்லையையும் நிகழ்காலத்தின் பலத்தையும் எதிர்காலத்தின் தன்மைகளையும் புரியச் செய்வது. நியதி என்பது கன்மத்தின் அளவை நிச்சயம் பண்ணி நிறுத்துவது கலை என்பது ஆணவத்தை குறைத்து ஆன்மாவை செயல்பட தூண்டுவது ஆகும் வித்தை என்பது ஆன்மாவுக்கு அறிவை கொடுப்பது. அராகம் என்பது அடைந்தவற்றை குறைவாகத் தோன்ற செய்து மேலும் அடையவேண்டும் என்று வேட்கையினைத் தூண்டுவது, மாயை என்பது சிந்திக்க விடாமல் மயக்கத்தை தருவது, வெட்ட வெளியிலே ஒன்றுமில்லா சூனியத்தை எங்கும் பரவி நிற்கும் இறைவடிவமாக பார்த்துகளிப்புறுபவர்கள், ஆத்ம தத்துவங்கள் மூலம் தன்னைத் தானே உணர்ந்தவர்கள் உடலில் இருந்து ஆத்மா பிரியும் நேரத்தை அறிந்தும் ஆத்மாவைத் தமக்குள் அடக்கி வைத்தும் ஜீவசமாதியானவர்களே சித்தர்கள். அதனால் தான் சித்தர்கள் ஐயக்கியமான இடங்களை ஜீவசமாதி என்று குறிப்பிடுகிறார்கள். ஜீவசமாதியை வழிபாடும்போது நம்மையறியாமல் ஒரு பத்துணர்ச்சி ஏற்படுகிறதே? நம்மிடம் ஏற்படும் புத்துணர்ச்சியின் - வைப்பிரேசன் - பொருள் என்ன என்று சிந்தித்தால் நமது உடம்பு தெய்வீக உணர்வுகளை உணர்வதே ஆகும், சித்தர்கள் நமக்கு அருள் பாலிக்கிறார்கள் என்றும் சொல்லலாம், தேவையில்லாத கற்பனைகளை நினைத்துக் கொண்டு வாழும் நம் மனதுக்கு ஆறுதலாக சித்தர்களின் சமாதிகள் அமைந்திருக்கின்றன என்றால் வியப்பில்லை. எல்லாம் அந்த சிவனின் அருள் பெற்று ஜீவசமாதியானவர்களின் நினைவு கொண்டு அவர்களின் தெய்வீக அருள்பெறுவோம், திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாயம் மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

சனி, 10 ஜனவரி, 2015

இடைக்காடர் என்ற சித்தர்.


சித்தர் இடைக்காடர் தாயின் அடிமைத் தளையை நீக்க அமிர்த்தைக் கொண்டுவர கருடன் பறந்த போது ஏற்பட்ட காற்றினால் கிரகங்களே இடம் மாறிச் சென்றுவிட்டன என்பது வரலாற்று சுவடிகள் பூலோகத்தில் மழை பொய்த்து விட்ட நிலையில் கிரகங்களை மாற்றி வைத்தார் ஒரு சித்தர், தொண்டை நாட்டில் பொதிகை மலைச்சாரலில் உள்ள இடைக்காடு என்ற ஊரில் இடையர் ஆடு மாடுகளை நேசித்து வளர்த்து வந்தார், ஊர்மக்கள் அவரை இடைக்காடர் என்று அழைத்து வந்தனர், மலைப்பகுதியில் இடைக்காடர் ஆடு மாடுகளை மேய்த்து கொண்டு இருந்த போது கந்தல் உடை கலைந்த தலைமுடியோடு எதையும் எதிர்பார்க்காத மனதை உடையவர் ஒருவர் அங்கே வந்தார், அவரை வரவேற்ற இடைக்காடர் தான் வைத்திருந்த உணவை கொடுத்து பசியாறக் கூறினார், ஜீவன் என்ற பசுவின் மடியில் இருந்து பாலைக் கறந்து கொடுத்து பருகச் சொன்னார், அவர் யார் என்று அறியாமலேயே அவரை நன்கு உபசரித்தார், அவர் சாதாரண மனிதரல்ல, சித்தர்களில் முதன்மையானவர், தனக்கு செய்த தொண்டால் மகிழ்ந்த அந்த சித்தர் இடைகாடருக்கு ஞான உபதேசம் செய்தார், இடைக்காடர் ஞான உபதேசம் பெற்று சித்தரானார், அவரை மக்கள் இடைக்காட்டு சித்தர் என அழைக்கலானர், சித்தர் ஆன பின் அவர் மனதில் நடக்கப்போகும் நிகழ்வுகள் தெரிந்தன. அந்த நாட்டில் பன்னிரண்டு ஆண்டு காலம் மழை பெய்யாமல் பஞ்சம் தலை விரித்தாடியது,மக்களும் கால்நடைகளும் அழிவார்கள் என்பதை அவர்மனது அவருக்கு முன்கூட்டியேகூறியது, அதை உணர்ந்த சித்தர், தன்னுடைய ஆடுகளுக்கு எருக்கிலை கொடுத்து பழக்கினார், எருக்லை குருவரகு என்ற தானியத்தை சேற்றோடு குழைத்து தன் குடிசையின் சுவற்றை உடைத்து விட்டு புதிய சுவர் எழுப்பினார், எருக்கிலை குருவரகு சேற்றுக் கலலையால் எழுப்பட்ட சுவர் உறுதியாக நின்றது. சித்தரின் மனதில் தோன்றியபடியே அந்த நாட்டில் மழை இல்லாமல் பஞ்சம் நீடித்தது, அதனால் மனிதர்களும் கால்நடைகளும் அழிய தொடங்கின. பூமியில் வெடிப்புகள் பாளங்கள் தோன்றின, ஆனால் சித்தருக்கோ அவரது ஆடுகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது, அவருடைய ஆடுகள் எருக்கிலையும் குருவரகு தானியத்தையும் சேற்றில்குழைத்து சுவர் எழுப்பி இருந்த சுவரில் எங்கும் மேய்ச்சலுக்கு செல்லமுடியாத ஆடுகள் அந்த சுவரில் உடம்பைத் தேய்த்து அப்போது சுவரிலிருந்து சிதறும் தானியங்களை அவரும் அவராது கால்நடைகளும் உண்டு பசியாறின. இந்த அதிசயத்தை காண நவக்கிரக நாயகர்கள் வந்தனர், அவர்களுக்கு ஆட்டுப்பாலில் குருவரகை பாகம் செய்து விருந்து கொடுத்தார், அதைச் சாப்பிட்டவுடன் நவக்கிர நாயகர்கள் மயங்கி உறங்க தொடங்கினர், அவர்கள் இடம் மாறி இருந்ததால்தானே மழை பொய்த்தது, பஞ்சத்தால் நாட்டைத் துடிக்க வைத்துக் கொண்டு இருக்கும் கிரகங்கள் இவர்கள் தானே மழை பெய்வதற்கு எப்படி கிரகங்கள் இருக்க வேண்டுமோ அவ்வாறு அக் கிரகங்களை அமைத்தார், கிரகங்கள் சரியான இடத்தில் அமைந்தவுடன் மழை பொழிய ஆரம்பித்தது, நவக்கிரக நாயகர்கள் வழித்தெழுந்தனர், சித்தர்கள் எதையும் சாதிக்க முடியும் என்று மழை பொய்த்து இருந்த நாட்டில் மழை பொழிய வைத்து நாட்டினை செழிக்க வைத்தார் இடைக்காடர் என்ற சித்தர். இடைக்காட்டு சித்தர் திருவண்ணாமலையில் ஐயக்கியமானர், என வரலாறு கூறுகிறது. நவக்கரகங்களில் புதன் பகவானின் அம்சமாக இருப்பவர் என்று அறியப்படுகிறது, இதனால் அவரை புதன் கிழமை வணங்கினால் புதன் பகவானால் ஏற்படக்கூடிய தோசங்கள் விலகும் என்று நம்பப்படுகிறது தென்னாடுடைய சிவனே போற்றி! ஒம் நமசிவாய நம! மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

வெள்ளி, 9 ஜனவரி, 2015

பஞ்ச பூதங்களால் ஆனது உடம்பு


பஞ்ச பூதங்களால் ஆனது உடம்பு அசுத்த மாயையிலிருந்து மெய்,வாய்,கண்,மூக்கு,செவி, ஆகிய ஐம்பொறிகளும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலங்களும் வாய், கை, கால், கருவாய்,எருவாய் என்ற ஐந் தொழில் உறுப்புகுளும் உடம்பு என்ற தத்துவத்தில் பிரதிபலிக்கிறது, சித்தமே அனைத்து தத்துவங்களின் தோற்றமாக இருக்கிறது. உடம்பின் உள்ளே ஓடி ஓடி கலந்துள்ள பரம்பொருளைத் தேடித்தேடி கிடைக்காமல் வாழ்வைத் தொலைத்தவர்கள் பலர். பரம்பொருள் எங்கேயும் இல்லை, உடம்பு என்ற கோவில்தான் உள்ளது, ஐம்புலங்களை வசப்படுத்தினால் பரம்பொருளை நாம் உணரமுடியும்.இதனை திருமந்திரத்தில் திருமூலர் " உள்ளம் பெருங்கோவில் ஊன்உடம் பாலயம் வள்ளல் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தோர்க்கு சீவன் சிவலிங்ம் கள்ளப் பலன் ஐந்தும் காள மணிவிளக்கே. " திருமூலர் நமது மனமே பெரிய கோவில் அக கோவிலின் மூலட்டானம் தசையால் ஆன உடம்பு அன்பர்கள் குறிப்பறிந்து கொடுத்தருளும் இறைவனுக்கு வாயே கோபுர வாசல், நன்கு அறிந்த ஞானிகட்கு ஆன்மாவே சிவலிங்கமாகும், மனத்தை திருட்டு வழியில் இழுத்துச் செல்லும் ஐந்து புலங்களும் அழகிய விளக்காகும்,ஆலய அமைப்பு ஆண்டவன் இருப்பு யாவும் நம் உடலிலேயே உள என்பதாகும், இறைவன் ஆன்மாக்கின் பக்குவம் அறிந்து தேவைகளை கொடுத்து உதவுவதால் வள்ளல் எனப்பட்டான், இதேபோல் இன்னும் ஒரு பாடல் மூலம் ஐம்பெரும் பூதங்களால் அமைந்ததே உடம்பு என திருமந்திர பாடல் " உரம் அடி மேதினி உந்தியில் அப்பாம் விரவிய தன்முலை மேவியகீழ் அங்கி கருமுலை மீமிசை கைக்கீழில் காலாம் விரவிய கந்தரம் மேல் வெளி ஆமே." உடம்பைத் தாங்கும் பாதங்கள் மண் ஆகும், பாதம் முதல் கொப்பூழ் வரை நீர் ஆகும், கொப்பூழிலிருந்து மார்பு வரை பொருந்ததியது தீயாகும், மார்பிலிருந்து தோள் வரை காற்றாகும், கழுத்துக்கு மேல் ஆகாயமாம், உலகம் மண், நீர்,தீ, காற்று, ஆகிய ஐந்து பொருட்களால் ஆனது அதுபோல உடலங்களும் ஐம்பெரும்பூதங்களால் ஆனவை. மனித உடலை ஞான சூத்திரம் என்ற நூலில் குறிப்பிட்டு இருப்பதைப் பார்ப்போம், மனிதனுடைய முதுகுத்தண்டு மகாமேரு மலை போன்றது,அதன் உச்சி என்பது இரு புருவங்களும் கூடும் இடமான நெற்றி நடுநிலையாகும், நடுநிலைக்கு நேராக உச்சி குழுயையும் உண்ணாக்கையும் இணைத்துக் கொண்டு ஒரு நுண்ணிய துவாரம் இருக்கிறது. அதற்கு பிரம்மரந்திரம் என்று பெயர், அந்த துவாரத்தின் உள்ளே நெற்றியில் இருந்து ஏழு திரைகளுக்கு அப்பால் அமுத கலைகள் நிறைந்தும் பகலும், இரவும் அற்றதும், சத்-சித்-ஆனந்த சிற்சக்தியான சிவலிங்க சொரூபமான ஜீவன் ஜோதியாக ஒளிர்கிறது, மனித இயக்கத்ததிற்கு சீவன் இதுவே. ஆதியும் அந்தமுமாய் விளங்கும் சிவலிங்கம் ஜோதியே இறைவன், நம் உடம்புக்குள் இருப்பதைக் காண முயற்சிக்க வேண்டும், இந்த முயற்சியில் வெற்றி கண்டவர்கள் சித்தர்கள். நெற்றி நடுநிலையில் இறைவனை தாம் தெளிவாக கண்டதாகவும் அதனால் நெற்றியில் திருநீறு குங்குமம், சந்தனம், கஷ்தூரி முதலியவைகளைஇட்டு கொண்டு இறைவனை வழிபடுவதாகவும் சித்தர் தன்வந்திரி ஒரு பாடல் மூலம் கூறியிருக்கிறார். நெற்றியில் திருநீறு குங்குமம், ஏன் இட்டு கொள்ள வேண்டும் என்பது புரிகிறது அல்லவா? சித்தர்களைப்போல ஞானப் பயிற்சியால் உடம்புக்குள்ளே இறைவனைக் கண்டு முத்தி பெறுவோம், நாம் நமது குடும்பம் என்பது சந்தோசமானது என்று நினைத்துக்கொண்டு இருக்கும்போதே மரணம் நம்மை ஆட்கொண்டு விடுகிறது, உடல் தரையில் கிடக்கிறது. ஆனால் உயிர் எங்கோ போய் விடுகிறது. வாழ்க்கை நிலையில்லாதது, என்று தினமும் கண்டு கொண்டு இருந்தாலும், வாழ்க்கை மாயை என்பதை உணர மறுக்கிறோம். பஞ்சபூதங்களால் உடம்பை நாம்அறிய முயற்சிக்காமல் பரம்பொருளைக் காண வேண்டி எங்கெங்கோ தேடினால் கிடைக்கமா? மனதைத் திறந்து தேடினால் பரம்பொருளைக் காண முடியும், யோகியர்கள் ஜீவாத்மா, பரமாத்மாவிடம் ஐக்கியம் அடைவதை யோகம் என்று கூறுகிறார்கள். யோகத்தை அடைய எட்டு வழிகள் என்றும்கூறி இருக்கிறார்கள். இயமம், ஆசனம், பிராணயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற நிலைகளாகும். இயமம்: இயமம் என்பது அகிம்சை, சத்தியம், களவின்மை, பிரம்மச்சரியம், சம்மார்க்கம், தயை, பொறுமை, துணிவுடைமை, மிதமான உணவு,செளசம், என்று பத்து அம்சங்களாக வரையறுக்கப்பட்டு உள்ளது. நியமம்: நியமம் என்பது தவம், மகிழ்ச்சி, தெய்வ நம்பிக்கை, நாணம், தானம், தேவபூசை, சித்தாந்த சிரவணம், புத்தி, ஜபம், ஹோமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசனம்: ஆசனம் என்பது பத்மாசனம், சுவஸ்திகாசனம், பத்ராசனம், வஜ்ராசனம், வீராசனம் என்று கூறப்பட்டுள்ளது. பிராணாயமம்: பிராணாயமம் என்பது பிராண வாயுவை கட்டுப்படுத்தி தன் முயற்சியால் இயங்க வைப்பது, அதில் இரண்டு வகை அடிக்கடி வெளியே செல்கிற காற்றை பதினாறு மாத்திரை கால அளவு ஜபத்தியானாதிகளோடு உள்ளே வாங்கி, ஜபத்தியானங்கள் செய்து சகர்ப்பம் என்று கூறப்படுகிறது, ஜபத்தியானங்கள் இல்லாமல் பிராணாயம பயிற்சிகளை பயிலும் போது உடல் வியர்க்குமானால் அதமம் என்றும், நடுங்கினால் மத்திமம் என்றும் தரையை விட்டு எழும்புமானால் உத்தமம் என்றும் கூறப்படுகிறது, அதற்கு விகர்ப்பம் என்று பெயர், பிரத்யாஹாரம்: பிரத்யாஹாரம் என்பது உத்தம குணங்கள் நிரம்பப் பெற்று தான் எண்ணிய விருப்பங்களை அடையும் வரையில் இந்திரயங்களை வெளியே செல்லவிடாமல் தடுத்து தன் வசப்படுத்திக் கொள்வதாகும், தாரணை: தாரணை என்பது பிராண வாயுவை கால் கட்டை விரல்கள், முழங்கால்கள் தொடைகள் மூலாதாரம், இருதயம் போன்ற இடங்களில் விதிமுறையாக நிறுத்துவது, தியானம்: தியானம் என்பது இறைவனோடு மனதை லயிக்க செய்து அசைவற்றிருக்கும் நிலையாகும். சமாதி: சமாதி என்பது ஜீவாத்மா ஆனவன் பரமாத்மாவில் இருந்து வேறுபட்டவன் அல்ல என்று சமத்துவ ஐக்கிய பாவனை செய்து கொண்டு எப்போதும் இருக்கும் நிலையாகும், இவைகளையே அஷ்டாங்க யோக லட்சணம் என்று யோகிகள் கூறுகிறார்கள், ஜீவாத்மாக்கள் இறைவனை காண முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள், அவர்களில் ஒரு சிலர் தங்களுடைய ஆத்ம சாதனைகளால் இறைவனைக் கண்டு கொள்கிறார்கள், பூலோகத்தில் அவர்களை சித்தர்கள் என்கிறோம், எட்டு வகையான பெரும் சக்திகள் அஷ்டமா சித்திகள் என்று அழைக்கப்படுகிறது. அவைகளாவன, அனிமா,மகிமா, இலகுமா, கரிமா, பிராப்தி, வசித்துவம், பிராகாமியம், ஈசத்துவம் என்பன, அனிமா என்றால் உடலை சுருக்கி சிறிய அணுவைப் போல் மாறுவது, மகிமா என்பது மேருமலையைப்போல உருவத்தை பெரியதாக்குவது இலகுமா என்பது உருவத்தின் எடையை காற்றைப்போல் இலேசாக்குவது கரிமா என்றால் எடையைப் பளுவாக்குவது பிராப்தி என்றால் எல்லாவற்றையும் ஆளுதல் வசித்துவம் என்றால் மற்றவர்களை வசப்படுத்தும் தன்மையை பெறுவது பிராகாமியம் என்றால் ஒரு உடம்பில் இருக்கும் ஜீவன் வேறு உடம்புக்குள் புகுவது (கூடுவிட்டு கூடு பாய்வது) ஈசத்துவம் விரும்பியதை அடைந்து அனுபவிப்பது இத்தனை சக்திகளை தமக்குள் கொண்டவர்கள் தங்கள் ஆத்ம சாதனைகளால்அழிவற்ற அமர நிலையை அடைந்தவரகளே சித்தர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். ஓம் நமச்சிவாயம் - திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

புதன், 7 ஜனவரி, 2015

பதஞ்சலி முனிவர்


பதஞ்சலி முனிவர் அத்திரி முனிவரின் மனைவி அனுசூயா தேவியின் கற்பைச் சோதித்திடவும் அவளின் சக்தியை அறிந்திடவும், விஷ்ணு, சிவன், பிரம்மா ஆகிய மூவரும் பூலோகம் வந்து அத்திரி மகிரிசியின் ஆசிரமத்திற்கு அனுசூயா தேவியின் கற்பைஅறிந்திடவும் முனிவர்கள் வேடம் தாங்கி சென்றார்கள்,அப்போது அத்திரி முனிவர் அந்த ஆசிரமத்தில் இல்லை,முனிவர்களை வரவேற்று உபசரித்து உணவளிப்பது இல்லாளின் பண்பு அல்லவா? எனவே அனுசூயா தேவியார் ஆசிரிமம் வந்த முனிவர்களை அன்புடன் வரவேற்று உணவருந்த உபசரித்தார்கள்,அப்போது அந்த முனிவர்கள் அவளது கற்புக்கு பங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கில் " நாங்கள் சரீரத்தில் பற்று கொண்டவர்களிடம் பிச்சை ஏற்க மாட்டோம், சரீரத்தில் பற்றற்றவளாக இருந்தால் நீ உடையணிந்திருக்க மாட்டாய், எனவே நாங்கள் இங்கு உணவருந்த மாட்டோம் என்று கூறி எழுந்திருக்க ஆரம்பித்தார்கள், அப்போது அனுசூயா தேவி " முனிவர்களே சற்று பொறுங்கள் " என்றாள்,பின் ஆசிரமத்தின் உள்ளே சென்று கையில் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு வந்தாள், மனத்துக்குள் " இவர்கள் கபட முனிவர்களாக இருந்தால் குழந்தைகளாக மாறக் கடவது " என்று சபித்து, தீர்த்தத்தை அவர்கள் மேல் தெளித்தாள், அவர்கள் மூவரும் பச்சிளம் குழந்தைகளாக உருமாறினர், உடனேஅக்குழந்தைகளுக்கு பாலூட்டி உணவூட்டினாள், பூலோகம் சென்ற தங்கள் கணவர்களை காணாத பார்வதி, லட்சுமி, சரஷ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்கள் பூலோகத்திலுள்ள அத்திரி முனிவரின் ஆசிரமத்திற்கு அனுசூயா தேவியை நாடி வந்தனர், வந்து தங்கள் கணவர்கள் எங்கே என வினவினர், அவர்களுக்கு குழந்தையாக இருந்த மூவரையும் அனுசூயா தேவி காட்டினாள், உடனே இவர்கள் மூவரும் கபட நாடகம் ஆடியதால் குழந்தைகளாக ஆனார்கள் என்பதை அனுசூயாதேவி விளக்கினாள், அப்போது குழந்தைகள் மூவரும் சுய உருவம் பெற்று தம்பதிசமேதராய் நின்று உன்னுடைய கற்பு போற்றுதலுக்குரியது, கற்பினால் எதையும் சாதிக்க முடியும் என்பதை செய்து காட்டினாய், என்று கூறி வாழ்த்தி மறைந்தார்கள், கற்புக்கரசி அனுசூயா தேவிக்கும் அத்திரி முனிவருக்கும் பிறந்தவர்தான் பதஞ்சலி முனிவர், தந்தைஅத்திரி முனிவர் மகன் பதஞ்சலி முனிவருக்கு மானிட உடல் ரகசியத்தைப் பற்றி உபதேசித்தார், அந்த யோக மார்க்கத்தை முதலில் அருளியவர் ஹிரண்யகர்ப்பர் என்ற முனிவர் ஆவார், ஒரு யோகி தன் உடல் உருவத்தின் மீது சம்யமம் செய்து பிறர் கண்களுக்கு புலப்படும் தன்மை உடலுக்கு இல்லாமல் செய்து மற்றவர் பார்வையில் படாமல் மறைந்து விடுவர்,அப்படிப்பட்ட சக்தியை யோக சூத்திரத்தின் மூலம் அருளியவர் பதஞ்சலி முனிவர், தில்லை யம்பலத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தான் இயற்றிய வியாகரண சூத்திரத்தை சீடர்களுக்கு உபதேசிக்க எண்ணம் கொண்டிருந்தார் பதஞ்சலி முனிவர்,எப்போதும் உடலை மறைத்துத்தான் சீடர்களுக்கு உபதேசம் செய்வார், அன்றைய தினம் ஆதிசேஷன் உருவில் அமர்ந்து சீடர்களுக்கு உபதேசம் செய்ய எண்ணி திரையால் தன்னை மறைத்துக்கொண்டு உபதேசம் செய்து கொண்டிருந்தார், அப்போது திரை மறைவில் இருந்து கடும் விஷம் போன்ற மூச்சுக்காற்று வெளிவர சூத்திரத்தை உபதேசித்துக் கொண்டிருந்தார், இதுவரை மறைந்து உபதேசித்த குரு திரைமறைவில் இருந்தாலும், அருகே இருந்து உபதேசம் செய்கிறாரே என்ற சந்தோசத்தில் சீடர்கள் அடைந்தார்கள், அப்போது ஒரு சீடர் இன்பம்,துன்பம் இல்லாத நிலை எப்போது ஏற்படும்? என்றார், அதற்கு குருவான பதஞ்சலி முனிவர் " அஷ்டமா சித்திகளை அடையாளம் கண்டு கொண்டுஐம்புலங்களையும் வசப்படுத்தினால், இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றாக பார்க்கும் நிலை ஏற்படும் என்றார் திரைமறைவில் இருந்த குரு பதஞ்சலி முனிவர், அப்போது ஒரு சீடர் இதுவரை நாம் குருவை பார்த்ததில்லையே அருகே இருக்கும் திரையை அகற்றினால் குருவின் தரிசனம்கிடைத்து விடுமே என்ற பேராவில் திரையை விலக்கினார், அடுத்த வினாடி ஆதிசேஷனின் கடுமையான விஷக்காற்று பட்டு சீடர்கள் அனைவரும் எரிந்து சாம்பலானார்கள், வருத்தமடைந்த பதஞ்சலி முனிவர் அரூபமாக மாறினார், அப்போது வெளியில் சென்றிருந்த கெளடபாதர் என்ற சீடர் உள்ளே வந்து சீடர்கள் எல்லாம் சாம்பலாகி இருப்பதை அறிந்து கதறினார், அப்போது குரு பதஞ்சலி முனிவர் அசரீரியான குரலில் கெளடபாதரே கவலைப்படாதே இது குருவைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலால் ஏற்பட்ட விபரீதமே, இந்த சூழ்நிலையில் தியானம் தான் உனக்கு தேவை தியானத்தில் அமர்ந்து நடந்தவைகளை மறந்து மனத்தைக் கட்டுப்படுத்து என்று உபதேசித்தார், கெளடபாதர் மனதைக் கட்டுபடுத்தி தெளிந்த மனத்தில் தியானித்தார், அவருக்கு பதஞ்சலி முனிவர் தான் கற்ற வித்தைகளளையும் வியாகரண சூத்திரத்தையும் கற்றுக்கொடுத்தார், ஒருநாள் யோக சூத்திரத்தில் உள் ஆழ்ந்த மூலாதாரத்தில் கனலை எழுப்பி யோக சாதனையல் ஈடுபட்டபோது கெளடபாதருக்கு பதஞ்சலி முனிவர் தரிசனம் கொடுத்ததாகக் கூற்ப்படுகிறது, அதன்பின் பதஞ்சலி முனிவர் ராமேஷ்வரத்தில் ஜீவ சமாதி ஆனார், பதஞ்சலி முனிவர் வியாழ பகவானின் ஆதிக்கம் பெற்றவராக இருக்கிறார், அதனால் பதஞ்சலி முனிவரை வியாழக்கிழமை வழிபட்டால் குருதோச நிவர்த்தியைப் பெறலாம், ஓம் நமசிவாய நம! மேலும்பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

உயிர்கள் அனைத்துமே விருப்பமுடன் எதிர்நோக்கும் ஒரே விஷயம், ஆனந்தம். எறும்பு முதல் நான் முகன் வரை எப்போதும் நாடுவது ஆனந்தத்தையே! ஆனால் அது எளிதில் வாய்ப்பதாக இல்லை. துன்பங்களே அனைவர் வாழ்விலும் மிகுந்து காணப்படுகின்றன. இதற்குக் காரணத்தைத் தேடி எங்கும் அலையத் தேவையில்லை." ஆசையே துன்பத்திற்குக் காரணம்' என்று அனைத்து அருளாளர்களும் உரைத்துள்ளனர். அந்த ஆசைகள் நீங்காதவரை" ஆனந்தம்' என்பதை அனுபவிக்கவே முடியாது. மண், பெண், பொன்னின் மூலம் இன்பம் கிடைப்பதாகப் பலர் எண்ணுகிறோம். ஆனால் இந்த இன்பங்கள் நிலைப்பதில்லை. காலச்சக்கரத்தின் சுழற்சியில், இன்பங்களாக நாம் கருதிய விஷயங்கள்பல, நீர்மேல் குமிழ்களாக மறைந்து விடுகின்றன. மேலும் மரணம் என்பது ஆண்டியென்றோ,அரசனென்றோ வேறுபாடு பார்க்காமல் எந்தப் பொழுதிலும் தீண்டிவிடும். மரணத்துக்குப் பின் நாம் செய்த புண்ணிய - பாவங்களைத் தவிர வேறு எதுவுமே நம்மோடு வரப் போவதில்லை. இந்த இரண்டும், நமது மறுபிறவிக்கும் காரணமாய் அமைகின்றன. இதனால்தான் உலகியல் இன்பங்களைச் "சிற்றின்பம்' என்றிகழ்கின்றனர் மேலோர். எனவே அழியாத ஆனந்தத்தை அடைய வேண்டியது அவசியம். அந்த நிலைத்த ஆனந்தம் எதிலுள்ளது...?அது' பரமாத்மாவை அடைவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும்' என்பதே அருளாளர்களின் அறிவுரை. பரமாத்மாவை அடைவது மட்டுமல்ல, அதற்காகச் செல்லும் பாதையே ஆனந்தகரமானதுதான்! "ஆசையே துன்பத்திற்குக் காரணம்' என்ற மகான்கள், ஆண்டவன் மீது ஆசை வைப்பதை மட்டும் வலுவாக ஆதரிக்கின்றனர்.”ஹேசிஹேசிமாஜஆஸ! ஜன்மஜன்மீம்துஜாதாஸ' என்று பாடுகின்றார் துகாராம் சுவாமிகள். "எனக்கு ஒரேயொரு ஆசைதான் எப்போதும் உள்ளது; உன் பக்தனாக எல்லாப் பிறவிகளிலும் நான் பிறக்க வேண்டுமென்பதே அது 'என்பது அவ்வரிகளின் பொருள். பாருங்கள்! "பிறவாமை' என்ற நிலையை அடைவது மட்டுமே ஆன்மீகத்தின் உச்சம் என்பது உண்மைதான் என்றாலும்,"இறையடியாராகப் பிறக்க முடியுமெனில் எத்தனை ஜன்மங்கள் வேண்டுமானாலும் மண்ணில் பிறக்க விரும்புகின்றோம்' என்பதே பக்தர்களின் இதயநாதமாக இருக்கின்றது. ஸ்ரீநடராஜப்பெருமானின் குனித்தபுருவத்தையும், கொவ்வைச் செவ்வாயையும், பனித்த சடையையும், பவளம்போல் மேனியில் பால் வெண்ணீற்றையும், இனித்த முடைய எடுத்த பொற்பாதத்தையும் பார்த்துப் பார்த்து உருகிய அப்பர் பெருமான், "மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே' என்று அடித்துச் சொல்கின்றார். பிறவாமை எனும் வரத்தினை, ஊர்த்துவ தாண்டவமாடும் பரமேஸ்வரனிடம் யாசித்த காரைக்கால் அம்மையார், "ஒருவேளை நான் மறுபடி பிறக்க வேண்டுமெனில், உன்தாளிணைகளை மறவாமல் இருக்க வேண்டும்' என்று இறைஞ்சுகிறார். உண்மையான பக்தர்கள், பிறப்பெடுப்பதைக்கூட" ஆனந்த அனுபவமாகவே' கருதுகின்றனர். 'மனித்தப்பிறவி' என்று வலியுறுத்திய அதே அப்பரடிகள்,"புழுவாய்பிறக்கினும் புண்ணியா! உன்னடி என் மனத்தேவழுவாதிருக்கவரம் தரவேண்டும்' என்றுபாடி, சிவபெருமான்மீது, தான் வைத்துள்ள பேரன்பை வெளிப்படுத்துகிறார். "எனக்கு நரஜன்மம் வாய்க்காமல், புழுஜன்மம் கிடைத்தாலும் பரவாயில்லை; ஈசனே! உனது திருவடிகளை மறவாத புழுவாக நான் இருந்தால் போதும் 'என்கிற போது அப்ப ரடிகளின் அன்புள்ளம் இமயமாய் உயர்ந்திருப்பதை உணரமுடிகிறதல்லவா? "ஹேசிமஜகடோஜன் மஜன்மாந்தரீம்! மாகணே ஸ்ரீஹரிநாமதுஜே' என்று பாடியுள்ளார் நாமதேவசுவாமிகள். ""இறைவனே! எனக்கு எத்தனைப் பிறவிகளை வேண்டுமானாலும் கொடு! ஆனால் எல்லாப் பிறவிகளிலும் உன் திருநாமங்களைச் சொல்பவனாகவே ஆக்கு''என்பதே அவர் கேட்கின்ற ஒரேவரம். எது இந்த அடியார்களை இப்படியெல்லாம் ஏங்க வைக்கிறது...? வேறொன்றுமில்லை! சாதாரண மனிதர்கள், புலன்களால் கட்டுண்டு கிடக்கின்றனர். அந்தப் புலன்களால் நுகரப்படும் விஷயங்களே இன்பம் என எண்ணி, "மாயை'யினால் தடுமாறுகின்றனர். அந்த இன்பங்களோ கழுவப்படும் மீன்களில் நழுவிப் போகும் மீன்கள் போல் துள்ளி மறைகின்றன. அப்போது," ஏன்பிறந்தோம்?' என்று நொந்து, நொந்து, நோயில் விழுந்து, பாயில்படுத்து, துவைத்தெடுக்கப்பட்டு சவமாகிப் போகின்றனர். பரிதாபம்! ஆனால் மகான்களோ புலன்களை சிற்றின்பத்தின் பாதையில் செல்ல விடுவதேயில்லை. அவர்கள், தங்கள் மனதால் இறைவனையே சிந்திக்கின்றனர்! கண்களால் அவனுடைய திருமேனி அழகை ரசிக்கின்றனர்! காதுகளால் அவனது திவ்விய சரிதங்களைக் கேட்டு மகிழ்கின்றனர்! நாவினால் அவன் திருநாமங்களைச் சொல்லி இனிக்கின்றனர்! கரங்களால் ஈசனது ஆலயங்களில் உழவாரப்பணி செய்து உவகை கொள்கின்றனர்!" சேர்ந்தறியாக்கையானை' நோக்கிக் கை கூப்பி நெகிழ்கின்றனர்! கால்களால் அவனது ஆலயத்தை வலம் வருகின்றனர்...இப்படி ஈசனுக்காகவே ஐம்புலன்களையும் அர்ப்பணித்துவிட்டதால், முக்தியில் கிடைக்கும் இன்பத்தை இங்கேயே அனுபவித்து,"ஜீவன் முக்தர்களாக' வலம் வருகின்றனர். அதனால் இந்த உலகம் நமக்குத் தெரிவதுபோல நரகமாக அவர்களுக்குத் தெரிவதில்லை; ஆனந்தபுவனமாகவே அகிலத்தைக் காண்கின்றனர். யாருக்கு எந்த நதியைப் பார்த்தாலும் பரமேஸ்வரனின் சடையிலிருந்து பெருகும் கங்கையாகவே தோன்றுகிறதோ, மலைகள் எல்லாம் கயிலையாகத் தெரிகின்றதோ, மேகங்கள் வெண்ணீற்றை நினைவுபடுத்துகின்றதோ, நீலவானம் நீலகண்டத்தை நினைவூட்டுகின்றதோ, பசுக்களைப் பார்க்கும்போது பசுபதி நாதனின் கருணை புலப்படுகின்றதோ.. அட..! சுடுகாட்டைப் பார்த்தாலும்," பேய் வாழ்காட்டகத்தாடும் பிரானின்' மீது அன்பு மேலிடுகிறதோ அவர்களுக்கு "மோட்சபூமி' என்ற ஒன்று தனியே தேவைப்படவாபோகின்றது? எறும்பைக் கண்டால் எறும்பியூர்! மதகஜத்தைக் கண்டாலும - சிலந்தியை கண்டாலும் ஆனைக்கா! நாரையை பார்த்தால் திருநாரையூர்! மயிலைப்பார்த்தால் மாயூரம்! வராகத்தை பார்த்தால் திருவண்ணாமலை! பாம்பு தட்டுப்பாட்டால் திருப்பாம்புரம்! ஈக்களைக் கண்டால் ஈங்கோய்மலை! புலியைப்பார்த்தால் பெரும்பற்றப் புலியூர், அல்லது திருப்புலிவனம்! சிங்கத்தைக் கண்டால் திரிபுவனம் சரபேஸ்வரர்! மாடுகளை நோக்கினால் திருவாவடுதுறை! ஆடுகளைக் கண்டால் திருவாடானை....!இப்படி எதைக் கண்டாலும் திருத்தலங்களின் நினைவுகளில் மூழ்கிப் போகிறவர்களுக்கு சரீரம் விழுந்த பிறகுதானா முக்தி நிலைவாய்க்கிறது? இல்லவேயில்லை! அப்போதைக்கு இப்போதே அந்த ஆனந்தம் வந்து விடுகிறதே! எனவே புலன்களால் உந்தப்பட்டு எழுகின்ற ஆசை மட்டுமே அபாயகரமானது! அந்த ஆசையைக் கொல்ல வேண்டும். மாறாக, புனிதர்க்கெல்லாம் புனிதரும், தேவர்களுக்கெல்லாம் தேவருமான மஹா தேவனாகிய சிவபெருமானின் மீது ஆசை வைத்து, அப்பர் பாடிய "திருஅங்க மாலை'யில் கூறப்படுவதுபோல் எல்லா அவயவங்களையும் அரனாருக்கே அர்ப்பணிக்கும் ஆசையை அளவுக் கதிகமாய்க் கொள்ளவேண்டும். அதில் மட்டும் நிரந்தர ஆனந்தம் கிடைக்கும். எவ்வாறு மலத்திலுள்ள புழுக்களுக்கு சந்தனத்தின் அருமை தெரியாதோ, அதேபோல் புலனின் பங்களில் மூழ்கிய புல்லர்களுக்கு அடியார்கள் அனுபவிக்கும் ஆனந்தம் விளங்கிக் கொள்ள முடியாதவிஷயமே! "மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்' என்று பாடுகிறாள், திருமாலின் பக்தையான ஆண்டாள். காமம் உள்ளிட்ட அறுவகை துர்குணங்களை அப்பர் பெருமான் போல் பல அடியார்கள் கண்டித்துள்ளனர். புலனின்பமே மனிதனை நரகத்தில் வீழ்த்துகிறது! ஆயின்புலன்களை வெல்வதும் கடினம்தான்! இந்நிலையில் தப்பிக்க என்னவழி? அதையும் அடியார்களே சொல்லித் தருகின்றனர். "அதே புலன்களை ஆண்டவன் பக்கம் திருப்பி விட்டால் ஆனந்தம் என்பது என்ன வென்று அக்கணமே புரிந்துவிடும்' என்று உபதேசிக்கின்றனர். ஆண்டவன் மீது வைக்கின்ற ஆசை, நாசத்தை உண்டு பண்ணாது என்பதைஅவர்கள்அறிவார்கள். அதனால்தான், ""பவளத்திருவாயால்" அஞ்சேல்' என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே'' என்றும்,""ஆசையெலாம் அடியார் அடியோ மெனும் அத்தனை ஆகாதே'' என்றும் மாணிக்கவாசகர் முழங்குகின்றார். "இப்படிப்பட்ட மேன்மை உணர்வு எளிதில் எல்லோர்க்கும் வாய்த்துவிடுமா?' என்று எவருமே மலைக்கத் தேவையில்லை."மாயை' என்னும் அம்பறாத் தூணி, மன்மத பாணங்களை ஏவி, நம்மைக் கவிழ்க்கத்தான் முயற்சிக்கும். அது வெறும் மலரம்புதானே? சிவநாமம் என்பதோ "பாசுபத' அஸ்திரம்! நாம் அந்த அஸ்திரத்தை புலன்களுக்கும், வினைப்பயன்களுக்கும் எதிராக வீசத் தொடங்கிவிட்டால் வெற்றி நிச்சயம்."வித்தக நீறணி வார்வினைப்பகைக்கு அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே' என்று பாடுகிறார் சிவ பக்தப்படையின் தளபதியாய் நிற்கும் ஆளுடைய பிள்ளையார். பிறகும் ஏன் அச்சம்? ஐந்தெழுத்தால் ஆகாதது அவனியில் ஏதும் உண்டா? எனவே உலக இன்பங்களாக நாம் கருதும் துக்கங்களை உடனடியாக விட்டொழிப்போம். ஐந்தெழுத்தின் துணைகொண்டு, பீளை உடைக் கண்களால் சிற்றம் பலத்து அரன் ஆடல்காண்போம்! அது ஆனந்தத்தாண்டவம்! தேடிப் பார்த்தாலும் இவ்வுலகினில், வேறெந்த விஷயத்தாலும் நிலைத்த ஆனந்தம் ஏற்படாது! ஆயின், திருநாவுக்கரசர் பாடியது போல," சிற்றம்பலவன் திருவடியைக் கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே?' என்று இருந்துவிட்டால் தினம் தினம் ஆனந்தமே! அந்த நிலையை அடைந்து விடின் அன்றாடம் ஆதிரை திருவிழாதான்! நம் மனமென்ற பொன்னம்பலத்தை, ஆனந்தமா நடராஜ பெருமான் ஆடுகின்ற களமாக ஆக்கிக் கொண்டால் எல்லா மாதங்களுமே "மார்கழி' யாகி, உள்ளம் குளிர்ந்து உகப்படையலாம். இந்தப்புரிதலே" ஆருத்ரா தரிசன' வைபவத்துள் அடங்கியுள்ள" சிதம்பர' ரகசியம்.

உஜ்ஜயினி காலபைரவர் சிவபெருமானின் உக்ர வடிவங்களுள் ஒன்றாக விளங்குகிறது பைரவர் திருக்கோலம். அந்தகாசுரனை அழிக்கும்பொருட்டு சிவபெருமான் தன்னிலிருந்து காலபைரவரைத் தோற்றுவித்தார். பஞ்சாக்னி நடுவே பலகாலம் கடுந்தவம் செய்து சிவபெருமானிடம் அரிய பல வரங்களைப் பெற்றான் அந்தகாசுரன்.அந்த ஆணவத்தால் வானோர்க்கு பல இன்னல்கள் புரிந்தான். அவனை வெல்ல பிரம்மா, தேவேந்திரன் முதலான யாராலும் இயலவில்லை. வேறு வழியின்றி அவர்கள் அந்தகாசுரனிடமே சென்று, உங்கள் கட்டளையை ஏற்று நடக்கிறோம். காத்தருள வேண்டும் என்று சரணடைந்தனர். போரிடுவதில் ஆண்சிங்கம் போன்றவன் நானொருவனே. எனவே நீங்களனைவரும் பெண்கள்போல் வளையலணிந்து, கண்களில் மைதீட்டி, சேலையுடுத்தி வாழவேண்டும். யாரேனும் ஆண்போல் உடையணிந்தால் அழித்துவிடுவேன் என்றான் அந்தகாசுரன். தேவர்கள் வேறு வழியின்றி அதற்குக் கட்டுப்பட்டனர். பின்னர் மந்தர மலையையடைந்து சிவபெருமானைக் குறித்து தவம் செய்தனர். அவர்களுக்கு காட்சிகொடுத்த சிவபெருமான், அந்தகாசுரனின் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவதாகக் கூறினார். அதன்படி தனது அம்சமாக பைரவரை உருவாக்கி அனுப்பினார். கடுங்கோபத்துடன் சென்ற பைரவர் அந்தகாசுரனின் சேனைகள் அனைத்தையும் அழித்து, முடிவில் அவனை தன் சூலத்தால் குத்தித் தூக்கினார். இவ்வாறு பல பைரவர்களை சிவபெருமான் தோற்றுவித்ததாகச் சொல்வர். பிரம்மனின் அகந்தையை அடக்க அவரது ஒரு தலையைக் கிள்ளியதும் பைரவ சொரூபமே. இவர் கொடுமையை அழிப்பதில் எவ்வளவு கோபம் கொள்கிறாரோ அதேபோன்று கருணை புரிவதிலும் இணையற்றவர். பக்தர்களின் பயத்தைப் போக்கி வெற்றியைத் தேடித்தருபவர் பைரவர். கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியில் பைரவர் அவதாரம் நிகழ்ந்ததாக சத்ருத்ர சம்ஹிதாவின் 8-ஆவது அத்தியாயம் குறிப்பிடுகிறது. அனைத்து சிவாலயங்களிலும் பைரவர் சந்நிதி இருப்பதைக் காணலாம். இவரே அனைத்திற்கும் காவல் தெய்வமாக விளங்குகிறார். இவர் தனி ஆலயங்களில் பிரசித்தி பெற்று விளங்கும் தலங்களும் உண்டு. அவற்றிலொன்று உஜ்ஜயினி காலபைரவர் ஆலயம். மகாராஷ்டிர மாநிலம், ஜெய்ப்பூர் நகருக்கு அருகேயுள்ள உஜ்ஜயினி காலபைரவர் ஆலயம் உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்களை தன்பால் இழுக்கிறது. இவ்வாலயத்தில் அஷ்டமி திதியில் பைரவ பூஜை செய்தால் எதிரிகள் அழிவர்; எத்தகைய நோயும் குணமாகும்; இழந்தவற்றை மீண்டும் பெறலாம் என்று நம்பிக்கையோடு கூறுகின்றனர். இவ்வாலயத்தில் விசித்திரமான ஒரு வழக்கம் உள்ளது. மதுவை சமர்ப்பிக்கும் வழக்கமும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு கிண்ணத்தில் மதுவை நிரப்பி பைரவரின் வாயருகில் வைக்கிறார் பூசாரி. என்ன ஆச்சரியம். மெல்ல மெல்ல அந்த மது பாதிக் கிண்ணம் அளவுக்கு குறைந்து விடுகிறது. பக்கத்தில் எங்கும் வழிவதில்லை. பல ஆய்வாளர்கள் இந்த பீடத்தை சோதித்தும் பார்த்துவிட்டனர். மது உறிஞ்சப்படும் மாயம்தான் தெரியவில்லை. இதைக் காணவே பல வெளிநாட்டினர் இங்கு வருகிறார்கள். இவ்வாலயத்துக்குப் பின்னால் குகைக்குள் பாதாள பைரவி சந்நிதி இருக்கிறது. இங்கே தந்திர பூஜைகள் செய்யப்படுகின்றன. கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும், இங்கே வழிபடுபவர்களின் பிரச்சினைகள் நிச்சயம் அகலுகின்றன என்கிறார்கள் பக்தர்கள்.

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

ஆழ் மனதின் அற்புத சக்திகள்ஆழ் மனதின் அற்புத சக்திகள்


ஆழ் மனதின் அற்புத சக்திகள்ஆழ் மனதின் அற்புத சக்திகள் நீங்கள் ஒரு தொழிலைச் செய்ய எண்ணும் போது என்ன மனப்பாண்மையில் ஈடுபடுகிறீர்களோ, அதற்கேற்ப உங்கள் செயல் வெற்றி - தோல்வியை அடைகிறது, வெற்றி மனப்பான்மையுடன் செயல் பட்டால் வெற்றியும், தோல்வி மானப்பான்மையுடன் தன்னம்பிக்கையற்று செயல்பட்டால் தோல்வியையும் அடைகிறீர்கள், ஆகவே வெற்றியும், தோல்வியும் உங்கள் மனப்பான்மையிலிருந்து உருவெடுக்கிறது, மன்ப்பான்மை என்பது, உங்கள் உள்ளத்தில் தொடர்ந்து நிலைபெறும் சிந்தனைதான் மனப்பான்மையாக மாறுகிறது, வெற்றி என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கும் மனச்சித்திரங்களே வெற்றி சிந்தனை , இது மீண்டும் மீண்டும் பதிவாகும் போது வெற்றி மனப்பான்மையாகமாறுகிறது, நீங்கள் விரும்பினால் மனச்சித்திரத்தை மாற்றி ஆழ் மனம் (இதனை சமயோசித அறிவாகக் கொள்ளலாம்) கட்டளை உஙகளுக்கு கைகொடுக்கும், ஆழ்மனக் கட்டளை மூலமும், மனச்சித்திரங்கள் மூலமும் வெற்றி மனோபாவத்தை உருவாக்கிட முடியும், நீங்கள் ஆழ்மனச்சக்தியை பெருக்கி கொண்டால் உழைப்பில் பத்தில் ஒருபங்கு குறைந்தாலும், விளைவு பத்து மடங்காக உயர்ந்திட முடியும், கடும் உழைப்பிற்கு ஈடு இணை இல்லை என்பதை ஆழ்மனத்திற்கு ஈடு இணை இல்லை என்ற புது பழமொழியை புரிந்து கொள்ளலாம், ஆழ்மனதை ஒரு தேவதை என்றே கூறலாம், அது ஆற்றல் மிக்க தேவதை, உங்களுக்கு விசுவாசமான தேவதை. நீங்கள் கேட்பதை பெற்றுத தரும் சக்தி உண்டு,ஆக அது தேவதையோ, அரக்கனோ என்பது நீங்கள் கொடுக்கும் கட்டளையைப் பொருத்தது. உங்கள் கட்டளையின் எண்ணம் முறன்பாடானால் கிடைப்பதும் முறன்பாடாகவே அமையும், உங்களின் ஆழ்மனச்சக்தி பெருகி விட்டால் நீங்கள் நினைத்ததை விரும்பியவாறு அடைய முடியும். இதன் கருத்தை கொண்டே ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு " Positive thinking always ever success Nagative thinking always never success" எவராயினும், எந்நிலையிலும், ஆழ்மனக்கட்டளையை நம்பிககையோடு கொடுத்து அடையப்போகிறோம் என்னும் விசுவாசத்தை வளர்த்து நினைத்ததை நினைத்தபடியே அடைய முடியும். வேண்டியதை விரும்பியபடியே பெற முடியும். ஒரு குறிக்கோளுக்கான கட்டளையை மட்டும் தேர்வு செய்து கொள்ள வேண்டும், மற்ற விருப்பு வெறுப்பு ஆசைகளை விலக்கி வைத்துவிட்டு, உறங்குவதற்கு முன் படுக்கையில் சம்மனமிட்டு - தியானத்திற்கு அமர்வது போன்று - சுவாசத்தில் ஆழ்மனதை முழுவதையும் கவனத்தில் குவித்தால் எண்ண அலைகள் அடங்கும், நீங்கள் தேர்ந்தெடுத்த ஆழ்மனக்கட்டளையை உணர்ச்சியுடன் , ஒலி நயத்துடன், உதட்டசைவுடன் உருவேற்றுக. உங்கள் குறிக்கோள் நிறைவேறி விட்டது போன்ற நிலையை மனச்சித்திரமாக கற்பனையில் காண்க. இதனை உறங்குவதற்கு முன்பும், உறங்கி எழுந்த பின்னும் தினமும் 30 நிமிடங்கள் கட்டளை கொடுத்தால், உங்கள் ஆழ்மனம் அற்புதமாக செயல்பட தொடங்கிவிடும். ஆழ்மனம் என்பது ஐம்புலங்களால் அறிய இயலாது ஆனால் அதன் விளைவை ஐம்புலங்களால் அறிய முடியும், நிறைவேற போகிறது என்ற நம்பிக்கையுடன் கட்டளை கொடுங்கள். அப்போது ஆழ்மனத்தின் அற்புத சக்தி வெளிப்படும். ஆழ்மனக்கட்டளையை குறிக்கேளுக்கும். தேவைக்கு தக்கபடி நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். உருவாக்கிய கட்டளைகளை உங்களை சுயகருத்தேற்றம் செய்யும் போது வெற்றி உங்களை அடையும். நம் வாழ்க்கை என்பது நம்எண்ணத்தால் உருவாக்கப்படுகிறது. எண்ணத்திற்கேற்ப வாழ்க்கை. எண்ணம் என்பது தொடர்மன சித்திரமே. எணணம் - செயல் ஆகிறது, செயல் - பழக்கம் ஆகிறது, பழக்கம் - வழக்கமாகிறது. வழக்கம் உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. ஆழ்மனக்கட்டளை , மனச்சித்திரம் இவ்விரு உத்திகளையும் ஒரே சமயத்தில் தொடர்ந்து பயன்படுத்தும்போது உங்கள் மனோசக்தி பெருக்கம் அடைகிறது. சிந்தனையிலிருந்து - செயல் பிறக்கிறது. மனத்தின் எண்ணமே செயலுக்கு ஊக்கம் . எண்ணம் திண்ணம் பெறும்போது நிைன்த்ததை அடைய வெற்றியாக முடிகிறது. ஆழ்மனக்கட்டளையும. மனச்சித்திரமும் சேர்ந்தது தியானம் - தியானம் தவம் எனப்படுகிறது. தவ வலிமையால் நம் முன்னோர்கள் நம்ப வியலாத அற்புதமான சாதனைகளை செய்ததனர் என்பதை நாம் அறிவோம். ஆழ்மன கட்டளை கொடுக்கும்போதே அதற்கேற்ப மனச்சித்திரம் வரைவதன் மூலம் நீங்கள் அற்புதங்களை நிகழ்த்துபவராக மாறிவிடுகிறீர்கள். உங்களின் நீண்டகால குறிக்கோள்களான தியானம் செய்யும் போது உங்களது நம்பிக்கை ஒரு மந்திர சக்தியாகவே பெருக்கெடுக்கிறது. எனவே ஆழ்மன சிந்தனை - தியானம் மூலம் வெற்றி நிச்சயம் நீங்கள் ஒரு தொழிலைச் செய்ய எண்ணும் போது என்ன மனப்பாண்மையில் ஈடுபடுகிறீர்களோ, அதற்கேற்ப உங்கள் செயல் வெற்றி - தோல்வியை அடைகிறது, வெற்றி மனப்பான்மையுடன் செயல் பட்டால் வெற்றியும், தோல்வி மானப்பான்மையுடன் தன்னம்பிக்கையற்று செயல்பட்டால் தோல்வியையும் அடைகிறீர்கள், ஆகவே வெற்றியும், தோல்வியும் உங்கள் மனப்பான்மையிலிருந்து உருவெடுக்கிறது, மன்ப்பான்மை என்பது, உங்கள் உள்ளத்தில் தொடர்ந்து நிலைபெறும் சிந்தனைதான் மனப்பான்மையாக மாறுகிறது, வெற்றி என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கும் மனச்சித்திரங்களே வெற்றி சிந்தனை , இது மீண்டும் மீண்டும் பதிவாகும் போது வெற்றி மனப்பான்மையாகமாறுகிறது, நீங்கள் விரும்பினால் மனச்சித்திரத்தை மாற்றி ஆழ் மனம் (இதனை சமயோசித அறிவாகக் கொள்ளலாம்) கட்டளை உஙகளுக்கு கைகொடுக்கும், ஆழ்மனக் கட்டளை மூலமும், மனச்சித்திரங்கள் மூலமும் வெற்றி மனோபாவத்தை உருவாக்கிட முடியும், நீங்கள் ஆழ்மனச்சக்தியை பெருக்கி கொண்டால் உழைப்பில் பத்தில் ஒருபங்கு குறைந்தாலும், விளைவு பத்து மடங்காக உயர்ந்திட முடியும், கடும் உழைப்பிற்கு ஈடு இணை இல்லை என்பதை ஆழ்மனத்திற்கு ஈடு இணை இல்லை என்ற புது பழமொழியை புரிந்து கொள்ளலாம், ஆழ்மனதை ஒரு தேவதை என்றே கூறலாம், அது ஆற்றல் மிக்க தேவதை, உங்களுக்கு விசுவாசமான தேவதை. நீங்கள் கேட்பதை பெற்றுத தரும் சக்தி உண்டு,ஆக அது தேவதையோ, அரக்கனோ என்பது நீங்கள் கொடுக்கும் கட்டளையைப் பொருத்தது. உங்கள் கட்டளையின் எண்ணம் முறன்பாடானால் கிடைப்பதும் முறன்பாடாகவே அமையும், உங்களின் ஆழ்மனச்சக்தி பெருகி விட்டால் நீங்கள் நினைத்ததை விரும்பியவாறு அடைய முடியும். இதன் கருத்தை கொண்டே ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு " Positive thinking always ever success Nagative thinking always never success" எவராயினும், எந்நிலையிலும், ஆழ்மனக்கட்டளையை நம்பிககையோடு கொடுத்து அடையப்போகிறோம் என்னும் விசுவாசத்தை வளர்த்து நினைத்ததை நினைத்தபடியே அடைய முடியும். வேண்டியதை விரும்பியபடியே பெற முடியும். ஒரு குறிக்கோளுக்கான கட்டளையை மட்டும் தேர்வு செய்து கொள்ள வேண்டும், மற்ற விருப்பு வெறுப்பு ஆசைகளை விலக்கி வைத்துவிட்டு, உறங்குவதற்கு முன் படுக்கையில் சம்மனமிட்டு - தியானத்திற்கு அமர்வது போன்று - சுவாசத்தில் ஆழ்மனதை முழுவதையும் கவனத்தில் குவித்தால் எண்ண அலைகள் அடங்கும், நீங்கள் தேர்ந்தெடுத்த ஆழ்மனக்கட்டளையை உணர்ச்சியுடன் , ஒலி நயத்துடன், உதட்டசைவுடன் உருவேற்றுக. உங்கள் குறிக்கோள் நிறைவேறி விட்டது போன்ற நிலையை மனச்சித்திரமாக கற்பனையில் காண்க. இதனை உறங்குவதற்கு முன்பும், உறங்கி எழுந்த பின்னும் தினமும் 30 நிமிடங்கள் கட்டளை கொடுத்தால், உங்கள் ஆழ்மனம் அற்புதமாக செயல்பட தொடங்கிவிடும். ஆழ்மனம் என்பது ஐம்புலங்களால் அறிய இயலாது ஆனால் அதன் விளைவை ஐம்புலங்களால் அறிய முடியும், நிறைவேற போகிறது என்ற நம்பிக்கையுடன் கட்டளை கொடுங்கள். அப்போது ஆழ்மனத்தின் அற்புத சக்தி வெளிப்படும். ஆழ்மனக்கட்டளையை குறிக்கேளுக்கும். தேவைக்கு தக்கபடி நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். உருவாக்கிய கட்டளைகளை உங்களை சுயகருத்தேற்றம் செய்யும் போது வெற்றி உங்களை அடையும். நம் வாழ்க்கை என்பது நம்எண்ணத்தால் உருவாக்கப்படுகிறது. எண்ணத்திற்கேற்ப வாழ்க்கை. எண்ணம் என்பது தொடர்மன சித்திரமே. எணணம் - செயல் ஆகிறது, செயல் - பழக்கம் ஆகிறது, பழக்கம் - வழக்கமாகிறது. வழக்கம் உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. ஆழ்மனக்கட்டளை , மனச்சித்திரம் இவ்விரு உத்திகளையும் ஒரே சமயத்தில் தொடர்ந்து பயன்படுத்தும்போது உங்கள் மனோசக்தி பெருக்கம் அடைகிறது. சிந்தனையிலிருந்து - செயல் பிறக்கிறது. மனத்தின் எண்ணமே செயலுக்கு ஊக்கம் . எண்ணம் திண்ணம் பெறும்போது நிைன்த்ததை அடைய வெற்றியாக முடிகிறது. ஆழ்மனக்கட்டளையும. மனச்சித்திரமும் சேர்ந்தது தியானம் - தியானம் தவம் எனப்படுகிறது. தவ வலிமையால் நம் முன்னோர்கள் நம்ப வியலாத அற்புதமான சாதனைகளை செய்ததனர் என்பதை நாம் அறிவோம். ஆழ்மன கட்டளை கொடுக்கும்போதே அதற்கேற்ப மனச்சித்திரம் வரைவதன் மூலம் நீங்கள் அற்புதங்களை நிகழ்த்துபவராக மாறிவிடுகிறீர்கள். உங்களின் நீண்டகால குறிக்கோள்களான தியானம் செய்யும் போது உங்களது நம்பிக்கை ஒரு மந்திர சக்தியாகவே பெருக்கெடுக்கிறது. எனவே ஆழ்மன சிந்தனை - தியானம் மூலம் வெற்றி நிச்சயம்