புதன், 7 ஜனவரி, 2015

பதஞ்சலி முனிவர்


பதஞ்சலி முனிவர் அத்திரி முனிவரின் மனைவி அனுசூயா தேவியின் கற்பைச் சோதித்திடவும் அவளின் சக்தியை அறிந்திடவும், விஷ்ணு, சிவன், பிரம்மா ஆகிய மூவரும் பூலோகம் வந்து அத்திரி மகிரிசியின் ஆசிரமத்திற்கு அனுசூயா தேவியின் கற்பைஅறிந்திடவும் முனிவர்கள் வேடம் தாங்கி சென்றார்கள்,அப்போது அத்திரி முனிவர் அந்த ஆசிரமத்தில் இல்லை,முனிவர்களை வரவேற்று உபசரித்து உணவளிப்பது இல்லாளின் பண்பு அல்லவா? எனவே அனுசூயா தேவியார் ஆசிரிமம் வந்த முனிவர்களை அன்புடன் வரவேற்று உணவருந்த உபசரித்தார்கள்,அப்போது அந்த முனிவர்கள் அவளது கற்புக்கு பங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கில் " நாங்கள் சரீரத்தில் பற்று கொண்டவர்களிடம் பிச்சை ஏற்க மாட்டோம், சரீரத்தில் பற்றற்றவளாக இருந்தால் நீ உடையணிந்திருக்க மாட்டாய், எனவே நாங்கள் இங்கு உணவருந்த மாட்டோம் என்று கூறி எழுந்திருக்க ஆரம்பித்தார்கள், அப்போது அனுசூயா தேவி " முனிவர்களே சற்று பொறுங்கள் " என்றாள்,பின் ஆசிரமத்தின் உள்ளே சென்று கையில் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு வந்தாள், மனத்துக்குள் " இவர்கள் கபட முனிவர்களாக இருந்தால் குழந்தைகளாக மாறக் கடவது " என்று சபித்து, தீர்த்தத்தை அவர்கள் மேல் தெளித்தாள், அவர்கள் மூவரும் பச்சிளம் குழந்தைகளாக உருமாறினர், உடனேஅக்குழந்தைகளுக்கு பாலூட்டி உணவூட்டினாள், பூலோகம் சென்ற தங்கள் கணவர்களை காணாத பார்வதி, லட்சுமி, சரஷ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்கள் பூலோகத்திலுள்ள அத்திரி முனிவரின் ஆசிரமத்திற்கு அனுசூயா தேவியை நாடி வந்தனர், வந்து தங்கள் கணவர்கள் எங்கே என வினவினர், அவர்களுக்கு குழந்தையாக இருந்த மூவரையும் அனுசூயா தேவி காட்டினாள், உடனே இவர்கள் மூவரும் கபட நாடகம் ஆடியதால் குழந்தைகளாக ஆனார்கள் என்பதை அனுசூயாதேவி விளக்கினாள், அப்போது குழந்தைகள் மூவரும் சுய உருவம் பெற்று தம்பதிசமேதராய் நின்று உன்னுடைய கற்பு போற்றுதலுக்குரியது, கற்பினால் எதையும் சாதிக்க முடியும் என்பதை செய்து காட்டினாய், என்று கூறி வாழ்த்தி மறைந்தார்கள், கற்புக்கரசி அனுசூயா தேவிக்கும் அத்திரி முனிவருக்கும் பிறந்தவர்தான் பதஞ்சலி முனிவர், தந்தைஅத்திரி முனிவர் மகன் பதஞ்சலி முனிவருக்கு மானிட உடல் ரகசியத்தைப் பற்றி உபதேசித்தார், அந்த யோக மார்க்கத்தை முதலில் அருளியவர் ஹிரண்யகர்ப்பர் என்ற முனிவர் ஆவார், ஒரு யோகி தன் உடல் உருவத்தின் மீது சம்யமம் செய்து பிறர் கண்களுக்கு புலப்படும் தன்மை உடலுக்கு இல்லாமல் செய்து மற்றவர் பார்வையில் படாமல் மறைந்து விடுவர்,அப்படிப்பட்ட சக்தியை யோக சூத்திரத்தின் மூலம் அருளியவர் பதஞ்சலி முனிவர், தில்லை யம்பலத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தான் இயற்றிய வியாகரண சூத்திரத்தை சீடர்களுக்கு உபதேசிக்க எண்ணம் கொண்டிருந்தார் பதஞ்சலி முனிவர்,எப்போதும் உடலை மறைத்துத்தான் சீடர்களுக்கு உபதேசம் செய்வார், அன்றைய தினம் ஆதிசேஷன் உருவில் அமர்ந்து சீடர்களுக்கு உபதேசம் செய்ய எண்ணி திரையால் தன்னை மறைத்துக்கொண்டு உபதேசம் செய்து கொண்டிருந்தார், அப்போது திரை மறைவில் இருந்து கடும் விஷம் போன்ற மூச்சுக்காற்று வெளிவர சூத்திரத்தை உபதேசித்துக் கொண்டிருந்தார், இதுவரை மறைந்து உபதேசித்த குரு திரைமறைவில் இருந்தாலும், அருகே இருந்து உபதேசம் செய்கிறாரே என்ற சந்தோசத்தில் சீடர்கள் அடைந்தார்கள், அப்போது ஒரு சீடர் இன்பம்,துன்பம் இல்லாத நிலை எப்போது ஏற்படும்? என்றார், அதற்கு குருவான பதஞ்சலி முனிவர் " அஷ்டமா சித்திகளை அடையாளம் கண்டு கொண்டுஐம்புலங்களையும் வசப்படுத்தினால், இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றாக பார்க்கும் நிலை ஏற்படும் என்றார் திரைமறைவில் இருந்த குரு பதஞ்சலி முனிவர், அப்போது ஒரு சீடர் இதுவரை நாம் குருவை பார்த்ததில்லையே அருகே இருக்கும் திரையை அகற்றினால் குருவின் தரிசனம்கிடைத்து விடுமே என்ற பேராவில் திரையை விலக்கினார், அடுத்த வினாடி ஆதிசேஷனின் கடுமையான விஷக்காற்று பட்டு சீடர்கள் அனைவரும் எரிந்து சாம்பலானார்கள், வருத்தமடைந்த பதஞ்சலி முனிவர் அரூபமாக மாறினார், அப்போது வெளியில் சென்றிருந்த கெளடபாதர் என்ற சீடர் உள்ளே வந்து சீடர்கள் எல்லாம் சாம்பலாகி இருப்பதை அறிந்து கதறினார், அப்போது குரு பதஞ்சலி முனிவர் அசரீரியான குரலில் கெளடபாதரே கவலைப்படாதே இது குருவைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலால் ஏற்பட்ட விபரீதமே, இந்த சூழ்நிலையில் தியானம் தான் உனக்கு தேவை தியானத்தில் அமர்ந்து நடந்தவைகளை மறந்து மனத்தைக் கட்டுப்படுத்து என்று உபதேசித்தார், கெளடபாதர் மனதைக் கட்டுபடுத்தி தெளிந்த மனத்தில் தியானித்தார், அவருக்கு பதஞ்சலி முனிவர் தான் கற்ற வித்தைகளளையும் வியாகரண சூத்திரத்தையும் கற்றுக்கொடுத்தார், ஒருநாள் யோக சூத்திரத்தில் உள் ஆழ்ந்த மூலாதாரத்தில் கனலை எழுப்பி யோக சாதனையல் ஈடுபட்டபோது கெளடபாதருக்கு பதஞ்சலி முனிவர் தரிசனம் கொடுத்ததாகக் கூற்ப்படுகிறது, அதன்பின் பதஞ்சலி முனிவர் ராமேஷ்வரத்தில் ஜீவ சமாதி ஆனார், பதஞ்சலி முனிவர் வியாழ பகவானின் ஆதிக்கம் பெற்றவராக இருக்கிறார், அதனால் பதஞ்சலி முனிவரை வியாழக்கிழமை வழிபட்டால் குருதோச நிவர்த்தியைப் பெறலாம், ஓம் நமசிவாய நம! மேலும்பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக