சித்தர்களின் ஜீவ சமாதிகள்
சித்தர்கள் எத்தனையோ பேர் இருந்து இருக்கலாம், ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய சித்தர்களே வெளி உலகத்திற்கு அடையாளம் காணப்பட்டு அவர்களின் பெயர்களும் ஐக்கியமான தலங்களும் பிரபலமாகி நாம் இன்றளவும் அவர்களின் ஜீவ சமாதிகளுக்கு சென்று வழிபட்டால்அவர்களின் நல்ஆசி நமக்கு கிடைத்து ஒரு தெய்வீக உணர்வை நமக்கு ஏற்படுத்துகிறது என்பதை நாம் அறியலாம், அதில் முக்கியமான ஜீவசமாதிகள் பழனி முருகன் கோவிலில் அமைந்துள்ள போகரின் ஜீவசமாதி, சிதம்பரம் திருமூலரின் சமாதி, மதுரையில் சுநதரானந்தர் சமாதி, திருப்பரங்குன்றம் மச்ச முனிவர்சமாதி, பாம்பாட்டி சித்தர் சங்கரங்கன்கோவில், கரூர் கரூர் சித்தர், போன்று சித்தர் ஐக்கியமான தலங்களில் உள்ள அவர்களது ஜீவ சமாதிகளை வழிபடும் போது நம் குறைகளை நிச்சயம் தீர்ப்பார்கள், என்று நம்பப்படுகிறது.
மற்றவர்கள் கண்களுக்கு தெரியாமல் மறைந்துவிடும் ஆற்றல் பெற்ற சித்தர்கள் இரண்டு மூன்ற இடங்களில் சமாதியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதை ஆராய்ந்தால் அதற்கு விடை வருகிறது. சித்தர்கள் மூச்சை அடக்கி சிலகாலம் மண்ணுக்குள் தங்கிஇருந்து விட்டு வந்தால், அரிய சக்தி கிடைக்கும் என்று எண்ணினார்கள். இதனால் அவர்கள் பலமுறை அந்த நிலையை அடைந்து இருக்கிறார்கள், உதாரணமாக பாம்பாட்டி சித்தர் மருதமலை, சங்கரன்கோவில் விருத்தாசலம் ஆகிய இடங்களில் ஜீவசமாதியானதாக கூறுகிறார்கள், மூன்று முறை மண்ணுக்குள் இருந்த இடங்களே இந்த மூன்று சமாதிகளும், மண்ணில் பல ஆண்டுகள் தவம் இருக்கும் போது உடல் அழுகிவிடாதா? காடுகளில் தனியே தவம் இருக்கும்போது மமிருகங்கள் தின்றுவிடாதா? என்ற கேள்விகள் எழுவது இயற்கைதானே?
மண்ணுக்குள் இருந்தாலும் மண் தீண்டாததால் உடல் அழுகாது, காட்டில் தவத்தில் இருக்கும் போது காட்டு தீ கொழுந்து விட்டு எரிந்தாலும் உடலில் சூடு ஏறாது, கொடிய விசப்பாம்புகள் தீண்டினாலும், உடலில் விசம் ஏறாது, காட்டாற்று வெள்ளம் வந்தாலும், தவம் செய்யும் சித்தர்களை விட்டு விலகி ஒடும், தவப்பயனால் சிவனை அறிந்து ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் என்றும் பதினாறு வயது தோற்றத்திலேயே காட்சி அளித்தார்கள் என்ற நூல்களில் கூறப்பட்டு உள்ளது. தசையும எலும்பும் நரம்பும் நோயினால் பாழ்பட்டு விட்டதே இதற்கு பரிகாரம் இல்லையா? என்று நினைக்கும் மனிதர்கள் இப்படிப்பட்ட மகான்களான சித்தர்களை வணங்கினால் வாழ்வில் திருப்பம் ஏற்படும், நாம் உலக வாழ்க்கையில் ஊறி கிடக்கும் சாதாராணமானவர்கள் , நம்மால் நம்மையே அறிய முடியவில்லையே! பஞ்ச பூதங்களை அறிந்து மனதில் நிறுத்தி தியானம் மூலமாகப் பார்த்தால் ஞானம் தோன்றும் அந்த ஞானத்தினால் இறைவன் கண்களுக்கு தென்படுவான், அத்தகைய ஞானத்தை அடைந்தவர்கள் சித்தர்கள் சித்தத்தை வென்றவர்கள் சித்தர்கள் என்று கூறலாம்,
அக்னியும் வாயும் இல்லாவிட்டால் உயிர் என்பதே இல்லை, உடல் இல்லாவிட்டால் உயிர் என்பதை எப்படி அடையாளம் காணமுடியும். உடலின் இயக்கங்கள் பஞ்ச பூதங்களால் ஏற்படுகிறது, காது கண், நாக்கு, மூக்கு தோல் இவைகள் வெளிப்படையாக செயல் படுவதில்லை, கண்களினால் நாம் பார்க்கிறோம், காதுகளினால் ஒலியை கேட்டும், நாக்கினால் சுவைத்தும், மூக்கினால் முகர்ந்தும் தொடுவதால் பரிச உணர்வைப் பெறுகிறோம், ஆகையால் இவைகள் ஞான இயந்திரங்கள் என்று அழைக்கப்படுகிறது. வெளிப்படையாக செயல்புரியும் இந்திரியங்களைக் கன்ம இந்திரங்கள் என்கிறோம், அவைகள் வாய், கால்,கை, குறி, குதம் என்பன ஆகும்,
மனம் புத்தி, அகங்காரம், சித்தம் ஆகியவை கரணங்கள் இவைகள் எல்லாம் ஆத்ம தத்துவங்களாகும், இவைகளை அறிந்தவர்களுக்கு வாசி சித்தயாகும் , வாசியின் உண்மையை புரிந்தவர்களுக்கு இணையானவர் யாரும் கிடையாது, காலம் நியதி, கலை, வித்தை, அராகம், மாயை என்பவை வித்தியாசமான தத்துவங்களாகும்,
காலம் என்பது சென்ற காலத்தின் எல்லையையும் நிகழ்காலத்தின் பலத்தையும் எதிர்காலத்தின் தன்மைகளையும் புரியச் செய்வது.
நியதி என்பது கன்மத்தின் அளவை நிச்சயம் பண்ணி நிறுத்துவது
கலை என்பது ஆணவத்தை குறைத்து ஆன்மாவை செயல்பட தூண்டுவது ஆகும்
வித்தை என்பது ஆன்மாவுக்கு அறிவை கொடுப்பது.
அராகம் என்பது அடைந்தவற்றை குறைவாகத் தோன்ற செய்து மேலும் அடையவேண்டும் என்று வேட்கையினைத் தூண்டுவது,
மாயை என்பது சிந்திக்க விடாமல் மயக்கத்தை தருவது,
வெட்ட வெளியிலே ஒன்றுமில்லா சூனியத்தை எங்கும் பரவி நிற்கும் இறைவடிவமாக பார்த்துகளிப்புறுபவர்கள், ஆத்ம தத்துவங்கள் மூலம் தன்னைத் தானே உணர்ந்தவர்கள் உடலில் இருந்து ஆத்மா பிரியும் நேரத்தை அறிந்தும் ஆத்மாவைத் தமக்குள் அடக்கி வைத்தும் ஜீவசமாதியானவர்களே சித்தர்கள். அதனால் தான் சித்தர்கள் ஐயக்கியமான இடங்களை ஜீவசமாதி என்று குறிப்பிடுகிறார்கள்.
ஜீவசமாதியை வழிபாடும்போது நம்மையறியாமல் ஒரு பத்துணர்ச்சி ஏற்படுகிறதே? நம்மிடம் ஏற்படும் புத்துணர்ச்சியின் - வைப்பிரேசன் - பொருள் என்ன என்று சிந்தித்தால் நமது உடம்பு தெய்வீக உணர்வுகளை உணர்வதே ஆகும், சித்தர்கள் நமக்கு அருள் பாலிக்கிறார்கள் என்றும் சொல்லலாம், தேவையில்லாத கற்பனைகளை நினைத்துக் கொண்டு வாழும் நம் மனதுக்கு ஆறுதலாக சித்தர்களின் சமாதிகள் அமைந்திருக்கின்றன என்றால் வியப்பில்லை. எல்லாம் அந்த சிவனின் அருள் பெற்று ஜீவசமாதியானவர்களின் நினைவு கொண்டு அவர்களின் தெய்வீக அருள்பெறுவோம்,
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாயம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக