புதன், 28 மார்ச், 2012
வள்ளற் பெருமானின் திருநெறிகள்
வள்ளற் பெருமானின் திருநெறிகள்
1) கடவுள் ஒருவரே- அவரே அருட்பெருஞ்ஜோதி
2) எல்லா உயிர்களும் நமக்குச் சகோதரர்களே
3) சாதி சமய மத இன தேச வேறுபாடுகளை காணற்க
4) தெய்வ வழிபாட்டிற்காக உயிர் பலி இடுவதை விலக்கு
5) புலால் உண்ணற்க - எவ்வுயிரையும் கொலை செய்யற்க
6) பசித்தாரது பசியைப் போக்குதலே உண்மையான ஆன்மீக வழிபாடு
7)இறந்தவர்களை தகனம் செய்யாது புதைத்திடுக
8)இந்திரிய கரண ஜீவ ஆன்ம நித்திய ஜீவகாருண்ய ஒழுக்கத்தினை கடைபிடிக்க
9) உண்மை அன்பால் கடவுள் வழிபாடு செய்க
10)உயிர்குலமே கடவுள் விளங்கும் ஆலயம்
சனி, 24 மார்ச், 2012
நான் கண்ட மகான் வள்ளலார் இராமலிங்க அடிகளார்
அருள்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருனை அருள் பெருஞ்ஜோதி!
நான் கண்ட மகான் வள்ளலார் இராமலிங்க அடிகளார்
வள்ளல் என்றாலே வாரி வழங்கும் கொடைத் தன்மையையும், அன்பின் நெகிழ்ச்சியையும் குறிக்கும், ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் வயிற்றுப் பசிக்கு அன்னம் வழங்வதோடு அல்லாமல் ஞானப் பசிக்கு ஆன்மிகத்தையும் ஊட்டி மக்களிடம் ஜீவகாருண்ய கருத்துக்களை வழங்கிய மகான் தான் வடலூர் வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகளார்
எல்லா உயிர்களிடத்தும் பாரபட்ச அன்பை காட்டிய அன்னை தெரசா போலும், ஏழை எளிய மக்களுக்காக பூமிதானம் பெற்று உழைத்து உண்டு மகிழ பூமிதான இயக்கத்தின் பெருந்தகை அண்ணல் வினேபா பாபுஜி போல் சாதிமத பேதமின்றி எல்லா இனத்தவருக்கும் பசி என்னும் கொடு நோயை போக்கிட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை ஏற்படுத்தி , புண்ணியங்களில் எல்லாம் சிறந்த புண்ணியமான பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது என்ற கொள்கைக்கு ஏற்ப இராமலிங்க அடிகளார் அன்னதானச்சாலை ஒன்றை வடலூரில் அமைத்து மக்கள் வழங்கும் பொருளுதவியைக் கொண்டு சாதிமத இன பாகுபாடு இன்றி மூன்று வேளையும் பசித்தவர்க்கு உணவளிக்கும் தொண்டு இன்றும் தொடரச் செய்தவர் வள்ளல் இராமலிங்க அடிகளார்,
அன்பின் வெளிப்பாடு கருணையின் வெளிப்பாடு தூய வெண்மை நிறமாகக் கொண்டதால் வள்ளலார் என்றும் தூய வெண்மையானஆடையினையே அணிந்து வந்து அமைதியையும் கருணை உணர்வையும் வெளிப்படுத்தினார், வள்ளலார் பசிப்பிணியை அகற்றியோடு அல்லாமல் தூய தமிழால் எளிய தமிழில் வெண்பாக்கள் மூலம் ஆன்மிக கருத்துக்களையும் மக்களிடம் புகட்டினார் கடவுள் ஒருவரே கடவுளை உண்மையான அன்புடன் ஒளிவடிவில் வழிபடவேண்டும் இறைவனை ஒளி வடிவமாக போற்றி வழிபட வழிகாட்டியவர், சத்திய தருமச் சாலைக்கு அருகில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை என்னும் எண்கோண வடிவிலான ஒர் ஒளித் திருக்கோவில் அமைத்து கடவுளை ஒளிச் சுடராக வழிபட செய்தவர், சாதி மதம் இனம் மொழி தேசம் என்ற வேறுபாடுகளை கடந்து அனைவரும் பிராத்தனை செய்ய வழிகோல் அமைத்தார், இதில் மையத்தில் கடவுளை ஜோதி வடிவில் பிரதிஸ்டை செய்து வள்ளலார் ஒரு அகல் விளக்கை ஏற்றி வைத்தார் அது அணையாத தீபமாக இன்றுவரை பராமரிக்கப்பட்டு கடவுளே ஜோதிமயமாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது,
மக்களிடம் தீப விளக்கை தொடர்ந்து வழிபட்டு வரச் செய்து தெய்வ பாவனையை இந்த தீபத்தில் கண்டு ஆராதியுங்கள் நான் இப்போது இந்த உடம்பில் உள்ள நான் இனி அன்பு செய்யும் எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் என செய்தி அளித்தார் அன்னார் கூற்றின்படியே வள்ளலார் 1874ம் வருடம் தைமாதம் 19ம் தேதி புனர் பூச நட்சத்திரத்தன்று இரவு 12 மணிக்கு சித்தி வளாகத் திருமாளிகை அறைக்குள் புகுந்து மறைந்தார்,அன்றுமுதல் வள்ளலார் உருவமாக நமது கண்களுக்கு தோன்றாமல் அருட்பெருஞ்ஜோதியாக விளங்கிகொண்டுள்ளார்.
மேலும் அன்னை தெரசாவின் கொள்கையின் வடிவாக உருவான செஞ்சுலுவை சங்கத்தின் கொள்கைகளை வள்ளல் இராமலிங்கஅடிகள் அவர்களின் வாய்லாக தெள்ளத்தெளிவாக தோன்றுகிறது,
இயலாதவருக்கு உதவுதல்,
நரபலி தவிர்த்தல்
புலால் உண்ணாமை
எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல்
போன்ற சிறந்த குணங்களையே வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து வாழ்ந்து ஆன்மிகத்திலும் சிறந்த கருத்துக்களை, எளிய தமிழில் இயற்றிய ஆன்மிகக் கவிஞர் ஆவார், இவர் தன்னுடைய திருவருட்பாவில் அரிய மூலிகைகளையும் மருத்துவ முறைகளையும் எழுதியிருக்கிறார்,அதில் சில மூலிகைகளும் அவற்றால் நமக்கு கிடைக்கும் பயன்களும் பற்றி தினத்தந்தி ஆன்மிக மலரில் வெளியிட்ட விபரத்தையும் இத்துடன் இணைத்துளளேன் படித்து பயன்பெறுங்கள், வள்ளல் அடிகளார் தேசத்தந்தை காந்தியடிகள் அன்பின மறுபிறவி அன்னை தெரசா பூமிதான ஜோதி வினேபாஜி போன்று நம் தமிழ் இனத்திற்கு பெருமை சேர்த்த வள்ளல் பெருமான் போல் நாமும் வாழ முயன்று அன்னாரின் புகழுக்கு உறுதுணை செய்வோம்,
அருட் பெருஞ்ஜோதி ! தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி!
புதன், 14 மார்ச், 2012
சுந்தரபாண்டியம் அருள்மிகு வைகுண்டமூர்த்தி சுவாமி திருக்கோவில்
சுந்தரபாண்டியம் அருள்மிகு வைகுண்டமூர்த்தி சுவாமி திருக்கோவில்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் சதுரகிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு வைகுண்டமூர்த்தி அய்யனார் கோ வில் சிறப்பினை தினத்தந்தி ஆன்மிக மலர் மூலம் வெளியிடப்பட்டுள்ளது தெய்வீக நண்பர்கள் அனைவரும் படித்து பயன்பெற வேண்டி இக் கட்டுரையினை வெளியீடுகிறேன்
அன்பன் வை,பூமாலை, சுந்தரபாண்டியம்
செவ்வாய், 13 மார்ச், 2012
செவ்வாய், 17 ஜனவரி, 2012
திங்கள், 19 டிசம்பர், 2011
வள்ளலாரின் புகழ் பெற்ற பாடல்கள்!
அப்பாநான் வேண்டுதல்கேட்டு அருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கு எல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைய நினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.
அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்ஜோதியைப் பெற்றெ அகங்களித்தல்வேண்டும்
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவேதருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசே என் அலங்கல்அணிந் தருளே.
படமாட்டேன் துயர்சிறிதும் படமாட்டேன் இனிநான்
பயப்படவும் மாட்டேன்நும் பதத்துணையே பிடித்தேன்
விடமாட்டேன் ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
மெய்ம்மைஇது நும்மானை விளம்பினன்நும் அடியேன்
கெடமாட்டேன் பிறர்மொழிகள் கேட்டிடவும் மாட்டேன்
கிளர்ஒளிஅம் பலத்தாடல் வளர்ஒளிநும் அல்லால்
நடமாட்டேன் என்உளத்தே நான்சாக மாட்டேன்
நல்லதிருவருளாலே நான்தான்ஆ னேனே.
மனம்எனும் ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான்
மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்
இனமுறஎன் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்
இருத்திடுநீ என்சொல்வழி ஏற்றிலைஆ னாலோ
தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம்
சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே
நனவில்எனை அறியாயோ யார்எனஇங் கிருந்தாய்
ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே.
இறக்கவும் ஆசை இல்லை; இப்படிநான்
இருக்கவும் ஆசை இன்றி; இனிநான்
பிறக்கவும் ஆசை இலை; உலகெல்லாம்
பெரியவர் பெரியவர் எனவே
சிறக்கவும் ஆசை இலை விசித்திரங்கள்
செய்யவும் ஆசைஒன் றில்லை
துறக்கவும் ஆசை இலை துயர்அடைந்து
தூங்கவும் ஆசைஒன் றிலையே
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்ஒன்று பேசுவார்
உறவுகல வாமை வேண்டும்
பெருமைபெறும் நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை
பேசாது இருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
பிடியாது இருக்க வேண்டும்
மருவுபெண் ணாசையை மறக்கவே வேண்டும்உனை
மறவாது இருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழ வேண்டும்
தரும மிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தளமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






