வெள்ளி, 31 மே, 2013


வாழ்த்துவோம் ! வணங்குவோம்!! சுந்தரபாணடியம் பிடிஒ கருப்பசாமி-பார்வதி தம்பதியரின் சதாபிசேக விழா விருதுநகர் மாவட்டம் -ஸ்ரீவில்லிபத்தூர் வட்டம் சுந்தரபாண்டியம் மண்ணிற்கு பெருமை சேர்த்தவர்களில். சுந்தரபாண்டியம் சாலியர் மூக வம்சா வழியில் முதல் பட்டதாரி ஆகி தான் பெற்ற கல்வியின் பயனை கற்றறிவு இல்லாதவ்ர்கள் எல்லோரும் பய்ன்பட வேண்டுமென்ற நல்லெண்ணம் கொண்டு. தான் பெற்ற வறுமை. க்ஸ்டங்களை வரும் சந்ததியர்களும் வம்சாவழியினிர்களும் கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணத்தில் தன்க்கு கிைட்த்த வாய்ப்பு தனது திறமை. பொருள் உதவி கள் வழங்கி, இன்றுவரை தன்னால் இயன்ற அளவில் முடியாது என்று மறுக்காத நிலையில், ஆடம்பரமற்ற உதவிகள் செய்து, அதனால் முன்னேறிய குடும்பங்களை கண்டு தானும் மகிந்து, இன்று 80 அகவை கடந்து சதாபிஷேக விழா காணும் " சுந்தரபாண்டியம் பட்டியாவீட்டு பிடிஒ கருப்பசாமி " என்ற புகழோடு சுந்தரபாண்டியத்திற்கு பெருமை சேர்த்து, ஏழுர் சாலியர் குலத்தில் ஆண்டிபட்டி என்றால் சடையாண்டி, ஸ்ரீவி என்றால் தரகனார் மற்றும் பிஏ கோவிநத்ன், புனல்வேலி என்றால் கிருஷ்ணமூப்பர்,சத்திரபட்டி என்றால் பண்ணையார் என்பது போல் சுந்தரபாண்டியம் என்றால் பிடிஒ கருப்பசாமி என்ற அளவிற்கு சுந்தரபாண்டியத்திற்கு பெருமை சேர்த்து கொடுத்த இம்மண்ணின் மைந்தர் உயர்திரு க,கருப்பசாமி - உமையாள்பார்வதி தம்பதியரின் 80 அகவை தாண்டி சதாபிஷே விஷா காணும் இம்மண்ணின் மைந்தரிடம் 3,6,2013 அன்று சுந்தரபாண்டியம் சாலியர் சமுதாய திருமண மண்டபத்தில் நடைபெறும் சதாபிஷேக விழாவில் நாமும் கலந்து அன்னாரை வாழ்த்தி , வணங்கி ஆசி பெறுவோம், இன்று 80 அகவை தாண்டி சதாபிஷேகம் காணும் மதிப்பிற்குரிய பெரியவர் திரு,பிடிஒ கருப்பசாமி அவர்களின் நற்குண்ங்களை இந்நாளில் நினைவுகொள்வது அன்னாரின் பெருமை சேர்ப்பதாகும், இளம் வயதில் மிகவும் ஏழை-வறுமை படிப்பறிவற்ற குடும்பத்தில் தோன்றியதால் தான் பெற்ற வறுமை, படிப்பறிவின்மை என்பது தங்களின் சந்ததியர்களுக்கு அறவே இருக்கக் கூடாது என அன்றே முழு முயற்சி,தன்னம்பிக்கை விடாமுயற்சி போன்ற எண்ணங்களின் சிந்தனையுடன் பேராடி சுந்தரபாண்டியம் நெசவாளர் - சாலியர் மக்களின் முத்லபட்டதாரியாகி,அரசுப்பணியில் சேர்ந்து, வெற்றி கண்டு தன் வறுமைக்கும், படிப்பறிவற்ற தனது குடும்பத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார், இளம் பருவத்தில் தொட்கக கல்வி கூட பள்ளி மூலம் தொடர முடியாத சூழ்நிலையில் தனியார் ஆசிரியர் ஒருவர் மூலம் இஎஸ்எல்சி என்ற 8வகுப்பு அரசு தேர்வு எழுதி அதன் பின் ஸ்ரீவி, சிஎம்எஸ் பள்ளியில் எஸ்எஸ்எல்சி பயின்று இன்டர் மிடிேய்ட மதுரை தியாகராஜா கல்லூரியில பயின்று பின் அங்கேயே பிஏ பட்டம் பெற்றார்,இவ்வாறு பள்ளி வாழ்க்கை தொடர இதுதான் வழி என வழிகாட்டல் வழியின்றி தானே தனக் கென்று வழிசெய்து தாய் தந்தையரின் குறைந்த வருவாய் பொருளாதார நிலையில் படிப்பதற்கென்று சரியான ஒளிவிளக்கோ இடவசதியோ இல்லாத சூழலில் அன்றைய வசதி கொண்ட தெறகுகீழ்த்தெருவிலுள்ள அழகு மூப்பனார் அவர்களின் வீட்டு மேல் மாடி வரண்டாவில் சிறிய மண்ணெண்ணை சிமினி விளக்குடன் தனது படிப்பு காலத்தை கழித்து வெற்றி கண்டார், அன்னார் கல்லூரி வாழ்க்கையில் இருந்த போதும் எளிய உடை எல்லோரிடமும் அன்பாக பழகும் தன்மை தனது வயதிற்கு குறைந்தவர்கள் பள்ளி படிப்பை முடிகக கையாளும - வழிகாட்டல் முயற்சி என்பது அன்றிலிருந்து இன்றுவரை மாறா தன்மை கொண்டது, அன்னாரின் உயர்ந்த பண்புகளை சீரிய நல்வழிகளையும் பெற அவர் குருவாகவும், நான் சிஷ்யனாகவும் அடைய இரண்டு வாய்ப்புகள் எனக்கு கிடைத்தது,அதை இன்றளவும் என்னால் மறக்கமுடியாது. அதில் ஒன்று நான் சுந்தரபாணடியம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 5வது படிவம் (அதாவது 10ம்வகுப்பு)படிக்கும் போது எங்கள் பள்ளியில் எஙக்ள வகுப்பிற்கு ஆங்கிலப்பாடம் நடத்தும் துணை ஆசிரியராக பணியாற்றிய போது, அவரிடம் பயிலும் மாணவனாக இருந்த பெருமை எனக்கு சேரும், அன்னார் அன்றைய நாளில் பாடம் நடத்திய விதம் எல்லோரையும் ஆங்கிலப் பாடத்தின் மேல் கொண்ட பயம் விலகியது, 2வது முறையாக அன்னார் பஞ்சாயத்து யுனியன் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய காலத்தில் அன்னார் காரியபட்டி வட்டார வளர்ச்சி அலுவலகராக இருந்த போது நான் அங்கு வேளாண்மை பண்டகசாலையில் உதவி வேளாண்மை அலுவலராக பணியாற்றிய காலத்தில் அன்னரின் நிர்வாக கட்டுபாட்டில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்து, அன்னார் காரியபட்டியில் பிடிஒ வாக பணியாற்றிய போது அன்னார் அருப்புககோட்டை கோட்டத்திற்கே கோட்ட வளர்ச்சி அலுவலராக நியமனம் செய்யப்பட்டார், பின் நானும் அக்கோட்டத்தில் அருப்புக்கோட்டையில் உதவி விதை அலுவலராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்து,அன்னார் உயர் அலுவலராக பணியாற்றிய போது சக பணியாளர்களிடம் தன் க்டடுப்பாட்டில் உள்ள பணியாள்ர்களிடமும் எப்போதும் அன்புடனும் அரவணைப்புபடனும் நேர்மை, காந்திய கொள்கையான சத்திய சமதர்ம கடமை உணர்வுடன் பணியாற்றிய சிறப்பு அன்னாரின் புகழுக்கு பெருமை சேர்ததது, அவர் சென்று பணியாற்றி ய இடமெல்லாம் சீரும் சிறப்பும் பெற்றவர் " ஊருனி நீர்நிறைத் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு, என்ற வள்ளுவர் வாக்கினுக்கிணங்க அன்னார் தான் பெற்ற கல்வி பயன் சுந்தரபாண்டியம் சாலிய வம்ச வழியினரும் அடைய வேண்டுெம்ன்ற தனியாத தாகத்தால் எங்கள் தெருவிலுள்ள இளம் வயதினரை அவர் கல்விக்காக வழிகாட்டிய நிகழ்வுகள் எங்களால் மற்கக முடியாது, அவரவர் வசதிக்கேற்ப என்ன படிப்பு எங்கு படிக்கலாம் என்ற வழிகாட்டும் தூண்டிதல் அன்னாருக்கேஉயரிய பண்பாக அமைந்தது, அதும்ட்டுமன்றி தன்னால் முடிந்த பொருள் உதவிகளும்செய்து அன்பு காட்டியுள்ளார், எஙக்கள் பகுதியில் வாசகசாலையுடன் இணைந்த பொது மண்டபம் கட்ட ஆலோசனை பெற அன்னாரிடம் சென்ற போது அன்னார் குடும்பமே தானே முன்வந்து மண்டபத்திற்காக பெரும் தொகை வழங்கி அன்னாரின் தாய்தந்தையரின் நினைவாக மண்டபம் கட்ட உதவி செய்தது அவருடைய ஈகை குணத்தை தெள்ளத தெளிவாக காட்டும், அது ம்டடுமன்றி அன்னார் இன்று வரை பணியாற்றும் கலசலிங்கம் பல்கலையில் உயர் கல்விக்காக செல்லும் ஏழை எளிய விபரமற்ற மாணவர்களுக்கு உகந்த துறையினை எடுத்துக் கூறி படிப்பதற்கும் கல்வி வள்ளல் அவர்களிடம் அறிமுகப்படுத்தியும்,குறைந்த நன்கொடையில் சேர்த்து அவர்களை சிறந்த பட்டதாரிகளாக ஆக்கிய பெருமை அவருக்கேசேரும், மேலும் உடலால், உழைப்பால் இயலாதருக்கு வயதான முதியோருக்கு தன்னால் முடிந்த உதவிகளை இன்றளவும் செய்து வருகிறார், நெசவு தொழில் நலிவடைந்த போது கல்வி தந்தையிடம் நேரிடையாக கூறி பல்கலை கல்லூரிகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுத்தந்துள்ளார் அய்யா அவர்கள் சிறந்த பகுத்தறிவு சிந்தனையாளர் எழுத்தாசியர் தன்னை கொண்டவர், அன்னார் தன் இளமைப்பருவத்திலேயே எழுத்தாளாராக இருந்தவர் தன்னுடைய மைத்துனர் ஆா,வி,பி, கரிகாலன் அவர்கள் நடத்திய திரைமுழக்கம் என்ற திங்கள் இதழில் எழுதிய பெருமை படைத்தவர், அன்னார் இன்றளவும் இதனை தொடர்ந்து வருகிறார் நம் கல்வி வள்ளலின் சாலியர் குரலில் இன்றளவும் அன்னாரின் சிற்ந்த க்டடுரைகளை காணலாம்,அப்பணி இனறும் தொடர்கிறது, அதும்ட்டுமன்றி பெரியாரின் முற்போக்கு சிந்தனையாளர், சுயமரியாதை சிந்தனையில் மிகுந்த நாட்டம் உள்ளவர் தன்னுடைய திருமணத்தை அக்காலத்திலேயே ஆன்மீக முறைப்படி நடப்பதை தவிர்த்து புரோகிதர்,ஒதுவார்கள் இல்லாமல் கட்டிமேளம் சடங்கு சாஸ்திர முறைகள் இல்லாமல் பேராசிரியர் தலைமையில்,பெரியோர்கள் முன்னிலையில் மேடை நிகழ்ச்சியாக மணமக்கள் மாலை மாற்றும் முறையில் திருமணத்தை நடத்தி சீர்திருத்த முறை கல்யாணமாக ஆக்கி சீர்திருத்த சிந்தனையாளர், முற்போக்கு கருத்தில் தீவிர சிந்தனை இருந்தாலும் ஊர் நடைமுறை பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப தெய்வீக காரியங்களுக்கும் மரியாதை கொடுப்பவர், கோவில் திருப்பணிகளுக்கு நன்கொடை வழங்க்ல் தெய்வீக நிகழ்வுகளில் ஊரார் உறறார் மனம் சுழியாது அதற்கேற்ப பங்கு கொள்ளும் தன்மை கொண்டவர், பொது வாழ்வு மற்றுமன்றி தனது சொந்த வாழ்விலும் தனது வாரிசுகளை வளமுடன் வாழச் செய்தவர், "தந்தை மகற்காட்டும் நன்றி அவையத்து முந்தி இருப்பச செயல்" என்ற வள்ளுவன் வாக்கிணங்க தனது புதல்வர்கள் புதல்விகளை நன் முறையில் ஏனையோருக்கு எடுத்துக்காட்டாக விளங்கச் செய்தவர், அதற்கொப்ப அன்னர் புதல்வ மக்களும் " மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவண்தந்தை என்றோற்றான் கொல் " என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க அன்னாரின் மக்களும் இன்று கல்வி தொழில் பதவிகளில் உயர்ந்து குன்றின்மேல்இட்ட தீபமாக திகழ்கின்றனர், எனவே அன்னார் தற்போதும் எந்த கவலையும் இன்றி சேவை மனபான்மையில பணியுடன் அமாந்த பணியை இன்னும் செய்து கொண்டு சிற்ப்புடன் வாழ்ந்து வருகிறார், அன்னார் இன்னும் நுாறு அகவை தாண்டி நூற்றாண்டு விழா கொண்டாடும் வாய்ப்பினை அளிக்க ஆண்டவனை வேண்டி நாமும் அன்னாரிடம் ஆசிபெற்று நாமும் சிறக்க, அவரும் சிறக்க ஆசி பெறுவோம், இவண்: வை, பூமாலை சுந்தரபாண்டியம்

http://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=943

http://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=943

http://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=943

http://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=943

வியாழன், 23 மே, 2013

தினமும் ஒரு மந்திரம்


தமிழ் பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறை மந்திரமாக இருப்பது திருமுலரின் திருமந்திரமாகும் அம்மந்திரத்திலிருந்து தினமும் ஒரு மந்திரமாக நம் வலைபதிவில் வெளியிட விரும்பி இச்செயலில் முனைகிேறன் தெய்வ நெறி தமிழ் மண்ணில் தளைத்தோங்க இக் கலியுகத்தில் பக்தி சிந்தனை பெருக அன்பர்கள் கண்டு பயன் பெற அன்புடன் வேண்டுகிேறன், அன்பன் வை,பூமாலை, சுந்தரபாண்டியம் தினமும் ஒரு மந்திரம் திருமந்திரத்தில் முதல் பாடலாக விநாயகர் வணக்கமாக அமைந்த பாடல் நால்வர்கள் பாடிய தேவார திருமுறைகளில் விநாயகர் துதி இல்லை என்பதை உணரவும், சங்க நூற்களில் மற்றும் திருவாசகத்திலும் விநாயகப் பெருமானை பற்றிய தொடர்களோ பாடல்களோ இல்லாமையை உணரலாம் ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே, விளக்கம்,- ஐந்து கைகளையும் யானை முகத்தையும் இளம் பிறைச்சந்திரனைப் போன்ற வளைந்த தந்தத்தையும் உடைய சிவபெருமானின் திருமகனும், அறிவுக கொழுநதாக உள்ளவனுமான விநாயகனை உள்ளத்தில் வைத்து, அவன் திருவடிகளையும் பேர்ற்றி கின்றேன்

சனி, 11 மே, 2013


சித்திரை மாத சதய நட்சத்திரம் அன்று திருநாவுக்கரசரின் குரு பூஜை தினமாகும். இன்நாளில் நாவுக்கரசருக்கு பூஜை ஆராதணைகள் செய்யப்படுவது இன்றுவரை சில ஆலயங்களில் வழக்கமாக உள்ளது. அவர் பாடிய தேவாரங்கள் இன்றும் எம் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன. உழவாரப்படையாளி என்று கூறப்படும் திருநாவுக்கரசர் எமக்கு நல்ல தொண்டு செய்யும் ஆர்வத்தையும், அன்பு கொள்ளும் ஆசையையும் எமக்கு ஊட்டியவர். அவரது வாழ்க்கையில் சமயநெறியை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த காலங்களே அதிகம். அவர் சிறுவயதிலேயே கல்வியில் சிறந்து சமயத்தையும் தமிழையும் கற்றுணர்ந்ததால் அவர் ஆன்மீக வாழ்வில் ஈடுபடத்தொடங்கினார். அந்நேரத்தில் புறச்சமயங்களையும் கற்று அதன் நுனுக்கங்களையும், போதனைகளையும் ஓதி உணர்ந்து அவற்றைத்தழுவலானார். சமணசமயத்தின் ஈடுபாடு காரணமாக இந்து சமயத்தை மறந்து தன்போக்கிற்கு செல்லலானார். இதனால் கவலைஅடைந்த தமக்கையாரான திலகவதியார் ஏக்கமுடன் சிவனை நினைந்து தம்பியார் சமணமதத்தை விட்டு சைவத்திற்கு திரும்ப வேண்டும் என வீராட்டாணம் திருக்கோவிலுக்குச் சென்று அழுது தொழுது முறையிட்டார். திலகவதியாரின் துன்பத்தை போக்கவேண்டி இறைவனும் தம்பிக்கு பேரின்பத்தினை அறியவைக்கும் நோக்கோடு துன்பத்தினைக் கொடுத்து அவரை தடுத்தாட் கொள்ள நினைக்கிறார். வராத துன்பம் வந்தது நாவுக்கரசருக்கு; என்ன நடந்தது வயிற்றுவலி வந்து வாட்டி வதைத்தது. தீராத வலி சமணர்கள் மயிற்பீலி கொண்டு தடவினர், ஏதோ வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தனர். எதற்கும் நிற்கவில்லை. அப்போதுதான் தமக்கையின் நினைவு வர அவரிடம் சென்றார். திலகவதியாரும் நாவுக்கரசரை அழைத்துக் கொண்டு வீராட்டாணம் திருக்கோவிலுக்கு சென்றார். அங்கு குடிகொண்ட சிவனை நினைந்து வணங்கி திருநீற்றை வயிறெங்கும் பூசி இறையை வேண்டுகின்றனர். நாவுக்கரசர் "கூற்றாயினவாறு விலக்ககலீர் " என்று தொடங்கும் பதிகம் பாடி சூலைநோய் நீங்கப் பெறுகிறார். அவர் தனது வாழ்நாளில் எங்கு சென்றாலும் உழவாரம் எனும் புல்பூண்டைச்சுத்தம் செய்துகொள்ளும் ஆயுதத்தை கையில் கூடவே எடுத்துச் சென்றார். அவர் மண்ணைச்சுத்தம் செய்து இப்பூமி எங்கும் உயிர்களைச்சுமந்த உடல்கள் வளமாக வாழ வழிசெய்தார். அதோடு உடல்களைச் சுமந்த உயிர்கள் நலமாக, புனிதமாக, இறைபக்திகொண்டு வாழ்வதற்கு பண்ணை மீட்டி இராகத்தோடு தேவாரப்பண்களை பாடி எங்கும் சென்று ஆன்மீகத் தொண்டுகள் செய்து கொண்டே இருந்தார். செல்லும் வழியில் உள்ள ஆலயங்கள் தோறும் உழவாரத்தால் புல்செடிகொடி ஆகியவற்றை சுத்தம் செய்வார். ஆலய திருவீதிகள் எங்கும் இவரது சரியைத்தொண்டுகளால் சுத்தமாகக் காட்சியளித்தன. அவர் பாடிய திருவதிகை வீரட்டானப் பதிகத்தில் அவர் பாடியவை மனதை உருக்குபவையாக உள்ளன. "போர்த்தாய் அங்கொர் ஆனையின் ஈருரிதோல் புறங்காடு அரங்கா நடமாட வல்லாய் ஆர்த்தான் அரக்கன் தனை மால்வரைக்கீழ் அடர்த்திட்டருள் செய்த அது கருதாய் வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் என் வேதனையான விலக்கியிடாய் ஆர்த்தார் புனல்சூழ் அதிகைக் கெடில வீரட்டானத் துறையம்மானெ" தாங்க முடியாத சூலை நோயால் அவதியுற்ற மருள்நீக்கியார் அவ்வேளையில் மெய்யுருகிப் பாடியபதிகங்கள் இறைவனையே மெய்யுருகச் செய்தது. அதனால் வீராட்டானப்பதியில் வீற்றிருந்த சிவபெருமான் மருள்நீக்கியாருக்கு "நாவுக்கரசு" எனும் பட்டத்தை அளித்து நாவுக்கு இதம் தரும் அழகிய தமிழ் பாக்களால் இந்துசமயத்தை நலிவடையாது காத்திடுக என்று வாழ்த்திப் பணிகிறார். தித்திக்கும் கருணை பொழியும் அப்பெருமானை அகங்குளிர முகம்மலர திருவங்கமாலையால் சாற்றுகிறார்; தலையே நீவணங்காய் என்று தொடங்கி கண்கள் , செவிகள், மூக்கு, வாய், நெஞ்சு, கைகள், உடல், கால்கள், உயிர் இவற்றால் எல்லாம் ஈசனை வாழ்த்திக்கொண்டு இன்புற வேண்டும். இவற்றினால் எல்லாம் வணங்கவேண்டும் என்று கூறி அவர் தேடித்தேடொணாத்தேவனை என்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன் என்று நம்பிக்கைஊட்டி பக்தியை வளர்த்தார். இந்து மதத்தை தழுவிக்கொண்டு சிவபிரானின் அற்புதங்களை தேனின் இனிய குரலால் பாடிக்கொண்டும், உழவாரத்தால் சரியைத்தொண்டும் செய்து கொண்டு ஒவ்வொரு ஆலயங்களுக்கும் செல்லலானார். அவர் இப்படி சமயத்தை பரப்பிக்கொண்டு சென்றதை பிடிக்காத சமணர்கள் அவரை எங்கும் செல்ல விடாது பல்லவமன்னன் மூலம் பல தண்டனைகளை வழங்கினார். அவரை சுண்ணாம்பு அறையில் அடைத்தனர். அதன் வெப்பம் தாளமாட்டாது நாவுக்கரசரும், சிவபெருமானை நினைந்து "தனித்திருக் குறுந்தொகை" மாசில் வீணையும் மாலை மதியமும்; வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் ; மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நிழலே" என்று தொடங்கி பாடுகிறார். ஆட்டிவைப்பதும், அதனால் பாடவைப்பதும் எல்லாம் வல்ல ஈசனின் விளையாடல் அன்றோ, சுண்ணாம்பு அறைக்குள் அடைபட்டதும் நாவுக்கரசர் இறைவனை நினைந்து மனதை அவர் பால் செலுத்தி பாடுகிறார், அப்போது அவருக்கு மாசில்லாத தூய்மையான வீணை ஒலியாய் அந்தி நேரத்து பூரண சந்திரனின் ஒளியாய், மெல்லிய காற்றாய், குளிர்சியாய், குளத்தில் உள்ளிருப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தியதாம். அவர் உடலிருந்தது சுண்ணாம்பு அறையில்; ஆனால் உள்ளம் இருந்தது, இறைவனின் இணையடி நிழலில், அன்றோ அவருக்கு வெப்பம் கூட குளிர்ச்சியாக மாறிவிட்டது. சமணர்கள் இதனால் ஆத்திரம் அடைந்து அவரை யானை கொண்டு மிதிக்க வைத்தும் நஞ்சை ஊட்டியும் கொல்லப்பார்த்தனர். ஆனால் எங்கும் நிறைந்த இறைவன் கருணை அவரை ஒன்றும் செய்யவில்லை. சமணர்கள் நாவுக்கரசரை கல்லோடு கட்டிக் கடலில் எறிந்தனர். அவர் சிவனை நினைந்து நமச்சிவாயப்பதிகம், சொற்றுணைவேதியன் என்று பாடி கல் தெப்பமாக மிதக்க கரையேறுகிறார். இந்து மதத்தை வளர்க்க அவர் இன்னல்களை அனுபவித்தாலும், இறைபக்தியில் பற்று மிக வைத்து ஊர்கள் தோறும் சென்று ஆலயத்திற்கு வெளியே தன் கையில் உள்ள உழவாரத்தால் செதுக்கி புற்களையும் செடிகொடிகளையும் அகற்றி எங்கும் சுத்தமாக, ஆண்டவன் சந்நிதிகளை, வீதிகளை புனிதமாக்கினார். உள்ளே ஆண்டவன் திருவுருவங்களைக் கண்ணாராக் கண்டு மகிழ்ந்து உளமார வாழ்த்தி வணங்கி என்னையும் இவ்வுயிர்களையும் இப்பூமியில் தொண்டுகள் செய்து சுத்தமான உள்ளத்துடன் தூய்மையான வாழ்வு வாழ அருள் காட்டு, எனப் பாடிப்பரவுகிறார். அவர் பாடிய கணக்கற்ற தேவாரங்கள் எம்மை மெய்யுருகச் செய்து விடும். அதில் திருத்தாண்டகம் அறுபத்து நான்கு பாடல்கள் பாடியுள்ளார். அத்தனையும் தேவ ஆரங்கள் சிவனுக்கு சூட்டி மகிழ்ந்து எமக்களித்துள்ளார். "அரியானை அந்தணர் தம் சிந்தையானை அருமறையின் அகத்தானை அணுவையார்க்கும் தெரியாத தத்துவனைத் தேனைப் பாலை திகழொளியை தேவர்கள் தம் கோனை மற்றைக் கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே" இப்படி இறைவனை பாடாத பேசாத நாளெல்லாம் பிறவாத நாளே என்று எமக்கும் மேற்பட்ட சக்தி ஒன்று உண்டு. அவராலே இம்மண்ணில் பிறந்து வாழும் நாம் என்ன செய்யவேண்டும் என்றால் அருமையானவன், அந்தணர் சிந்தையில் உள்ளவன், நால்வேதங்களிலும் உள்ளிருப்பவன், அணுவுக்குள் அணுவானவன், யாருக்கும் தெரியாத தத்துவன், தேனினும் இனியன், பால்போல் தித்திப்பவன், திகழும் ஒளியானவன், தேவர்களுக்கு அரசன், ஹரி ,நான்முகன், நெருப்பாக, காற்றாக, ஆர்பரிக்கும் கடலாக, எங்கும் கலந்து நிக்கும் குணமிக்க பெரியான், அப்படிப்பட்ட நம் இறையை நாம் என்நாளும் பேசவெண்டும். பாடிதுதிக்கவேண்டும். ஆலயம் தோறும் சென்று வணங்க வேண்டும். இல்லையெனில் நாம் பிறந்ததற்கு எப்பயனும் இல்லை. இப்படி அவர் மக்களை சமயத்தின் பால் ஈடுபடவைத்தார். அகச் சுத்தத்தையும், துப்பரவு பணியினால் சுத்திகரித்து புறச் சுத்தத்தையும் ஏற்படுத்தி உயிர்களை தூயவர்களாக்கி அமைதி வழிசெல்ல வைத்தார். இப்படி சமய நன்னெறியில் நின்ற நாவுக்கரசர் தனது உழவாரத்தை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றார். வழக்கம் போல் இறைவனைத்துதித்து விட்டு உழவாரப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இறைவனும் அவர்மீது பற்றுக்கொண்டு பொன்னையும், மணிகளையும் மண்ணில் அவர்கண்ணுக்கு தெரியும் படிபோட்டு வைத்திருந்தார், ஆனால் அந்த உழவாரப்படையாளி பற்றற்று நின்றவர். அவரின் கண்களுக்கு பொன்னும் மணியும் எதுவும் வெறும் கற்களாக பூண்டாக செடியாகத் தெரிந்தது. அதை அவர் பொருட்படுத்தவில்லை. பரம் பொருளின் பெரும் புகழைப் பாடுவதிலும், அடுத்தவர் குறைகளை தீர்ப்பதிலுமே கண்ணாக இருந்தார். இவர் வாழ்ந்த காலத்திலேயே திருஞானசம்பந்தரும் வாழ்ந்திருந்தார். அவருக்கு வயதில் மூத்தவரான நாவுக்கரசர்; இறைவனால் வழங்கப்பட்ட முத்து சிவிகையில் திருஞானசம்பந்தர் பவனி வரும் போது அங்கு சென்று அச்சிவிகையைத் தன் தோள்மீது தூக்கிவைத்து சம்பந்தரை சுமந்து கொண்டு வந்தார். வரும் வழியில் நாவுக்கரசர் சுமந்து வருவது தெரிந்து ஞானசம்பந்தரும், அவரைப் பார்த்து 'அப்பரே' என அழைத்து அவரை வணங்கி அவருடன் சென்று தலங்கள் தோறும் பாடி இறைவனை தோத்திரம் செய்தார்கள். இருவரும் ஒன்றாக பலதலயாத்திரை சென்ற போது திருமறைக்காடு எனும் ஊரில் பூட்டியே கிடந்த கடம்பூர்க் கரக்கோயிலை அப்பர் தேவாரம் பாடி கதவு திறக்கப்பாடி அவ்வூர் மக்கள் தரிசனம் செய்ய உதவினார். பின்னர் கதவு அடைக்க சம்பந்தர் பாடி அருளினார். இப்படி திறந்து, சாத்தி வழிபட இந்து மக்கள் மனதில் பெரும் நம்பிக்கையை திறந்து வைத்தனர். இங்கனமாக பல்வேறு ஊர்களுக்கும் சென்று குறையின்று நிறைவோடு வாழச் செய்தனர். திருவீழிமிழலையில் இறைவன் அருளால் படிக்காசு பெற்று அங்குள்ள மக்கள் மத்தியில் நிலவிய பசிபஞ்சத்தை போக்க உதவினர். பழையாறையில் திருக்கோவிலை மீட்டெடுப்பதற்காக நாவுக்கரசர் உண்ணாவிரதம் கூட இருந்து உடலை வருத்தி உள்ளார். அவர் இறைவன் வைத்த சோதனைகளில் எல்லாம் வெற்றி அடைந்தார். திருக்கைலாயக் காட்சியைக் கண்ணாரக் காணவேண்டும், என்பதற்காக தனது தள்ளாத வயதில் நடந்தும், பின் தவழ்ந்தும், உருண்டும், விழுந்தும், பின் எழுந்தும் திருவையாற்றில் இறைவன் கருணையினால் திருக்கைலாயக் காட்சியைக் கண்டு இறைவனையும் இறைவியையும் கண்ணாரக் கண்டு களித்து மனமுருகிப் பாடிப்பரவி முத்தியின்பம் அடைந்தார். இந்து சமயம் அப்பரும், சம்பந்தரும் வாழ்ந்த காலப்பகுதியான ஏழாம் நூற்றாண்டில் மறுமலர்ச்சி அடைந்தது. அதற்கு அவர்கள் இறைவன் மீது வைத்த அளவு கடந்த பக்தியும், மனவைராக்கியமும் ஒரு காரணம். அதுமட்டுமல்லாது தெய்வங்களோடு அவர்கள் உறவாடி அளவு கடந்த அன்பும் தியானமும் தெய்வசக்திகளோடு வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் இன்னொரு காரணமாக அமைந்தது. புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் திருநாவுக்கரசரின் வாழ்க்கை வரலாற்றின் சில முக்கிய நிகழ்வுகள் நாம் அனைவரும் அறிந்திருக்கக்கூடியதே. அதை மீண்டும் இவ்வாறு மீட்டெடுத்து பார்த்தோமானால் இறை சக்தியை உணரக்கூடியதாக அமையும். ஆக நாம் எல்லாம் அவன் செயல், இறைவா எல்லாம் நீ தந்தது, நீயே எனக்கு வழிகாட்டு என்று சரணம் அடைந்தால் சஞ்சலமும் இல்லை. சங்கடமும் இல்லை. எமக்கு வரும் சோதனைகளை வெற்றி கண்டு சாதனைகள வெற்றிப் படிக்கட்டாக்குவோம். சுபம்.

ஞாயிறு, 5 மே, 2013

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஸ்ரீகால பைரவர் 1008 போற்றிகள்!!!

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஸ்ரீகால பைரவர் 1008 போற்றிகள்!!!: உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் மற்றும் அனைத்து கடவுள்களையும் நிர்வாகித்து வருபவர் ஸ்ரீகால பைரவர் ஆவார்.ஸ்ரீகால பைரவரின் உயர்ந்த வடிவமே...