செவ்வாய், 15 ஜனவரி, 2013


திருமறைகள் கூறும் தோத்திர வழிபாட்டின் முக்கியத்துவம் நாம் ஆண்டவனை வழிபாடு செய்யும் போது, என்னதான் ஆகம விதிப்படியும், அபிசேக ஆராதனைகள் செய்தாலும், ஆண்டவன் புகழ் போற்றியும், தோத்திரங்கள் கூறியும், மந்திரங்கள் கூறி வழிபடும் முறைக்கு ஒப்பாகாது, எனவேதான் தோத்திரப் பாடல்களும், மந்ததிர ஜபங்கள் கொண்டு வழிபாட்டு முறைகளில் முக்கிய பங்கு வைக்கின்றன, செம்மையாகக் கொண்ட திருநின்ற திருநாவுக்கரசு சுவாமிகள் தனது தீரா சூலை நோய் - வயிற்று வலியைப் போக்கஇறைவனிடம் வேண்டும் போது சலம்போடு பூ மறந்தறியேன் , தமிழோடு இசைபாட மறந்தறியேன் என்ற கூற்று நாம் சற்று உற்று நோக்க வேண்டிய வரிகளாகும். இறைவனை வாயார தோத்திரங்களால் பாடி தோத்திரங்களால் இறைவனை பூசிப்பதை நன்கு விளக்குகிறது, சொல்லும் பொருளுமாய் இருந்தார் தாமே தோத்திரமும் சாஸ்திரமும் ஆனார்தாமே என்று திருத்தாண்டவர் மூலம் திருவரங்கப்பாமாலைப் பாடலில் இறை வழிபாட்டிற்கு இசையுடன் கூடிய தோத்திரப்பாடல்களின் முக்கியத்துவத்தை காணலாம். தோத்திரங்கள் யாவும் சிவனாரின் திருவாக்கியமாகும் எனது உறை தனது உறையாகும் என திருஞான சம்பந்தரின் கூற்றிலும் காணலாம். சுரிதங்களால் துதித்து தோத்திரங்களால் பாடி வழிபாடு எவ்வாறு செய்ய வேண்டுமென்று திருமூலரின் திருமறை ஒருபாடலில்வழிபாடு எவ்வாறு செய்யவேண்டும் என்றும், வாய் தோத்திரம் சொல்லுமே என்று அருள்பாலிக்கிறார், வழிபாட்டில் புரியும் சடங்கு சாஸ்திர சம்பிரதாயங்கள் யாவும் நுட்பமான தத்துவ பொருளாக காட்டுகின்றன. தோத்திரங்கள் எந்த மொழியிலும் இருக்கலாம் ஆனாலும் செம்மொழி தமிழ் மொழியோடு வடமொழியோடு இருப்பதே சிறப்பாகும் என்றும் வழிபாடும் மேன்மை பெரும் என்கிறார், வழிபாட்டில் என்னதான் ஆகம விதிப்படி அபிசேக ஆராதணைகள் செய்தாலும், இறைவனை வாயாரப்பாடி சுரிதங்களால் துதித்து தோத்திரங்களால் போற்றி பாடுவதற்கு ஈடாகுமா? தோத்திரங்கள் பற்றி ஞான நூல்களும் தோத்திரங்களை சுட்டிக்காட்டுகின்றன. இன்றைய நாளில் ஆலங்களில் மெல்லிசை பாடல்கள் மூலம் ஒலிக்க செய்து வழிபாட்டில் பெருமை சேர்த்தாலும், அவை எல்லாம் அழகு வானில் வின்மீன்களாக தோன்றினாலும், ஆலங்களில் நால்வர்களின் தேவார திருமறை தோத்திரப்பாடல் ஒலிக்கு ஈடாகுமா? அவைகள் அழகுவானில் தோன்றும் முழு நிறைமதிக்கு ஒப்பாகுமே என்பது தான் உண்மை. அதிலும் நால்வர்கள் பாடிய தேவார திருமறைகள் யாவும் தோத்திரத்திற் கென்றே தனி சிறப்புடையவைகளாகும். தேவாரப்பாடல்கள் யாவும் சொல்லுக்கு சொல் வரிக்கு வரி பாடலுக்கு பாடல் பதியத்திற்கு பதியம் அமையும் ஏணிப்படிகளாகும்,மொழிக்கு மொழி தித்திப்பு ஊட்டுவன, தேவராத்தின் தேன் தமிழ் பாடல்கள் பெருமானை தன்பால் ஈர்த்து சிவனடியார்களை ஆட்கொள்ளச் செய்த பெருமை தேவாரப்பதியங்களுக்கே சேரும், தேவாரப்பாடல்கள், இறைவனை துதிக்கும் தோத்திரப்பாடல்கள் மட்டுமன்று, அல்லல் போக்கும் அருமருந்து, அதுவே திருமருந்து, அதனால் அல்லல் போகும்,அறம் பெருகும், நம்மை பிடித்த பிசாசுகள் விலகும், இறையருள் பெருகும், இப்பாடல்கள் தான் ஆலங்கள் தோறும் ஒலிக்க வேண்டுவனவாகும், ஏன் வீடுகள் தோறும், மற்றும் மடலாயங்கள் தோறும் ஒலிக்க தகுதியுடையன, இத்தனை பெருமை கொண்ட தோத்தரப்பாடல்களான தேவார திருமறைகளை பாடிய அருளாளர்களை நாம் போற்றி புகழ வேண்டாமா? இத்திருமறைகளை நமக்கு பெரிய புராணமாக தொகுத்து தந்த சேக்கிழார் பிராணையும் நாம் நினைவு கொள்ள வேண்டாமா? தேவார திருமறை பாடல்களை எங்கும் ஒலிக்க செய்தும், தோத்திரங்கள் பாடியும் இறையருள் பெறுவோம், அன்புடன் வை.பூமாலை சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக