வழிபாடு:
இறைவழிபாடு இரு வகையாக ஆன்மீக வாளர்கள் பிரித்துள்ளார்கள். அவை 1) புற வழிபாடு 2) அகவழிபாடு. என்பன
கடவுளைத் தன்னின்றும் வேறுபடுத்தி வழிபடுவது புறவழிபாடு.
கடவுடளை தன்னின்றும் பிரியாத தன்மை கொண்டு வழிபடுவது அகவழிபாடு
நம் உடலில் உயிர் இருப்பது போல, இயற்கையில் இறைமை கலந்துள்ளது.இயற்கையைக் கடந்தும் உள்ளது.
நம் உடலில் உயிர் இருக்கிறது. அதைக் காணமுடியாது. காணமுடியாத காரணத்தால் உயிர் இல்லை என்று சொல்ல முடியாது. உயிர் இருப்பதால் உடல் இயங்குகிறது.எனவே காணமுடியாத உயிரை காணக்கூடிய உடலைக்கொண்டு உணர்கிறோம். உடலை தவிர்த்து உயிரைக் காணமுடியாது.
இதைப்போல இயற்கை உடல் போன்றது, கடவுள் இயற்கைக்கு உயிர் போன்றவர். உடலாகிய இயற்கையைக் கொண்டு உயிராகிய கடவுள் உணர்தல் வேண்டும். கடவுளை அல்லது இயற்கையை உணர்த்தும் ஆற்றல் இயற்கைக்கு உண்டு. இறைமையை உணர்வதற்கு அதன் உடலாக விளங்கும் இயற்கையை பற்ற வேண்டும். இயற்கைையுடன் ஒன்ற வேண்டும். இயற்கையின் வாயிலாக அதன் உயிராக உள்ள கடவுளை வழிபட வேண்டும்.
கடவுள் எல்லாவற்றையும் கடந்தவர். இயற்கையை உடலாக தாங்கும் மற்றொரு நிலையும் கொண்டது இறைவருடைய அருளாகும்.இதனையே புறவழிபாடு என்கின்றனர் ஆன்மீக சான்றோர்கள்.
கடவுளை தன்னின்று பிரியாத தன்மை கொண்டு வழிபடும் அகவழிபாட்டினை எடுத்துக் காட்ட மாணிக்க வாசகரும் தனது சிவபுராண பாடலில் இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ! எனக் கூறியுள்ளார்.
திருநின்ற பெருமான் திருநாவுக்கரசரும் தனது பாடலில் நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினையாது ஒருபோதும் இருந்தறியேன் என்கிறார்.
புறவழிபாட்டில் தொடங்கி அகவழிபாட்டிற்குச் செல்லவேண்டும். புறவழிபாட்டின் நோக்கமே அகவழிபாட்டை அடைவதுதான். நாம் புறவழிபாட்டிலேயே நின்றுவிடுகிறோம்.
அகவழிபாட்டிற்கு யோகம் என்று பெயர். யோகம் என்றால் ஒன்றுதல் என்று பொருள். சீவன் சிவத்துடன் ஒன்றுவது யோகம் எனப்படுகிறது.
இறைமையின் உடலாக விளங்கும் இயற்கையை மாசுபடுத்துவது பெருங்குற்றம் என்பதை நாம் உணர வேண்டும், இயற்கைக்கு துணை போவது புண்ணியமே ஆகும். இயற்கையும் இறைமையை இவ்வாறு உணர்த்தப்டுகிறது. இயற்கை வளம் காப்போம் இறையருள் பெறுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக