ஞாயிறு, 27 ஜனவரி, 2013

அரியமாணிக்கவல்லி கோவில்


ஏழுர் சாலியர் சமூக பட்டைய கோவில் என்று அழைக்கப்படும் அரியமாணிக்கவல்லி கோவில் பற்றிய அறிந்தும் அறியாததும், தெரிந்தும் தெரியததுமான சில விசயங்கள் தற்போது சென்ற 2012 நவம்பர் 13 அன்றைய தினமணி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திதாள்கள் மூலம் வெளிவந்த ஏழுர் சாலிய சமூகத்தாரர்களின் வம்சாவழி கோவிலான மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மேலத்திருமாணிக்கம் கிராமத்தில் உள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலத்தைச் சேர்ந்த அருள்மிகு அரியமாணிக்கவல்லி தற்போது ஏழுர் சாலிய இனமக்களால் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி நாளொரு மேனியும் அவ்வலகத்திற்கு சென்று வழிபாடுகள் நடத்தி வருகின்ற சூழ்நிலை மிக பரபரப்பை ஏற்படுத்தி சிற்ப்படைந்தும் வருகிறது, இக் கோவிலைப்பற்றி தெரிந்தும் தெரியாத- அறிந்தும் அறியாத சில வரலாற்று செய்திகளை காணலாம். மதுரைமாவட்டம் மேலத் திருமாணிக்கம் என்ற கிராமம் சதுரகிரி மலையின் வடக்கப்பக்க அடிவாரத்தில் சேர மன்னர்களால் கட்டப்பட்ட நேர்த்தியான ஆகம விதிகளின்படி 234 பாடல் பெற்ற திருத்தலங்களைப்போலவே அமைக்கப் பெற்ற சிவத்தலமாகும், இங்குள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார், இக் கோவில் அமைப்பு சிறயதாக இருந்தாலும் மூன்று சுற்று பிரகாரங்களுடன் பெரியசிவத்தலங்களின் அமைப்பை பெற்று சிறப்புற்று இருந்து வந்துள்ளது, பாண்டியமன்னார்களால் இக்கோவில் பராமரிப்பு செய்து பேணி பாதுகாப்பு பெற்று வந்துள்ளது, காலப்போக்கில் சற்று சிதைவுடைந்த நிலையில் அறநிலைத்துறையினால் மராமத்து செய்யப்பட்டு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தின் துணைக்கோவிலாகவே செயல்பட்டு வருகிறது, நித்திய அன்னதானமும் நடைபெற்று வருகிறது, எல்லாக் கோவில்களிலும் காணப்படும் சித்தர்களின் சமாதியும் இக்கோவிலிலும் ஒரு சித்தர் சமாதி நிலை அடைந்த வரலாற்றுடன் ஆதிமூர்த்தி ஐயர் என்ற சித்தர் சமாதியும் உள்ளது, இக்கோவிலுக்கு திருஞானசம்பந்தர் வருகைதந்ததாகவும் இச்சமாதி இருக்கும் இடத்தில் வாந்தி எடுத்தாகவும் வரலாற்று செய்திகளாக கூறப்படுகின்றது, இக்கோவிலின் வெளிப்புறத்தில் இதன் துணைக்கோவிலாக அரியமாணிக்கவல்லி அம்மன் அமைந்துள்ளது, இது மேலத்திருமாணிக்க கிராமத்தின் கிராம தெய்வமாக வழிபட்டு வருகின்றனர் இவ் அம்மனை நெசவு தொழில் செய்யும் ஏழூர் சமூகத்தாரோடு தேவாங்க செட்டியார்களும் தற்போது வழிபட்டு வருவதாக கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது, மொத்தத்தில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வீக அருளை அள்ளித்தரும் அம்மனை அதன் கம்பீரத்தோற்றத்தினையும் கண்டு வணங்கி அம்மன் அருள் பெறுவோம் அன்பன் சு,வை.பூமாலை சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக