திங்கள், 12 ஆகஸ்ட், 2013


திருநீறு தரும் பெருமை ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் ஏற்றனை ந்ந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே - திருமூலர் புலியோர்கோன் வெப்பொழித்த புகழியோர்கோன் கலல் போற்றி ஆழிமிசை கல்மிதப்பில் அமைந்தபிரான் அடிபோற்றி வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி ஊழிமலை திருவாதவூர் திருத்தாள் போற்றி - நால்வர் போற்றி உலககெலாம் உணர்ந்தோற் கரியவன் நிலவு லாகிய நீர்மலி வேணியன் அலகில ஜோதியன் அம்பலத்தாடுவான் மலர்சிலம்படி வாழ்த்தி வணங்கிடுவோம் - பெரியபுராணம் சேக்கிழார் திருச்சிற்றம்பலம் உலகலாவிய சமயங்களில் மிகவும் தொண்மைவாய்ந்தது இந்து சமயம் அதில் முதன்மையானது சைவமும் ஆகும், சைவமும் சிவமும் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டிருப்பது, சைவம் இல்லையேல் சிவம் இல்லை, இந்த சைவத்தின் முக்கிய ஆதார அடையாளமாக திகழ்பவை மூன்று அவை - 1) திருநீறு, 2) திரு ருத்திராட்சம், 3) திரு சடாமுடி இதில் திருநீறு என்பது எல்லோராலும் எளிதல் அணியக்கூடியது, அடுத்தது திரு ருத்திராட்சம் இது சற்று பக்குவம் அடைந்தவர்கள் மற்றும் சைவ மதத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள் மட்டும் அணிவதுண்டு, மூன்றாவதாக உள்ள சடைமுடி என்பது சைவத்தில் மிக பக்கவம் அடைந்தவர்கள் மற்றும் சித்தி யோக நிலையில் உள்ளவர்கள், மற்றும் துறவறம் பரிந்தவர்கள் தான் இதனை தரித்துள்ளனர் எனவே இது சிவயோக சித்தர்கள் ஞானிகள் மற்றும் எதிலும் பற்றற்ற நிலையில் உள்ளவர்கள் தான் இதனை கொண்டுள்ளனர் எனவே சைவத்தில் யாவராலும் எளிதில் அணியக்கூடியதும் எல்லோராலும் ஏற்று தினமும் புத்தம் புதியதாய் அணியக்கூடியதும் , திரு நீறு மட்டுமே, ஆடவருக்கு அழகு நெற்றியில் திருநீறு - மங்கையர்க்கு அழகு நெற்றியில் குங்கமும் ஆகும் இதனையே சுந்தரமூர்த்தி நாயனாரும் திருத்தொண்டத்தொகையிலும் மும்மையால் உலகயாண்ட மூர்த்திக்கும் அடிமை என்பதால் இந்த மூன்று அடையாளங்களுக்குள்ள பெருமை நன்கு விளங்கும், சைவ சமயத்தில் ஆண்டவனை துதிக்க தோத்திரப்பாடல்களால் தோத்திரம் செய்து வழிபாடுசெய்தல் என்பது முக்கியமானதாகும், இந்த தோத்திரபாடல்கள் தான் நம் நால்வர் தந்த தேவராம் திருவாசகம் திருமந்திரம் அடங்கிய பன்னிரண்டு திருமுறைகளாகும், இவற்றை முழுவதுமாக எல்லோராலும் பாட இயலாத நிலையில் இதனை சுருக்கி பஞ்சாட்சர மந்திரங்களால் இறைவனை துதிக்கப்படுகிறார்கள்,இதில் ஐந்தெழுத்து சிவமந்திரமான (ஒம்) நமசிவாய என்ற மந்திரமாகும், ஒம் என்பது பிரணவமந்திரமும் நமசிவாய என்பது சிவமந்திரமும் ஆகும், நமசிவய என்ற சிவமந்திரத்தில் தோன்றியது ஐந்து பஞ்சாட்சர மந்திரங்கள் நமசிவய, சிவயநம, யநமசிவ, மசிவயந,யநமசிவ, நமசிவய என்பது சூல பஞ்சார மந்திரம், சிவயநம என்பது சூட்சம மந்திரம், சிவசிவ என்பது அதி சூட்சம மந்திரம், இதில் எல்லாராலும் எளிதில் பயன்படுத்த தக்ககது சிவசிவ மந்திரமாகும் இதில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தைச்சேர்த்து ஒம் சிவசிவ ஓம் என்ற மந்திரம் ஒலித்து தோத்திரம் சொல்வது மிக்க நன்று, ஆகவே இறைவழிபாட்டில் தோத்திர மந்திரம் ஓதல், திருநீறு அணிதல் என்பன சைவத்தின் முக்கிய முதன்மை அடையாளமாக அமையும்,இந்த திருநீறு அணிதலில் திருநீரு பற்றி அதன் முக்கியத்துவத்திற்கும் அதன் பலன்கள் குறித்து திருஞான சம்பந்தர் பெருமான் அதற்கென ஒரு தனி பதிகமே பாடி திருநீருக்கு பெருமை சேர்த்துள்ளர்,ஞானசம்பந்தருக்கும் திருநீருக்கும் அவர் இளம்பருவத்திலிருந்தே அதன் பெருமை சிறப்படைந்துள்ளதை அவர்தம் வரலாற்று வழிமுறைகள் மூலம் அறியலாம், ஞானசம்பந்தர் சிறு கைக்குழந்தையாக இருந்தபோது அன்னாரின் தாயார் ஞான சம்பந்தருக்கு திருநீரு கொண்டு காப்புகட்டி தொல்லையிலிருந்து நீக்கம் பெற்றது அன்றார் கூறிய கூற்றின் வழியே அறியலாம், சிறுவயதில் சில நேரங்களில் பீீரிட்டு அழவதுண்டாம் ஆனால் உடனே அழகை நிறத்திவிடுமாம்,அண்ட அயலார் வீட்டில் உள்ளவர்கள் எங்கள் குழந்தைகள் யாவரும் அழும் போது அழுகை நிறத்தாமல் அழும் போது உங்கள் குழந்தைமட்டும் இதுமாதிரி இல்லாமல்உங்கள் குழந்தை மட்டும் இரவில் அழதாலும் உடனே நிறுத்திவிடுவதைக்கண்ட அண்டை அயலார் உங்கள் குழந்தைம்ட்டும் இரவில் அழதாலும் உடனே நிறுத்திவிடுகிறதே அதற்கு காரணம் யாது ? ஏதேனும் தாயத்து கட்டியுள்ளீர்களா? அல்லது மந்திரம் செய்துள்ளீர்களா? அல்து யாதனும் கயறு கட்டியுள்ளீர்களா?என்று வினவினார்களாம் அதற்கு பகவதியம்மையார் நான் எனது குழந்தைக்கு திருநீறு காப்பு அணிந்துள்ளேன் எனவேதான் குழந்தை அழதாலும் உடனே நிறுத்திவிடும் என்று திருநீற்றின் பெருமையினை அன்றே சிறப்பித்துள்ளார்கள். இதனையே சேக்கிழார் அவர்களும் தனது பெரிய புராணத்தில் திருநீறு காப்பு என்று பதிவுசெய்துள்ளார், திரு நீறு காப்பு பெருமை மற்றொரு வேளையில் திருஞானசம்பந்தர் சிவபெருமானிடம் முத்துக்களால் ஆன முத்துபல்லாக்கு, முத்துசிவிகை, முத்துஆபரணங்கள் பெற்று திருவாரூக்கு வருகை தந்தபோது, அங்குள்ள பெண்கள் எல்லாம் அவரை வரவேற்க நிறைகுடம் மணிவிளக்கு, மஞ்சள் குங்குமம் போன்ற மங்கல பொருட்களைக் கொண்டு வரவேற்க வந்தபோது, ஒரு பெண்மணி மட்டும் ஒரு தட்டில் நீறு கொண்டு வந்து சம்பந்தர் முன் வைத்தார்களாம் அவர் வேர் யாரும் அல்ல அன்னாரின் தாயரார் திலகவதியம்மார் தானாம், அப்போதும் ஞானசம்பந்தருக்கு திருநீறு மூலம் காப்பு கட்டு திருநீற்றின் பெருமையை பதிவு செய்தது வரலாறு கூறும், திருநீறு மந்திரமான பெருமை பாண்டியமன்னன் வெப்பு நோய் நீக்கி மருந்தாகிய பெருமை ஒருசமயம் பாண்டியநாட்டில் சமணமதம் வேரூன்றி சைவமதம் அழிந்துவரும் தருணத்தில்,சைவமதத்தினர் திருநீரு அணிந்தவர்களைக்கண்டாலே சமணர்கள் கண்டுமுட்டி என்றும் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கும் சமயத்தில்,இதனை மாற்றி சைவமதத்தை மறுபடியும் புத்துயிர் ஊட்ட சைவமத்தில் மாறா பற்றுடையவரான அந்நாட்டு அரசியார் மஙகையர்கரசியார் ஞானசம்பந்தரை பாண்டியநாட்டிற்கு வரவழைக்க ஏற்பாடு செய்தார், அதன் பொருட்டு ஞானசம்பந்தரும் பாண்டியநாட்டிற்கு புறப்பட்டு வந்தார், மதுரையம்பதியிலுள்ள ஒரு சிவமடலாயத்தில் தங்கியிருந்தார், இதையறிந்த சமணமதத்துறவிகள் ஞானசம்பந்தரை ஊரைவிட்டு விரட்டும் எண்ணத்தில் மந்திரங்கள் ஏவியும், பல இன்னாத வேளைகள் செய்தும் துண்பப்படுத்தினர், ஆனால் அவர்கள் ஏவிய மந்திரம் ஞானசம்பந்தரின் சிவபஞசத்திற்கு முன் பலிதம் ஆகவில்லை, எனவே சமணமத்தினர் வேறு வழியின்றி ஞானசம்பந்தர் தங்கியிருந்த சிவமடத்திற்கு தீ யிட்டனர், இதனால் அவருடன் இருந்த சிவனடிகள் பெரிதும் வெப்பு மிகுதியால் துண்புற்றனர் உடனே ஞானசம்பந்தரும் சிவமடத்திற்கு தீ யிட்டவர்களை விட்டுவிட்டு இதனையெல்லாம் கண்டுகொள்ளாதிருக்கும் மன்னர்தானே காரணம் என தாங்கள் படும் இந்த வெப்பின் கொடுமையை மன்னன் அனுபவிக்க வேண்டுமென மன்னனுக்கு வெப்புநோய் வர மந்திரம் ஏவினார், இதனால் மன்னன் அச்சனம் முதல் வெப்பு நோயால் துடிதுடித்தான் சமண அடியார்களை வரவழைத்து இதற்கு தீர்வு வேண்டினான், சமன துறவிகள் மன்னன் வெப்பு நோய் தீர மந்திர ஜபங்களை ஒதினர் ஆனால் யாதாலும் மன்னனின் வெப்பு நோய் பலிதம் ஆகவில்லை, உடனே மன்னனின் துணைவியார் மங்கையரசி மன்னனிடம் ஞானசம்பந்தர் என்ற சைவ சிவனடியார் வந்துள்ளார் அவரை அழைத்து இந் நோய்க்கு தீர்வுகாணலாம் என்று மன்னனிடம் வேண்டினார், மன்னரும் ஞானசம்பந்தரின் பெயரை கூறய உடனே தனக்கு நோய் தீர அறிகுறி தோன்றியது, எனவே ஞான சம்பந்தரை அரண்மனைக்கு வரவழைக்க உத்தரவிட்டார் இதனை சமணதுறவிகள் மிக எதிர்ப்பு தெரிவித்தனர், இருப்பினும் மன்னர் இதற்கு உடன்படாமல் வரவழைத்தார், ஞானசம்பந்தரும் வந்தார், மன்னனின் வெப்பு நோய்க்கு மருந்தாக திருநீறு பூச எண்ணினார் அப்போது மன்னரும் சமண மத்தினை சேர்ந்தவராகையால் சமணமத்தினர் திருநீரு பூச அனுமதிக்க வில்லை, எனவே மன்னர் எனது வெப்பு நோய் தீர வலபக்கம் சைவமதத்தின் மூலம் ஞானசம்பந்தரும், இடதுபக்கத்தினை சமண மததுறவிகள் மூலம் தீர்வு செய்ய வேண்டினார், சமண மத்தினரால் யாதும் செய்ய முடியவில்லை மன்னரின் வெப்பு நோயின் துன்பம் குறையவில்லை எனவே ஞானசம்பந்தரை வேண்டினார், உடனே சமணமதத்தினரால் திருநீறு பூச மறுக்கப்பட்டதால் உடனே மடப்பள்ளியிலுள்ள சாம்பலை பயன்படுத்தலாமா?என்று வினவ சமணமதத்தினர் அதற்கு சம்மதம் தெரிவிக்க உடனே மடப்பள்ளி சாம்பல கொண்டுவரப்பட்டு அந்த சாம்பலுக்கு திருநீற்று பதியம் பாடி சாம்பலுக்கு உரு ஏற்றி அந்த சாம்பலான திருநீற்றை மன்னனின் வலப்பக்கம் பூசினார், உடனே மன்னனின் வெப்பு நோய் வலப்பக்கம் பரிபூரண நிவாரணம் அடைந்தது, மன்னன் துன்பத்திலிருந்து விடுதை பெற்று, இடப்பக்கமும் திருநீறு பூச வேண்டி திருநீறு இடப்பக்கமும் அணிந்து முழு நிவாரணம் பெற்றான், இதிலிருந்து திருநீறு நோய் நீக்கும் மருந்தாக பெருமை கொண்டது, சமண சமயத்திற்கு சைவமத்திற்கு நடந்த போரட்டத்தில் வெற்றியும் கண்டது, ஞான சம்பந்தரின் திருநீற்று பதிகத்தின் மூலம் திருதரும் பெருமையினை காணலாம், மந்திரமாவது நீறு, வானவர் மேவது நீறு, சுந்தரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறு, தந்திரமாவது நீறு, சமயத்தில் உள்ளது நீறு, வேத்தில் உள்ளது நீறு, வெந்துயர் நீக்குவது நீறு போகம் தருவது நீறு, புண்ணியமாவது நீறு ஒத தகுவது நீறு. உண்மை உள்ளது நீறு, முக்தி தருவது நீறு, முனிவர் அணிவது நீறு, சத்தியமாவது நீறு, கற்றோர் புகழ்வது நீறு பக்தி தருவது நீறு, பரவ இனியது நீறு. காண இனியது நீறு, கவினை தருவது நீறு, பேணி அணிவருக்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு, புண்ணியமாவது நீறு, மதியை தருவது நீறு இவ்வாறு திருஞானசம்பந்தர் திருநீற்றின் பெருமையை சிறப்பித்துள்ளார் திருநீரு அணிந்தால் சிவத்தின் அடிமை என்றும் திரு நீரே சிவமாக உள்ளதாக பெருமை பெருவது நீறு பாம்பாட்டி சித்தர் பாம்பன் சுவாமிகள் மூலம் பெருமை திருநீற்றின் பெருமையினை சிவத்திரு சித்தர் பாம்பன் சுவாமிகள் மூலம் பெருமையை அறியலாம், ஒருமுறை பாம்பாட்டி சித்தர் பாம்பன் சுவாமிகளின் குழந்தை இரவில இடைவிடாது அழுது கொண்டே இருப்பதை கண்ட அன்னாரின் துணைவியார் பாம்பன் சுவாமிகளிடம் தாங்கள்தான் முருக பக்தர்தானே இக்குழந்தை அழுவதை நிறத்த திருநீறு அணிய வேண்டினார் அதற்கு பாம்பன் சுவாமிகள் உடன்படவில்லை எனவே குழந்தையின் அழுகையும் தீரவில்லை இதனால் இருவரும் வேதனையுடன் இருக்கும் பட்சத்தில் சுவாமிகள் வெளியில் சென்ற சற்று நேரத்தில் ஒரு சிவனடியார் திடீரென வீட்டிற்கு வந்து ஏன் குழந்தை அழுதுகொண்டே உள்ளது ஏதேனும் உபயம் செய்ய வேண்டியதுதானே என்று வினவி விட்டு குழந்தை கொண்டு வருங்கள் நான் திருநீறு இடுகிறேன் என்று கூறி குழந்தைக்கு தான் கொண்டு வந்த திருநீற்றை குழந்தைக்கு அணிவித்துவிட்டு சென்று விட்டார், குழந்தையின் அழுகையும் நின்றுவிட்டது, அதன் பிறகு பாம்பன் சுவாமிகள் குழந்தையின் அழகை நின்றதை அறிந்து துணைவியாரிடம் காரணம் பற்றி வினவினார், அதற்கு துணைவியார் தாங்கள் திருநீறு இட மறுத்து சென்றபின் ஒரு சிவனடியார் வந்தார் குழந்தை அழுவதை கண்டு திருநீறு அணிவித்து சென்றார், குழந்தையின் அழுகையும் நின்றுவிட்டது என்றார், உடனே வந்து சென்ற சிவனடியார் யார் என்று அங்குமிங்கும் தேடினார் காணது கண்டு வியப்புற்று தான் திருநீறு பூச மறுத்தமையால் தனது முருகபெருமானே சிவனடியாராக வந்து திருநீறு அணிவித்து சென்றுள்ளார் என வியப்புற்றார், இதிலிருந்து குழந்தையின் அழுகைக்காக திருநீராக மருந்தாக முருகனே அணிவித்து சென்றது திரு நீறும் பெருமைபெற்றது, அறியலாம் நாயன்மார்கள் மூலம் பெறுமை பெற்றது திருநீறு அணிதல் என்பது எல்லா சிவனடியார்கள் எல்லாம் கையாண்டனர் என்றாலும் நெற்றிலில் பூசும் - பூசப்பட்ட திருநீறுக்காகவே தன் உயிர் நீத்த நாயன்மார்களை பார்க்கலாம், அதில ஒருவர் ஏனாதிநாத நாயனார் அன்னார் திருநீறு மேற் பக்தி மிகுதியால் திருநீறு அணிந்த சிவனடிகள்களை கண்டவுடன் சிவனையே கண்டதாகக் கொண்டு அன்னாருக்காக தனது உடல் பொருள் ஆவி தனது தன்மானம் என எதையும் தந்த உயிரை விட்டவர், சிவ சின்னமாகிய விபூதியை மெய்யன்போடு தரிப்பவர் சிவபதம் அடைவர் இதனை திருமூலர் தனது திருமந்திரத்தில் திருநீறு அணிந்திட எல்லாவினைகளும் தீர்ந்து சிவனடி சேர்வர் என்று " கங்காளன் பூசுங் கவிசத் திருநீற்றை மங்காமல் பூசி மகிழ்வாரே " என்ற பாடல் மூலம் திருநீற்றின் மகிமையை விளக்கிறார், இதன்படி நெற்றியில் பூசும் திருநீற்றின் மீது மிக பக்தி கொண்ட ஏனாதிநாத நாயினார் வாள் வித்தை பயிற்சி நடத்தும் தொழிலை கொண்டவர், இவரின் வளர்ச்சி பொறாமை கொண்ட இவர் ஒத்த தொழில் புரிந்த அதிசூரன் என்பான் இவர் மீது பொறாமை கொண்டு அவருடன் போர் செய்யக் கருதி கூட்டத்தோடும், தனியாகவும் இவருடன் பலமுறை போர் செய்து தோல்வியுற்றான் இருப்பினும் அவனது தனியாத எப்படியாவது போரிட்டு வஞ்சனையில் வெல்ல உபாயம் செய்தான், ஏனாதி நாயனார் விபூதியின் மேல் கொண்ட அபிரித பக்தியும் மரியாதையும் கொண்ட பண்பையும் விபூதி அணிந்தவரை எத்தருணத்திலும் எப்போதும் எந்த வித துன்பமும் செய்யமாட்டார் என்ற அரிய குணத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவரை தனியே போர் புரிய அழைத்தான் அவ்வாறே நாயனாரும் போர் புரிய சம்மதித்து யுத்தத்ததிற்கு ஆயத்தமாகி போர்களத்தில தயார் நிலைியில் இருந்தார், அப்போது வஞ்ச எண்ணங் கொண்ட அதிசூரன் தான் ஒரு பழத்த சிவனடியார் போல் நெற்றி நிறைய திருநீற்றை அணிந்து கொண்டு நாயனாருடன் போர் புரிய தனது வாளை எடுத்து போரிட தொடங்கினான், அப்போது எதிரியின் நெற்றியை கண்ட ஏனாதி நாயனார் உடனே திருநீர் அணிந்த சிவபெருமானே தன் எதிரில் இருப்பதாக கொண்டு தன்னிடம் இருந்த ஆயுதங்களை கீழே வீசி எறிந்து விட்டு நிராயுதபானியாக நின்றார் உடனே அதிசூரன் அவரை தன் வாளால் பதம் பார்த்து தனது வஞ்சகத்தை தீர்த்துக் கொண்டான்,இவ்வாறு விபூதியின் மேல் கொண்ட அதிபக்தியால் தனது உயிரையே விட்டவர் மற்றொரு நாயனார் மெய்பொருள் நாயனாராகும், இவர் மீது பொறாமை கொண்ட எதிரி நாட்டு அரசன் நாயனாரை வஞ்சகத்தால் கொல்ல நினைத்து திருநீறு அணிந்து சிவ உருவத்தில் வந்து அவருடைய அரன்மனைக்கே வந்து மறைமுகமாக சிவசாதனங்களை கொண்டுவருவதுபோல் அரண்மைன்க்கு வந்து நாயனாரின் படுக்கை அறையிலேயே நாயனாருக்க ஆத்ம உபதேசம் செய்வதாகக் கூறி தன்னுடை ஆயுதத்தால் மன்னரை - நாயன்ாரை கொண்டு விட்டான், நாயனார் தனது உயிர் போகும நிலையிலும் தன்னை கொலை செய்த எதிரியான போலி சிவனடியாரை சிவ வேடம் அணிந்து திருநீறு பூசியுள்ள காரணத்தால் அவரை எந்த வித தொந்தரவு செய்யக் கூடாது என்றும் அவருக்கு சரியான பாதுகாப்பு வழங்கி அன்னரை ஊர் எல்லை வர பாதுகாப்புடன் வெளியேற ஆனையிட்டு சிவ அடையாளத்திற்காக உயிரையும் துறந்து எதிரிக்கு பாதுகாப்பு வழங்கி திருநீற்றுக்கு பெருமை சேர்த்தவர் மெய்பொருள் நாயினார் வாரியார் சுவாமிகள் திறுநீறு பெருமை கூறியது வாரியார் சுவாமிகள் ஒருசமயம் ஆன்மிக சொற்பொழிவிற்காக வெளியூர் சென்றுவிட்டு மீழ் பயணத்திற்காக ஒரு புகைவண்டி நிலையத்தில் இழைப்பாரிக் கொண்டு இருந்தபோது அவரை கடந்து சென்ற மாணவ செல்வங்கள் சிலர் அன்னாரை கேலி செய்யும் நோக்கில் சுவாமிகளை பார்த்து தாங்கள் ஏன் உடல் முழுவதும் வெள்ளையடித்துள்ளீர்கள் என கிண்டலாக கேட்க அதற்கு வாரியார் சுவாமிகள் சற்றும் கோபம் கொள்ளாமல் சிவன் இருக்கும் வீட்டிற்கு தானப்பா வெள்ளையடிக்க வேண்டும் கட்டை மண் சுவருக்கு யாரப்பா வெள்ளையடிப்பார்கள் என் உடலின் உள்ளே சிவன் இருக்கிறான் அவன் குடியிருக்கும் இந்த உடல் துாய்மை பெற வெள்ளையடித்துள்ளேன் என்று மாணவர்களுக்கு அன்புடனே உபதேசபாணியில் பதில் அளித்ததைக் கண்ட மாணவர்கள் வெக்கத்தால் கூனிகுறுகி உடனே தங்களின் தவறுக்கு மன்னிப்பு வேண்டிக் கொண்டதோடு அவரிடமே திருநீறும் பூசி சென்று அன்றுமுதல் அவர்களும் தினமும் திருநீறு பூசி மகிழ்ந்துள்ளனர் உண்மை தருவது - இடர்களைவது நீறு ஒருமுறை தண்டபாணி தேசிகர் என்ற சிவனாடியார் கேரள மாநிலத்தில் ஆன்மிக தளங்கள் சென்றுவரும் தருணத்தில் ஒருநாள் அந்தி மறையும் போது அருகாமையில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்லும் முகத்தான் கடல்நீர் பின்வாங்கும் காலங்கரை நீரை கடந்து கோவிலுக்கு செல்ல படகு மூலம் செல்ல சென்ற போது அந்நீர் பரப்பை கடக்க உள்ள நபர்களுடன் தானும் படகில் ஏறிவிட்டார், ஏறிபின்தான் தெரிந்தது படகு ஒட்டுபவர் சரியான நிதானத்தில் இல்லாது படகை ஏறுக்குமாறு செலுத்தி சென்றது கண்டனர், எல்லோரும் பதைபதைத்து கொண்டிருந்த நேரத்தில் மேலும் சோதனை ஏற்பட்டது, படகில் சிறு துவாரத்தின் வழியாக நீர் கசிந்து படகில் நீர் பெருகிக் கொண்டிருந்தது எல்லோரும் பதைபதைத்து முனகலோடு இருந்தனர், தண்டபானி தேசிகரும் இன்றும் சலகண்டம் தான் இன்று உயிர் பிழைப்பது மறுபிறப்புதான் என்று எண்ணி தான் செல்லவிருக்கும் முருகனை உள்ளமுறுக வேண்டினார் உடனே தனது மனத்தில் ஒரு அசிரீ வாக்குபோல் திருநீற்றுக்கோவில் நான் இருக்கிறேன் பயம் வேண்டாம் என்ற யாரே கூறவது போல் உணர்வு ஏற்பட்டது, உடனே படகில் அதன் விளைவாக யாரோ ஒருவர் படகோட்டியை படகை இவ்வாறு செலுத்து இப்படிப்போ, அப்படிப்போ என்று ஒருவர் அதட்டிக் கொண்டிருந்தார் படகோட்டியும் சரியான திசையில் படகை செலுத்திக் கொண்டிருந்தார் மற்றவர்களும் படகில் கசிந்த நீரை கோப்பைகளின் மூலம வாரி வெளியேற்றிக் கொண்டிருந்தனர் ஒருவழியாக படகும் கரையை சேர்நத்து எல்லோரும் கரை வந்ததற்கு நிம்மதி பெருமூச்சிட்டுவிட்டனர், தண்டபாணி தேசிகரும் கரைவந்தமைக்கு முருகனுககு நன்றி தெரிவிக்கும் முறையாக திருநீற்றை எடுத்து பூச நினைத்த போதுதான் அந்த அசிரீ வாக்கு திருநீற்று கோவில் தான் இருப்பதாக கூறியது நினைவு வந்தது, எனவே திருநீரே ஆண்டவன் குடியிருக்கும் கோவிலாக நம் துயர் துடைக்கும் ஆலயமாக பயன்பட்டது கண்டு பெருமை கொண்டார்,வழிக்கு துணையாக இடர்களையும் ஆயுதமாக திருநீறு விளங்குகிறது, அருணகிரி நாதர் பெருமை சேர்த்தது அருணகிரிநாதர் ஒருநாள் திருவண்ணாமலையில் பெருமானை தரிசிக்க சென்ற போது கோவில் மூலஸ்தானத்தில் சுவாமியை வணங்கிவிட்டு பிரசாதமாக திருநீறு பெறுவதற்காக சுற்றுமுற்றும் பார்த்தவுடன் ஒரு ஆச்சாரியார் திடீரென வந்து திருநீறுவழங்கி சென்றார் திருநீரை அணிந்து விட்டு ஆச்சாரியாருக்கு நன்றி சொல்லும் விதமாக சுற்று பார்த்தபோது தனக்கு பிரசாத திருநீறு வழங்கிய ஆச்சாரியார் அங்குஇல்லை பின் சன்னதியை விட்டு திரும்பும் தருணத்தில் எதிரே அந்த ஆச்சாரியார் வேகமாக வந்து கொண்டிருந்தார் அவரை கண்டவுடன் அருணகிரியார் அவருக்கு திருநீறு வழங்கியதற்கு நன்றியை கூறினார் ஆனால் உடனே அந்த ஆச்சாரியார் நான் இப்போதுதானே வருகிறேன், தங்களுக்கு திருநீறு வழங்குவதற்காகத்தானே விரைந்து வந்து கொண்டிருக்கிறேன் ஆனால் தாங்கள் திரும்பிவிட்டீர்கள் என்ற கூற்றை கேட்டவுடன் அருணகிரியாருக்கு ஒன்றும் புரியவில்லை அப்படியானால் தன்ககு திருநீறு வழங்கியது யார்? என் பொருட்டு அண்ணாமலையார் தான் வழங்கினாரா? என்ற ஆச்சிரியத்தோடு திரும்பினார், இதிலிருந்து அண்ணாமலையாரே அருணகிரியாருக்கு திருநீறு வழங்கப்பெற்று சிறப்பு பெற்றது இதனால் அருணகிரிநாதர் திருநீரை வைத்தே பாடல்கள் பாடி அண்ணாமலையாரை அழைத்து சிறப்பித்தார் செல்வம் தருவது திருநீறு அணிவதால் செல்வம் கிடைக்கும் ஒரு ஏழை நெசவாளிக்கு திருநீறு அணிவதன் பயனை எடுத்துரைக்கும் முகமாக வாரியார் சொற்பொழிவு மூலம் ஒரு அடைந்த நிகழ்வு மூலம் அறியலாம், கடினமான உழைப்பே பிரதானமாக கொண்ட ஒரு நெசவாளி திருநீறு அணிவதோ தெய்வபக்தியோ இல்லாதவருக்கு அவர் துணைவியார் ஆன்மீக நெறிகளிலும் திருநீறு அணிவதிலும் மிக விரும்பம் கொண்டவர் தன் கணவரே இதற்கு எதிர்மறையானவர் இதன் பொருட்டு அவரை சைவநெறியில் கொண்டுவர முயன்று விரக்தியடைந்த நேரத்தில் ஒரு சித்தி பெற்ற சிவனடியாரை கண்டு இதற்கு வழிவேண்டினார் அவரும் தனது கணவரை தான் திருநீரு அணியாவிட்டாலும் தினமும் ஒரு திருநீறு அணிந்த சிவபக்தரை கண்டபின்தான் உணவு என்று கூறி அதன்படி செய் என்று கூறனார் அந்த அம்மையாரும் தன் கணவனிடம் இவ்வாறே கூறனார் அவரும் இதற்கு சம்மதித்து தன் வீட்டுககு அருகாமையில் உள்ள ஒரு சிவ பக்தரை அடையாளம் கண்டு கொண்டார் அன்னார் தினமும் மூக்கு பொடிபோடும் பழக்கம் உள்ளவரும் அந்த பொடியும் இவரிடமே பெறும் தன்மையுடையவர் எனவே இவருக்கு தினமும் அவரை உணவு உண்ணும் முன்பாக மூக்குபொடி பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார் இதன்படி இவருடைய பழக்கவழக்கங்கள் நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தபோது ஒருநாள் அந்த திருநீறு அணிந்த சிவபக்தர் வெகு நேரம் ஆகியும் வரவில்லை இவருக்கோ பசி அதிகமாயிற்று உடனே தானே அவருடை வீட்டிற்கு அவரை தேடிச் சென்றார், அவர் தனது தோட்டத்தில் சிறிய வேலையாக தோட்டத்தில் ஒரு குழி தோண்டிக்கொண்டிருந்தார் அப்போது அக்குழியில் ஒரு புதையல் இருப்பதை கண்டு வியப்புற்று பயத்துடன் புதையலை எடுத்துக் கொண்டிருந்தவேளையில் இவர் சிவபக்தரின் திருநீறு அணிந்த நெற்றியை சற்று தொலைவிலேயே பார்த்தவுடன் பார்த்துவிட்டேன் பார்த்துவிட்டேன் என்று கத்திக்கொண்டே ஒட ஆரம்பித்தார், அவரே தான் கண்ட புதையலைத்தான் பார்த்து விட்டார் என எண்ணி பதைபதைத்துக் கொண்டு அவரை பின் தொடர்ந்து ஒடி ஐயா பார்ததது தான் பார்த்தீர்கள் தயவுசெய்து பார்த்ததை யாரிடமும் கூறவிடாதீர்கள் உங்களுக்கும் பார்த்த புதையலில் பாதி பங்கு தருகிறேன் என்றார், இந்தநெசவாளிக்கோ திருநீறு நெற்றியை தினமும் பார்த்ததற்கே பாதி புதையல் பரிசு கிடைத்துவிட்டதே என மிக மகிழ்ச்சி கொண்டார் பார்த்தர்கே செல்வம் என்றால் இந்த திருநீரை தினமும் அணிந்தால் இன்னும் செல்வம் கூடுமே என்று மகிழ்ந்து அன்றிலிருந்து தினமும் திருநீறு அணிய ஆரம்பித்தார் திருமந்திரத்தில் திருநீற்றின் பெருமை திருமூலர் தனது திருமந்திரத்தில் திருநீற்றின் பெமையை தனது மந்திரத்தில் கூறியது கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை மங்காமல் பூசி மகிழவரேயாமாகில் தங்கா வினைகளும் சாரும் சிவகதி சிங்காரமான திருவடி சேர்வாரே எலும்புகளை அணியும் இறைவன் பூசிக்கொள்வதும், உடலுக்கு கவசமாக விளங்கும் திருநீற்றை சிறிதும் தடையில்லாது உடலில் பூசிமகிழ்ந்தால் தீவினைகள் நீங்கும் மோட்சம் இன்பம் அடைய வழி உண்டாகும் இறைவனது அழகிய திருவடிகளை அடையலாம் இந்த மருத்துவ குணங்கள் கொண்ட திருநீறை யாரும் ஆகம விதிப்படி தயார் செய்து பயன் பெறலாம், திருநீறு தயாரிக்கும் முறை 2 கிலோ சாம்பல் கிடைக்கும் அளவிற்கான பசுஞ்சாணம், பசுஞ்சாணம் கீழே விழாமல் எடுத்து வரட்டியாக்கி பஸ்பமாக்கி சாம்பலாக்கி கொண்டு சலித்து 2கிலோ எடுத்துக் கொள்ளவேண்டும் இவற்றுடன் பஸ்பமாக்கிய - படிகாரம் 10கிராம், குங்கிலியம் ,சங்குபஸ்பம், ஆமைஒடு, பவளம்,சிராபஸ்பம், கிரஞ்சி பஸ்பம், முத்துசிப்பி, நத்தை ஒடு, ( எல்லாம் பஸ்பமாக்கியது 10கிராம்) வீதம் கலந்து ஒன்றாக்கி பித்தளை தாமபளத்தில் பரப்பி ஒம் சிவசிவ ஒம் ஒதி மண் குடுவைகளில் சேித்து வைத்துக்கொள்ளலாம் ,ஆலயத்தில் சுவாமிக்கு அபிசேகத்திற்ககு கொடுத்து அபிசேகம் செய்தும் சேமித்து வைத்துக்கொள்ளவும், இவ்வாறு தயார் செய்த மந்திர விபூதி எல்லாவற்றிக்கு சிறநதது, திருநீறு மருத்துவ குணமுடையது திரு நீறை நெற்றியில் நீரில் குழைத்து பூசினால் கபாலத்திலுள்ள நீர் குறைந்து கபால நீரால் வரும் வியாதிகள் தீரும் என்பது இன்றளவிலும் கண்ட உண்மை, வாதநோய் உள்ளவர்களுக்கு உடலில் பூசி வாதநோய் குணமடைவதை காணலாம், திருநாவுக்கரசர் சுவாமிகளுக்கு சூன்ம வயிற்று வலிக்கு அவரின் தமக்கையார் வயிற்றில் திருநீற்றை பூசி குணமடைந்த வரலாறு பெரியபுராணத்தில் காணலாம் இவ்வாறு திருநீற்றின் பெருமையை புராண காலம் தொட்டு இன்றுவரை அதன் சிறப்பு பெருமைகளை இன்றளவும் காணலாம் எனவே தோத்திரங்கள் ஓதி திருநீறு அணிந்து பெருவாழ்வு பெறுவோம், அன்புடன் சிவ, வை, பூமாலை சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக