பெரிய புராணத்தில் சுந்தரரும் தோழமையும்
இளமைக்கே உரிய பண்புகள் பொருந்திய இளையரே சுந்தரரே பாட்டுடைத்தலைவனாக கொண்டது பெரிய புராணம், இது ஒரு பக்தி நூல்- அன்பு நூல் அன்பையே இறைவனாகக் கண்டார்கள் இந்துக்கள், அன்பின் நிறையுருவமாக இறைவனை சிவமாக கண்டார்கள் சைவர்கள், அன்பும் சிவமும் ஒன்றே - அன்பே சிவம் - என்கிறார் திருமூலர், அந்த அன்பின் நிறைவுருவமாக இறைவனை அன்பால் ஆராதித்த 63 நாயன்மார்களின் வரலாற்றை எடுத்துக் கூறும் ஓர் அன்பு காவியம் தான் பெரியபுராணம், இதில் கூறும் 63 பேரும் அன்பு வழி நின்ற சிவனடியார்கள், அந்த அன்பு கனிந்து முற்றி, பழுத்து - பக்தி -அன்பாக பர்ணமித்தருக்கிறது, இளமை காலத்தில் ஏற்பட்ட சோதனைகளை சாதனைகளாக மாற்றிவதை அடியார்களின் வாழ்வில் காணமுடிகிறது, சம்பந்தரின் இளமை துணிந்து நின்று சமண மதத்தை எதிர்த்து சைவத்தை பாண்டிய நாட்டில் தழைக்க செய்தது,
பாட்டுடைத்தலைவனான சுந்தரரின் வாழ்ககையில் தன்னை கையாயத்தில் பரமனிடம் வேண்டிக்கொண்டதிற்கிணங்க ஆதிசிவன் பரமனும் இப்பூவுலகில் முதிய அந்தணர் வேடங்கொண்டு மணக்கோலத்திலிருந்த சுந்தரரிடம் நீ எனக்கு அடிமை என்று வழக்கு தொடுத்து சுந்தரரை ஆட்கொள்ள எண்ணிய பரமன் திருமணத்தை நிறத்தியோடு தன்னுடன் வழக்கு தொடுத்து அடிமைப்படுத்திய பரமனை தன்னுடைய செந்தமிழ் தோத்திர பாடல் களினால் பாடி அன்பு செலுத்தியதால் அந்த பரமனே சுந்தரரை தோழனாக ஏற்றுக்கொண்டார், நட்பின் மிகுதியால் தான் வேண்டுவன குறித்து வேண்டியும், துன்பம் வருங்கால் இடர் கலையார் என்றும் நீர் வாழ்ந்து போதிரே! என்று தயங்காமல் - கூறும் வன்தொண்டராக காண்கிறார்,
இறைவழிபாடானது வெறும் பூசித்தல், வாசித்தல், போற்றி பாடுதல், செபித்தல், ஆசையற்ற நல் தவம் மேற்கொளல் வாய்மை, அழுக்கின்மை ஆகியவற்றோடு வழிபட்டால் மற்றும் போதாது இறைவனை திருமூலர் கூற்றின்படி இறைவின் திருவருளை பெற பல வழிகள் உள்ளன, அவற்றுள் 1, சர்புத்திர மார்க்கம், - இறைவனை தந்தையாகவும் ஆன்மாவை புத்திரனாகவும் பாவித்து வழிபடுதல் - இது சம்பந்தர் வழி
2, தாச மார்க்கம் - இறைவனை ஏஜமானனகவும், உயிர்கள் பணியாளர்களாகவும் இருந்து வழிபடுதல் - இது நாவுக்கரசர் வழி
3. சக மார்க்கம் - இறைவனை தோழனாகக் கொண்டு வழிபடுதல் - இது சுந்தரர் வழி
4, - சன்மார்க்கம் - இறைவனை ஞானி - குருவாக கொண்டு ஆத்மா வை சீடனாக கொண்டு வழிபடுதல் - இது மாணிக்கவாசகர் வழி
மேற்கண்ட வழிமுறைகளில் சுந்தரர் இறைவனை சமமார்க்கமான வழிமுறையில் உற்ற உயிர் தோழனாகவே கொண்டு அன்பின் வழியாக பக்தி கொண்டு, தனக்கு வேண்டுவனே கூறித்து வேண்டும் போதெல்லாம் வேண்டியும், வேண்டியனவற்றை பெற்றும், வழிபட்ட முறைகள் உற்ற நட்பிற்கு இலக்கணமாக அமைந்தது, தன்னை தடுத்தாட்கொள்வதற்காகவே வந்த அந்தணர் உருவிலான பரமனை நோக்கி தேவரீர்! பிராமண வடிவங் கொண்டு தமயேனை வழக்கினால் வெல்லுவதற்கு எழுந்தருளி வந்தமை அறியாத சிறியேனுக்கு பழைய அறிவைத் தந்து உலக வாழ்க்கையில் மயங்காமல் உய்யும்படி செய்தருளிய கடவுளே! அடியேன் உமது அநந்த குணங்களை எதையறியேன்? என்ன சொல்லி பாடுவேன்? என கேட்க அதன் பொருட்டு சிவனாரும் நீர் என்னை பித்தனென்று சொன்னயே எனவே பித்தனென்றே பாடுக! என்று சொல்லியருளியவுடன் சுந்தரரும் பித்தா பிறைசூடி பெருமானே என்று பாடியருளினார்,
பின் பல புண்ணிய யாத்திரியை மேற்கொண்டு விட்டு பரமனின் வேண்டுகோளின்படி திருவாரூர் வந்தடைந்தார், அவ்வண்ணம் திருவாரூரிலே குடிகொண்ட வன்மீகநாதர் தன் பக்தர்களிடம் நம்பியாரூரான் என் அழைப்பிற்கிணங்க இங்கு வருகின்றார் நீங்கள் அவனை எதிர் கொள்வீர் என பணிக்கிறார், இங்கு இறைவன் தனது பக்தன் தன்னை காண வந்தாலும் , இறைவர் சுந்தரரை தோழனாகவே கொண்டு தான் வரவேற்கும் முகமாக செயல் படுவதோடு வன்மீகநாதருடைய திருவருளினாலே நாம் உனக்கு தோழரானோம் என்று சுந்தரருககு கேட்கும்படியான அசிரீரி வாக்காகவே தெளிவாக்குகிறார், இதன் தன்மையாலேயே அன்றுமுதல் அடியார்கள் எல்லோரும் சுந்தரரை - தம்பிரான் தோழர் - என்று சொல்லிக் கொள்ளலானர் இறைவரும் பக்தரும், மனதால் கொண்ட அன்பின் மிகுதியால் வெளிப்படையாகவே தோழமை ஆகிவிட்டனர்,
இத்தருவாயில் கைலங்கிரியில் பார்வதி தேவியாரின் சேடியர்களில் ஒருவரான கமலினி என்ற மங்கை , பரவையாராக அவதரித்து பருவமங்கையராக, திருக்கோவிலியே தினசரி தரிசனம் பண்ணிவரும் பொழுது சுந்தரரும் பரவையாரும் எதிர் கொள்கின்றனர் இருவரும் முற்பிறவி அன்பு - காதல்- தொடர்பினால் காதல் வசப்படுகின்றனர் பரவையார் மேல் காதல் கொண்ட சுந்தரர் தனது காதலை வன்மீகநாதரிடம் பரவையாரை எனக்கு மணமுடித்து வைக்க வேண்டினார் அதன்படி தன் நண்பர் சுந்தரரின் வேண்டுகோளை ஏற்று தன் தொண்டர்கள் மூலம் மணமுடித்துவைத்து நட்பினை மிகைப்படுத்துகின்றனர் தோழர்கள்
சுந்தரரின் காதலுக்கு தோள் கொடுத்த பரமன் - வன்மீகநாதர் பொருளாதார உதவிக்கும் உடன்படுகிறார், பரவையார் பங்குனி உத்திர திருவிழாவிற்கு சுந்தரரிடம் பணம் கேட்க, சுந்தரர் யாது செய்வதென அறியாது, சிவலாயங்கள் தோறும் பதிகம் பாடி வரும் காலத்தில் ஒரு திருக்கோவிலிலி துயில் கொள்ளும் போது தனக்கு தலையணையாக வைத்திருநத செங்கள் பொற்கற்களாக மாறியது இறைவன் அருளால் பெற்றது கண்டு மனம் மகிழ்கிறார், பரமன்பால் கொண்ட தோழமையால் தான் நொந்து உருகி வேண்டியதன் பலனாக நண்பரான பரமன் தனக்க பொற்கற்களை கொடுத்து பொருளுதவினார், அதுமட்டுமன்றி பின் திருமுதுகுன்றம் சென்று பதிகம் பாடி பன்னீராயிரம் பொன் பெற்று இதனை இறைவர் கூற்றுப்படி மணிமுத்த நதியிலிட்டு திருவாரூர் குளத்தில் போய் எடுத்துக் கொள் என்றபடி திருவாரூர் சென்று குளத்தில் தேடினார் நதியில் போட்டுவிட்டு குளத்தில் தேடினால் கிடைக்குமா? என்று ஏளன கோபம் கொண்டார் இருப்பினும் சுந்தரர் மனம் தளராது நண்பர் - இறைவரை வேண்டி மனமுறுகி பதிகம் பாடியதன் மூலம் பன்னீராயிரம் பொன்னும் கிடைக்கப் பெற்றார்,
பின் திருவொற்றியூர் சென்று சுவாமி தரிசனம் செய்யுங்காலத்தில் கைலங்கிரியில் அனிந்திதை என்ற மங்கை இங்கு சங்கிலியாராக தோன்றி, சுவாமிக்கு மலர் பணிவிடை செய்யும் வேளையில் சுந்தரர் சங்கிலியாரைக் கண்டார் சங்கிலியாரும் சுந்தரரின் ேம்ல் காதல் கொண்டார், இருவரும் சில சபதங்களுடன் மணமுடிக்கப்பெற்றனர் மணமுடித்து சிலகாலம் சங்கிலியாருடன் வாழ்ந்து வரும் காலத்தில் திருவாரூர் வன்மீகநாதர் சுவாமிகளை இவ்வளவு காலம் மறந்திருந்ததை நினைத்து மனமுருகி திருவாரூர் செல்ல முனைகையில் தனது சபத்தை மீறியமையால் சுந்தரர் கண்களை இழந்தார், இத்துடன் கொடிய நோய்களுடனும் அல்லல்கள் பல பட்டார், அப்போது தன் தோழர் வன்மீக நாதரை வேணடி என்னை மன்னித்து எனக்கு கண் தருவாயோ ! நீரோ முக்கண் கொண்டுள்ளீர் எனக்கு ஒரு கண்ணாவது தர உமக்கு மனம் வரவில்லையோ என தோழமையுணர்வுடன் கண்டிப்பது போன்று வேண்டினார் தோழன் அருளால் பார்வை கிடைத்தது,பின் பரவையாரை காண துடிக்கிறார் பரவையாரோ சுந்தரர் சங்கிலியாருடன் வாழந்ததையால் சுந்தரரை கணவராக ஏற்க மறுக்கிறார், எனவே சுந்தரர் தனது தோழனான பரமனை பரவையாரிடம் சென்று தன்னை ஏற்றுக் கொள்ளச் செய்வதற்காக பரவையாரிடம் தூதுவனாக செல்ல வேண்டுகிறார் தூது சென்றுவந்த பரமனும் பரவையார் தங்களை ஏற்க மறுக்கிறார் என்று கூறியவுடன் பரமனிடம் நானே சங்கிலியாரை ஊரறிய முறைப்படி மணம் முடித்துக்கொண்டவன் நீர் உமாதேவியாருடன் கங்கையை சடையில் மறைத்து வைத்திருக்கிறீர் இப்படி இருக்க நான் என்ன தவறிழைத்தேன் ஏன் என்னை பரவையாருடன் சேர்தது வைக்க முடியவில்லை என நண்பரோடு வாதம் செய்து அழுது புலம்பி தோழமையின் மிகுதியால் இருவரையும் பரமனே சேர்த்து வைக்கிறார், இவ்வாறு சகமார்க்கமாக இறைவனிடம் சுந்தரர் அன்புகொண்டு சுகவாழ்வு பெற்று முக்தியடைகிறார்,
இத்துடன் நட்பு பரமனிடம் இருந்தோடு இன்றி சேரமான் நாயனரையும் பரமன் மூலம் நட்பாகி இருவரும் பல புண்ணிய தலங்களுக்கு சென்று பின் தான் முக்தியடையும் காலத்தில் கைலியங்கிரியில் தன் நண்பரையும் சேர்த்து கைலாசம் சேர உதவினார், இதுவும் சுந்தரரின் தோழமை பாங்கிற்கு முத்தாய்ப்பாக அமைகிறது,
திருசிற்றம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக