ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

நமசிவாய


நமசிவாய சைவ சமயத்தின் மூல மந்திரம் ” நமசிவாய” எனும் திருவைந்தெழுத்து ஆகும். இது பஞ்சாட்சர மந்திரம் எனவும் அழைக்கப்படும். சிவாயநம எனவும் இதனைக் கொள்வர். வேதத்திலே நான்காவது காண்டத்திலே சிவ பிரானைப் போற்றும் உருத்திர மந்திரம் உள்ளது. அதில் சூத்திரம் 8-1 நமசிவாய எனும் ஐந்தெழுத்து பற்றிக் கூறுகிறது. வேத மந்திரத்தை முறைப்படி தீட்சை பெற்றுத்தான் ஓத வேண்டும் என்பது விதி. ஆனால் சதா காலமும் அனைவரும் ஓதக்கூடிய மந்திரமாக திருவைந்தெழுத்துக் கூறப்படுகிறது. திருவைந்தெழுத்தான் நமசிவாய இதில்லுள்ள ஒவ்வொரு அட்சரமும் தத்துவம் பொருளுடையவை * ந. திரோத மலத்தையும், * ம. ஆவண மலத்தையும், * சி. சிவமயமாயிருப்பதையும், * வா. திருவருள் சக்தியையும், * ய. ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன. இதன் உட்பொருள் உயிர்களில் உறைந்துள்ள ஆணவமும் மாயையும் விலகி சிவசக்தி சிவத்துடன் ஐக்கியமாவதே நமசிவாய என்பதன் பயன் என்பதாகும். ஆன்மாவுக்கு நற்றுணையாகவும் உயிர்த்துணையாகவும் அமைவது இம்மந்திரமாகும். வாழ்வில் துன்பங்களைப் போக்கவும் இன்பங்களை இயைபாக்கவும் திருவைந்தெழுத்தை உச்சரிப்பது சைவசமயிகளின் முடிபாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக