ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

எங்கே நிம்மதி


மனமே ரீலேக்ஷ் எங்கே நிம்மதி ? சந்தோசம் நிம்மதி எங்கே எங்கே என்று தேட வேண்டாம், சந்தோசம் நிம்மதி எல்லாம் வெளியில் இல்லை அது எல்லோருடைய மனதில் தான் உள்ளது உண்மையற்ற செயல்கள்தான் உன் நிம்மதி - சந்தோசத்தை கெடுக்கும் அவற்றை உணர்ந்தால் இயல்பான நிம்மதி சந்தோசம் எளிதில் எட்டும நிலையில் உள்ளதை உணர்வீர்கள், தற்காலிக சந்தோசங்கள் எல்லாம் நிம்மதி அளிக்கா, அவை நிலையானது அல்ல, ஒருவன் தன் வாழ்க்கையில் வெறுப்படைந்து நிம்மதி இல்லை என்று எண்ணி , புகை, போதை, மது மங்கை என எல்லாவற்றிலும் அனுபவித்து அந்த தறகாலிக சுகங்களால் நிம்மதி இல்லை என்பதை உணர்ந்து, நிம்மதிக்காக அலைந்திருந்த நிலையில் தான் முற்றும் துறந்து துறவியாகிவிட எண்ணி, தன்னுடைய பணம், தங்க வைர-வைடுரியங்களை எல்லாம் எடுத்து மூட்டைகட்டிக் கொண்டு ஒரு முற்றும் துறந்த துறவியிடம் சென்று தன்னுடைய அத்தனை சொத்துக்களையும் ஒப்படைத்து விட எண்ணி அந்த துறவியிடம் தான் கொண்டுவந்த மூட்டையை ஒப்படைத்தான் அந்த துறவியோ அதனை சற்றும் அதன்மீது நாட்டம் இல்லாதது போல் நடந்துவிட்டு மூட்டையை பிரித்துப்பார்த்தார், அதில் அத்தனையும் தங்க வைர வைடுரியங்கள் இருப்பதைக் கண்டார் உடனே அத்துறவி அந்த மூட்டையை தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தார், உடனே மூட்டையை ஒப்படைத்த நபருக்கோ உடல் பதறியது தான் தவறு செய்துவிட்டமே , நமது சொத்துக்களை எல்லாம் இழந்து ஏமாந்து விட்டாமே என்று உடல் பதைபதைத்து அத்துறவி பின்னாலே தானும் ஒடினார் அதனை மீள பெற எத்தணித்தார் ஆனாலும் துறவியை பின் தொடர்ந்து ஒட முடியவில்லை துறவி சந்துபொந்தெல்லாம் ஒடி கடைசியில் தான் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தார், மூட்டையை பறிகொடுத்தவரும் அங்கு வந்து சேர்ந்தவுடன் துறவியைக் கண்டுபிடித்துவிட்ட சற்று நிம்மதியோடு இருந்தவேளையில் துறவியும் அந்த பொன் மூட்டையை அவரிடமே மீண்டும் ஒப்படைத்தார், மூட்டையை இழந்தவருக்கு கிடைத்த மகிழ்ச்சிக்கோ அளவே இல்லை தான் இழந்த பொருள் மீண்டும் கிடைத்தது கண்டு பெருமகிழ்ச்சியுடன் பெருமூச்சி விட்டு அப்பாடி இப்போது தான் நிம்மதி வந்தது என தனது மனம் கூறியது கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைந்ததைக் கண்ட துறவி " ஐயா இதற்கு முன்னாலும் இதே பொருட்கள் தங்களிடம்தானே இருந்தது அப்போது இல்லாத மகிழ்ச்சி தற்போது எபபடிய்யா வந்தது " என கூறினார் எனவே மகிழ்ச்சி நிம்மதி என்பது வெளியிலிருந்து வராது அது உங்கள் மனத்தில்தான் உள்ளது எனவே இருப்பதை வைத்து போதுமென்ற மனதுடன் இதுவே சந்தோசம் நிம்மதி என்று எண்ணி திருப்திபட்டால் உனது மனம் நிம்மதி பெறும் என்பதை துறவி விளக்கினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக