காஞ்சி மாமுனிவர், சிவிகைக்குப் பின்னால் வந்த ஒதுவாமூர்த்திகளைக் காஞ்சி ஏகம்பம்,காஞ்சி மேல்தளி, விருத்தாசலம் ஆகிய தலங்களின் மீது அமைந்த தேவாரப் பாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்டதில் முதலாவதாகக் கச்சி ஏகம்பத்தின் மீது பாடிய பாடலையும் அதன் பொருளையும் நம் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் பார்த்தோம். இனி, இரண்டாவதாகக் கச்சி மேற்றளி என்னும் தலத்தின் மீது அமைந்த பாடல் ஒன்றைக் காண்போம்.
காஞ்சிபுரத்தின் மேற்குத் திசையில் அமைந்துள்ள தலம் மேற்றளி என்ற பாடல் பெற்ற தலம். இங்கு,சிவசாரூபம் பெற வேண்டித் திருமால் சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு. இங்கு தரிசிக்க வந்த ஞானசம்பந்தர் பதிகம் பாடியபோது அதைக் கேட்டுத் திருமால் உருகியதால் சுவாமிக்கு ஓத உருகீசர் என்ற பெயர் உண்டு. அதைத் தவிரவும் மேற்கு பார்த்த சிவ சன்னதியும் கோயிலுக்குள் இருக்கிறது.இத்தலம், அப்பராலும் சுந்தரராலும் பாடப்பெற்றது. சம்பந்தரின் திருப்பதிகம் கிடைக்கும் பேற்றை நாம் பெறவில்லை. இக் கோயிலை நோக்கியவாறு சம்பந்தருக்கென்று தனிக் கோயில் இருக்கிறது.
காஞ்சிப் பெரியவரிடம் ஓதுவாமூர்த்திகள் பாடிய இத்தலப் பாடல் எது என்று தெரியாததால்,அத்தலப் பதிகத்திலிருந்து ஒரு பாடலின் பொருளையாவது உணர சிவபரம்பொருள் அருளுவானாக.
தருமமே வடிவெனக் கொண்டவனே செல்வன் என்று அழைக்க முற்றிலும் தகுதியானவன். செல்வத்தை உடையவன் என்று பொருள் காண்பதை விட இவ்வாறு பொருள் காண முற்படுவது பொருத்தமாகவும் இருக்கிறது. பொய்யிலியாகவும் மெய்யர் மெய்யனாகவும் விளங்குவதே பெருமானது தனி சிறப்பு. " செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே " என்ற சம்பந்தர் வாக்கையும் நோக்கலாம். எனவே தருமமும் செல்வமும் பிரிக்க முடியாதவைகள் ஆகி விடுகின்றன. செல்வனது பாகம் பிரியா நாயகி செல்வி எனப்படுகிறாள். அவளை " அறப் பெரும் செல்வி " என்றுதானே நூல்கள் போற்றுகின்றன ! அவளே காஞ்சியில் கம்பை ஆற்று மணலால் மாவடியின் கீழ் லிங்கம் அமைத்து ஆகம வழியில் நின்று சிவபூஜை செய்கிறாள். சேக்கிழாரும் அவளைப் " பெருந் தவக் கொழுந்து " எனப்போற்றுவார். அப்படிப்பட்ட செல்வியைப் பாகமாகக் கொண்ட மேற்றளி ஈசனை அப்பர் பெருமான்
" செல்வியைப் பாகம் கொண்டார் " என்று நமக்குக் காட்டுகின்றார்.
முருகனுக்குச் சேந்தன் என்ற பெயர் உண்டு. " சேந்தனைக் கந்தனை செங்கோட்டு வெற்பனை " என்று கந்தர் அலங்காரம் கந்தவேளின் பெயர்களை அழகாகக் காட்டுகிறது. " சேந்தர் தாதை " என்று முருகனின் தந்தையாகச் சிவபெருமானை வருணிக்கப்படுகிறது. இதையே அப்பரும், "சேந்தனை மகனாக் கொண்டார் "என்கிறார்.
கொன்றை,ஊமத்தை,தும்பை ஆத்தி,எருக்கு போன்ற மணமில்லாத மலர்களை ஏற்கும் பெருமான், அடியார்கள் அன்போடு நகம் தேயும்படி விடியலில் கொய்த மணம் மிக்க மலர்களையும் ஏற்கிறான். மல்லிகையும் முல்லையும் அவற்றுள் சில . எனினும் அவன் கொன்றை சூடுவதில் விருப்பம் உள்ளவன். " கொன்றை நயந்தவனே " என்று பாடுகிறார் சுந்தர மூர்த்தி சுவாமிகள். திருநாவுக்கரசரும், " மல்லிகைக் கண்ணியோடு மாமலர்க் கொன்றை சூடி " என்பதால் மல்லிகை மாலையையும் ,சரக் கொன்றையையும் பெருமான் அணிகிறான் என்பது கருத்து.
நாலந்தா,காஞ்சி போன்ற இடங்களில் பெரிய பல்கலைக் கழகங்கள் இருந்தன என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கடல் போன்றது கல்வி என்று சொன்னாலும், கல்விக் கடலைக் கரை இல்லாத ஒன்றாக வருணிப்பது நயம் மிக்கது. கடலின் ஆழத்தைக் கணிக்கலாம். கல்விக் கடலோ ஆழம் அறியப்படாதது. ஒவ்வொரு முறையும் புதுப்புது முத்துக்களையும், பவழங்களையும். அதுவரை கண்டிராதவற்றையும் கிடைக்கச் செய்வது. உலகமாதாவான காமாக்ஷி தேவி அறம் புரியும் இத்தலம் எல்லாக் கலைகளுக்கும் இருப்பிடமாகத் திகழ்வதில் வியப்பு ஏது? " கல்வியைக் கரை இலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளால் " என்ற வரி இதனைத் தெரிவிக்கிறது.
இரவில் காட்டில் ஆடுவதையும் பெருமான் விரும்புகிறான். " இரவாடும் பெருமானை என் மனத்தே வைத்தேனே " என்கிறார் நாவரசர். இரவு என்பதை " எல்லி " என்றும் குறிப்பதுண்டு.இவ்வாறு எல்லி ஆட்டு உகந்த பிரான் செம்மேனியன். தீவண்ணன். ஆகவே ஆகவே துன்னிருள் அகன்று சோதி புலப்படுகிறது. அகஇருளையும் புற இருளையும் நீக்க வல்ல பெருமான் அவ்வாறு ஆடுவதால் இரவும் விளக்கம் பெறுகிறது. எனவே, இப்பாடலில் வரும் " எல்லியை விளங்க நின்றார் " என்பது நோக்கி மகிழத்தக்கது. இப்போது பாடலை முழுவதுமாகக் காண்போம்:
செல்வியைப் பாகங் கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணி யோடு மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரையி லாத காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எல்லியை விளங்க நின்றார் இலங்குமேற் றளிய னாரே.
கச்சி மேற்றளி என்னும் இத்தலம், காஞ்சிபுரத்தின் ஒரு பகுதியான பிள்ளையார் பாளையத்தில் உள்ளது.
புதன், 30 டிசம்பர், 2015
காஞ்சி மாமுனிவர், சிவிகைக்குப் பின்னால் வந்த ஒதுவாமூர்த்திகளைக் காஞ்சி ஏகம்பம்,காஞ்சி மேல்தளி, விருத்தாசலம் ஆகிய தலங்களின் மீது அமைந்த தேவாரப் பாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்டதில் முதலாவதாகக் கச்சி ஏகம்பத்தின் மீது பாடிய பாடலையும் அதன் பொருளையும் நம் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் பார்த்தோம். இனி, இரண்டாவதாகக் கச்சி மேற்றளி என்னும் தலத்தின் மீது அமைந்த பாடல் ஒன்றைக் காண்போம்.
காஞ்சிபுரத்தின் மேற்குத் திசையில் அமைந்துள்ள தலம் மேற்றளி என்ற பாடல் பெற்ற தலம். இங்கு,சிவசாரூபம் பெற வேண்டித் திருமால் சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு. இங்கு தரிசிக்க வந்த ஞானசம்பந்தர் பதிகம் பாடியபோது அதைக் கேட்டுத் திருமால் உருகியதால் சுவாமிக்கு ஓத உருகீசர் என்ற பெயர் உண்டு. அதைத் தவிரவும் மேற்கு பார்த்த சிவ சன்னதியும் கோயிலுக்குள் இருக்கிறது.இத்தலம், அப்பராலும் சுந்தரராலும் பாடப்பெற்றது. சம்பந்தரின் திருப்பதிகம் கிடைக்கும் பேற்றை நாம் பெறவில்லை. இக் கோயிலை நோக்கியவாறு சம்பந்தருக்கென்று தனிக் கோயில் இருக்கிறது.
காஞ்சிப் பெரியவரிடம் ஓதுவாமூர்த்திகள் பாடிய இத்தலப் பாடல் எது என்று தெரியாததால்,அத்தலப் பதிகத்திலிருந்து ஒரு பாடலின் பொருளையாவது உணர சிவபரம்பொருள் அருளுவானாக.
தருமமே வடிவெனக் கொண்டவனே செல்வன் என்று அழைக்க முற்றிலும் தகுதியானவன். செல்வத்தை உடையவன் என்று பொருள் காண்பதை விட இவ்வாறு பொருள் காண முற்படுவது பொருத்தமாகவும் இருக்கிறது. பொய்யிலியாகவும் மெய்யர் மெய்யனாகவும் விளங்குவதே பெருமானது தனி சிறப்பு. " செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே " என்ற சம்பந்தர் வாக்கையும் நோக்கலாம். எனவே தருமமும் செல்வமும் பிரிக்க முடியாதவைகள் ஆகி விடுகின்றன. செல்வனது பாகம் பிரியா நாயகி செல்வி எனப்படுகிறாள். அவளை " அறப் பெரும் செல்வி " என்றுதானே நூல்கள் போற்றுகின்றன ! அவளே காஞ்சியில் கம்பை ஆற்று மணலால் மாவடியின் கீழ் லிங்கம் அமைத்து ஆகம வழியில் நின்று சிவபூஜை செய்கிறாள். சேக்கிழாரும் அவளைப் " பெருந் தவக் கொழுந்து " எனப்போற்றுவார். அப்படிப்பட்ட செல்வியைப் பாகமாகக் கொண்ட மேற்றளி ஈசனை அப்பர் பெருமான்
" செல்வியைப் பாகம் கொண்டார் " என்று நமக்குக் காட்டுகின்றார்.
முருகனுக்குச் சேந்தன் என்ற பெயர் உண்டு. " சேந்தனைக் கந்தனை செங்கோட்டு வெற்பனை " என்று கந்தர் அலங்காரம் கந்தவேளின் பெயர்களை அழகாகக் காட்டுகிறது. " சேந்தர் தாதை " என்று முருகனின் தந்தையாகச் சிவபெருமானை வருணிக்கப்படுகிறது. இதையே அப்பரும், "சேந்தனை மகனாக் கொண்டார் "என்கிறார்.
கொன்றை,ஊமத்தை,தும்பை ஆத்தி,எருக்கு போன்ற மணமில்லாத மலர்களை ஏற்கும் பெருமான், அடியார்கள் அன்போடு நகம் தேயும்படி விடியலில் கொய்த மணம் மிக்க மலர்களையும் ஏற்கிறான். மல்லிகையும் முல்லையும் அவற்றுள் சில . எனினும் அவன் கொன்றை சூடுவதில் விருப்பம் உள்ளவன். " கொன்றை நயந்தவனே " என்று பாடுகிறார் சுந்தர மூர்த்தி சுவாமிகள். திருநாவுக்கரசரும், " மல்லிகைக் கண்ணியோடு மாமலர்க் கொன்றை சூடி " என்பதால் மல்லிகை மாலையையும் ,சரக் கொன்றையையும் பெருமான் அணிகிறான் என்பது கருத்து.
நாலந்தா,காஞ்சி போன்ற இடங்களில் பெரிய பல்கலைக் கழகங்கள் இருந்தன என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கடல் போன்றது கல்வி என்று சொன்னாலும், கல்விக் கடலைக் கரை இல்லாத ஒன்றாக வருணிப்பது நயம் மிக்கது. கடலின் ஆழத்தைக் கணிக்கலாம். கல்விக் கடலோ ஆழம் அறியப்படாதது. ஒவ்வொரு முறையும் புதுப்புது முத்துக்களையும், பவழங்களையும். அதுவரை கண்டிராதவற்றையும் கிடைக்கச் செய்வது. உலகமாதாவான காமாக்ஷி தேவி அறம் புரியும் இத்தலம் எல்லாக் கலைகளுக்கும் இருப்பிடமாகத் திகழ்வதில் வியப்பு ஏது? " கல்வியைக் கரை இலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளால் " என்ற வரி இதனைத் தெரிவிக்கிறது.
இரவில் காட்டில் ஆடுவதையும் பெருமான் விரும்புகிறான். " இரவாடும் பெருமானை என் மனத்தே வைத்தேனே " என்கிறார் நாவரசர். இரவு என்பதை " எல்லி " என்றும் குறிப்பதுண்டு.இவ்வாறு எல்லி ஆட்டு உகந்த பிரான் செம்மேனியன். தீவண்ணன். ஆகவே ஆகவே துன்னிருள் அகன்று சோதி புலப்படுகிறது. அகஇருளையும் புற இருளையும் நீக்க வல்ல பெருமான் அவ்வாறு ஆடுவதால் இரவும் விளக்கம் பெறுகிறது. எனவே, இப்பாடலில் வரும் " எல்லியை விளங்க நின்றார் " என்பது நோக்கி மகிழத்தக்கது. இப்போது பாடலை முழுவதுமாகக் காண்போம்:
செல்வியைப் பாகங் கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணி யோடு மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரையி லாத காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எல்லியை விளங்க நின்றார் இலங்குமேற் றளிய னாரே.
கச்சி மேற்றளி என்னும் இத்தலம், காஞ்சிபுரத்தின் ஒரு பகுதியான பிள்ளையார் பாளையத்தில் உள்ளது.
நம் இல்லம் - ஒன்பது வாயில் கோவில்
மன்னாதி மன்னர்கள் கட்டிய மாளிகைகள் எல்லாம் பகைவர்களால் தரை மட்டமாக்கப்பட்டு அழிந்து போயிருக்கின்றன. எஞ்சிய சிலவும் இயற்கைச் சீற்றங்களாலும், கவனிப்பாரின்றி மரம் முளைத்துப் போயும் மறைந்து விடுகின்றன. இப்படி இருக்கும் போது நம் போன்ற சாமானியர்கள் வசிக்கும் வீடுகள் நிலைத்து நிற்குமா என்ன? அதிலும் பாமர ஏழை கட்டிய மண் சுவரும், மேற்கூரையாக வேயப்படும் மூங்கில்களும் ஓலைகளும் காற்றுக்கும் மழைக்கும் எப்படித் தாங்கும்? அந்த எழையும் தன்னால் முடிந்தவரை மண் சுவற்றைப் பலமாகக் கட்டியிருந்தாலும் இயற்கைக்கு முன்னால் இவை எம்மாத்திரம்? அப்படி இருந்தாலும் அக்குடிசைவாசி அந்த வீட்டை எனது இல்லம் என்று தானே சொல்லிக் கொள்கிறான்! அதே போலத்தான் மனித உடலும்! அந்த ஏழை கட்டிய வீட்டைப்போல எளிதாக அழியக் கூடியது.
உடலில் உள்ள எலும்புகள் அந்தக் குடிசையின் கால்கள் போன்றவை. மாமிசத்தாலான உடலோ மண் சுவற்றுக்கு சமம். இப்படிப்பட்ட புலால் நாறும் உடம்பைத் தோலாகிய போர்வையால் மூடிக்கொண்டு, " இது எனது " என்று கூறிக் கொண்டு அதை அழகு படுத்திப் பார்க்கிறோம். வயது ஆக ஆக அழகும் குறைந்து, தோல் சுருங்கி, உடல் தளர ஆரம்பித்து விடுகிறது. ஏழைக் குடிசைக்காவது வேறு ஓலை வேயலாம். வேறு மூங்கில்களைக் கொண்டு தாங்கச் செய்யலாம். ஆனால் மனித உடலாகிய வீட்டுக்கு என்ன செய்ய முடியும்?
மனிதக் குடிலுக்கு ஒன்பது வாசல்கள் வேறு. ஐம்புலன்கள் படுத்தும் பாடோ கொஞ்சநஞ்சமல்ல. அவை நம்மைப் பெரும்பாலும் தீய வழிக்கே இழுத்துச் செல்வன. இதிலிருந்து விடுபடும் மார்க்கமோ தெரியவில்லை. " சித்தத்துள் ஐவர் தீய செய்வினை பலவும் செய்ய " என்று திருநாவுக்கரசரும் பாடியிருக்கிறார். இப்படி ஐம்புலனாகிய சேற்றில் அழுந்தி ஒரேயடியாக மூழ்குவதற்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
அப்படியானால் இதிலிருந்து விடுபட வழியே இல்லையா என்று கேட்கத் தோன்றும். இருக்கிறது என்று நமக்கு அபயம் அளிக்கிறார் திருஞானசம்பந்தப்பெருமான். திருவாரூர் சென்று புற்றிடம் கொண்டு அருளும் தியாகேச வள்ளலைத் தொழுதால் உய்ந்து விடலாம் , அஞ்ச வேண்டாம் என்று நல்வழி காட்டுகிறார் குருநாதராகிய ஞான சம்பந்தக் குழந்தை. அப்பாடலை இங்கு சிந்திப்பதால் நாமும் உய்ந்து விடலாம்.
என்பினால் கழி நிரைத்து இறைச்சி மண் சுவர் எறிந்து இது நம் இல்லம்
புன்புலால் நாறு தோல் போர்த்துப் பொல்லாமையால் முகடு கொண்டு
முன்பெலாம் ஒன்பது வாய்தலார் குரம்பையில் மூழ்கிடாதே
அன்பன் ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே.
--- சம்பந்தர் தேவாரம்
ஞாயிறு, 27 டிசம்பர், 2015
இயற்பகை நாயனார்
எல்லையில் இன்ப வெள்ளம் எனக்கருள் செய்தாய் போற்றி!
தில்லையம்பலத்துள் ஆடும் சேவடி போற்றி!
எனத் திருநெறிய தீந்தமிழில் இயற்பகையார் போற்றித் துதித்தார். நாயனாரும் மனைவியாரும் சிவனுலகு சேர இறைவன் அருள் புரிந்தான்.
இவர் சோழநாட்டிலேகாவேரிசங்கமம் என்னும் புனித தீர்த்தத்தினால் புகழ்பெற்ற காவிரிப்பூம்பட்டினத்திலே பிறந்தார். வணிக குலத்தினரான அவர் தம் வணிகத் திறத்தால் பெரும் செல்வராக விளங்கினார். இல்லறத்தின் பெரும்பேறு இறையடியார் தம் குறைமுடிப்பதென்பது அவர் கொள்கை. ஆதலால் சிவனடியார் யாவரெனினும் அவர் வேண்டுவதை இல்லையெனாது கொடுக்கும் இயல்பினராய் வாழ்ந்துவந்தார். அவ்வாறு வாழ்ந்து வரும் நாளில் அவர் பெருமையை உலகோர்க்கு உணர்த்தச் சிவபெருமான் திருவுளம் பற்றினார்.
சிவபெருமான் தூய திருநீறு பொன்மேனியில் அணிந்து, தூர்த்த வேடமுடைய வேதியர் கோலத்தினராய், இயற்பகையாரது வீட்டினை அடைந்தார். நாயனார் அவ்வடியாரை உளம் நிறைந்த அன்புடன் எதிர்கொண்டு, முனிவர் இங்கு எழுந்தருளியது என் பெருந்தவப் பயனென்று வழிபட்டு வரவேற்றார். வேதியர் அன்பரை நோக்கி சிவனடியார்கள் வேண்டியனவற்றை எல்லாம் ஒன்றும் மறுக்காது உம்மிடத்திலே ஒரு பொருளை விரும்பி இங்கு வந்தேன், அதனை நீர் தருவதற்கு இணங்குவீராயின் வெளியிட்டுச் சொல்வேன் எனக் கூறினார். அது கேட்ட இயற்பகையார், என்னிடமிருக்கும் எப்பொருளாயினும் அது எம்பெருமானாகிய சிவனடியாரது உடைமை. இதிற் சிறிதும் சந்தேகமில்லை. நீர் விரும்பியதனை அருளிச் செய்வீராக என்றார். அதுகேட்ட வேதியர், ‘உன் மனைவியை விரும்பி வந்தேன் எனச் சொன்னார்’.
நாயனார் முன்னைவிட மகிழ்ச்சியடைந்து ‘எம்பிரான் என்னிடம் உள்ள பொருளையே வேண்டியது எனது புண்ணியப் பயனாகும்’ எனக் கூறி, விரைந்து வீட்டினுள் புகுந்து கற்பிற்சிறந்த மனைவியாரை நோக்கி, ‘பெண்ணே! இன்று உன்னை இம் மெய்த்தவர்க்கு நான் கொடுத்துவிட்டேன்’ என்றார். அதுகேட்ட மனனவியார், மனங்கலங்கிப் பின் தெளிந்து தன் கணவரை நோக்கி “என் உயிர்த் தலைவரே! என் கணவராகிய நீர் எமக்குப் பணித்தருளிய கட்டளை இதுவாயின் நீர் கூறியதொன்றை நான் செய்வதன்றி எனக்கு வேறுரிமை உளதோ? என்று சொல்லிப் தன் பெருங் கணவராகிய இயற்பகையை வணங்கினார். இயற்பகையாரும் இறைவனடியார்க்கெனத் தம்மால் அளிக்கப் பெற்றமை கருதி அவ்வம்மையாரை வணங்கினார். திருவிலும் பெரியாளாகிய அவ்வம்மையார், அங்கு எழுந்தருளிய மறைமுனிவர் சேவடிகளைப் பணிந்து திகைத்து நின்றார்.
மறை முனிவர் விரும்பிய வண்ணம், மனைவியாரைக் கொடுத்து மகிழும் மாதவராகிய இயற்பகையார், அம்மறையவரை நோக்கி, இன்னும் யான் செய்தற்குரிய பணி யாது? என இறைஞ்சி நின்றார். வேதியராகிய வந்த இறைவன், ‘இந்நங்கையை யான் தனியே அழைத்துச் செல்லுவதற்கு உனது அன்புடைய சுற்றத்தாரையும், இவ்வூரையும் கடத்தற்கு நீ எனக்குத் துணையாக வருதல் வேண்டும்’ என்றார். அதுகேட்ட இயற்பகையார் யானே முன்னறிந்து செய்தற்குரிய இப்பணியை விரைந்து செய்யாது எம்பெருமானாகிய இவர் வெளியிட்டுச் சொல்லுமளவிற்கு காலம் தாழ்த்து நின்றது பிழையாகும் என்று எண்ணி, வேறிடத்துகுச் சென்று போர்க்கோலம் பூண்டு வாளும் கேடமும் தாங்கி வந்தார். வேதியரை வணங்கி மாதினையும் அவரையும் முன்னே போகச் செய்து அவர்க்குத் துணையாக பின்னே தொடர்ந்து சென்றார்.
இச்செய்தியை அறிந்த மனைவியாராது சுற்றத்தாரும், வள்ளலாரது சுற்றத்தாரும் இயற்பகைப் பித்தனானால் அவன் மனைவியை மற்றோருவன் கொண்டுப்போவதா?” என வெகுண்டனர்”. தமக்கு நேர்ந்த பழியைப் போக்குவதற்கு போர்க்கருவிகளைத் தாங்கியவராய் வந்து மறையவரை வளைத்துக் கொண்டனர். ‘தூர்தனே போகாதே நற்குலத்திற் பிறந்த இப்பெண்ணை இங்கேயே விட்டுவிட்டு எமது பழிபோக இவ்விடத்தை விட்டுப்போ’ எனக்கூறினார். மறைமுனிவர் அதுகண்டு அஞ்சியவரைப்போன்று மாதினைப் பார்த்தார். மாதரும் ‘இறைவனே அஞ்சவேண்டாம்; இயற்பகை வெல்லும்’ என்றார். வீரக்கழல் அணிந்த இயற்பகையார், அடியேனேன் அவரையெல்லாம் வென்று வீழ்த்துவேன் என வேதியருக்கு தேறுதல்கூறி, போருக்கு வந்த தம் சுற்றத்தாரை நோக்கி, ‘ஒருவரும் எதிர் நில்லாமே ஓடிப்பிழையும். அன்றேல் என் வாட்படைக்கு இலக்காகித் துணிபட்டுத் துடிப்பீர்’ என்று அறிவுறுத்தினார். அது கேட்ட சுற்றத்தவர், ‘ஏடா நீ என்ன காரியத்தைச் செய்துவிட்டு இவ்வாறு பேசுகிறாய்’. உன் செயலால் இந்நாடு அடையும் பழியையும், இது குறித்து நம் பகைவரானவர் கொள்ளும் இகழ்சிச் சிரிப்பினையும் எண்ணி நாணாது உன் மனைவியை வேதியனுக்கு கொடுத்து வீரம் பேசுவதோ! நாங்கள் போரிட்டு ஒருசேர இறந்தொழிவதன்றி உன்மனைவியை மற்றையவனுக்குக் கொடுக்க ஒருபொழுதும் சம்மதிக்கோம்’ என்று வெகுண்டு எதிர்த்தனர். அது கண்ட இயற்பகையார் ‘உங்கள் உயிரை விண்ணுலகுக்கு ஏற்றி இந்த நற்றவரை தடையின்றிப் போகவிடுவேன்’ என்று கூறி, உறவினரை எதிர்த்துப் போரிடுவதற்கு முந்தினார். உறவினர்கள் மறையவரை தாக்குவதற்கு முற்பட்டனர். அதுகண்டு வெகுண்ட இயற்பகையார், சுற்றத்தார் மேல் பாய்ந்து இடசாரி வலசாரியாக மாறிமாறிச் சுற்றிவந்து அவர்களுடைய கால்களையும் தலைகளையும் துணித்து வீழ்த்தினார். பலராய் வந்தவர் மீதும் தனியாய் அகப்பட்டவர் மீதும் வேகமாய்ப் பாய்ந்து வெட்டி வீழ்த்தினார். பயந்து ஓடியவர் போக எதிர்த்தவரெல்லாம் ஒழிந்தே போயினர். எதிர்ப்பவர் ஒருவருமின்றி உலாவித் திரிந்த இயற்பகையார், வேதியரை நோக்கி, ‘அடிகள் நீர் அஞ்சாவண்ணம் இக்காட்டினைக் கடக்கும் வரை உடன் வருகின்றேன்’ என்று கூறித் துணைசென்றார். திருச்சாய்க்காட்டை சேர்ந்த பொழுதில், மறை முனிவர் ‘நீர் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்.’ என்று கூறினார். இயற்பகையாரும் அவரை வணங்கி ஊருக்குத் திரும்பினார்.
மனைவியாரை உவகையுடன் அளித்து திரும்பியும் பாராது செல்லும் நாயனாரது அன்பின் திறத்தை எண்ணி இறைவன் மகிழ்ந்தார். மெய்ம்மையுள்ளமுடைய நாயனாரை மீளவும் அழைக்கத் தொடங்கி “இயற்பகை முனிவாஓலம்’ ஈண்டு நீ வருவாய் ஓலம்; அயர்பிலாதானே ஓலம்; செயற்கருஞ்செய்கை செய்த தீரனே ஓலம் ஓலம்” என அழைத்தருளினார். அழைத்த பேரோசையினைக் கேட்ட இயற்பகையார், ‘அடியேன் வந்தேன்; வந்தேன்; தீங்கு செய்தார் உளராயின் அவர்கள் என் கைவாளுக்கு இலக்காகின்றார்’. என்றுகூறி விரைந்து வந்தார். மாதொருபாகனாகிய இறைவனும் தனது தொன்மைக் கோலத்தைக் கொள்ளுவதற்கு அவ்விடத்தைவிட்டு மறைந்தருளினார். சென்ற இயற்பகையார் முனிவரைக் காணாது அவருடன் சென்ற மாதினைக் கண்டார். வான்வெளியிலே இறைவன் மாதொருபாகராக எருதின்மேல் தோன்றியருளும் தெய்வக் கோலத்தைக் கண்டார். நிலத்திலே பலமுறை தொழுதார்; எல்லையில்லாத இன்ப வெள்ளம் அருளிய இறைவன் உளங்கசிந்து போற்றி வாழ்த்தினார். அப்பொழுது அம்மையப்பராகிய இறைவர் ‘பழுதிலாததாய் உன் அன்பின் திறங்கண்டு மகிழ்ந்தோம். உன் மனைவியுடன் நம்மில் வருக’ எனத் திருவருள் புரிந்து மறைந்தருளினார். உலகியற்கை மீறிச் செயற்கருஞ் செய்கை செய்த திருத்தொண்டராகிய இயற்பகையாரும், தெய்வக் கற்பினையுடைய அவர் தம் மனைவியரும் ஞானமாமுனிவர் போற்ற நலமிகு சிவலோகத்தில் இறைவனைக் கும்பிட்டு உடனுறையும் பெருவாழ்வு பெற்றனர். அவர் தம் சுற்றத்தாராய் அவருடன் போர் செய்து உயிர் துறந்தவர்களும் வானுலகமடைந்து இன்புற்றனர்.
எல்லையில் இன்ப வெள்ளம் எனக்கருள் செய்தாய் போற்றி!
தில்லையம்பலத்துள் ஆடும் சேவடி போற்றி!
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு .வை.பூமாலை
உத்திரகோசமங்கை தலம்
உத்திரகோசமங்கை தலம்
இராமநாதபுரம் மாவட்டதில் அமைந்துள்ள உத்தரகோச மங்கை புனித தலம் பற்றிய 60 சிறப்பு தகவல்கள் :-
1. உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது.
2. உத்தரகோச மங்கை கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
3. உத்தரகோச மங்கையே சிவபெருமானின் சொந்த ஊர் என்று அழைக்கப்படுகிறது.
4. இத்தலத்துக்கு உமா மகேசுவரர் சன்னதி முன்பு நின்று வழிபாடுகள் செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும்.
5. திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்‘ இத்தலத்தில்தான் நடந்தது.
6. உத்தரகோச மங்கை கோவிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர். பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில்
சிறந்து இருந்த போது, அவர்களது. தலைநகராக சிறிது காலத்துக்கு உத்திரகோசமங்கை இருந்தது.
7. ஆதி காலத்தில் இந்த தலம் சிவபுரம்,‘தெட்சிண கைலாயம்‘, சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப் பள்ளி, பத்ரிகா ஷேத்திரம்,
பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது.
8. மங்கள நாதர், மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன்கிடைக்கும்.
9. இத்தலத்தில் வழிபாடுகள் செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மறுமையில் முக்தி கிடைக்கும்.
10. மங்கள நாதர் தலத்தில் திருமணம் செய்தால் நிறைய மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே முகூர்த்த நாட்களில் நிறைய
திருமணங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.
11. மூலவருக்கு மங்களநாதர் என்ற பெயர் தவிர மங்களேசுவரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர் என்ற பெயர்களும் உண்டு.
12. இறைவிக்கு மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி ஆகிய பெயர்கள் உள்ளன.
13. இறைவி மங்களேசுவரி பெயரில் வ.த. சுப்பிரமணியப் பிள்ளை என்பவர் பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார். 1901-ம் ஆண்டு வெளியான
அந்த நூல் 1956-ம் ஆண்டு மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டது.
14. இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே இத்தலம் ராமாயண
காலத்துக்கும் முன்பே தோன்றியதற்கான ஆதாரமாக இந்த கல்வெட்டு கருதப்படுகிறது.
15. இத்தலத்தில் வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர்
வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர்.
16. இத்தலத்து பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக உள்ளார்.
17. கோவில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர்.
18. இத்தலத்து முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான்
என்று, இத்தலமான்மியமான ‘ஆதி சிதம்பர மகாத்மியம்’ கூறுகிறது.
19. ராமேஸ்வரத்தில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவிலும், ராமநாதபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும் இவ்வாலயம் இருக்கிறது.
20. சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் “இலவந்திகைப் பள்ளி” என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்கிறார்கள். மேற்குறித்த
கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது.
21. மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.
22. இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான் போற்றப்படுகிறார்.
23. இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம்.
24. சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே
அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
25. ஆதிசைவர்கள் வசமிருந்த இத்தலம் பின்னரே ராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதுமுதல் இன்றுவரை ராமநாதபுர
சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்து வருகிறது இத்தலம்.
26. உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன
பந்தை கொண்டுள்ளது. நாம் கையை நுழைத்துக்கூட பந்தை நகர்த்த முடியும்.
27. இத்தலத்து கோவில் குளத்தில் வாழும் மீன்கள் நல்ல நீரில் வாழும் மீன்கள் இல்லை. கடல்நீரில் வாழும் மீன்களாகும்.
28. பிரதோஷத்தன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர்.இந்த கோவிலில்சிவனுக்கு அம்பாளுக்கு தாழம்பூ மாலை
கட்டிப்போட்டால் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம். இதனால் திருமணம் உடனே கைகூடும்.
29. இங்கு ஆதிகாலத்து வராகி கோவில் உள்ளது இங்கு ஒவ்வொரு வெள்ளி,செவ்வாய்.ஞாயிறு தினங்களில் ராகுகாலத்தில் பூஜை
தொடர்ந்து செய்தால் தீராத பிரச்னைகள்,திருமண்த்தடை போன்றவை விலகுகின்றன.
30.ராமேஸ்வரம் வருபவர்கள் இந்த கோவிலுக்கு செல்லலாம்.
31. டெல்லியை தலைநகராகக் கொண்டு 1300-ம் ஆண்டு ஆட்சி செய்து வந்த அலாவுதீன் கில்ஜி, உத்தரகோச மங்கையில் மரகதகல்
நடராஜர் சிலை இருப்பதை அறிந்து அதை கொள்ளையடிக்க முயன்றான். மங்களநாதர் அருளால் அவன் முயற்சிக்கு வெற்றிகிடைக்கவில்லை.
32. இத்தலத்தில் தினமும் முதல் - அமைச்சரின் அன்னத்தானத்திட்டம் நடைபெறுகிறது. ரூ. 700 நன்கொடை வழங்கினால் 50 பேருக்குஅன்னதானம் கொடுக்கலாம்.
33. காகபுஜண்ட முனிவருக்கு கவுதம முனிவரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்தான் நீங்கியது.
34. சிவனடியார்கள் 60 ஆயிரம் பேர் இத்தலத்தில் தான் ஞான உபதேசம் பெற்றனர்.
35. இத்தலத்தில் உள்ள மங்களநாதர் சன்னதி, மங்களேசுவரி சன்னதி, மரகதகல் நடராஜர் சன்னதி சகஸ்ரலிங்க சன்னதி நான்கும்
தனிதனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரத்துடன் தனித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
36. நடராஜர் மரகத கல்லில் இருப்பதால் இத்தலத்தை சிலர் ரத்தின சபை என்கிறார்கள். ஆனால் உலகின் முதல் கோவில் என்பதால்
இது எந்த சபைக்கும் உட்படாதது என்றும் சொல்கிறார்கள்.
37. காரைக்கால் அம்மையாரும் இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டு சென்றுள்ளார்.
38. உத்தரகோசமங்கை கோவிலின் கட்டிடக்கலை திராவிட கட்டிடக்கலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.
39. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், கிருத்திகை, சதுர்த்தி நாட்களில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
40. சித்திரை மாதம் திருக்கல்யாண வைபவம் வைகாசி மாதம் வசந்த உற்சவம், ஆனி மாதம் பதுநாள் சிவ உற்சவம், ஐப்பதி மாதம்
அன்னாபிஷேகம், மார்கழி மாதம் திருவாதிரை விழா மாசி மாதம் சிவராத்திரி ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள்ஆகும்.
41. தினமும் இத்தலத்தில் காலை 5.30 மணிக்கு உஷத் காலம், 8 மணிக்கு கால சாந்தி, 10 மணிக்கு உச்சிக் காலம், மாலை 5 மணிக்கு
சாயரட்சை, இரவு 7 மணிக்கு இரண்டாம் காலம், இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜைகள் நடத்தப்படுகிறது.
42. மங்களநாதருக்கு தினமும் காலை 6 மணிக்கு, மதியம் 12.30 மணிக்கு, மாலை 5.30 மணிக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.
43. இத்தலத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் சாமி தரிசனம்செய்யலாம்.
44. மரகத கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.
45. இத்தலத்தில் மொத்தம் 11 விநாயகர்கள் உள்ளனர்.
46. மங்களநாதர் சன்னதியை சுற்றி வரும் போது இடது பக்க மூலையில் மகாலட்சுமியை வழிபடலாம்.
47. இத்தலத்தில் உள்ள ராஜகோபுரத்தில் சர்பேஸ்வரர் சிலை உள்ளது.
48. உலகத்தில் முதலில் தோன்றிய கோவில் என்ற சிறப்பு உத்தரகோசமங்கை தலத்துக்கு உண்டு. இந்த ஆலயம் சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியது.
49. நடராஜர் இங்கு அறையில் ஆடிய பின்னர்தான் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடினார்.
50. இது அம்பிகைக்கு பிரணவப்பொருள் உபதேசித்த இடம்.
51. இங்குள்ள மங்களநாதர் லிங்க வடிவில் உள்ளார்.
52. தலவிருட்சமான இலந்தமரம் மிகமிகத் தொன்மையானதும் இன்று வரை உயிருடன் உள்ளதும் பல அருள் தலைமுறைகளையும்
முனிவர்கள் தரிசித்த தல விருட்சம் ஆகும். இந்த இலந்த மரம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது.
53. வேதவியாசரும், பாராசரும் காகபுஜண்டரிஜி மிருகண்டு முனிவர்கள் பூஜித்த தலம்.
54. உலகில் உள்ள 1087 சிவாலயங்களிலும் இருக்கும் அருட் சக்திகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சகஸ்ரலிங்கம் இங்குள்ளது.
55. ஆண்டுக்கு இரண்டு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது. ஒன்று சித்திரைத் திருவிழா, இன்னொன்று மார்கழித் திருவாதிரைத் திருவிழா
56. இத்திருத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளது.
57. சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.
58. ஈசன் ஈஸ்வரி பிறந்த ஊரான உத்திரகோச மங்கையில் ஒரு முறை பக்தர்கள் வந்து மிதித்தால் சொர்க்கம் செல்லுவது நிச்சயாமாகும்.
59. உத்தர கோசமங்கை திருத்தலமானது ஸ்ரீராமருக்கு ஈசன் சிவலிங்கம் வழங்கி சேது சமுத்திரத்தில் பாலம் போட உத்தரவு வழங்கிய இடமாகும்.
60. இத்தலத்தில் மாணிக்கவாசகர் பாடிய பொன்னூஞ்சல் பாடலை குழந்தைகளை தாலாட்டும்போது பாடினால், குழந்தைகள்
உயரமாகவும், உன்னத மாகவும் வாழ்வார்கள் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.
சமய குறவர்களில் நால்வரில் மாணிக்கவாசகருக்கு காட்சி தந்த இடம் மாணிக்கவாசகர் மிகவும் விரும்பிய தலங்களில் இதுவும் ஒன்று மிகப்பெரும்கோவில் இந்த உத்திரகோசமங்கை தலம்
திருச்சிற்றம்பலம
வெள்ளி, 25 டிசம்பர், 2015
மாதங்களில் சிறந்த மாதமான மார்கழி திங்களில் திருவாதிரை நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும் முக்கிய விரதம் திருவாதிரை.
திருவாதிரை நட்சத்திரம் பிறப்பற்ற சிவபெருமானின் பிறந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் தான் மகா முனிவர்கள் பதஞ்சலி மற்றும் வியாக்கிரபாதா் என்ற முனிவர்களுக்கு ஆருத்தரா நடனம் காட்டி காட்சி தந்ததாக வழங்கப்படுகிறது.
ஒரு தடவை மகாவிஷ்ணு திடீரென ஆதிசேசன் படுக்கையிலிருந்து இறங்கி செல்லும் போது , ஆதிசேசன் மகாவிஷ்ணுவிடம் காரணம் கேட்க, அதற்கு விஷ்ணு பிரான் நான் தில்ைல சிதம்பரத்தில் நடராஜ பெருமானின் ஆருத்ரா நடனம் காண செல்கிறேன் என்று கூற, இதைக் கேட்ட ஆதிசேசனுக்கு இந் நடனத்தை காண விருப்பம் ெகாண்டு அதற்கு
என்ன செய்யவேண்டுமென்று கேட்க, அதற்கு தில்ைல சென்று சிவபெருமான் மேல் பக்தி கொண்டு கடும்தவம் மேற்கொண்டால் இத்தரிசனம் கிடைக்கும் என்றார், அதன்படி ஆதிசேசனும் தில்லை சென்று சிவனாரை நினைந்து கடும்தவம் செய்தார். இத்தருணத்தில் தான் வியாக்கிர பாதார் என்ற புலிக்கால் முனிவரும் நீண்ட நாள் தவம் இருந்தார் இவர்களுக்கும் இந் நாளில் தான் சிவனார் இந்த ஆருத்ரா நடனக்காட்சியை அளித்தார் என்பது வரலாறு.
ஆருத்தரா நடனம் புரிந்த வரலாறு
தாருகா வனத்து முனிவர்கள் யாவரும் சிவனாரை நிந்தித்து பெருவேள்வி ஒன்று நடத்தினர். அப்போது சிவனார் பிச்சாடனர் வேடம் பூண்டு முனிவர்களின் இல்லங்களுக்கு சென்றார், அப்போது முனிவர்களின் மாத்ர்கள் யாவரும் பிச்சாடனர் பின்னால் செல்வது கண்டு வெகுண்ட முனிவர்கள் யாகத்த்தில் மதயானை, முயல், மான் முதலிய மிருங்களை ஏவினார்கள், சிவனார் அம் மிருங்களான யானையின் தோலை உரித்து போர்வையாகவும்,மான் முதலியனவற்றை கையிலும், முயலகனை காலிலும் மிதித்து திருநடனம் ஆடினார். இக்காட்சி நடந்த நாளே மார்கழிதிருவாதிரை நட்சத்திர காலமாகும். இதுவே திருவாதிரை ஆருத்ரா நடனம் என்பது. இக்காட்சியே மகா முனிவர்கள் கண்டுகழித்தனர். இந்நாளில் தேவரகளும் இங்கு வந்து இந் நடனத்தை காண்பதாக ஐதிகம்.
திருவாதிரை களி பிறந்த கதை
தில்லை அருகில் உள்ள ஒரு குக் கிராமத்தில் சேந்தனார் என்ற சிவபக்தர் அனுதினமும் சிவனடியார்களுக்கு உணவளித்த பின்தான் தான் உண்பார். இவ்வாறு செய்துவரும் காலத்தில் வறுமை வாட்டியது, சிவனடி யார்களுக்கு தன்னால் உணவளிக்க முடியாத நிலை ஏற்பட்ட நிலையில் மழைகாலத்தில் ஒருநாள் சிவனாரே அவர் வீட்டிற்கு வந்தார், அந்நேரத்தில் சிவனடியாருக்கு உணவளிக்க முடியாத நிலையில் யாது செய்வதென்று அறியாத நிலையில் அவர் வீட்டிலிருந்த மாவை களியாக்கி சிவனடியாரான சிவனாருக்கு படைத்தார், அவரும் அந்த களியை விரும்பி உண்டு, தனது இல்லத்திறகும் கொண்டு செல்லவேண்டுமென்று கேட்டு மீதமுள்ள களியையும் வாங்கி சென்றுவிட்டார்.
மறுநாள் காலையில் தில்லை யில் உள்ள சிவலாயத்ததில் சிவாச்சாரியார்கள் கோவிலை திறந்தபோது கருவறையில் களி ஆங்காங்கே சிதறிக்கிடப்பதை அறிந்தார்கள். இதுகுறித்து சிவனாரிடம் அடியார்கள் வேண்ட என்பத்தன் சேந்தனார் அளித்த அமுது இந்த களி என்றாராம். அது முதல் மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் பகவானின் பிரசாதமாக திருவாதிரைக் களி என்றே இன்றும் சிவலாயங்களில் வழங்கப்படுகிறது.
திருச்சிற்றம்பலம்
புதன், 23 டிசம்பர், 2015
கோயில்கள் - ஒரு பார்வை
இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதே போன்று இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் உள்ளவை.
கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்!
ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்.
குறள் அதிகாரம்: துறவு
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. 350
குறள் விளக்கம் :
மு.வ : பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்
தீய எண்ணங்களே மனதில் எழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?
திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 10 கறுக்கும் அஞ்சன (திருப்பரங்குன்றம்)
கறுக்கும் அஞ்சன விழியிணை அயில்கொடு
நெருக்கி நெஞ்சற எறிதரு பொழுதொரு
கனிக்குள் இன்சுவை அமுதுகும் ஒருசிறு ...... நகையாலே
களக்கொ ழுங்கலி வலைகொடு விசிறியெ
மனைக்கெ ழுந்திரும் எனமனம் உருகஒர்
கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு ...... கொடுபோகி
நறைத்த பஞ்சணை மிசையினில் மனமுற
அணைத்த கந்தனில் இணைமுலை எதிர்பொர
நகத்த ழுந்திட அமுதிதழ் பருகியு ...... மிடறூடே
நடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவென
இசைத்து நன்கொடு மனமது மறுகிட
நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற ...... அருள்வாயே
நிறைத்த தெண்டிரை மொகுமொகு மொகுவென
உரத்த கஞ்சுகி முடிநெறு நெறுவென
நிறைத்த அண்டமு கடுகிடு கிடுவென ...... வரைபோலும்
நிவத்த திண்கழல் நிசிசர ருரமொடு
சிரக்கொ டுங்குவை மலைபுரை தரஇரு
நிணக்கு ழம்பொடு குருதிகள் சொரிதர ...... அடுதீரா
திறற்க ருங்குழல் உமையவள் அருளுறு
புழைக்கை தண்கட கயமுக மிகவுள
சிவக்கொ ழுந்தன கணபதி யுடன்வரும் ...... இளையோனே
சினத்தொ டுஞ்சமன் உதைபட நிறுவிய
பரற்கு ளன்புறு புதல்வநன் மணியுகு
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
கறுக்கும் அஞ்சன விழி இணை அயில் கொடு நெருக்கி
நெஞ்சு அற எறி தரு பொழுது ஒரு கனிக்குள் இன் சுவை
அமுது உகும் ஒரு சிறு நகையாலே ... கரிய மையிட்ட இரண்டு
கண்களாகிய வேல் கொண்டு நெருக்கி, மனம் அழியும்படி எறியும்
பொழுது, ஒரு பழச் சுவையையும் அமுதத்தையும் உகுக்கின்ற
ஒப்பற்ற புன்னகையாலே,
களம் கொழும் கலி வலை கொடு விசிறியெ மனைக்கு
எழுந்திரும் என மனம் உருக ஓர் கவற்சி கொண்டிட
மனை தனில் அழகொடு கொடு போகி ... கழுத்தில் நின்று
எழும் வளமான ஒலி என்னும் வலையை வீசியே வீட்டுக்கு வாருங்கள்
என்று கூறி மனம் உருகும்படியாகவும், ஒரு கவலை
கொள்ளும்படியாகவும் வீட்டில் அழகாக அழைத்துக் கொண்டு போய்,
நறைத்த பஞ்சு அணை மிசையினில் மனம் உற அணைத்த
அகம் தனில் இணை முலை எதிர் பொர நகத்து அழுந்திட
அமுது இதழ் பருகியும் ... மணம் தோய்ந்த பஞ்சணையின் மேல்
மனம் பொருந்த அணைத்த மார்பில் அவர்களது இரு மார்பகங்களை
எதிர்பொர, நகக் குறி அழுந்த, இதழ் அமுதைப் பருகியும்,
மிடறூடே நடித்து எழும் குரல் குமு குமு குமு என இசைத்து
நன்கொடு மனம் அது மறுகிட நழுப்பு நஞ்சன சிறுமிகள்
துயர் அற அருள்வாயே ... கண்டத்தோடு நடித்து எழுகின்ற புட்குரல்
குமு குமு என்று ஒலி செய்ய, நன்றாக மனம் கலங்கும்படி பசப்பி மயக்கும்
விஷம் போன்ற விலைமாதர்களால் வரும் துன்பம் நீங்க நீ அருள்
புரிவாயே.
நிறைத்த தெண் திரை மொகு மொகு மொகு என உரத்த
கஞ்சுகி முடி நெறு நெறு நெறு என நிறைத்த அண்ட முகடு
கிடு கிடு என ... நிறை கடல் பொங்கி மொகு மொகு எனவும்,
வலிமையான ஆதிசேஷனது முடி நெறு நெறு எனவும், நிறைந்த
அண்டங்களின் உச்சிகளும் கிடு கிடு எனவும்,
வரை போலும் நிவத்த திண் கழல் நிசிசரர் உரமொடு சிரக்
கொடும் குவை மலை புரை தர இரு நிணக் குழம்பொடு
குருதிகள் சொரி தர அடுதீரா ... மலையை ஒத்து உயர்ந்த திண்ணிய
கழல்களைக் கொண்ட அவுணர்கள் மார்பும் தலைகளின் கொடிய
கூட்டமும் மலைக்கு ஒப்பாக பெரிய மாமிசக் குழம்புடன் ரத்தத்தைச்
சொரிய வெட்டித் துணித்த தீரனே,
திறல் கரும் குழல் உமையவள் அருள் உறு புழைக்கை தண்
கட கய முக மிக உள சிவக் கொழுந்து அ(ன்)ன
கணபதியுடன் வரும் இளையோனே ... ஒளியும் கருமையும்
கொண்ட உமா தேவி பெற்றருளிய தொளைக் கையையும், குளிர்ந்த
மதமும் உள்ள யானை முகத்தைக் கொண்ட சிவக் கொழுந்து போன்ற
விநாயகருடன் வரும் தம்பியே,
சினத்தொடும் சமன் உதை பட நிறுவிய பரற்கு உளம்
அன்புறு புதல்வ நன் மணி உகு திருப்பரங்கிரி தனில் உறை
சரவண பெருமாளே. ... கோபத்துடன் யமனை உதைபட வைத்த
சிவபெருமானது உள்ளம் அன்புறும் புதல்வனே, நல்ல மணிகளைச்
சிதறும் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் சரவணனாகிய பெருமாளே.
திருச்சிற்றம்பலம்
ஓம் முருகா ஓம் சண்முக சரணம்
தொகுப்பு .வை.பூமாலை
மனம் ஒரு குரங்கு போடவேண்டும் ஒரு கடிவாளம.
திங்கள், 21 டிசம்பர், 2015
வாழ்வும் ஆன்மீகமும் - LIFE AND SPIRITUAL : சித்தர்கள் சொன்னவை - 2
வாழ்வும் ஆன்மீகமும் - LIFE AND SPIRITUAL : சித்தர்கள் சொன்னவை - 2: அஷ்ட கணபதி மந்திர தீட்சை சித்தர்கள் மணி,மந்திரம்,ஔஷதம் என்ற மூன்று கலைகளிலும் வல்லவர்கள்.அவர்களின் கூற்றுப்படி, அவர்களின் துறையில...
வியாழன், 17 டிசம்பர், 2015
கே எம் தருமா..(KeyemDharmalingam): போகர் - சித்தர்கள் வரிசையில்
கே எம் தருமா..(KeyemDharmalingam): போகர் - சித்தர்கள் வரிசையில்: போகர் – அகத்தியரும் போற்றிய மகா சித்தர்- வரலாறு. போகர்! சித்தர்கள் பற்றி சிந்திக்கும் பொழுது பாமரருக்கும் கூட பளிச் சென்று புலப்படும் ஒர...
கே எம் தருமா..(KeyemDharmalingam): ஜோதிர்லிங்கங்கள் 01/12 ஆன்மீக வரிசையில்.
கே எம் தருமா..(KeyemDharmalingam): ஜோதிர்லிங்கங்கள் 01/12 ஆன்மீக வரிசையில்.: ஜோதிர்லிங்கம் கோவில்கள் - 001/012 இருப்பிடம் : குஜராத் மாநிலத்தில் துவாரகைக்குச் செல்லும் வழியில் தாருகாவனம் என்ற இடத்தில் இந்த ஆலயம...
புதன், 16 டிசம்பர், 2015
பெரியபுராணம் காட்டும் அருளாளர்கள் வாழ்வில் திருநீற்றின் பெருமை
பெரியபுராணம் காட்டும் அருளாளர்கள் வாழ்வில் திருநீற்றின் பெருமை
சேரமான் பெருமான் நாயனார்:
சுந்தரமூர்த்தி நாயனார் எம்பெருமான் நண்பர், எம்பெருமானின் பெரும் பக்தர், சேரமான் பெருமான், எம்பெருமான் தன் நண்பர் சுந்தரனுக்கு சேரமான் பெருமானை அறிமுகம்செய்து, சுந்தரர் சேரமான் பெருமானுக்கும் நண்பராக்கினார். இதனால் இருவரும் சிவதொண்டில் இணைபிரயா நண்பர்களானர்,
சேர நாட்டு மன்னர் சேரமான் அரச முடிகொண்டு திருவீதி உலா வந்த போது, எதிரே ஒரு சலவைத் தொழிலாளி உவர் மண் சுமையோடு வரும் போது, அவர் உடம்பெல்லாம் உவர்மண் (வெண்மையானது) படிந்து உடலெல்லாம் திருநீறு பூசியது போன்று காட்சி கண்ட, மன்னர், அவரை வெண்ணீறு அணிந்த சிவனடியார் எனக் கொண்டு யானை மீதிலிருந்து கீழ் இறங்கி, எதிரே சென்று, தொழுதார், இக்து கண்ட சலவைத் தொழிலாளி மனங்கலங்கி, மருண்டு, " அடியேன் , அடி வண்ணான், என்றார், அவர் யாரென்றும், அவர் மீதுள்ளது திருநீறு அன்று தெரிந்த பின்னும், அடிசேரன் என்றார், அரசர். திருநீற்றை பூசிய தோற்றத்திற்கே நாயனார் அளித்த மரியாதை மதிப்பு மிக்கது, என்பதை எண்ணி உவப்போம்.
"சேரர் பெருமான் றொழக்கண்டு சிந்தை கலங்க முன்வணங்கி
யாரென் றடியேனைக் கொண்ட தாயேனடி வண்ணா னென்னச்
சேரர் பிரானு மடிசேனடியே னென்று திருநீற்றின்
வாரவேட நினப்பித்தீர் வருந்தா தேகுமென மொழிந்தார் " கழறிற்றறிவார் புராணம் -19
ஏனாதிநாத நாயனார்:
ஏனாதிநாத நாயனார் அரச குலத்தவர்களுக்கு வாட் பயிற்சி தந்து, அதன் மூலம் கிடைக்கும் செல்வத்தைக் கொண்டு சிவனடியார்களுக்கு சிவத்தொண்டாற்றி வந்தார். நாயனாரின் உறவினரான அதிசூரன் என்பவன் அவர் பால்பொறாமை கொண்டும், அவரிடம் பலமுறை சண்டையிட்டு தோல்வியும் தழுவியும், அவரை எப்படியும் நயவஞ்சனையால் கொல்ல தீய எண்ணம் கொண்டு, தான் ஒரு போலி சிவனடியார் வேடம் கொண்டு, நெற்றியில் திருநீறு அணிந்து அதனை கேடயத்தால் மறைத்துக் கொண்டு நாயனாருடன் வாட்போர் புரிய அழைத்து, வாட் போர் இடும் போது, தன் கேடயத்தை சற்று விலக்கி நெற்றியில் அணிந்த திருநீற்றை நாயனார் முன் காட்டி, தான் ஒரு சிவனடியார் என்பது போல் வஞ்சனை செய்தான், இதனைக்கண்ட ஏனாதிநாத நாயனார், திருநீற்றுடன் கண்ட நெற்றியினை சிவனடியார் என்றே எண்ணி, சிவனடியாரை வாட்போர் புரிந்து வெற்றி கொள்வது, எம்பொருமான் சிவனாரையே போர்புரிவதாக ஆகும் என்று எண்ணி , வஞ்சகனை கொல்வது சரியன்று, எனவே தன்போர்புரிவதை தவிர்த்தும், தன் ஆயுதங்களை கீழே போட்டால் , நிராயுத பாணியான தன்னை கொன்ற குற்றம் போலி சிவனடியாரான அதிசூரனுக்கு உண்டாகும் என்று எண்ணியவாராய், ஆயுத
ஙகளுடனே நின்று தன்னை கொல்ல ஒத்திருந்தார்,
இதன் பொருட்டு நாம் காண்பது திருநீறு அணிந்த நெற்றியைக் கண்ட மாத்திரத்திலேயே சிவனடியாருக்கு யாதொரு தீங்கும் ஏற்படக்கூடாது என்று எண்ணி தன் உயிர் துறக்க வஞ்சகனுக்கு உடன் இருந்த நிலை நீறுபூசிய தன்மைக்கு அவர் அளிக்கும் மரியாதை நன்கு புலப்படுகிறது. திரு நீறு இட்டாரை ஈசனாகவே கண்டார், அதன்வழீ வீடுபேறு அடைந்தார். உள்ளத்தில் வஞ்சனையுடன் போலி சிவவேடம் தறித்த அதிசூரன் கடுநரகம் அடைந்தான்.
சிறுத்தொண்டர்:
அடியாருக்கு உணவளிக்காமல் தாம் உண்ணா பெருந்தகையாளர் சிறுத்தொண்டர். பயிரவர் வேடத்தில் வந்த ஈசன் தன் உடன் உணவு உண்ண ஒரு அடியார் வேண்டுமென்ற போது, " எங்கு தேடினும் சிவனடியார்களே இல்லை, யானும் யாதும் கண்டீலன் , நான் அறியாதவனாயினும், உலகில் திருநீறிடும் மற்றவர்களைக் கண்டு நானும் இடுபவன்," என்று இறைஞ்சி நின்றார், உடனே இறைவன் திருநீற்றை சிறப்பிக்கும்வகையில் , உம்மைப்போல் திருநீற்றை சிறக்க இட்ட அடியார்களும் உண்டோ? என்று அருளி, தன்னும் உணவு உண்ண இச்சயத்து, அதன் பொருட்டு ஈசனே திருநீற்றை அணிந்தவர்களுக்கு கொடுத்த சிறப்பினை உலகுக்கு உணர்த்தினார், இதன் மூலம் திருநீற்றின் பெருமை ஈசன் வழங்கியது நன்கு விளங்கும்.
மெய்பொருள் நாயனார்:
திருக்கோவலூர் மலையமான் மரபில் வந்த அரசர் மெய்பொருள் நாயனார். இணையிலாத வீரர். பலமுறை அவரிடம் போரிட்டு தோல்வியுற்று,பின், அவரை எப்படியும்வஞ்சனையால் வெல்ல எண்ணிய முத்தநாதன் என்ற மாற்றரசன், உடம்பெல்லாம், திருநீறு பூசியும், சடைமுடி புணைந்து கையில் ஓலைச் சுவடி ஏந்தி, அதனுள் மறைத்த கத்தியுடன், வந்து ஆகம நூல் உபதேசிப்பவன் பேல் நாயனாரின் அந்தப்புறம் வரை வந்து நாயனாரை கத்தியால் குத்தினான். பகைவனை வாளினால் வெட்ட வந்த மெய்க்காப்பாளனை, தடுத்து, " தத்தா, நமர் " எனக்கூறி அவனை பாதுகாப்புடன் நாட்டின் எல்லையில் விடப்பணித்தார். பகைவன் என்று அறிந்தும் திருநீறு பொலிந்த அவன் சிவவேடம் கண்ட நாயனார், அவன் கருதியது முடிக்க உகந்ததுடன், தன் இளவரசர், தேவிமார், அமைச்சர் அவர்களிடம் " திருநீறு பூண்ட சிவவேடம் பூண்டாரை காத்தருள்க, " என வினவி , தான் வீடுபேறு பெற்றுய்தினார்.
திருஞான சம்பந்தர் :
ஞானப்பால் அருந்திய ஞானசம்பந்தர் வாழ்வில் திருநீறு மிகவும் சிறப்பு பெற்றது. அவர் சிறுகுழந்தைப்பருவத்திலேயே அவர் குழந்தை அழுகையை கட்டுப்படுத்த அவருக்கு அவர் அன்னையார் அளித்த திருமருந்து திருநீறே ஆகும். மேலும் அவர் குழந்தைப்பருவத்தில் திருத்தலங்களில் தேவாரம் பாடிவருங்கலாத்தில் அவருக்கு இறைவன் அளித்த முத்துச் சிவிகை, முத்து தாளம், முத்துப்பல்லாக்கு பெற்று சீர்காளி திரும்பி வரும்போது அங்குள்ள மாதர்கள் அவரை வரவேற்க பொற்கிண்ணம், பொற்தட்டுகளில் ஆராத்தி எடுத்து வரவேற்க சென்றபோது, அவரின் அன்னையார் மட்டும் ஒரு தாம்பளத்தில் இறைவனின் திருநீறுமட்டும் கொண்டுவந்து அவரை வரவேற்று சிறப்பித்தார் என்பதை சேக்கிழார்தனது காவியத்தில் விளக்குகின்றார்.
பாண்டியம்பதியில் சமணர்களின்ஆதிக்கம் வலுபெற்று, சைவத்தை அழிக்கும் நோக்கில் செயல்பட்டது கண்டு மனம் வறுந்திய பாண்டியநாட்டு அரசி ஞானசம்பந்தரை அழைத்து சமணர்களின் தீங்குகளை நீக்க வேண்டியபோது, அங்கு வந்த சம்பந்தரை அழிக்க அவர் தங்கிருந்த மாடலாயத்திற்கு தீ வைத்த சமணர்களால் பட்ட துன்பம் கண்டு பாண்டிய மனனனுக்கு வெப்பு நோய் கண்டபோது, அதனை நீக்க ஞானசம்பந்தரை அழைத்து திருநீறு அணிவித்து,
திரு ஐந்தெழுத்து மந்திரம் ஓதி வெப்பு நோய் நீங்க, திருநீற்று பதிகம் " மந்திரமாவது நீறு வானவர் மேவது நீறு என்று பதிகம் பாடி திருநீற்றுக்கு பெருமைசேர்த்தது இறைவனின் திருவருளால் அன்றோ!
திருநாவுக்கரசர்:
திருமுனைப்பாடியில் திலகவதியாரின் தம்பியார் தருமசேனர் என்ற நாவுக்கரசர் சிவநெறியை புறக்கணித்து சமண மதம் சார்ந்து, வாழ்ந்து வந்தமை கண்டு மனம் கலங்கிய தமக்கையார், வீரட்டானத்துறை ஈசரிடம்வேண்டி , புலம்ப, இதன் பொருட்டு இறைவன் தம்பியார் தருமசேனருக்கு சூலைநோய் கொடத்து யாரும் குணப்படுத்த வண்ணம் துன்பம் மிகக் கொண்ட தருமசேனர் உன்னிடம் சேர்வார் என்று அருள்புரிந்தார். அதன்படி தருமசேனர் தமக்கையை அண்டி, சூலைநோய் நீங்க உதவ வேண்டினார். தமக்யைார் வீரட்டானத்து இறைவன்பால் அன்பு கொண்டு இறைவனிடம்சூலை நோய் நீங்க தொழுதெழ கூறினார், அதன்படி தருமசேனர் வீரட்டானத்து இறைவனிடம் "கூற்றாயினவாறு விலக்கலீர் " என தேவாரப்பாடல் பதிகம் பாடி இறைவனின் திருநீற்றை வழங்கியும் அணிவித்து திருஐந்தெழுத்து மந்திரம் ஓதியும் தீராத சூலை நோய் நீங்கப் பெற்றார். இதன் பொருட்டு இறைவர் இவருக்கு நாவுக்கரசர் என்ற பெயரையும் சூட்டினார்.
திருநீறும் ஐந்தெழுத்தும் சார்பு கொள்ளாதோர் திருக்கோவில் புக தகுதி யற்றவர் என்பது இதன் குறிப்பு. அவ்வாறு நீறு அணிந்து நிறைவாகிய மேன்மையும் நாவுக்கரசர் பெற்றார்.
திரு நீற்றின் பெருமைகளை இன்னும் பல தகவல்களையும் சொல்லலாம். எம்பெருமான் தன் பெருங்கருனையினால், நம்மையெல்லாம் இந்த மண்ணில் பிறக்கச் செய்திருப்பதே நாம் செய்த புண்ணிய பலனாகும். அதிலும் சைவர்களாக பிறக்கச் செய்திருக்கிறார் நாம் அதன் பயனை நன்கு உணர்ந்து திருநீற்றின் நெறியை நம் வாழ்வின் நெறியாக கொள்வோம். நலம் பல பெறுவோம்.
திருச்சிற்றம்பலம்
தென்னாடுடைய சிவனே போற்றி!
என்னாட்டவருக்கும் இறைவா போற்றி!!
நன்றி : திருவாளன் திருநீறு
மேலும் பல ஆன்மிகத்தகவலுக்கு
http://poomalai-karthicraja.blogspot.in
https://vpoompalani05.wordpress.com
http://vpoompalani05.blogspot.in
திங்கள், 14 டிசம்பர், 2015
Aanmigam: நமக்கு தெரிந்த கோவில்கள் நமக்கே தெரியாத அதிசயங்கள்...
Aanmigam: நமக்கு தெரிந்த கோவில்கள் நமக்கே தெரியாத அதிசயங்கள்...: நமக்கு தெரிந்த கோவில்கள் நமக்கே தெரியாத அதிசயங்கள் 1.சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்கள...
வியாழன், 10 டிசம்பர், 2015
திருநாவுக்கரசர் தென்கூடல் திருஆலவாய் மதுரையில் அருளியது /
வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்
தூயானைத் தூவெள்ளை யேற்றான் தன்னைச்
சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென்
தாயானைத் தவமாய தன்மை யானைத்
தலையாய தேவாதி தேவர்க் கென்றும்
சேயானைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
பொழிப்புரை :
அடியார்களுடைய வாயுள்ளும் மனத்துள்ளும் மனத்தில் தோன்றும் எண்ணத்துள்ளும் தங்கி , வேண்டுவார் வேண்டுவனவற்றை அவர்தம் முயற்சியின்வழிக் கூட்டுவித்தல் . கருதப்பட்டதே சொல்லப்படுதலின் , ` வாயுள் நின்ற சொல்லானை ` என்று அருளிச் செய்யாராயினார் அவர்களுடைய விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுபவனாய் , மாசற்றவனாய் , கலப்பற்ற வெள்ளை நிறக் காளையை உடையவனாய் , பிறையைச் சடையில் சூடியவனாய் , தொடர்ந்து எனக்குத் தாய்போல உதவுபவனாய்த் தவத்தின் பயனாக உள்ளவனாய் , மேம்பட்ட தேவர்கள் தலைவராய திருமால் பிரமன் இந்திரன் முதலியவர்களுக்கு அதிகாரச் செருக்கினால் அவனை , எண்ணாதொழிதலால் என்க . இறைவன் , தன் அடியார்கட்குத் தொடர்ந்து நின்ற தாயாகி நிற்றலும் , செருக்குடையார்கட்குத் சேயனாகி இருக்கும் தென் கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை
புதன், 9 டிசம்பர், 2015
தினம் ஒரு திருப்புகழ் அருணகிரியார் அருளியது
திருப்பரங்குன்றத்தில் அருளியது
......... பாடல் .........
உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா
உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே
கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே
கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே
வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா
மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே
தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே
தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.
பொருளுரை ;
யான் உன்னைத் தினந்தோறும் தொழுவதும் இல்லை.
உன் தன்மைகளை எடுத்து உரைப்பதுமில்லை.
பல மலர்கள் கொண்டு உன் திருவடிகளை
பொருந்தப் பணியவில்லை.
ஒருவகையான தவமும் யான் செய்தவன் இல்லை.
உன்னருள் நீங்காத உள்ளத்தை உடைய அன்பர்
இருக்கும் இடம்கூட யான் அறிகின்றதும்இல்லை.
ஆர்வத்தோடு உன்மலையை வலம்வருவதும் இல்லை.
மகிழ்ச்சியோடு உன் புகழைத் துதிக்க
விரும்புவதும் இல்லை.
மலைபோல் உருவமுடன்,கனைத்தவாறு வரும் எருமையின்
கழுத்தின் மீது வருகின்ற,
கரிய நிறமும் கடுங்கோபமும் உடைய யமனின் தூதர்கள்
என்முன் தோன்றி நெருக்கி எறிகின்றபாசக்கயிறு கொண்டும்,
துன்புறுத்தும் கதாயுதம் கொண்டும் என்னோடு போரிடும் போது,
மனம் கலங்கும் செயலும்,
ஓய்வின்றி அழிவுறும் எண்ணமும்
நைந்துபோய் யான் துன்புறும்போது
ஒரு கண அளவில்
என் பயம் நீங்கும்படியாக அஞ்சேல் என்று கூறி
மயிலின் முதுகினில் நீ வருவாயாக.
போர்க்களத்தில்
பேய்கள் கூத்தாடுவதால்
ஊன் உடைந்து உடல்களிலிருந்துசிதறின மாமிசத்தை
கழுகுகள் உண்ணவும்,
விரித்த தலைமயிர் உடையவர்கள் என்னும்
அசுரர்களோடு போர் புரிந்த வேலனே,
நிறைய ராகங்களில் பாடவல்லகுயிலின் மொழி ஒத்த குரலாள்,
அழகான வள்ளிமலைக்காரி, (வள்ளியின்)
குங்குமம் அணிந்த மார்பில்
அழுந்தும் வாசமிகுசந்தனமும் கஸ்தூரியும் அணிந்த
மலை போன்ற தோள்களை உடையவனே,
தினந்தோறும்,நால்வேதமும் வல்ல பிரம்மா விதிப்படி,
நீரால் அபிஷேகம் செய்து,பூக்களை நிறைய அர்ச்சித்து,
தேவர்களும்
கோபத்தை நிந்தித்துவிட்ட முனிவர்களும் தொழ,
அந்த நித்ய பூஜையில் மனம் மகிழ்வோனே,
தெனத்தெனந்தன என்ற சப்தத்துடன்
இசைக்கும் வண்டுகள் தேனைத்தெவிட்டும் அளவுக்கு
ஆசையுடன் குடிக்கும்
உயர்ந்த சோலைகள் விளங்கும்
திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும்
சரவண மூர்த்தியே.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு , வை. பூமாலை
Sadhananda Swamigal: சுவாமி சின்மயானந்தரின் கேள்வி பதில் உரையாடல்
Sadhananda Swamigal: சுவாமி சின்மயானந்தரின் கேள்வி பதில் உரையாடல்: சுவாமி சின்மயானந்தரின் கேள்வி பதில் உரையாடல் சின்மயானந்தர்! ஆன்மிக உலகில் அனைவராலும் அறியப்பட்ட பெயர்! இவரது பகவத்கீதை ஆங்கில சொற்பொழி...
சனி, 28 நவம்பர், 2015
இந்துமத தத்துவங்கள் பற்றி வேதங்களில் கூறிய விதிகள், சாஸ்திரங்கள் கூறும் யுத்திகள் பற்றி காஞ்சி பெருயவர் கூறிய யுத்திகள்
மதச்சின்னங்கள்
மானிட வாழ்விற்கான அவசியங்கள் மற்றும் முக்கியத்துவம் பற்றியும், காலப்போக்கில் அதன் வளர்ச்சி்க்கு ஏற்ற மாற்றம் ஏற்பட்டாலும், அச்சின்னங்களால் ஏற்படும் முக்கியத்துவம் அவசியமாகிறது.
இந்து சைவ மதத்தின் அடையாளங்களாவன; நெற்றில் விபூதி, கழுத்தில் ருத்திராட்சம், சடாமுடி, திருஐந்தெழுத்து நாமம்
விஷ்ணு மதத்திற்கு நெற்றியில் திருமஞ்சன நாமம், துளசி மாலை, வேதங்கள் பயின்றதன் பொருள் உணர்த்தும் தலைகுடுமி,
கிருஸ்துவ மதத்தினர், சிலுவை மாலை
முஸ்லீம் மதத்தினர் முகத்தில் காணும் குறும்தாடியும் தலைப்பாகையும்
அவரகள் அணியும் சமய அடையாளங்களினால் அவரவர்கள் தன் மதத்தின் மேல் கொண்ட மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என்பதில் அதன் சின்னங்களே விளக்கும், வைதிகம் மனம் சார்ந்ததா? உடை சார்ந்ததா? என்பதல்ல, அதன் பயன்கள் தரும் நன்மைகளே நமக்கு பாதுகாப்பு,
பெண்கள் அணியும் குங்கும் அவரகளுக்கான மங்கள தத்துவத்தையும், சுமங்கலி என்ற அடையாளத்தையும் நமக்கு காட்டுகின்றன. அவை ஆன்மீக தத்துவத்தை விளக்கினாலும், கெட்ட செயல்கள், துர்ஆவிகள் சம்பந்தமான தீய செயல்களிலிருந்து அவரகளை காப்பாற்றும் சக்தியையும் அளிக்க வல்லன.
தற்கால கட்டத்தில் பள்ளிகளுக்கு சீருடையும், காவல்துறை மற்றும் அந்தந்த துறைகளுக்கான அடையாள சீருடைகளும் மற்ற அடையாளங்களும் அதன் முக்கியத்துவத்தை விள்க்குவதை நாம் அனுதினமும் காணலாம்
நம் ஆத்மா மூன்ற லோகங்களை அடையும் வல்லமை பெற்றது.
1. பூலோகம் / தற்போது நாம் வாழும் லோகம்
2, தேவலோகம்/ இது சொர்க்கலோகம், வைகுண்டலோகம், சிவலோகம், எமலோகம், என்ற புண்ணியலோகமாகும்
3. நரகலோகம்/ இது நாம் பூலோகத்தில் நாம் பண்ணிய பாவ கர்மங்களால் நமக்கு கிடைக்கும் தண்டனை லோகமாகும்.
இந்த மூன்று லோகங்களிலும் சிறந்தது நாம் வாழு்ம் இந்த பூலோகமே என்கிறார் பெரியவர்,
ஏனெனின், இங்கு தான் நாம் நல்லதோ அல்லது கெட்டதோ அவரவர் இஸ்டத்திற்கு செயல்பட வாய்ப்பு உள்ளது இங்கு நாம் செய்யும் பாவ புண்ணிய ெசயல்களுக்கு தக்க நமக்கு மற்ற இரு லோகங்களும் கிடைக்கும், மேலும் நம் ஆன்மிக அருளாளர்கள் இவ் லோகத்தில் மீண்டும்மீண்டும் பிறவா நிலையும் வேண்டும் என்கிறார்கள், அவ்வாறு பிறந்தால் இறைவரை மறவா நிலை வேண்டும் என்றனா்.
இவ் பூலோக வாழ்வில் மானிட பிறவி, மாயையிலிருந்து விடுபட, இனியும் பிறவா நிலை பெற, பூலோக வாழ்வில் ஈ்டேற ஆத்மாவிற்கு எட்டு குணங்கள் வேண்டும் என்கிறார்.
அவை ;
1. தயை / ஈகை. என்ற பிறஉயிர்களிடத்தில் காட்டும்அன்பு
2.சாந்தி / அமைதி என்ற ஆரவாரம் அற்ற குணம்
3.அனுசூயை / பொறாமையற்ற குணம்
4.செளதம் / சுத்தம் புறஉடல் சுத்தம் அக சுத்தம்
5.மங்களம் / அமங்கலமற்ற, நல்ல செயல், பேச்சு
6.அனாயகம் / எதிலும் பதட்டமற்ற குணம்
7.அகார்ப்பம் / தாராள குணம், கஞ்சத்தனமற்ற குணம்
8.அப்பிரஹா / ஆசையற்ற குணம்
இவ் பூலோக வாழ்வில் நம் ஆத்மாவிற்கு மேற்கண்ட எட்டு குணங்கள் கொண்டு வாழ்ந்து வந்தால் இனி இந்த லோகத்தில் பிறவா நிலையும் தேவலோகம் அடையலாம் என்கிறார்.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை. பூமாலை
புதன், 25 நவம்பர், 2015
வெள்ளி, 20 நவம்பர், 2015
Aanmigam: சித்தர்கள் வழிபட்ட வாலாம்பிகை
Aanmigam: சித்தர்கள் வழிபட்ட வாலாம்பிகை: சித்தர்கள் வழிபட்ட வாலாம்பிகை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து திசையன்விளை செல்லும் சாலையில் உள்ளது கொம்மடிக்கோட்டை என்ற ஊர்....
Aanmigam: அகத்தியரை “நாடியில்” …
Aanmigam: அகத்தியரை “நாடியில்” …: அகத்தியரை “நாடியில்” … வணக்கம் அகத்தியர் அடியவர்களே! எத்தனையோ எதிர்பார்ப்புடன் அகத்தியரை “நாடியில்” நாடி அருள்வாக்கு கேட்கிற மனிதர்கள் ...
குழந்தை பாக்கியம், கணவன் மனைவி இடையே அன்யோன்யம் பெருக ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம்,
தித்திக்கும் தேவாரம் அப்பர்பெருமானார் பாடியது
தித்திக்கும் தேவாரம் அப்பர்பெருமானார் பாடியது
திருக்கன்றாப்பூர் பதிகம் 61, பாடல் 2
சிவனாடியார் வேடம் தரித்தவர்கள் யாவரும் சிவனாகவே பாவித்து அவர்களை உபசரித்து வழிபாடும் அடியார்கள் நினைவை விட்டு நீங்கான் இறைவன் என்கிறார், அடியார்களையும், தம்மையும் வெவ்வேறாக காணக்கூடாது. இருவரும் ஒருவரே என்பதைக் கொளல் வேண்டும் என்கிறார்.
விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி
வெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச்
செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பாய் என்றுஞ்
செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந்
துடியனைய இடைமடவாள் பங்கா வென்றுஞ்
சுடலைதனில் நடமாடுஞ் சோதீ யென்றுங்
கடிமலர்தூய்த் தொழுமடியார்நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே
.
பொழிப்புரை:
பொழுது விடிந்த அளவில் திருநீற்றை மெய்யில் பூசி, வெளுத்த கீளொடு கூடிய கோவணத்தை அணிந்து, கீழ்மையை உடைய வல்வினையால் ஏற்பட்ட நோயினைத் தீர்ப்பவனே! சென்று சேர வேண்டிய நல்லகதிக்கு வழிகாட்டும் சிவனே! உடுக்கை போன்ற இடையை உடைய பார்வதி பாகனே! சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தும் ஒளி உருவனே! என்று நறுமண மலர்களைத் தூவி வழிபடும் அடியவர்கள் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.
எவரேனுந் தாமாக விலாடத் திட்ட
திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி
உவராதே யவரவரைக் கண்ட போதே
உகந்தடிமைத் திறம்நினைந்தங் குவந்து நோக்கி
இவர்தேவர் அவர்தேவ ரென்று சொல்லி
இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக்
கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே
.யாவரேயாயினும் நெற்றியில் திருநீறு அணிந்து, உருத்திராக்கம் பூண்டு இருப்பவரைக் கண்டால், தலைவனது அடையாளப் பொறியை (முத்திரையை)க் கண்டவுடன், அதனைப் பணிந்தேற்றல் அல்லது, அதனைக் கொணர்ந்தாரது குணங்குற்றம் நோக்கலாமையை உணர்ந்து. திருவேடத்தின் பெருமையை நினைத்து, வெறுப்பில்லாமல், அவர்களைக் கண்ட போதே விரும்பி அடிமைத் திறத்தை நினைத்து, விரும்பிநோக்கி `இவர்கள் நம்மால் வழிபடத்தக்க தேவரா என உள்ளத்தை இருவகையாகச் செலுத்தாமல் இறைவனிடத்துச் செய்யும் செயல்களையே அடியவரிடத்தும் விரும்பிச் செய்து, அங்ஙனம் செய்யும்பொழுது மனத்தில் இருதிறக் கருத்து நிகழாத வகையில் இறைவனையும் அடியவரையும் ஒரே நிலையில் மனத்துக்கொண்டு தொழும், அடியவர் உள்ளத்தில் கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.
`திருவேடமுடையாரைத் தொழும் அடியார் நெஞ்சினுள் சிவ பிரானைக் காணலாம்` என்றதனால் அப்பெருமான் அத்திருவேடமே தானாய் நின்று அருளுவன் என்பது இனிது விளங்கும்.
இலங்காலஞ் செல்லாநா ளென்று நெஞ்சத்
திடையாதே யாவர்க்கும் பிச்சை யிட்டு
விலங்காதே நெறிநின்றங் கறிவே மிக்கு
மெய்யன்பு புகப்பெய்து பொய்யை நீக்கித்
துலங்காமெய் வானவரைக் காத்து நஞ்சம்
உண்டபிரா னடியிணைக்கே சித்தம் வைத்துக்
கலங்காதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
பொழிப்புரை :
யாம் பொருள் இல்லாதேம் இக்காலம் நம்மால் ஒன்றும் இயலாத காலம்` என்று மனத்தில் தளர்ச்சியுறாமல், பிச்சை ஏற்கவருவோர் எல்லோருக்கும் பிச்சையிட்டு, நல்லவழியில் பிறழாமல் நின்று, இறைவன் பெருங்கருணையாளன் ஆதலை அறியும் அறிவு மிக்கு, பயன் கருதாமல் செய்யும் அன்பை மேற்கொண்டு, பொய்யை விடுத்து, மெய்யுணர்வு விளங்கப் பெறாத தேவர்களைக் காக்க விடம் உண்ட பெருமான் திருவடிக்கண் மனத்தை வைத்துக் கலக்கம் இன்றித் தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.
விருத்தனே வேலைவிட முண்ட கண்டா
விரிசடைமேல் வெண்டிங்கள் விளங்கச் சூடும்
ஒருத்தனே உமைகணவா உலக மூர்த்தீ
நுந்தாத வொண்சுடரே அடியார் தங்கள்
பொருத்தனே யென்றென்று புலம்பி நாளும்
புலனைந்தும் அகத்தடக்கிப் புலம்பி நோக்கிக்
கருத்தினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
பொழிப்புரை :
மூத்தோனே! விடம் உண்ட நீலகண்டா! சந்திர சடாதரனே! உமைபாகனே! உலகத்தை வடிவாக உடையவனே! தூண்டவேண்டாத ஒளிவிளக்கே! அடியவர்கள் உறவினனே! என்று பலகாலம் கூப்பிட்டு, ஐம்புலன்களையும் உள்ளே அடக்கி, வேற்றுப் பற்றின்றித் தியானித்து, உள்ளத்தோடு தொழும் அடியவர் உள்ளத்துள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.
பொசியினால் மிடைந்துபுழுப் பொதிந்த போர்வைப்
பொல்லாத புலாலுடம்பை நிலாசு மென்று
பசியினால் மீதூரப் பட்டே யீட்டிப்
பலர்க்குதவ லதுவொழிந்து பவள வாயார்
வசியினா லகப்பட்டு வீழா முன்னம்
வானவர்கோன் திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக்
கசிவினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
பொழிப்புரை :
செந்நீர் வெண்ணீர் நிணம் முதலியவற்றின் கசிவோடு இணைக்கப்பட்டுப் புழுக்களை உள்ளே வைத்துத் தோலால் மூடப்பட்ட இழிந்த இந்தப் புலால் மயமான உடம்பு நிலையாக இருக்கும் என்று உறுதியாக எண்ணிப் பசிப் பிணியையும் பொறுத்துக் கொண்டு பொருளைச் சம்பாதித்து, அப்பொருளால் ஏழைகள் பலருக்கும் உதவுதலைவிடுத்து, பவளம்போன்ற வாயினை உடைய பெண்களிடம் வசப்பட்டு அழிவதன் முன்னம் தேவாதி தேவனுடைய திருநாமமாகிய திருவைந்தெழுத்தைச் சொல்லி உருக்கத்தோடு தொழும் அடியவருடைய நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.
ஐயினால் மிடறடைப்புண் டாக்கை விட்டு
ஆவியார் போவதுமே அகத்தார் கூடி
மையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி
மயானத்தி லிடுவதன்முன் மதியஞ் சூடும்
ஐயனார்க் காளாகி அன்பு மிக்கு
அகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங்
கையினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
பொழிப்புரை :
கோழையினால் குரல்வளை அடைக்கப்பட்டு, உடம்பைவிட்டு உயிர்போன அளவிலேயே, வீட்டிலுள்ளவர்கள் ஒன்று சேர்ந்து, கண்களை மையினால் எழுதி, மாலை சூட்டிப் பிணத்தைச் சுடுகாட்டில் இடுவதன் முன்பு, பிறைசூடும் பெருமானுக்கு அடியவராகி, அன்புமிக்கு மனம் குழைந்து மெய் மயிர் சிலிர்த்து, எம்பெருமான் திருவடிகளைக் கைகளால் தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.
திருதிமையால் ஐவரையுங் காவ லேவித்
திகையாதே சிவாயநம வென்னுஞ் சிந்தைச்
சுருதிதனைத் துயக்கறுத்துத் துன்ப வெள்ளக்
கடல்நீந்திக் கரையேறுங் கருத்தே மிக்குப்
பரிதிதனைப் பற்பறித்த பாவ நாசா
பரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங்
கருதிமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
பொழிப்புரை :
மன உறுதியால் ஐம்பொறிகளையும் காவலில் வைத்து மனம் கலங்காமல், சூக்கும ஐந்தெழுத்தாகிய மானதமாகக் கணிக்கப்படும் மந்திரத்தைத் தியானித்தலால் மயக்கத்தைப் போக்கித் துன்பமாகிய வெள்ளம் நிறைந்த வாழ்க்கையாகிய கடலைக் கடந்து, முத்திநிலையாகிய கரைக்கு ஏறும் எண்ணமே மிக்கு, `சூரியன் ஒருவனுடைய பற்களை நீக்கிய பாவநாசனே! மேம்பட்ட ஒளியே! என்று துதித்து, நாள்தோறும் விரும்பி மிகத்தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.
குனிந்தசிலை யாற்புரமூன் றெரித்தாய் என்றுங்
கூற்றுதைத்த குரைகழற்சே வடியாய் என்றுந்
தனஞ்சயற்குப் பாசுபத மீந்தாய் என்றுந்
தசக்கிரிவன் மலையெடுக்க விரலால் ஊன்றி
முனிந்தவன்தன் சிரம்பத்துந் தாளுந் தோளும்
முரணழித்திட்டருள்கொடுத்த மூர்த்தீயென்றுங்
கனிந்துமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
பொழிப்புரை :
வளைந்த வில்லால் முப்புரங்களை எரித்தவனே! யமனை உதைத்த, ஒலிக்கும் கழல் அணிந்த சிவந்த அடியனே! அருச்சுனனுக்குப் பாசுபதப்படை ஈந்தவனே! இராவணன் மலையைப் பெயர்க்க. வெகுண்டு, விரலை ஊன்றி, அவன் பத்துத் தலைகளும் தாள்களும் தோள்களும் வலிமை அழியச் செய்து, பின், அவனுக்கு அருள் செய்த பெருமானே! என்று உருகி மிகத் தொழும் அடியவர் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ;வை.பூமாலை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
