திருமுறை 11
ஐயடிகள் காடவர்கோன் நாயனார் - சேத்திரத் திருவெண்பா
(இவ்வெண்பாக்கள் யாவும், `யாக்கையின் நிலையாமையை உணர்ந்து, இன்றே, இப்பொழுதே தலங்கள் தோறும் சென்று சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும்` என்பதையே அறி வுறுத்துகின்றன). இவ்வெண்பா, `தில்லைத் திருச்சிற்றம்பலப் பெருமானைக் கண்டு வணங்குக` எனக் கூறுகின்றது.
ஒடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும்
கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று - நாடுகின்ற
நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே
தில்லைச்சிற் றம்பலமே சேர்.
உடலின் வலிமை இழந்த பின் முப்பு வந்தபின் மனைவி,மக்கள் சுற்றத்தார் யாவரும் நம்மைவிட்டு விலகும் மனம் மாறிவிடுகின்றனர், மூப்பும் நம்மை தழுவிற்று, வரும் என்று அஞ்சப்பட்டவையாவும் வந்துவிட்டது. இனி சேரும் இடம் தில்லை சிற்றம்பலமே என்று உணர்
குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி,
நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை.
பொருள் ; தட்டுதடுமாறி நடந்து போகும் போது கையால் கோல் ஊன்றி ,உடல் வலியால் நொந்து இருமி இருமி ஏங்கி
கோவழை. அது நுரைத்து, மேலே ஏறி, வெளி வந்து, ஓட்டெடுத்து வாய் ஆறு (வாய்வழியால்) பாயா முன்`இப்படி வாயால் வந்து நொந்தி திணரும் முன் என் ெநஞ்சமே ஐயாறு (சோழ நாட்டுத் தலம். தலப் பெயரைச் சொல்லு தலும் அங்குள்ள இறைவன் பெயரைச் சொல்லி இறைவரை வாயால் அழை என்கிறார்
தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது
பெட்டப் பிணமென்று பேரிட்டுக் - கட்டி
எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே
நெடுங்களத்தான் பாதம் நினை.
தொகுப்பு; வை. பூமாலை
I would like to thank you for the efforts you have put in penning this site. I’m hoping to view the same high-grade content by you later on as well. In fact, your creative writing abilities has inspired me to get my own site now .
பதிலளிநீக்குibps
very good blog.Thank u for sharing it.
பதிலளிநீக்குOne Telugu Media
NakulReddy
home tuitions in karimnagar
பதிலளிநீக்குvery good content in your website