புதன், 21 ஜனவரி, 2015

திருமுறைகளில் வாழ்வியல்


திருமுறைகளில் வாழ்வியல் இந்த உடம்பும் உலக வாழ்வும் நிலையில்லாதன என்பதை யாவரும் அறிவோம். பலப்பல நூல்களும் இதைச் சொல்கின்றன. பத்தாவது தமிழ்வேதமாகிய திருமந்திரமும் யாக்கை நிலையாமையைப் பற்றி கூறுகின்றது, ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கி பிணமென்று பேரிட்டு சூரையங் காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தார்களே. திருமந்திரம் நிலையில்லா இந்த உடம்பையும் உலகையும் இறைவர் நமக்கு அளித்துள்ளார் என்றால், அதில் ஒரு நோக்கம் கட்டாயம் இருக்கும், இறைவருடைய செயல் நமக்கு எப்பொழுதும் நன்மையையே அளிக்கும், நிலையில்லா இந்த உடம்பையும் உலகையும்பயன்படுத்தி நிலையான புண்ணியங்களை பெற்றிட வேண்டும். புண்ணியத்தின் பயனாக ஆன்மாக்கள் மேல் நிலை அடையும், இன்று கொல் அன்று கொல் என்றுகொல் என்னாது பின்றையே நின்றது கூற்றம் என்று எண்ணி ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால் மருவுமின் மாண்டார் அறம். இறப்பு இன்றுவரும் நாளைவரும் என்று எண்ணி இருக்க வேண்டாம், எமன் பின்புறத்திலேயே நின்று கொண்டிருக்கின்றார், என்று நினைத்துத் தீய செயல்களை விட்டு விலக வேண்டும், அவரவர் தகுதிக்கு ஏற்ப மாண்புடைய சான்றோர் போற்றிய தருமங்களை செய்ய வேண்டும். குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி நொந்து இருமி ஏங்கி நுரைத் தேறி - வந்துந்தி ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே ஐயாறு வாயால் அழை. ஐடிகள் காடவர்கோன் திருமுறை 11 கோழை (சளி) தொண்டையில் மிகுதியாகி அடைத்து வாய்வழியே வந்து உயிர் உடலைவிட்டு பிரிவதன் முன் திருவையாற்றில் எழுந்தருளியுள்ள சிவபொருமானாரை வழிபட்டு சிவபுண்ணியத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார் நாயனார், நிலையில்லா இந்த உடலைப் பெற்ற நாம் வாழும்வழி: எப்போதும் புண்ணியங்களையே செய்தல் வேண்டும் பாவங்களை செய்யாமலிருக்க வேண்டும் நல்லவர்களுடன் மட்டுமே சேர வேண்டும் நல்லவர் அல்லாதவர்களுடன் ஒருபோதும் சேரக்கூடாது அகந்தை இன்றி இருக்க வேண்டும் ஆடம்பரமின்றி இருத்தல் வேண்டும் இரவில் சுற்றுவதும் பகலில் தூங்குவதும் கூடாது ஐம்புலங்களையும் கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும் அதிக உணவு உட்கொள்ளல் உண்ணாமல் இருத்தல் கூடாது கொலை களவு கெட்ட பழக்கவழக்கங்கள் செய்யாதிருக்க வேண்டும் தற்புகழ்ச்சி கூடாது பிறரை நிந்தித்தல் கூடாது கிடைத்ததைக் கொண்டு மன நிறைவுடன் வாழ வேண்டும் தமிழ் வேதங்கள் அன்றாடம் ஓதுதல் வேண்டும் பிறருக்கு நன்மை தரக்கூடியதையே செய்தல் , பேசுதல் வேண்டும் எந்த உயிருக்கும் தீமை செய்யாதிருக்க வேண்டும் எல்லோரிடமும் எளிமையாக பழகுதல் வேண்டும் இனிமையாக பேச வேண்டும் உண்மையையே பேச வேண்டும் ஏழைகளுக்கு உதவ வேண்டும் வரும் துன்பங்களை நம் வினையால் வந்தவை என்ற தாங்கிக் கொள்ள வேண்டும் பிறரிடம் உள்ள நல்லனவற்றை மட்டுமே பார்க்க வேண்டும் யாரைக் கண்டும் பொறாமைப் படாமலிருக்க வேண்டும் பிறருக்கு தானம் கொடுக்கும் பொழுது , கர்வம் இல்லாமல் கொடுக்க வேண்டும் அன்னையை தெய்வமாக போற்ற வேண்டும் தந்தைத் தெய்வமாக போற்ற வேண்டும் குருஅல்லது ஆசிரியரை தெய்வமாக போற்ற வேண்டும் வீட்டிற்கு வரும் புதியவரை (எளியவர்) தெய்வமாக போற்ற வேண்டும் சிவ நாமத்தை( சிவாயநம) எப்போதும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும் ஆவை அனைத்தும் தமிழ் வேதங்களில் ஆங்காங்கே கூறப்படும் கருத்துக்கள் அழியும் இவ்வுடம்பைக் கொண்டு அழியாத - உடன் வரும் புண்ணியங்களைச் செய்து பலப்பல நன்மைகளையும் இனி பிறா நிலையும் வீடு பேறும் அடையலாம், திருச் சிற்றம்பலம் - ஒம் நமசிவாய நம நன்றி: தமிழ் வேதம் மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக