உடல் ஒரு ஓட்டைப்பாண்டம்
முக்தி அடைவதற்கு மூன்று வழிகள் உண்டு. அவை கர்ம யோகம், ஞானயோகம், பக்தியோகம் என்பன. கர்ம யோகத்தை உடலாலும்,ஞானயோகத்தை அறிவினாலும் பக்தியோகத்தை மனதினாலும் வசப்படுத்தலாம். சித்தர்கள் வாழும் காலத்திலேயே மனதாலும் உடலாலும் முக்தி அடைந்தார்கள், நாற்றம் பிடித்தஅழுக்கு உடம்பை ஆபாசக்கொட்டிலை மாமிசம் நிறைந்த ஓட்டைத்துருத்தியை சோறிட்டு அடைக்கம தோற்பை - தசவாயுக்களாலும் நிறையப்பெற்ற நிலையற்ற பாத்திரமாகிய உடம்பின் மேல் நேசம் கொண்டு இத்தனை காலம் சுமந்து திரிந்து விட்டேனே என்று நினைக்கும் சித்தர்கள் அகக்கண்ணால் இறைவனைக் காணும் வல்லமை பெற்றவர்கள். இந்த உலகத்தில் பிறக்கும் போது எதையும் கொண்டு போக முடியாது என்று உலகத்தை உணர்ந்தவர்கள் பக்தி மார்க்கத்தில் ஞானத்தை செலுத்தி துன்பவலை என்ற பாசக்கட்டை அறுத்தெறிந்து வாழக்கற்றுக்கொண்டாவர்கள் சித்தர்கள்.
ஐம்புலங்களால் நாம் அறியும் அறிவு ஐந்து. ஆத்ம அறிவைச் சேர்த்து ஆறறிவு. மிருகங்குளுக்கு நான்கு அறிவு. சீவனை சேர்த்தால் ஐந்து அறிவு. பறவைகளுக்கு அறிவு மூன்று. மார்பினால் நகரும் பிராணிகளுக்கு (ஊர்வன) இரண்டு அறிவு. தாவரங்களுக்கு ஒரு அறிவு.இப்படி அறிந்து தெளிந்து கூறியவர்கள் சித்தர்கள். ஒரு சித்தர் " இந்த உடல் ஓட்டைப் பாண்டம் ஒன்றுக்கும் உதவாது என்று நினைத்து இருந்தேன், ஆனால் இந்த உடம்புக்குள்ளே தான் இறைவன் இருக்கிறான் என்பதைக் கண்டு கொண்டேன் உடலே கோயில் சீவனே சீவன் என்பதை உணர்ந்து கொண்டேன் இந்த உடம்பு அழிந்து விட்டால் உயிரும் அழிந்து விடுமே அதன்பின் ஞானத்தை எங்கே உணரமுடியும் அதனோடு எப்படி சேர முடியும் என்று அரிய விளக்கத்தை கூறியிருக்கிறார் திருமூலர் திருமந்திரத்தில்
"உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினையான் இருந்து ஓம்புகின்றேனே." என்கிறார்
பித்தனைப் போல் வாழ்ந்த சித்தர் " இவ்வுலகில் நிலையாக வாழ்வாய் என்று நினைப்பது மாயை, நீ ஒரு நாள் இறக்கத்தான் போகிறாய் உடம்பு உன்னுடையது என்று வளர்த்து சந்தோசப்படுகிறாயே அது உன்னுடையதா? நாய் நரி, கழுகு ஆகியவை நம்முடையது என்று ஆனந்தப்படுகிறதே, நீ இறந்தபின் கொடிய கழுகுக் கூட்டம் பறந்து வந்து உன் உடம்பை சின்னா பின்னமாக்கி கொத்தி தின்னத்தானே போகிறது, 9 துவாரங்களுடைய தோல் பையாகிய இந்த உடம்பின் மீது ஆசை வைக்காதே" என்று கூறுகிறார், மேலும் கூறுகிறார்
" காக்கை கவரில்என் கண்டார் பழிக்கில்என்
பால்துளி பெய்யில்என் பல்லோர் பழிச்சில்என்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டு போனஇக் கூட்டையே".
தோலால் ஆன இப்பையாம் இவ்வுடம்பினுள் உயிராகிய கூத்தன் இருந்துகொண்டு செய்ய வேண்டிய தொழில்களை செய்து முடித்து, வினைகளை அனுபவிக்குமாறு செய்கிறான், இப்படி செய்யும் உயிர் உடலை விட்டுப் போன பிறகு பிணமாக போன பின் அதனை காக்கை கவர்ந்தால் என்ன? பார்த்தவர்கள் பழித்துப் பேசினால் என்ன? பாலைத்துளியாகத் கொட்டினால் என்ன? பலரும் அப்பிணத்தை புகழ்ந்து பேசினால் என்ன? கழுகும் காக்கையும் மண்ணும் தின்னும் உடல்தானே அது.
காலத்தை தனக்குள் கட்டுப்படுத்தி மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து காட்டியவர்கள் சித்தர்கள். இரும்தையே ரசவாதத்தினால் பொன்னாக்கினார்கள். கூடுவிட்டு கூடு பாய்ந்தார்கள். நவக்கிரங்களை மாற்றி அமைக்கும் சக்தி படைத்தார்கள் சித்தர்கள். இயற்கையின் சக்திக்கு மாறாக மூச்சடக்கி வானத்தில் பறந்த சித்தர்களும் தண்ணீர்மேல் நடந்தவர்களும் இருக்கிறார்கள்.
மக்களின் நன்மைக்காக இவைகளை பயன்படுத்தினார்களே தவிர, அவர்களுக்கு என்று எதையும் செய்யவில்லை, யோகம் ஞானம், வைத்திய சாஸ்திரங்களையும் நமக்காக அருளியிருக்கிறார்கள், சித்தர்கள் நம் நாட்டில் எத்தனையே பேர் இருந்திருக்கிறார்கள்,நாம் பதிென்ட்டு சித்தர்களை முதல் சித்தர்கள் என்று குறிப்பிடுகிறோம், அவர்களோடு நில்லாது அவர்களின் தீட்சத் - ஞான உபதேசம்பெற்று அவரகளின் சீடர்களாகவும் அறிய பல நிகழ்வுகளைச் செய்து சித்தி விளயாட்டுகள் பல புரிந்து ஜீவ சமாதி அடைந்த சித்தர்களும் ஏராளமானபேர்கள் உண்டு என்பதை பல வரலாறுகள் வழியாக அறியலாம்.
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக