" சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும்இல்லை
சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும்இல்லை
பாறையில் விதை விதைத்தால் ..... பலன் உண்டோ?
செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று
பத்தி செய்மனப் பாறைகட்கு ஏறுமோ
அத்தன் என்று அரியோடு பிரமனும்
துத்தியஞ்செய நின்றநற் சோதியே ............தி,மு,5 பதி, பொது
( மனப்பாறைப்பட்டு =பாறைபோான்ற கல்மனம் உடையவர்கட்கு, அத்தன் = தலைவன்., துத்தியம் செய = போற்றித்துதித்தல், தேஎன்று = பெருந்தெய்வம் என்று)
செத்துச் செத்து பிறக்கும் சிறுதேவதைகளையே கடவுள் (முழுமுதற் பொருள்) என்று எண்ணி பக்தி செய்யும் கல்போன்ற மனம் உடையவர்களுக்கு முழுமுதற் பொருள் சிவபெருமானார் என்று திருமாலேோடு, பரமனும்துதித்து போற்றுவது பொருந்துமோ?
கடவுள் நிலை உணர்ந்து அமமயமான அருளாளர்கள் முழுமுதற் பொருள் / பெருந் தெய்வத்திற்கும், செத்துச் செத்துப் பிறக்கும் சிறு தேவதைகட்கும் இலக்கணம் கூறியுள்ளார்கள்.
செத்து செத்து பிறப்பவை யாவும் சிறு தெய்வங்களாகும். அவை பிறக்கும் இறக்கும் மேல் வினையும் செய்யும்,வேதனைப்படும்,
பிறப்பும் இறப்பும் / முதலும் முடிவும் இல்லாததது தான் பெருந்தெய்வம் அதுவே முழுமுதற்கடவுள்
தோற்றம் உண்டானால் இறப்பும் நேர்ந்தே தீரும். பிறந்தால் இறப்பு நிச்சயம் உண்டு. தோற்றம் உடையவையெயல்லாம் பிறந்து, குழந்தையாய் வளரும் இவைகட்கு பிள்ளைத்தமிழ் உண்டு. ஆனால் சிவபெருமானார் பிறந்திருந்தால் தானே குழந்தையாய் இருந்திருப்பார் அதனலாேயே அவருக்கு பிள்ளைத்தமிழ் ஏதும் கிடையாது. திருநாவுக்கரசர் திருவாரூர் திருத்தாணடகத்தில் தி,மு 6ல் சிவபெருமானார் பிறாவதவர் என்பதை பாடி யுள்ளதைக் காணலாம். "பாலனாய் வளர்ந்திலாப் பான்மையான் " என்கிறார்.
ஒரு ஊருக்கு ஒரு தலைவன்,ஒரு மாவட்டத்திற்கு ஒரு ஆட்சியர் ஒரு மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சர், ஒரு நாட்டிற்கு ஒரு அரசன் அல்லது பிரதமர், இதைப்போல அகில் உலகங்களையும் ஆளக்கூடிய கடவுளும் ஒருவரே. அவரைத்தான் சிவபெருமான் என்கிறோம். இவரே முழுமுதற்கடவுள்.
மனிதர்கள், தேவர்கள், முனிவர்கள், ரிசிகள், திருமால், பிரம்மா, கிரகங்கள், தேவேந்திரன் சூரியன், சந்திரன் மற்றமுள்ள எல்லா தெய்வங்களும் தேவதைகளும் சிவபெருமானாரைத்தானே தொழுகின்றன, ஆனால் இப்பெருமான் தொழக்கூடியவர் எவரும் இல்லையே என்பதை மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த திருமூலர் கூறியுள்ளார.
" என்னால் தொழப்படும் எம் இறை மற்றவன்
தன்னால் தொழப்படுவார் இல்லை தானே " திருமந்திரம் (தி,மு10)
" சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும்இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை ,,, திருமந்திரம்
பிரமனும் மாலும் மேலைமுடியோடு பாதம்
அறியாமை நின்ற பெரியோன் .... திரு,மு, 4/14/02
ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்
ஈறில்லாதவன் ஈசன் ஒருவனே ...... 05/100/03
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றி ெசய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரல் ஆவது ஒன்றில்லை
அவனன்றி ஊர்புகுமாறு அறியேனே...... திருமந்திரம்
சிவபெருமானை அன்றி வேறு பெருந்தெய்வம் உலகில் இல்லை. முத்திக்கடவுள் என்று இவருக்கு ஒர் பெயரும் உண்டு. இவரைத்தவிர ேவறு யாராலும் பிறப்பை அறுக்க முடியாது என்கிறார் திருமூலர்.
இவரை வழிபடுவதால் நாம் அடையும் பலன்கள்
1. இம்மண்ணில் மீண்டும் பிறக்க மாட்டார்கள்
2. சிவனுலகு அடைந்து இன்பமாய் வாழ்வர்.
3. மனச்சோர்வு அடையார்.
4. பசியால் வருத்தப்பட மாட்டார்கள்
5. நோயால் வருந்த மாட்டார்கள்.
இந்த உண்மைகள் எல்லாம் கல்போன்ற மனம் உடையவர்களுக்கு சொன்னால் கேட்க மாட்டார்கள் என்கிறார் அப்பர் அடிகள்.
பஞ்சு மென்மையானது அதனை தண்ணீரில் போட்டால் ஈர்த்துக் கொள்ளும் , கல்லை தண்ணீரில் போட்டால நீரை ஈர்க்காது. அதைப் போல கல்போன்ற மனம் உடையவர்களுக்கு உண்மைகள் புகா.
பாறையில் விதை விதைத்தால் முளைக்காது. கல்மனம் உடையவர்கள் மனத்தில் சிவ பெருமானரை பற்றி மேற் கூறிய உயர்ந்த உண்மைகள் நிற்காது. இவர்கள் செத்து செத்து பிறக்கும் சிறு தெய்வங்களையே வழிபடுபவர்கள் என்கிறார் நாவரசர் அப்பர் அடிகள்.
திருச்சிற்றம்பலம்
(நன்றி தமிழ் வேதம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக